எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, February 25, 2013

வைக்கம் விஜயலக்ஷ்மிசமீபத்தில் வலை நண்பர் பந்து அவர்கள் தனது வலைப்பூவில், CELLULOID எனும் மலையாள படத்திலிருந்து காற்றே காற்றே நீ பூக்காமரத்தில்எனும் பாடலை பகிர்ந்திருந்தார். பாடலைக் கேட்டதிலிருந்தே அவர் பற்றி இணையத்தில் தேடினேன். நிறைய பாடல்களைக் கேட்டு, அவரது ஒரு நேர்காணலையும் பார்த்தேன். இந்தப் பாடலைப் பாடிய வைக்கம் விஜயலக்ஷ்மி பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். அதற்கு முன்னர் அந்தப் பாடலைக் கேளுங்களேன்.

Kaatte Kattee Nee Pookkaa Marathil | Muzibooஎன்ன நண்பர்களே, வைக்கம் விஜயலக்ஷ்மி அவர்களின் குரலில் நீங்கள் மயங்கி இருப்பது நிச்சயம். இந்தப் பாட்டை பாடிய வைக்கம் விஜயலக்ஷ்மி பிறந்தது 1981-ஆம் வருடத்தின் விஜயதசமி தினமான அக்டோபர் 7 ஆம் நாள்.  முரளிதரன் விமலா தம்பதியினரின் ஒரே மகள் விஜயலக்ஷ்மி. வைக்கத்தில் பிறந்தாலும், விஜயலக்ஷ்மியின் நிலையால் சில வருடங்களில் சென்னை வந்து ஐந்து வருடங்கள் அங்கே தங்கி பிறகு வைக்கம் திரும்பிவிட்டார்கள்.

சிறு வயதிலேயே இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோரின் பாடல்களைக் கேட்டு வளர்ந்த இவர், ஒரு பாடலைக் கேட்டுவிட்டால் உடனே அதன் நெளிவு சுளிவுகளோடு உடனே பாடி விடும் திறமையைப் பெற்றிருந்தார். ஜேசுதாஸ் பாடிய கர்நாடக சங்கீத ஒலி நாடாக்களைக் கேட்டுக் கேட்டு ஒரு வருடத்திற்குள்ளாகவே நூற்றுக்கும் மேற்பட்ட ராகங்களைக் கற்றுக் கொண்டதோடு, இதுவரை ஐந்து பாடல்களை இயற்றவும் செய்திருக்கிறார். இத்தனைக்கும் அதுவரை அவருக்கு முறையான சங்கீதப் பயிற்சி கிடையாது.   சங்கீதத்தில் முறையான பயிற்சி இல்லா விட்டாலும், அவரது திறமை பல வித்வான்களையே பிரமிக்கச் செய்ததாம். 1987-ஆம் வருடம் தனது மானசீக குருவான ஜேசுதாஸை சந்தித்தபோது, இத்தனை சிறிய வயதில் விஜயலக்ஷ்மியின் விஷய ஞானம் கண்டு அவருக்கு ஆச்சரியம் உண்டாயிற்றாம். அதன் பிறகு சில குருகளிடம் பயிற்சி பெற்று பல கச்சேரிகளில் பாடத் துவங்கினார் இவர்.
மும்பையின் ஷன்முகாநந்தா அரங்கம் தொடங்கி, தமிழகத்தின் பல ஊர்களிலும் இதுவரை பல கச்சேரிகள் நடத்தி இருக்கும் விஜயலக்ஷ்மி ஒரே ஒரு கம்பி கொண்ட காயத்ரி வீணையை வாசிப்பதிலும் திறமை பெற்றவர். இந்த வீணை கொண்டும் பல கச்சேரிகளை நடத்தி இருக்கிறார். இந்த ஒரு கம்பி கொண்ட வீணைக்கு “காயத்ரி வீணைஎன பெயர் வைத்தது நமது குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்.
சபைகளிலும், கோவில்களிலும் பாடுவதில் அவ்வளவாக வருமானம் இல்லாத காரணத்தினால் சினிமா பக்கமும் தனது பார்வையை திருப்ப, அவருக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு மேலே சொன்ன படத்தில்.  இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தான் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் முன்பே பாடல்கள் வெளிவந்து விட்டதால், இந்தப் பாடல் மிகவும் பிரபலமாகி இருக்கிறது. இப்போது மலையாள சினிமாவில் நிறைய வாய்ப்புகள் இவரைத் தேடி வர ஆரம்பித்திருக்கிறது.
சரி நன்றாகத் தான் பாடுகிறார், எதற்கு இவருக்காக தனியாக ஒரு பதிவு எனக் கேட்பவர்களுக்கு, இவர் பிறவியிலேயே கண் பார்வையில்லாதவர். ஒரு குறையோடு பிறந்திருந்தாலும், தன்னம்பிக்கையோடு தனது வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டிருக்கும் அவரை மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துவோம்.

வாருங்கள் அவரது காயத்ரி வீணையின் நாதத்தினைக் கேட்போம்.

இந்த அற்புதமான ஒரு இசைக் கலைஞரை எனக்கு அறிமுகம் செய்து வைத்த நண்பர் பந்து அவர்களுக்கு நன்றி. 

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

50 comments:

 1. பிரமிக்க வைக்கிறார். அறிமுகத்துக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. ஆஹா.. இசை எப்படி எல்லாம் தனக்கு வேண்டியவரை தேர்வு செய்து விடுகிறது..

  வாழ்த்துகள் விஜயலக்ஷ்மி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

   Delete
 3. இறைவன் ஒரு குறையை வைத்தால் மற்றொரு நல்ல விஷயத்தை தந்து ஈடு செய்து விடுகிறான். இசைக்கலைஞர் விஜயலக்ஷ்மி பற்றித் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. பந்துவுக்கும் .உங்களுக்கும் நன்றி! (வைக்கம்னதுமே பெரியார் நினைவுதான் வரது)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ் அண்ணே!

   Delete
 4. ஓ... பழைய பாடல் ஸ்டைலில் புதிய பாடலா....வாழ்த்துக்கள் விஜயலட்சுமி... இசைத்துறையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 5. வைக்கம் விஜயலக்ஷ்மியின் இந்தப்பாட்டை எத்தனை தடவை கேட்டிருப்பேன் என்று ஞாபகமில்லை. அவரது குரலின் இனிமையையும் கம்பீரத்தையும் கண்டு அதிசயிக்காதவர்களே இருக்க முடியாது.

  ReplyDelete
  Replies
  1. அதே அதே.... நானும் முதல் முறை கேட்டதிலிருந்து பல முறை கேட்டுவிட்டேன். ஒவ்வொரு முறையும் ரசிக்க முடிகிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 6. நெகிழ வைத்த பதிவு .. எத்தனை வளமான குரல் .. நேர்த்தியான இசை .. எல்லா வசதிகளோடும் , நிறைகளோடும் எத்தனை பேர் இந்த உலகத்தையும் , மனிதர்களையும் எப்பொழுதும் குறை சொன்னபடி வாழ்கிறார்கள் ... அவர்களுக்கெல்லாம் விஜயலட்சுமி வாழும் பதில் ... தேடிபிடித்து அழகாய் பதிவிட்டு இருக்கிறீர்கள் .. அந்த பாடலையும் , இசையையும் கொடுத்திருப்பது வெகு சிறப்பு ... பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. //அவர்களுக்கெல்லாம் விஜயலட்சுமி வாழும் பதில் ...

   உண்மை நண்பரே....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பாரதிக்குமார்.

   Delete
 7. இனிமை...

  விஜயலக்ஷ்மி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 8. பாடல் மிக இனிமை.மிகச் சிறந்த அறிமுகம் இவர்களைப் போன்ற மாற்றுத் திறனாளிகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கவேண்டும்.
  பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 9. விஜயலட்சுக்கு ரகுமான் வாய்ப்பளிக்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. கொடுத்தால் நல்லது!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 10. நல்ல இசை. ரசித்தேன். வாழ்க விஜயலட்சுமி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 11. உங்கள் அளவுக்கு அவருக்கு அறிமுகம் கொடுக்காத எனக்கு நீங்கள் கிரெடிட் கொடுத்திருப்பதற்கு நன்றி வெங்கட். You are a good man!

  ReplyDelete
  Replies
  1. ஒரு அற்புதமான பாடகரை அறிமுகம் செய்ததற்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் Bandhu ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 12. நேற்று பேஸ்புக்கில் சுகா இவரின் பாடலை பகிர்ந்திருந்தார்.. அப்போது தான் நீங்கள் குறிப்பிட்ட அந்த படலை முதலில் கேட்டேன், உங்கள் மூலம் முழுவது அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது...

  மாற்றுத்திறனாளி என்றாலும் அற்புதமான திறமை இருந்தால் யாரும் வெற்றி பெறலாம் என்பது உண்மை... பகிர்தர்லுக்கு நன்றி சார்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 13. ஒரு குறையோடு பிறந்திருந்தாலும், தன்னம்பிக்கையோடு தனது வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டிருக்கும் அவரை மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துவோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 14. அற்புதமான ஒரு இசைக் கலைஞரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்த நண்பர் பந்து அவர்களுக்கும், அந்த இசைக் கலைஞரை திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்த இசையமைப்பாளருக்கும் நன்றிகளை தெரிவிப்போம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

   Delete
 15. வீணை வாசிப்பது மிகவும் கஷ்டம்.அதிலும் கண்ணில்லாதவர் சிறப்பாக வாசிப்பது அபூர்வமானது.

  சாதனைப் பெண்மணி, விஜய லக்‌ஷ்மிக்கு வாழ்த்துக்கள்.

  விஜயலக்‌ஷ்மியைப் பற்றி நல்லதொரு பதிவு வெங்கட்.நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 16. நல்ல இசைக்கலைஞன் அதுவும் கண்ணில்லாதவர் வீணை வாசிப்பது அருமை.வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கண்ணதாசன்.

   Delete
 17. என்ன ஒரு அபூர்வ பிறவி இந்தப் பெண் என்று வியக்க வைக்கிறார் விஜயலக்ஷ்மி.

  ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவைத் திறப்பார் கடவுள் என்பதற்கு இவர் சரியான உதாரணம்.

  மேலும் மேலும் இவரது திறமை வளம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  அறிமுகம் செய்த உங்களுக்கும், உங்கள் நண்பர் பந்துவுக்கும் பாராட்டுக்களும், நன்றிகளும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 18. இப்போதுதான் கேள்விப்படுகிறேன்!அறிமுகத்துக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 19. கண் பார்வையில்லா விட்டாலும்,தன்னம்பிக்கையோடு, வாழ்வில் முயன்று வெற்றிகண்டிருக்கும் அற்புதப் பெண் விசயலட்சுமியை வாழ்த்துவோம், பாராட்டுவோம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஜி!

   Delete
 20. ஒரு நல்ல கலைஞரை தெரிந்து கொண்டது மகிழ்ச்சி... நன்றி வெங்கட் சார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 21. அற்புதமான இசைக் கலைஞர் தான் விஜயலக்ஷ்மி, அவருக்கு மேலும் மேலும் புகழ வந்து அடையும். அவர் உழைப்பால் உயர்ந்த லட்சிய பெண்மணிதான்.
  அருமையான் இசை கலைஞரை அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 22. அற்புதமான இசைக் கலைஞர் விஜயலக்ஷ்மி

  நாட் ஒன்லி ப்ரிலியன்ட் பட் ஹைலி கிரியேடிவ் அன்ட் இமேஜினேடிவ்.

  இந்தப்பாடலை எடுக்கும் பதிவு ஒன்று அண்மையில் பார்த்து வியந்தேன்.

  சுப்பு ரத்தினம்.
  உங்கள் நண்பர் பந்து அவர்களின் வலை எங்கே இருக்கிறது ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுப்பு ரத்தினம் சார். நண்பர் பந்து அவர்களின் சுட்டியை “வலைப்பூவில்” என்ற இடத்தில் தந்திருக்கிறேன். அதை ‘சுட்டி’னாலே நீங்கள் அவரது பதிவினை படிக்க முடியும்!

   நான் அதை ஹைலைட் செய்யாது விட்டதால் வந்த குழப்பம்! இப்போது சரி செய்து விடுகிறேன்.

   Delete
 23. வைக்கத்துக்கு மற்றொரு பெருமை விஜய லக்ஷ்மி! தேனாகக் காதுகளை நிறைக்கும் வளமான குரல்! எத்தனை முறை கேட்டும் ஆவல் தீரவில்லை சகோ... இரு நாட்களாக நாங்கள் இருவரும் அப்பாடலின் வரிகளை பாடியபடியே... கடவுளின் கருணை எப்படியெல்லாம் வெளிப்படுகிறது! டவுன்லோட் செய்யத் தெரியாமல்தான் தடுமாறுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிலாமகள். பாடலை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

   Delete

 24. வணக்கம்!

  இசையின் வழியாய் இதயம் புகுந்து
  வசியம் புரியும் வலை!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி கவிஞர் கி. பாரதிதாசன் ஜி!

   Delete
 25. சாதனைப் பெண்மணி, விஜயலக்ஷ்மிக்கு வாழ்த்துக்கள்.

  விஜயலக்ஷ்மியைப் பற்றி நல்லதொரு பதிவுக்கு.நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. சார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....