திங்கள், 7 ஜூலை, 2014

நைனிதால் – சீதாவனிக்குள் சீதைஏரிகள் நகரம் – பகுதி 19

ஏரிகள் நகரம் – பகுதி 01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16 17 18

ஏரிகள் நகரம் தொடரின் பதினெட்டாம் பகுதியினை முடிக்கும்போது கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.


காட்டுப்பாதையில் பயணித்துக் கொண்டே இருந்தோம் அருகே தண்ணீர் ஓடிக்கொண்டிருகும் ஓசை கேட்க, ஆவலுடன் அந்த சப்தம் கேட்கும் இடம் வந்துவிடாதா என பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த இடமும் வந்தது - கோசி ஒரு சிற்றோடை போல ஓடிக்கொண்டிருந்தாள். ஒரு இடத்தில் குறுகிய நதியின் குறுக்கே கருங்கற்கள் கொண்டு பாதை அமைந்திருக்க, அந்த வழியின் மூலம் கோசியைக் கடக்கப் போகிறோம். அதற்கு முன்னர் அங்கே சற்றே இளைப்பாறுவோமா?


 ஏரிக்கரை பூங்காற்றே.... 
நீ போற வழி தென்கிழக்கோ....

கூழாங்கற்கள் நிரம்பிய சிற்றோடை போல ஓடிக்கொண்டிருக்கும் கோசி ஆற்றின் கரையில் சில நிமிடங்கள் அமர்ந்து இளைப்பாறினோம். போகும்போது வாங்கிச் சென்ற சில நொறுக்குத் தீனிகளை நாங்கள் உண்டு மகிழ்ந்தோம்.  கூடவே ஓட்டுனர் வீரப்பனுக்கும் கொடுத்தோம். காலியான அந்த பைகளை காட்டில் போடக்கூடாது என்ற சுய கட்டுப்பாட்டுடன் எடுத்து வைத்துக் கொண்டோம் – வெளியே சென்ற பிறகு குப்பைக்கூடையில் போடலாம் என!

  
நீலவானத்திலிருந்து வேண்டிய அளவு நீல வண்ணத்தினை எடுத்துக் கொண்டாள் போலும் இந்த ஓடைப்பெண்!


”புல்வெளியோ என்ற சந்தேகம் வேண்டாம்....” என்று சொல்லாமல் சொல்லும் பாசி படிந்த கிண்று.... 
  
நாங்கள் அங்கே அமர்ந்திருந்தபோது ஒரு சில தனியார் வாகனங்களும் அந்த இடத்தினைக் கடந்தன. புதிதாய் மணமான ஒரு ஜோடி, இன்னும் சில இளைஞர்கள் இருந்த ஒரு வாகனம் வந்தது. வாகனத்தில் இருந்த அனைவரும் பலத்த சப்தங்களை எழுப்பியபடி வந்தனர்.  வந்தவர்களுக்கு வால்கள் இருந்ததாகத் தெரியவில்லை – ஆனாலும் வானரங்களைப் போல நடந்து கொண்டார்கள்.  இருக்கைகளில் அமர்ந்து கொள்ளாது கதவுகளில் இருக்கும் கண்ணாடிகளை கீழிறக்கி அதன் மேல் பக்கத்திற்கு ஒன்றாய் ஆண்கள் அமர்ந்து கொள்ள ஓட்டுனர் இருக்கைக்கு எதிர் கதவின் மேல் இரண்டு பெண்கள் – வாகனத்தின் மேல் ஒரு இளைஞர் – அவர் கீழே விழுந்துவிடாதபடி பின் பக்கம் இருந்த இளைஞர்கள் பிடித்துக் கொண்டிருந்தார்கள். காட்டிற்குள் இருந்த குரங்குகள் கூட இவர்களின் சேஷ்டைகளைப் பார்த்து வெட்கம் கொண்டு ஓடின!


சீதாவனி காட்டிற்குள் இருக்கும் தங்கும் விடுதி....
தனிமை விரும்பிகள் இங்கே தங்கலாம்...  
பகலில் சில சுற்றுலாப் பயணிகள் தொந்தரவு செய்தாலும் இரவில் தனிமை....  அவ்வப்போது சில காட்டு நரிகளின் ஊளையிடும் சத்தம் உங்கள் தனிமையைக் கெடுக்கலாம்!

சில நிமிடங்கள் கடந்தபிறகு அந்த சிற்றோடையின் குறுக்கே இருந்த கற்களாலான பாதையை ஜீப்பில் அமர்ந்து கடந்தோம்.  ஜீப் என்பதால் சுலபமாக கடக்க முடிந்தது. கார் போன்றவற்றில் வந்தவர்கள் அந்த இடத்தினைக் கடக்க ரொம்பவே கஷ்டப்பட்டார்கள்.  வெள்ளம் இருந்தால் நிச்சயம் அப்படிக் கடக்கும்போது வண்டி அடித்துக் கொண்டு போய்விடும் அபாயம் இருந்தது.

 காளி.....  
நரியின் சத்தம் உங்களைப் பயமுறுத்தினால் இவளை நினைத்துக் கொள்ளலாம்....

தொடர்ந்து காட்டின் ஊடே பயணித்து ஆங்காங்கே ஒலிக்கும் பறவைகளின் ஒலிகளையும், மரங்கள் அசைந்து ஒன்றுக்கு ஒன்று உரசிக்கொள்ளும் ஓசைகளும் ரம்மியமாக இருந்தன.  சில நிமிடங்கள் கடந்த பிறகு நாங்கள் சென்றடைந்த இடம் ஒரு கோவில்.....  என்னது காட்டிற்குள்ளும் கோவிலா? என்று ஆச்சரியம் உங்களுக்கு வரலாம். எங்களுக்கும் தான். ஜிம் கார்பெட் வனத்தின் இந்தப் பகுதியின் பெயரிலே இதற்கான காரணம் ஒளிந்திருக்கிறது.  இந்த பகுதியின் பெயர் – சீதாவனி. அதாவது சீதை இருக்கும் வனம்.

 சீதாவனி....  
பெயர் கொடுத்த சீதை....  
கூடவே லவனும் குசனும்...சீதாதேவி கோவிலில் விக்ன விநாயகன்.....
 
இராவண வதம் முடிந்து சீதையும் இராமரும் அயோத்யா திரும்புகிறார்கள்.  அயோத்யா வந்த பிறகு அயோத்யா மக்கள் சீதையின் மீது சந்தேகம் கொள்ள சீதையை காட்டுக்கு அனுப்பினார் என்று படித்திருக்கிறோம். இது உண்மையா, இப்படி காட்டுக்குள் தனது மனைவியை அனுப்பியது சரியா என்ற விவாதத்திற்குள் சென்றால் இந்த பதிவின் நீளம் உங்களை இங்கிருந்து ஓடச் செய்யலாம்! அதனால் அதைப் பற்றி பார்க்காது, இந்த இடம் பற்றி பார்க்கலாம்.  அப்படி காட்டுக்குள் அனுப்பப்பட்ட சீதை இந்த காட்டிற்குள் இருந்ததாக இந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள்.


சீதாமாதாவிற்கான கோவில்......


கோவில்....  கொஞ்சம் பழமை தெரிகிறதோ?

இந்த காட்டுக்குள் சீதா மாதாவிற்கு ஒரு கோவிலும் கட்டியிருக்கிறார்கள்.  சீதையின் கூடவே லவகுசர்களும் அமர்ந்திருக்கிறார்கள். கோவிலுக்குச் செல்லும் பாதையில் இருந்த தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் தகவல் பலகையும் “Temple Sacred to Sita” என்று தகவல் சொல்கிறது.  வாருங்கள் சீதை மற்றும் லவகுசர்களை தரிசிப்போம்.  கூடவே ஒரு பிள்ளையார் சிலையும் காளி சிலையும் உண்டு.  மேலிருந்து பார்க்கும்போது ஒரு கிணறு பச்சைப் பசேலென பாசியுடன் காட்சியளித்தது! அதனைத் தாண்டி பார்வையை ஓட்டினால் தண்ணீர் சலசலவென ஓடிக்கொண்டிருந்தது.

 புராதனமான கோவில் எனச் சொல்லும் தகவல் பலகை....

இந்த இடத்தில் ஒரு தங்கும் விடுதியும் உண்டு.  தங்குபவர்கள் தங்களுக்குத் தேவையான உணவினை எடுத்துக் கொண்டு வருவது நல்லது. இங்கே சமைக்கும் வசதிகள் இருந்தாலும் தேவையான பொருட்களை ராம்நகரிலிருந்து தான் வாங்கிக் கொண்டு வரவேண்டும். இந்த இடத்தின் சுற்றுவட்டாரத்தில் சில கிராமங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து வரும் ஒன்றிரண்டு பேர் இங்கே தேநீர் கடை வைத்திருக்கிறார்கள்.  சுற்றுலாப் பயணிகள் இங்கே தேநீர் அருந்தி சீதா தேவியை தரிசித்து திரும்புகிறார்கள். நாங்களும் சில நிமிடங்கள் அந்த இயற்கை எழிலை ரசித்து, சுத்தமான காற்றை சுவாசித்து மீண்டும் ராம் நகரை நோக்கி பயணிக்க ஆயத்தமானோம்.

அடுத்தது என்ன? அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

தொடர்ந்து பயணிப்போம்....                                            

நட்புடன்

வெங்கட்
புது தில்லி…..

46 கருத்துகள்:

 1. சீதாவனி
  சீதை இருந்த வனப்பகுதியில் ஓர் பயணம்
  அருமை ஐயா
  படங்கள் அழகோ அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தமிழ் மணத்தில் இணைத்து முதலாம் வாக்களித்தமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 3. வணக்கம்
  ஐயா

  அறிய முடியாத பல தகவலை அறிந்தேன் தங்களின் பதிவு வழி. படங்களு் எல்லாம் மிக அழகாக உள்ளது பகிர்வுக்கு நன்றி ஐயா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 4. வணக்கம்
  ஐயா

  த.ம 2வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. இங்கே போக எனக்கு அநேகமா வாய்ப்பு இருக்காது. உங்கள் பதிவின் மூலம் போய் தரிசனம் செய்தேன்.

  அதென்ன சீதா மாதா, இப்படி கோவ/ரமா கண் அலங்காரம் செஞ்சுக்கிட்டு இருக்காள்! நரிகளை ஓட்டுவதற்கோ என்னமோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொதுவாகவே வட இந்தியாவில் இறைவன்/இறைவி சிலைகளில் நளினம் இருக்காது. இது ரொம்பவே நளினமில்லாது இருக்கிறது. கொஞ்சம் பயமாகவும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 6. நீல வண்ண ஓடைக்கருகே பச்சை பட்டாடை உடுத்திய மரங்களோடு போட்டிபோட்டுக்கொண்டு நிற்கும் அந்த இரண்டு சிகப்பு வண்ண இலைகளோடு கூடிய செடிகளையும் பாசி படிந்த வட்டக் கிணறையும் மிக அருமையாக படமெடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 7. அழகிய படங்கள்...

  // குப்பைக்கூடையில் போடலாம் என... // பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

   நீக்கு
 8. # காளி..... நரியின் சத்தம் உங்களைப் பயமுறுத்தினால் இவளை நினைத்துக் கொள்ளலாம்....#
  காளியையும் ,சீதாவையும் பார்த்தால் பயம் கூடுமே தவிர குறையாது போலிருக்கே !
  த ம 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. துளசி டீச்சருக்கு சொன்ன அதே பதில் தான் உங்களுக்கும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 9. செல்ல முடியாத இடங்கள்... சென்று வந்தது போல் இருக்கிறது உங்கள் பதிவு. அழகான இயற்கை பிரதேஷங்கள்...புகைப்படம் காட்டுகிறது. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது முதல் வருகை.. மிக்க மகிழ்ச்சி உமையாள் காயத்ரி.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 11. சீதாவனி - அருமையான தகவல்கள்.. எங்களால் போக முடியாவிட்டாலும் உங்களால் இந்த தரிசனங்கள்... நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 12. கிடைக்கும் சந்தர்ப்பத்தில் பல இடங்களுக்குச் சென்று பதிவாக, ஆவணமாக ஆக்குகிறீர்கள். வாழ்த்துக்கள். புகைப்படங்கள் அருமை Venkat photography என்று எழுதக் காணோமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகச் சிறிய எழுத்தில் எழுதியிருப்பதால் Venkat Photography உங்களுக்குத் தெரியவில்லை என நினைக்கிறேன். படங்களை க்ளிக் செய்து பெரிதாக்கி பார்த்தால் தெரியும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு
 13. சீதாமாதா கோவில் கண்டுகொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 14. சீதாவனி வனப்பகுதி அழகு! அந்த பாசி படர்ந்த கிணறை முதலில் பார்க்கும் போது பசுமை படர்ந்த மைதானமாக தோன்றியது! அழகான புகைப்படங்கள்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 15. படங்கள் அருமை. பாசி படர்ந்த கிணறைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது. வானரப் பயணிகளின் பு.ப போட்டிருக்கக் கூடாதோ!

  சீதையின் கண்ணைப் பார்த்தால்தான்.... ஹிஹிஹி.. பழமையான கோவில்தான். வடநாட்டு பாணி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த வானரங்களில் சில பெண்களும்.... அதனால் புகைப்படம் எடுக்கவில்லை!

   சீதையின் கண்களைப் பார்த்தால் நமக்கும் பயம் தான்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 16. அழகிய வர்ண்ணனையுடன் கூடிய கட்டுரை வழக்கம் போல்!! நதியின் அழகு அழகுதான்! பச்சைப் பாசியாக ஆடை போர்த்தி படர்ந்த கிணறும், நீல வான ஓடையில் என்று பாடத் தோன்றும் அந்த நீல நிற ஓடையில் பகலானதால் நீந்துகின்ற வெண்ணிலா தான் இல்லையே தவிர அதுவும் அழகுதான்.....

  நதியின் படத்திற்கு தாங்கள் கொடுத்த கமென்ட் "ஏரிக்கரை பூங்காத்தே" ஆஹா அருமை!

  குரங்குகள் பாவம்...குழம்பியிருக்கும்.....நாம் தவறுதலான இடத்தில் இருக்கின்றோமோ என்று!

  ப்ளாஸ்டிக் குப்பையை குப்பைக் கூடையில் போட தனியாக வைத்தது...பாராட்டுக்கள்! எல்லோரும் இதைச் செய்தால் நமது நாடு (குப்பை ஃப்ரீ ஊட்டி என்று சொல்லிக் கொள்கிறார்கள்...முனைகின்றார்கள்...)குப்பை ஃப்ரீ நாடு ஆகிவிடும்...நதிகள் எல்லாம் தூய்மையாகும்!

  த.ம.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 17. சீதையைப் பார்த்து பயப்படுவதை விட
  நரியே பரவாயில்லை என்று தோன்றும் போல் இருக்கிறது.

  படங்களும் பதிவும் அருமை நாகராஜ் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான்.... சீதையை இதை விட கொடுமையாக சிலை வடிக்க முடியாது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   நீக்கு
 18. பயணம் சிறப்பாகத் தொடர்கிறது...
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   நீக்கு
 19. உங்களின் பயணத்தில் ஒரு சீதா தேவிக்கு ஒரு கோவில் இருக்கிறது என்ற புதிய தகவலை தெரிந்து கொண்டேன். தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 20. Kuppay koodail podavaendum yendra yennam parattukkuriyadhu. Ozukkam vizhuppam tharalan... yendra kural ninaivirku varugiradhu.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 21. நேர்த்தியான படங்கள் ,அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 22. பதில்கள்
  1. தகவலுக்கு நன்றி சிகரம் பாரதி. உங்கள் பக்கத்திற்கும் வருகிறேன்.

   நீக்கு
 23. வணக்கம்

  தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
  பார்வையிட முகவரி இதோ-http://blogintamil.blogspot.com/2014/08/5.html
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....