எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, July 25, 2014

ஃப்ரூட் சாலட் – 101 – பாலம் – வெங்காயம் – டைரிமில்க்....

சென்ற வாரத்தில் நான் பகிர்ந்து கொண்ட நூறாவது ஃப்ரூட் சாலட் பதிவில் கருத்து சொன்ன, இந்த தொகுப்பினை தொடர வேண்டும் என்ற எண்ணத்தினை என்னுள் விதைத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி. 

இந்த வார செய்தி:

இந்த வாரம் நாம் பார்க்கப் போகும் செய்தி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்ட நிர்வாகிகள் சத்தமில்லாது செய்து கொண்டிருக்கும் ஓர் உன்னதமான பணி பற்றியது.  ரியாசி மாவட்டம் – மலைப்பாங்கான பகுதியை கொண்டது – இந்த மாவட்டத்தில் தான் வைஷ்ணவ் தேவியின் கோவில் இருக்கிறது.  மழைக் காலங்களில் காட்டாறுகளில் மண்ணோடு கூடிய தண்ணீர் வரத்து அதிகரிக்க, ஒவ்வொரு வருடமும் இவர்கள் இழப்பது கால்நடைகள் மட்டுமல்ல, மனித உயிர்களையும் தான்.

மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வேளையில், அக்குழந்தைகள் சின்னச் சின்னதாய் காட்டாறுகளை தாண்டி தான் பள்ளிக்கு செல்ல வேண்டியிருக்கும். அதுவும் திடீரென தண்ணீர் வரத்து அதிகரிக்க, பள்ளிக்குச் செல்லும் பல குழந்தைகள் ஆற்றில் அடித்துச் செல்லப்படும் அவலம் வருடா வருடம் நடக்கும்.  அதன் காரணமாக மழைக்காலங்களில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதையே நிறுத்தி விடுவார்கள் இந்த மலைவாழ் மக்கள். படிப்பினை விட உயிர் வாழ்வது முக்கியம் அல்லவா!

இப்படிச் சின்னச் சின்னதாய் பல மலைகளும், குறுகிய காட்டாறுகளும் இருக்க, அவற்றின் குறுக்கே பாலங்கள் கட்டுவது மிகவும் கடினமான விஷயம். சிமெண்ட்/இரும்பு கொண்டு பாலங்கள் அமைப்பதில் பல அசௌகரியங்கள் – அதற்காக ஆகும் செலவும், நேரமும் மிக அதிகம்.  ஆனால் பாலத்திற்கான தேவையைக் கருத்தில் கொண்டு மாவட்ட அதிகாரிகள் ஒரு நல்ல முடிவினை எடுத்து செயல்படுத்தினார்கள்.

மாவட்டத்தில் கிடைக்கும் மரங்களைக் கொண்டு ஒரு வருடத்திற்குள் 100 பாலங்கள் கட்டுவது எனும் முடிவு தான் அது.  சென்ற வருடத்தில் செயல்படத் தொடங்கிய இவர்கள் அவர்களது இலக்கான 100 பாலங்களில் 70-க்கும் மேற்பட்ட பாலங்களை அமைத்து முடித்து விட்டார்கள்.  இந்த பாலங்கள் குழந்தைகள் பள்ளிக்கு வந்து படிக்க ஏதுவாய் அமைவது மட்டுமல்லாது, பெரியவர்களுக்கும் காட்டாறுகளைக் கடக்க வசதியாக இருக்கும் என்பது சர்வ நிச்சயம்.

ஒரு மரப் பாலம் கட்ட ஆகும் செலவு சுமார் 2.50 லட்சத்திலிருந்து 4 லட்சம் ரூபாய் – வன இலாகாவிலிருந்து மலிவு விலையில் மரங்களை வாங்கி, அந்த மலைவாழ் மக்களுக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தந்திருக்கிறது இந்த பாலம் கட்டுமானம்.  ஒரு மாதத்திற்குள் ஒரு மரப் பாலம் கட்டி விட முடியும் என்பது கூடுதல் வசதி.

இப்படி சிறப்பாக செயல்படும் அந்த மாவட்ட நிர்வாகத்தினையும் இந்த பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவரையும் பாராட்டுவோம்.

இந்த வார முகப்புத்தக இற்றை:ஒருவர்: அண்ணே இளநீர் என்ன வெல..?
இளநீர் விற்பவர்: (அன்புடன்) பத்து ரூபா ராசா...
ஒருவர் : என்ன அண்ணே பத்து ரூபா சொல்றீங்க..? ஐந்து ரூபாய்க்கு தாங்க..
இளநீர் விற்பவர் : (கடுப்புடன்) அதோ அங்க ஒரு கடை இருக்கு... அங்க பெப்சி, கொக்ககோலா விக்கும்... அங்க போயி இருபது ரூபா பெப்சிய பத்து ரூவாவுக்கு வாங்கிட்டு வாங்க.. நான் இளநீர்
ஐந்து ரூவாவுக்கு தாரேன்....


இந்த வார குறுஞ்செய்தி:

BE POSITIVE!


இந்த வார ரசித்த விளம்பரம்:

சமீபமாக இந்த Cadbury Dairy Milk விளம்பரம் வருகிறது.  மிகவும் ரசிக்கும் படியாக இருக்கிறது இந்த விளம்பரம்.  நீங்களும் பார்த்திருக்கலாம் – மீண்டும் ஒரு முறை பாருங்களேன்! :)
இந்த வார கார்ட்டூன்:

தில்லியில் காய்கறிகளின் விலை மிகவும் அதிகமாகிக் கொண்டே போகிறது.  இன்று தக்காளி ஒரு கிலோ 80 ரூபாய்! வட இந்தியர்களின் முக்கிய தேவையான காய்கறிகளில் வெங்காயத்திற்கு மிக முக்கிய இடம்! வெங்காயம் கிலோ 60 ரூபாய்! விலையேற்றம் பற்றிய பல படங்கள் அவ்வப்போது பார்க்க முடிந்தாலும் இப்படம் சொல்லாமல் சொல்லும் விஷயம் அருமை! பாருங்களேன்!
இந்த வார நிழற்படம்:

எதிர்கால கனவு ஒருவருக்கு....  புகைப்படம் எடுக்க ஏதுவாய் போஸ் கொடுப்பதில் ஆர்வம் இன்னொருவருக்கு!படித்ததில் பிடித்தது:

சின்னதாய் ஒரு கவிதை மட்டும்!

வெளியே குளிரில்....
புல்லுக்கு மட்டும்
வியர்த்தது எப்படி?

என்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


58 comments:

 1. பாலத்தின் மேலே ஏறி இறங்கினால் இளநீர் வியாபாரி ,அவர் சொன்னது B +ஆக பட்டது ,அப்புறம் அந்த சாக்லேட்களை பாப்பாகளுக்கு கொடுக்கத் தோன்றியது ,ஆனால் வெங்காயம்தான் என்னை நசுக்கி சாறு பிழிந்துவிட்டது !
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 2. எங்களது வேண்டுகோளை ஏற்று ப்ருட் சாலட்டை பைசா செலவில்லாமல் எங்களுக்கு தொடர்ந்து தருவதற்கு மிக நன்றி வழக்கம் போல அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 3. ஆக - அனைத்தும் இனிமை.. குறுங்கவிதை - அருமை!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 4. டெயரி மில்க் விளம்பரம் எனக்கும் பிடிக்கும். இளநீர் வியாபாரி நச்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 5. வழக்கம்போல் அருமை ஐயா
  நன்றி
  தம 6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 6. எல்லாமே அருமை. அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் தானே பாலம் கட்டிக் கொள்ளும் மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.

  ReplyDelete
  Replies
  1. அரசாங்கத்துடன் சேர்ந்து தான் கட்டி இருக்கிறார்கள்.அப்பயணியில் மக்களும் வேலை செய்திருக்கிறார்கள்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete

 7. பழக்கலவையில் கவிதை அருமை. Cadbury Diary Milk விளம்பரம் என்பதில் Diary என்பதற்கு பதிலாக Dairy என்றிருக்கவேண்டும்.

  ReplyDelete
 8. தவறினைச் சுட்டிக் காணிபித்தமைக்கு நன்றி. சரி செய்து விட்டேன்.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

  ReplyDelete
 9. உன்னதமான பணி, இளநீர் வியாபாரியின் நெத்தியடி என அனைத்தும் அருமை... தொடருங்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 10. இன்றைய ஃப்ரூட் சேலட்டில் கலந்துள்ள அத்தனை பழங்களும் (செய்திகளும் ) அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 11. அனைத்தும் ரசிக்கவைத்தன..பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 13. மிக்க நன்றி மீண்டும் ஃப்ரூட் சாலடுடன் வந்ததற்கு! இனிமயான ப்ழங்கள். ஜம்முவில் நடக்கும் மகத்தான பணி!

  இற்றை...(அறுவாளால) போடாரே ஒரு போடு.......அது சரி இளனீர் 10 ரூபாய்தானா? ஆஹா அந்த ஆள அப்படியே இங்க எக்ஸ்போர்ட் பண்ணுங்க சார்......விலை 40 ரூபா....

  விலைவாசி....நம்மை எல்லாம் அழுத்துகின்றது என்று சொல்லும் படம் அருமை....

  காட்பரிஸ் விளம்பரம் பார்க்கிறோம்...மீண்டும் பார்த்தோம் ரசிப்பதால்...

  குழந்தைகள் ரொம்ப அழகு! சுத்திப் போடணும்!

  கவிதை சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!.

   Delete
 14. அருமையாக இருக்கிறது, ஃப்ரூட்சாலட்.
  இளநீர் வியாபாரி சொன்னது அருமை..
  குழந்தைகள்படம், காணொளி எல்லாம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 15. மரப்பாலம் கட்டி மலைவாழ் மக்களுக்கு உதவும் அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்! முகநூல் இற்றை நச்! டெய்ரி மில்க் விளம்பரம் ரசனை மிக்கது! சுவையான சாலட்! தொடர்ந்து வழங்கி வருதற்கு நன்றிகள் பல!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 16. ஒவ்வொரு முறையும் புதுசா பரேஷ் சாலட் தர உங்களால் மட்டும்தான் முடியும் அண்ணா! சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete
 17. வெங்காயம்,தக்காளி தமிழ்நாட்டிலும் இப்போ அநியாய விலைதான். தேங்காய் கடந்த ஒரு வருடமாக ஏறியது இறங்கவேயில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   Delete
 18. இங்கெல்லாம் இளநீர் விலை ஒன்றுக்கு ரூ. 20-லிருந்து ரூ25/- இது ஒரு தகவலுக்கு மட்டுமே. ஃப்ரூட் சலாட் இனிக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 19. பாலத்துக்கு பதிலாகப் பள்ளிக்கூடம் கட்டக்கூடாதோ?

  ReplyDelete
  Replies
  1. இருக்கும் பள்ளிகளுக்கே மாணவர்கள் வர முடியாத நிலை. அதனால் பாலம்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 20. ஒரு கிலோ வெங்காயம் அறுபது ரூபாய் பரவாயில்லைனு தோணுதே..

  ReplyDelete
  Replies
  1. பத்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் விற்ற வெங்காயம் அறுபது எனும் போது பலருக்கு கஷ்டமாக இருக்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 21. இருபது ரூபாய்க்கு ஒரு கிலோவா.. ஆ.. இதென்ன கனவா?

  ReplyDelete
  Replies
  1. இருபது ரூபாய்க்கு ஒரு கிலோ? எது?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 22. அனைத்தும் எப்போதும் போல அருமை நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 23. அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 24. ஃப்ரூட் சாலட் அருமை. அதுவும் அந்த இளநிக்காரரின் நெத்தியடி அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 25. அருமையான சாலட்! நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 26. இளனீர் பத்து ரூபாயா? எந்த உலகத்தில் இருக்கீங்க? நான் தமிழ்னாட்டில் 30-40 ரூபாய்க்குக் குறைஞ்சு இளனீர் பார்த்ததே இல்லை. fizzy drinksஐ விட இளனீர் ரொம்ப நல்லது. ஆனா அனியாயத்துக்க் விலை.

  Please continue fruit salad

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

   Delete
 27. வணக்கம் சகோதரரே1
  எங்கள் விருப்பத்தின பயனாய், தொடரும் ஃப்ரூட்சாலட் அருமையாக இருந்தது. இங்கும் காய்கறிகளின் விலைகள் மிகவும் கணிசமாக உயர்ந்து விட்டது. குழந்தைகளின் படங்கள் (குறிப்பாக போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் குழந்தை ) மனதை கொள்ளை கொண்டன . விளம்பரம்,கவிதை என்று மொத்தத்தில் பழகலவை தித்திப்பாய் நன்றாக இருந்தது.
  வாழ்த்துக்களுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 28. வணக்கம்

  தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
  பார்வையிட முகவரி இதோ-http://blogintamil.blogspot.com/2014/08/5.html
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 29. உங்களுடைய தளம் இன்றைய வலைச்சரத்தில் பாராட்டப்பட்டுள்ளது.
  இணைப்பு http://blogintamil.blogspot.in/2014/08/5.html
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய தளத்தினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 30. 101 avadhu fruit salad indru dhan padiththen. Cadbury Ad. Parkkumbodhellam romba rasiththu parppen.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....