எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, April 28, 2014

நைனிதால் – ஒன்பது முனை ஏரிஏரிகள் நகரம் – பகுதி 10

ஏரிகள் நகரம் – பகுதி 01 02 03 04 05 06 07 08 09

ஏரிகள் நகரம் தொடரின் பகுதி ஒன்பதினை முடிக்கும்போது கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.

பீம்தாலினை அடுத்து நாங்கள் பார்த்த இடம் என்ன? அந்த இடமும் ஒரு ஏரி தான். நைனிதால் என்றாலே ஏரிகள் நகரம் தானே...  சுற்றிச்சுற்றி ஏரிகளும் மலைப்பகுதிகளும் எல்லா திசைகளிலும். நாங்கள் சென்ற இடம் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்!

 ரம்மியமான சூழல் பார்க்கும்போதே
இங்கே செல்ல ஆசை வருகிறது அல்லவா.....

நோக்குச்சியா தால் – ஹிந்தியில் நோ [ஆங்கில No அல்ல! :)] என்றால் ஒன்பது எனும் எண் - ஏக், தோ, தீன், சார், பாஞ்ச், சே, சாத், ஆட், நோ....  வரிசையில் வரும் நோ! இந்த பெயரில் நோ என்பது இருப்பதால் இது எதோ ஒன்பதாம் எண்ணைக் குறிப்பதாக நினைத்தால் அது தான் சரியான எண்ணம்.  குச்சியா... என்பது முனைகளைக் குறிக்கும் ஒரு சொல்.  அதாவது இந்த ஏரிக்கு ஒன்பது முனைகள் – அதனால் நோகுச்சியா தால்! 

 படகுப் பயணம் செல்ல நீங்கள் தயாரா? கேட்காமல் கேட்கிறதோ இப்படகு?

நைனிதால் நகரிலும், அருகிலுள்ள இடங்களிலும் இருப்பதிலேயே ஆழமான ஏரி இந்த ஒன்பது முனை ஏரி. சுமார் ஒரு மீட்டர் நீளமும் நாற்பது அடி ஆழமும் உள்ள ஏரியாக இதைச் சொல்கிறார்கள். ரொம்பவும் பழமையான ஏரிகளில் இந்த ஏரியும் ஒன்று.  பழமையான இடம் என்றாலே அதைச் சுற்றி நிறைய கதைகளும் இருக்கும் அல்லவா – இந்த ஒன்பது முனை ஏரி பற்றியும் நிறைய கதைகள் உண்டு – அவை கட்டுக்கதைகளோ உண்மையோ என்பதை இங்கே ஆராயப் போவதில்லை!

 இக்கட்டிடத்தில் ஒரு இடம் கிடைத்தால் தங்கிவிட உத்தேசம்...  மலையும் ஏரியும் இருந்துவிட்டால் போதுமா? வேலை வேண்டுமே!

இந்த ஏரியின் அருகே தரையில் நின்றபடியே ஒருவரால் ஏரியின் ஒன்பது முனைகளையும் பார்க்க முடிந்தால் அப்படியே காற்றில் கரைந்து பரமனின் பாதங்களை அடையலாம் என்று சொல்கிறார்கள்.  இத்தனை பெரிய ஏரியின் ஒன்பது முனைகளையும் நின்ற இடத்தில் இருந்தே பார்ப்பது கடினம் என்பதை இப்படி முடியாத ஒன்றை சமன்படுத்திச் சொல்லி இருக்கிறார்கள் போல!

 மலையோரம் வீசும் காற்று.....
படகிலிருந்து எடுத்த படம்....

மிக அழகான ஏரி. சென்ற பகுதியில் பார்த்த பீம்தால் போலவே,  இங்கேயும் நிறைய வாத்துகள் சுற்றிக் கொண்டிருந்தன.  மாலை நேரம் என்பதால் எங்கெங்கும் ஒரு வித அமைதி – மனதைக் கொள்ளைக் கொண்டது. படகுகள் காத்திருக்க, ஒரு பயணம் செய்ய நினைத்தோம். மாலையும் இரவும் சந்திக்கும் நேரம் என்பதால் சூரியன் மறைய மறைய குளிர் தனது விகார முகத்தினைக் காட்டத் துவங்கி இருந்தது.

 இன்னுமொரு படம் - படகிலிருந்தபடியே எடுத்தது

கைகளுக்கு கை உறைகள், தலையும் காதும் மூடுவது போன்ற குல்லாய்கள், காலிற்கு காலுறைகள், காலணிகள், குளிருக்கான உடை என்று தயாராக இருந்தாலும் அத்தனையையும் தாண்டி நரம்புகளையும் எலும்புகளையும் தனது வலிமையைக் காட்டித் தாக்கத் துவங்கியது குளிர்.  ஆனாலும் அது ஒரு அற்புத அனுபவமாகத்தான் இருந்தது. அரை மணி நேரம் அந்த சூழலில் ஏரியில் ஒரு இனிமையான படகுப் பயணம் செய்து வந்தோம். 

 நான் தான் பஹாடி நிம்பு..... 

ஏரியில் பயணிக்கும் போது சுற்றிச் சுற்றி அடிக்கும் குளிர் காற்றில் காமிராவில் கிளிக் செய்வதே – அதுவும் கையுறைகள் அணிந்து புகைப்படங்கள் க்ளிக் செய்வது கடினமாக இருந்தது! பயணம் முடித்து கரைக்கு வந்தால் சுடச்சுட தேநீர் குடித்தே ஆகவேண்டிய நிலை! ஏரியோரம் அமைந்திருந்த ஒரு சிறிய கடையில் தேநீர் தயாரிக்கும்படிச் சொல்லி சுற்று வட்டாரத்தினை நோக்கினோம்!

 யாருப்பா அது! இயற்கையை படம் பிடிக்காது மனிதனைப் படம் பிடிப்பது?

 என்னமோ போங்க! இந்த சக்ரீன் டச்ல படம் எடுக்கவே தெரியல! - குளிர் அவஸ்தையில் படம் எடுப்பதை படம் எடுத்தது நண்பர்...
ஒரு குழந்தையும் அவரது தந்தையும் அங்கே இருந்த பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள் – அவர்களும் சுற்றுலாப் பயணிகள் தான். ஹரியானா மாநிலத்தினைச் சேர்ந்தவர்கள் – அவரையும், அவரது குழந்தையையும் தனது சக்ரீன் டச்அலைபேசியில் படம் எடுத்துத் தரச் சொன்னார் – கையுறைகள் அணிந்த கைகளுடன் படம் பிடிக்க ரொம்பவே கஷ்டமாக இருக்க, ஆனது ஆகட்டும் என ஒரு கையில் மட்டும் கையுறைகளை கழற்றி அவர்களைப் படமெடுத்தேன்! [நான் திண்டாடுவதைப் படமெடுத்த நண்பர் பிரமோத் வாழ்க!]

 ஓடம் நதியினிலே.......

தேநீர் கடையில் சில பழங்களும் அடுக்கி வைத்திருந்தது – என்ன பழம் என்று கேட்டால் “பஹாடி நிம்புஎன்றார் கடைக்காரர். அதாவது மலை எலுமிச்சை....  பார்க்க நமது கிடாரங்காய்/நார்த்தங்காய் மாதிரியே இருக்கிறது. நம் வீட்டில் உள்ள பெண்மணிகளை அழைத்துச் சென்றிருந்தால் வாங்கி ஊறுகாய் போட்டிருப்பார்கள்! நாமும் ருசித்து சாப்பிட்டு இருக்கலாம்! :)  நானே வாங்கி வந்து ஊறுகாய் போட நினைத்தேன் – பார்க்கும்போதே நன்றாகவும் அழகாகவும் இருந்ததால்! 

 ”எலே..... கூட்டமா நின்னு என்னலே பண்ணுறீங்க!”
குளிர்காயும் மக்கள்!

அங்கே சுடச்சுட தேநீர் குடித்து உடம்பிற்குக் கொஞ்சம் சூடேற்றிக் கொண்டபின் எங்கள் பயணம் தொடர்ந்தது. செல்லும் போதே வழியில் ஒரு பெரிய ஹனுமன் சிலையைப் பார்த்திருந்ததால் அங்கே சென்று ஹனுமனுக்கு ஒரு வணக்கம் சொல்ல அங்கே விரைந்தோம். 

ச்ச்சீ.... எனக்கு வெக்கமா இருக்கு.... நான் முகம் காட்ட மாட்டேன்” சொல்லும் பூனையார்.

பிரதான சாலையிலேயே 52 உயரத்தில் அசால்டாக நிற்கிறார் அனுமந்தலு. ஜம்முவில் உள்ள வைஷ்ணவ் தேவி கோவில் போலவே இங்கே செயற்கையாக குகை அமைத்து சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறார்கள்.  பொதுவாகவே வட இந்திய கோவில்களுக்குச் செல்லும் போது ஏதோ கண்காட்சி பார்ப்பது போன்ற உணர்வு தான் எனக்குள் தோன்றும். இங்கேயும் அப்படியே! வெளியே நின்றபடியே அனுமனுக்கு ஒரு வணக்கம் செலுத்திவிட்டு பயணத்தினைத் தொடர்ந்தோம்.

அடுத்து நாங்கள் சென்ற இடத்திற்கும் குளிருக்கு இதமாய் நாங்கள் அருந்திய தேநீருக்கும் ஒரு தொடர்பு உண்டு. அது என்ன அடுத்த பதிவில் பார்க்கலாமா!

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

ஒரு செய்தி:  அலுவலத்தில் பிடுங்க வேண்டிய ஆணிகள் அதிகம்.  அதுவும் மே மாதம் முழுவதும் தென்னிந்தியா வருவதாக எண்ணம். அதனால் விடுமுறைக்கு முன் வேலைகளை முடிக்க வேண்டிய கட்டாயம். அதனால் எனது பக்கத்தில் பதிவுகள் தொடர்ந்து வெளிவராது.  முடிகிற நேரத்தில் பதிவுகள் வெளியிடுகிறேன். மற்றவர்களின் பதிவுகளையும் நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன்.  இது நல்ல செய்தியா கெட்ட செய்தியா என்பதை முடிவு செய்யும் சுதந்திரம் உங்களுக்கு மட்டுமே! :)

48 comments:

 1. படங்கள் அனைத்தும் அழகோ அழகு ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 2. ஒன்பது முனை ஏரியை உட்கார்ந்த இடத்திலிருந்தே பார்க்க உதவியமைக்கு நன்றி!

  //பொதுவாகவே வட இந்திய கோவில்களுக்குச் செல்லும் போது ஏதோ கண்காட்சி பார்ப்பது போன்ற உணர்வு தான் எனக்குள் தோன்றும்.//

  முதன்முதல் தில்லி பிர்லா மந்திர் சென்றபோது இந்த உணர்வு எனக்கும் ஏற்பட்டது. நம் ஊரில் கோவிலை, அங்கு இருக்கும் மூர்த்தி பெயரில் அழைப்போம். ஆனால் அங்கே லக்ஷ்மி நாராயண பெருமாள் கோவிலை கட்டியவர் பிர்லா என்பதால் அவர் பெயரில் கோவிலை அழைப்பது என்னவோ போல் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. பிர்லா மந்திர் - இதன் பெயர் லக்ஷ்மி நாராயண் மந்திர் - ஆனாலும் பிர்லா மந்திர் என்ற பெயரிலேயே பலருக்கு தெரிந்திருக்கிறது! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 3. அழகான‌ ஏரியை சுற்றிப் பார்த்த கையோடு அனுமனை வணங்கலாம்னு பார்த்தால் அவரைக் காணலையே !!

  ReplyDelete
  Replies
  1. அனுமன் படம் - அடுத்த பதிவில் வெளியிட்டு விடுகிறேன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 4. அடிக்கிற வெயிலுக்கு படங்கள் மனதிற்கு இதம்...

  தேநீர் தொடர்பை அறிய ஆவலுடன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. வருக... வருக... சந்திப்போம்....

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் சந்திக்கலாம் தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. வணக்கம்
  ஐயா.

  பல நாட்கள் இணையம் வர முடியாமல் போனதால்
  தங்களின் பல பதிவுகளை நான் படிக்காமல் விட்டேன் பின்பு படிக்கிறேன்.

  பயண அனுபவம் பற்றி எழுதியுள்ள பதிவு நன்றாக உள்ளது அத்தோடு படங்களும் மிக அழகாக உள்ளது. வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   சில சமயங்களில் இப்படித்தான் பதிவுலகம் பக்கம் வர இயல்வதில்லை....

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 8. வருகிற ஜூன் மாதம் டெல்லி ,ஜெய்ப்பூர் ,வாரணாசி சுற்றிவர பிளான் ,உங்கள் பதிவுகள்
  வழிகாட்டியாய் உதவும் போலிருக்கிறது !
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. தலைநகரம் வரும்போது சொல்லுங்கள்... சந்திக்கலாம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 9. அழகான ஏரி - எலுமிச்சம்பழம் - அந்தக் குட்டிப் பூனை - எல்லாம் சரி!..
  எங்க அனுமந்தலு எங்கே?.. எங்கே?..

  ReplyDelete
  Replies
  1. அனுமந்தலு படம் - அடுத்த பதிவில்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 10. அழகான ஏரி , அழகான படங்கள்.
  தென்னிந்திய வருகை, அப்பா, அம்மா, மற்றும் ஆதி, ரோஷ்ணிக்கு மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 11. வெங்கட், இன்று தான் மொத்தமாக நைனிடால் பயணம் முழுவதையும் படித்தேன். அருமையான தொகுப்பு.இடங்களை கண்முன் கொண்டு வரும் புகைப்படங்கள். மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்...

   Delete
 12. படங்களைக் கண்டு மிகவும் ரசித்தேன் அதிலும் அந்தப் பூனைப் படத்துக்கு ஓர்
  உணர்வை விதைக்குமாய்ப் போல் கொடுத்த வசனமும் மனத்தைக் கவர்ந்து
  சென்றது .இந்தப் பூனை பூர்வ ஜென்மத்தில் யாராக இருந்திருக்க முடியும் சகோ ?..:))))

  ReplyDelete
  Replies
  1. பூனை போன ஜென்மத்தில் யாராக இருந்திக்க முடியும்... நீங்களே சொல்லுங்களேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 13. Then India varappovadhu nalla seidhi. Padhivugal sila natkal varamal irukkappovadhu ketta seidhi. Ketta seidhiil oru Nalla seidhi.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 14. படங்கள் அருமை. தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 15. படங்கள் கண்ணுக்கு விருந்தளித்தன! ஒன்பது முனை ஏரி குறித்த தகவல்கள் அறிந்து கொண்டேன்! நன்றி! பின்குறிப்புக்கு நன்றி! நேரம் கிடைக்கையில் பதிவிடுங்கள் பார்வையிடுங்கள்! கோபித்துக்கொள்ள மாட்டோம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 16. சென்னையில் வெயிலில் வறுபட்டுக் கொண்டிருக்கையில் , நைனிதால் படங்கள் போட்டு இன்னும் சூடாக்குகிறீர்களே!

  ReplyDelete
  Replies
  1. படங்களைப் பார்த்தாவது குளிர்ச்சி கிடைக்கட்டுமே என்ற நல்ல எண்ணமே காரணம்! :))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 17. உள்ளம் கொள்ளை போனது! வெயில் இங்கு வாட்டுகையில் குளிர வைத்த பதிவு! நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 18. ஹைய்யோ!!!!

  ரொம்ப ஃப்ரெண்ட்லி பூனையா இருக்கே:-)

  ஆமாம்.... பெரிய ஹனுமன் எங்கே?

  ReplyDelete
  Replies
  1. இந்தப் பூனை நிஜமாகவே ஃப்ரெண்ட்லி தான்.

   நண்பர் இதை பல புகைப்படங்கள் எடுத்தார். - அதில் ஒன்று தான் இங்கே.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 19. நண்பரே இப்படி எங்களை எல்லாம் ஏங்க வைக்கலாமா? இங்கு சென்னையிலும், பாலக்காட்டிலும் வெயிலில் வறுபடுகின்றோம். இதோ நாளை வேறு எங்கள் குறும்படத்தின் படப்பிடிப்பு. இந்தப் ப்டங்கலையும், தங்கள் வர்ண்னையும் வாசிக்கும் போது ஆஹா அப்படியே இந்த இடம் னைனிதாலாக மாறிவிடாதா என்றே எண்ணத் தோன்றுகின்றது! அருமையன படங்கள்! நல்ல ரசனைமிக்கத் தலைப்பு புகைப் படங்களுக்கு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!...

   தில்லியிலும் தற்போது கொடுமையான கோடை தான்!

   Delete
 20. உங்களுடைய இந்த தொடருக்கு நான் அடிமையாகிவிட்டேன். இப்பப்பார்த்து நீங்கள் அலுவலகத்தில் ஆனி புடுங்க வேண்டும், ஆனி அடிக்க வேண்டும்னு சொல்றீங்களே? இது உங்களுக்கே நியாயமா?????

  ReplyDelete
  Replies
  1. வழக்கம் போல எல்லா திங்கள் கிழமையும் இத்தொடரின் பகுதிகளை வெளியிட நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 21. பனிபொழியும் ஏரிக்கரையில் படம் எடுத்த வீரர்களுக்கு நன்றி. விடுமுறையை நன்றாகச் செலவிட்டு அதையும் பகிந்து கொள்ளுங்கள். ஹாப்பி ஹாலிடேய்ஸ்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 22. வணக்கம் நண்பர்களே

  உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி கார்த்திக் சேகர்.

   Delete
 23. அழகான படங்களுடன் ரசனையான கமெண்ட்களும் அருமை... ஓய்வுக்குப் பின்னரான சுவாரசியப் பதிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 24. மிக அழகான இடம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....