எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, February 27, 2013

கலீல் ஜிப்ரானின் தத்துவக் க[வி]தைகள்

கல்லூரி சமயத்தில் எங்களுக்கு ஆங்கிலத்தில் பாடம் எடுத்தவர்கள் மூன்று பேராசியர்கள் – திரு ஆர். சரவணச்செல்வன் [RSS], திரு கே. ஸ்ரீனிவாசன் மற்றும் திருமதி லக்ஷ்மி. திரு கே. ஸ்ரீனிவாசன் எங்களுக்கு ஆங்கிலக் கவிதைகளை அறிமுகம் செய்து வைத்தவர்! கவிதையை ஒவ்வொரு வரியாக அவரும் அனுபவித்து விவரித்து, எங்களையும் ரசிக்கச் செய்வார். கல்லூரி சமயத்தில் அவர் சொன்ன ஜான் கீட்ஸ் கவிதைகள் இன்னமும் நெஞ்சில்.  Ode to a Nightingale கவிதையில் வரும்

With beaded bubbles winking at the brim,
            And purple-stained mouth;
That I might drink, and leave the world unseen,
            And with thee fade away into the forest dim:”   வரிகள் இன்றைக்கும் நெஞ்சில்.  போலவே கலீல் ஜிப்ரானின் கவிதைகளையும் எங்களுக்கு அறிமுகம் செய்தவர் திரு ஸ்ரீனிவாசன். சமீபத்தில் நர்மதா பதிப்பக வெளியீடான “கலீல் ஜிப்ரானின் தத்துவக் க[வி]தைகள் – கவிஞர் நாவேந்தன்படிக்கக் கிடைத்தது. கலீல் ஜிப்ரானின் Sand and Foam, The Wanderer, The Forerunner மற்றும் The Madman ஆகிய நூல்களை மொழிமாற்றம் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.
 

 
கலீல் ஜிப்ரான் ஒரு சிறந்த ஓவியரும் கூட. இந்தப் புத்தகத்தில் அவர் வரைந்த ஓவியங்களையும் ஆங்காங்கே சேர்த்திருந்தது கூடுதல் சிறப்பு. புத்தகத்தில் எனக்குப் பிடித்த சில தத்துவங்கள் கீழே தந்திருக்கிறேன் – உங்கள் பார்வைக்கு!

மனிதனுக்கு பெருமை அவன் எதை அடைகிறான் என்பதில் இல்லை....  அவன் எதை அடைய விரும்புகிறான் என்பதில் தான் உள்ளது!

இரண்டு பெண்கள் பேசிக்கொள்ளும்போது அதில் ஒன்றும் இருப்பதில்லை! ஆனால் ஒரு பெண் மட்டும் பேசும்போது அவள் வாழ்க்கை முழுவதும் வெளிப்படுகிறது.

பூமி வானத்தில் எழுதும் கவிதையே மரங்கள்....! நாம், அவற்றை வெட்டி வீழ்த்திக் காகிதமாக்கி, நம் வெறுமையை எழுதி வைக்கிறோம்...!

ஒரு தனி மரம், தன் சுய சரிதையை எழுதினால், அது கூட ஓர் இனத்தின் வரலாறு போலவே தெரியும்!

சொற்கள் காலம் கடந்து நிற்பவை...! அதைப் புரிந்து கொண்டு அவற்றைப் பேச வேண்டும், எழுத வேண்டும்!

உன் வாயில் உணவு நிறைந்திருக்கும்போது உன்னால் எப்படி பாட முடியும்? கையில் நிறையப் பணம் உள்ளபோது மற்றவர்களை வாழ்த்த எப்படிக் கைகளை உயர்த்த முடியும்....?

அநேக பெண்கள் ஆண்களின் இதயத்தைக் கடன் வாங்குகிறார்கள்....! ஒரு சிலரே அதைத் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்....

எந்த ஓர் ஆணும்.... இரு பெண்களை விரும்புகிறான்! ஒருத்தி அவன் கற்பனையின் படைப்பு....  மற்றவள் இன்னும் பிறக்கவில்லை!

பெண்களின் சிறிய தவறுகளை மன்னிக்காத ஆண்கள், அவர்களின் உயர்ந்த நற்பண்புகளை உணர மாட்டார்கள்.

விருந்தாளிகள் வராத வீடு....  சுடுகாடு!

உன் இதயம் எரிமலையாக இருந்தால், மலர்கள் எப்படி கைகளில் மலர முடியும்?

நாம் எல்லோருமே சிறைக் கைதிகள் தான் – சிலர் சிறைக் கம்பிகளோடு.... சிலர் கம்பிகள் இல்லாமலேயே!

வேடிக்கை என்னவென்றால், நாம் சரியானவற்றைச் செய்வதில் காட்டும் சுறுசுறுப்பை விட, நாம் செய்த தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பதில் தான் அதிகம் சுறுசுறுப்பைக் காட்டுகிறோம்.

மற்றவன் செய்த குற்றங்களைப் பெரிதுபடுத்துவதை விட பெரிய குற்றம் ஏதுமில்லை!

பொறாமைப்படுபவனின் மௌனமே மிகவும் சப்தமானது.....!

இன்றைய துக்கங்களில் மிகவும் கசப்பானது நேற்றைய மகிழ்ச்சியின் ஞாபகம்!

உப்பில் ஏதோ ஒரு புனிதம் இருக்கிறது....! எனவே தான் அது நம் கண்ணீர்லும் இருக்கிறது.... கடலிலும் இருக்கிறது....!

மேலே கண்டவை அனைத்தும் ‘மணலும் நுரையும்என்ற தலைப்பில் உள்ளவை. மேலும் சில நல்ல கதைகளும் இப்புத்தகத்தில் உண்டு. நான் ரசித்த சில கதைகளை ஃப்ரூட் சாலட் பதிவுகளில் அவ்வப்போது வெளியிடுகிறேன்.  இருந்தாலும் முழுதும் படித்து ரசிக்க, நீங்கள் நர்மதா பதிப்பகத்தின் இப்புத்தகத்தினை வாங்கலாமே!

                கலீல் ஜிப்ரானின் தத்துவக் க[வி]தைகள்
                ஆசிரியர்: கவிஞர் நாவேந்தன்.
                நர்மதா பதிப்பகம்
                10, நானா தெரு, பாண்டி பஜார்,
                தி. நகர், சென்னை – 600017.

மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

48 comments:

 1. தத்துவங்கள் அனைத்தும் உண்மைகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. ஒவ்வொன்றும் யோசிக்க வைக்கும் தத்துவங்கள்.... அவ்வளவு உண்மை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 3. பூமி வானத்தில் எழுதும் கவிதையே மரங்கள்....! நாம், அவற்றை வெட்டி வீழ்த்திக் காகிதமாக்கி, நம் வெறுமையை எழுதி வைக்கிறோம்...!

  முத்துக்களாய் ஜொலிக்கும் பகிர்வுகள் அருமை ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
  2. எனக்கும் இது அதிகம் கவர்ந்த தத்துவம் தான்..

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.

   Delete
 4. கலீல் ஜிப்ரானின் தத்துவக் க[வி]தைகள் எல்லாமே நல்லாத்தான் இருக்கு.

  //எந்த ஓர் ஆணும்.... இரு பெண்களை விரும்புகிறான்! ஒருத்தி அவன் கற்பனையின் படைப்பு.... மற்றவள் இன்னும் பிறக்கவில்லை!

  பெண்களின் சிறிய தவறுகளை மன்னிக்காத ஆண்கள், அவர்களின் உயர்ந்த நற்பண்புகளை உணர மாட்டார்கள்.

  நாம் எல்லோருமே சிறைக் கைதிகள் தான் – சிலர் சிறைக் கம்பிகளோடு.... சிலர் கம்பிகள் இல்லாமலேயே!

  பூமி வானத்தில் எழுதும் கவிதையே மரங்கள்....! நாம், அவற்றை வெட்டி வீழ்த்திக் காகிதமாக்கி, நம் வெறுமையை எழுதி வைக்கிறோம்...! //

  ;))))) பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. சார்.

   Delete
 5. நன்றி,நல்ல பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.

   Delete
 6. அனைத்துமே அருமை.

  அதிலும் //பூமி வானத்தில் எழுதும் கவிதையே மரங்கள்....! நாம், அவற்றை வெட்டி வீழ்த்திக் காகிதமாக்கி, நம் வெறுமையை எழுதி வைக்கிறோம்...!//
  இது மேலும் சிறப்பாக இருக்கு.

  நல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 7. ஒவ்வொன்றும் யோசிக்க வைக்கும் தத்துவங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சமுத்ரா.

   Delete
 8. கலீல் ஜிப்ரான்! போகிற போக்கில் காதில் வாங்கிக் கொண்ட பெயர். ஆனால் இனிமேல் நின்று நெருங்கி மனதில் வாங்க வேண்டும்.

  (கலீல் ஜிப்ரானை அறிமுகப்படுத்திய உங்கள் ஆசிரியரை நீங்கள் நினைவு கூர்ந்ததும் எனக்கும் எனது கல்லூரி ஆங்கில பேராசிரியரும் முதல்வருமான திரு. ஆர்தர் டேவிஸ் அவர்களை நினைவு கூராமல் இருக்க முடியவில்லை. அவரது பாங்கான உடையும் தனது புல்லட்டில் அவர் வரும் மிடுக்கும் கம்பீரமும் அழகு.)

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் ஒரு ஆசிரியரை நினைக்க முடிந்தது குறித்து மகிழ்ச்சி.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

   Delete
 9. அற்புதமான அறிமுகம் வெங்கட். நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி!

   Delete
 10. நாம் எல்லோருமே சிறைக் கைதிகள் தான் – சிலர் சிறைக் கம்பிகளோடு.... சிலர் கம்பிகள் இல்லாமலேயே!

  மிகச் சரியான தேவையான தத்துவங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 11. இன்றைய துக்கங்களில் மிகவும் கசப்பானது நேற்றைய மகிழ்ச்சியின் ஞாபகம்!

  அனைத்துமே அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

   Delete
 12. எல்லாமே அருமை. இதில் சில வரிகளை யார் சொன்னது என்று அறியாமலேயே எஸ் எம் எஸ் களில் வருகின்றன! நல்ல ஷேர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 13. அவரது அனைத்து தத்துவங்களும்
  அருமை...
  அதைவிட அதை எங்களுக்குப் பகிர்ந்த
  உங்களுக்கே எங்களின் வாழ்த்துக்கள் நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி அருணா.

   Delete
 14. //எந்த ஓர் ஆணும்.... இரு பெண்களை விரும்புகிறான்! ஒருத்தி அவன் கற்பனையின் படைப்பு.... மற்றவள் இன்னும் பிறக்கவில்லை!//
  நிஜமா?
  ரொம்பவும் யோசிக்க வைத்த வரிகள்.

  புத்தகத்திற்கு அருமையான முன்னுரை கொடுத்துவிட்டீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 15. Replies
  1. தஙகளது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 16. பிடித்தவற்றில் முதல் தத்துவமே முதல்! நல்ல சேகரிப்பு சகோ... புத்தகங்கள் மீதான ஈர்ப்பை அதிகரிக்கச் செய்யும் கருத்துக்கள்.ஒவ்வொரு பதிவும் நல்ல உபயோகமாய் செய்யும் தங்கள் அக்கறை பாராட்டத் தக்கது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 17. ஜிப்ரான் படித்ததில்லை;கேள்விப்பட்டிருக்கிறேன்.அருமையான பகிர்வு

  ReplyDelete
  Replies
  1. படித்துப் பாருங்கள் குட்டன்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 18. நல்ல அருமையான தத்துவங்கள் .ஜிப்ரான் பற்றி அவ்வளவு தெரியாது. இன்டர்நெட்டில் தேடிப் பார்க்கிறேன்.

  தத்துவங்கள் என்னை மிகவும் கவர்ந்தது.
  நன்றி வெங்கட்ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 19. மிக நல்ல பதிவு.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

   Delete
 20. அன்புள்ள வெங்கட்

  நல்ல கருத்துகளை பகிர்ந்து இருக்கிறீர்கள். எனக்கும் கலீல் கிப்ரான் கவிதைகள் பிடிக்கும். எனக்கு பிடித்த கவிதைகள்

  http://sangeetharg.blogspot.in/2011/11/blog-post_26.html

  ReplyDelete
  Replies
  1. உங்களது பக்கத்தினையும் படிக்கிறேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சங்கீதா.

   Delete
 21. ஒரு தனி மரம், தன் சுய சரிதையை எழுதினால், அது கூட ஓர் இனத்தின் வரலாறு போலவே தெரியும்!

  அருமையான நூல் அறிமுகத்திற்கு நன்றிஅய்யா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஜி!

   Delete
 22. anne!

  manalum nuraiyum ennidamum ullathu...

  ayyo
  maranthe poivittathu...

  eduththu padikkanum....

  nalla
  kavithaikal sako...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 23. வெகுநாட்களுக்கு பிறகு தேடலில் தங்களின் பதிவை கண்டேன் சிறப்பு. நெஞ்சில் அமுதம் வார்த்த படைப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகையோ?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திரு வெங்கடாசலம்.....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....