எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, May 2, 2014

ஃப்ரூட் சாலட் – 90 – சாக்கடைத் தங்கம் - காற்றின் மொழி – முதுகில் டின்....இந்த வார செய்தி:

கோவையின் உக்கடம் அருகே இருக்கும் ஒரு கழிவு நீர் பண்ணை. அங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் சார்ந்து இருக்கிறது சில குடும்பங்கள். அவற்றிலிருந்து வரும் கழிவு நீர் விவசாய நிலங்களை செழிக்க வைப்பதோடு சிலரின் வாழ்வுகளையும் சிறக்க வைக்கிறது என்று சொல்கிறார்கள். 
நகரின் நகைப் பட்டறைகளில் சேதாரமாகும் ஒவ்வொரு துளி தங்கமும் இந்த கழிவு நீர் வழியாக வெளியேறுகின்றது. அதனால் இந்த கழிவு நீர் சிலருக்கு பொக்கிஷம்.

கழிவு நீர், வாய்க்காலாய் பிரியும் இடத்திலிருந்து தொடங்குகிறது அந்த புதையல் தேடும் தொழில். வழி நெடுக பாத்தி கட்டி, ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வாழ்வாதாரத்தை இந்த கழிவு நீரில் தினம் தினம் தேடுகின்றன.

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கழிவு நீர் பண்ணையிலிருந்து வெளியேறும் நீர் கொஞ்சம் குறைந்திருக்கும்போது, வெளியேறும் இடத்தில் இறங்கி அங்கிருக்கும் சேற்றை வாரி, கரையில் போட்டு வைக்கிறார்கள். பிறகு அதை அங்கே வெட்டி வைத்திருக்கும் குழியில் போட்டு காய்ந்த மண்ணுடன் கலந்து, தண்ணீரில் சலித்து எடுத்து, கழிவுகளையும், மண்ணையும் அப்புறப்படுத்தியபிறகு கடைசியாக தங்கத் துகள்கள் கிடைக்கும் என்கிறார்கள். 

நாமக்கல், தருமபுரி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தான் இத் தொழிலில் ஈடுபடுகிறார்களாம். நாமக்கல்லிலிருந்து குடும்பத்துடன் இங்கு வந்து, பல ஆண்டுகளாக இந்த தொழிலை செய்கிறேன். எனது மூன்று பெண் குழந்தைகளையும் படிக்க வைக்கிறேன்என்று பெருமிதப்பட்டுக் கொள்கிறார் அங்குள்ள முருகேசன்.
 
தினமும் குறைந்தது 13 மணி நேரம் வேலை, 10 நாள் உழைத்தால் 3 கிராம் தங்கம் தேறும். சற்று குறைவான விலையில் விற்றால் கூட, கணிசமான தொகை மிஞ்சும் என்பது இவர்களது கணக்கு. மாதம் ரூ.15 ஆயிரம் வரை கிடைக்கும். இதை வைத்து எனது மகனையும் மகளையும் படிக்க வைக்கிறார் அங்கம்மாள் எனும் பெண்மணி.

தேடலும் உழைப்பும் இவர்களது பலமாக இருந்தாலும், கழிவு நீரில் இறங்கி தங்க வேட்டையில் இறங்கும் இவர்களது சுகாதாரம் பெரிய கேள்விக்குறி.

தி இந்துவில் வெளிவந்த இக்கட்டுரை முழுதும் படிக்க..... இங்கே கிளிக்கவும்!

இந்த வார முகப்புத்தக இற்றை:

வாழ்க்கை ஒரு புத்தகம் போன்றது – சில பக்கங்கள் சோகமாகவும், சில பக்கங்கள் மகிழ்ச்சியானதாகவும் சில பக்கங்கள் மிகவும் எழுச்சியுள்ளதாகவும் இருக்கும். பக்கங்களை திருப்பாமலே இருந்துவிட்டால், அடுத்த பக்கத்தில் என்ன இருக்கும் என்பதே தெரியாமல் போய் விடும்.....

இந்த வார குறுஞ்செய்தி:

பல லட்சக் கணக்கான மக்கள் காதல் கடிதம் தீட்டுகிறார்கள். அப்படி எழுதும் அனைவருமே தங்களது முதல் காதல் கடிதத்தினை எனக்கே தருகிறார்கள். நான் எவ்வளவு பாக்கியசாலி

சொன்னது யார்? சத்தியாமாக நான் இல்லீங்கோ! சொன்னது குப்பைத் தொட்டி!

இந்த வார ரசித்த காணொளி:

பகிர்ந்து கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சியை இந்தக் காணொளி சொல்கிறது.  பாருங்களேன்! சாலைக் காட்சி:

நேற்று இரவு, உணவு உண்டபிறகு ஒரு நடைப் பயணம்! எதிர் பக்கத்திலிருந்து ஒரு கணவன் – மனைவி வந்து கொண்டிருந்தார்கள். கணவன் மனைவியிடம் எதோ சொல்லப் போக, இருப்பது சாலை என்று கூடப் பார்க்காது, மனைவி, கணவனது முதுகில் வைத்தாரே பார்க்கணும் ஒரு அடி......  டின்னு கட்டிடுவாங்கஎன்று சொல்வதன் அர்த்தம் இது தானோ! அப்படி என்ன சொல்லி இருப்பார் – சந்தேகம்......

புகைப்படம்:என் மேல் விழுந்த பனித்துளியே.....
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்!

படித்ததில் பிடித்தது:

நோயாளி: டாக்டர், ஊர் முழுக்க அலைஞ்சிட்டேன்! நீங்க எழுதிக் கொடுத்த மாத்திரை எங்கயுமே கிடைக்கல!

மருத்துவர்: வாய்யா வா! பேனா எழுதலைன்னு கிறுக்கி பார்த்த பேப்பரை நீ தான் எடுத்துட்டுப் போனியா!

என்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

62 comments:

 1. ஃப்ரூட் சாலட்- வித்தியாசமான கலவைகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 2. காலை சிற்றுண்டிக்கு இதமான ஃப்ரூட்சாலட் வீட்டிலும், இங்கும்.....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 3. ஃப்ரூட் சாலட் இன்னும் மிச்சம் இருக்கு. இன்னிக்குக் காலி பண்ணிடணும். :))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 4. கடைசி பஞ்ச் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 5. பல தரப்பட்ட விஷயங்கள், அனைத்தும் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ் பிரபு.

   Delete
 6. எங்க ஊர்லயும் நகைக்கடை தெருவில் இருக்கும் கழிவு நீரில் சிலர் இறங்கி தங்கம் தேடுவதை பார்த்து நொந்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 7. மிகவும் ரசித்துப் பார்க்க வைத்த பகிர்வு அருமை ! வாழ்த்துக்கள் சகோதரா
  நகைச்சுவைகள் மனதை மகிழ வைத்தன பகிர்வுக்கு மிக்க நன்றி .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 8. சுதா த்வாரகாநாதன் புது தில்லிMay 2, 2014 at 11:22 AM

  ஃப்ரூட் சாலட் நன்றாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி.

   Delete
 9. காணொளியை கண்டு ரசித்தேன் !
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 10. சாலைக் காட்சி - இந்த மாதிரி நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்து தான் குஜராத்தில் அந்த சுயேட்சை வேட்பாளர் "மனைவியிடம் அடி வாங்கும் கணவனை காப்பாற்றும் சட்டத்தை" கொண்டு வருவேன்னு சொன்னாரோ !!!!!!

  படித்ததில் பிடித்தது - சிரிப்போ சிரிப்பு....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 11. எனது சின்ன வயதில், காலை வேளைகளில், திருச்சி பெரிய கடைவீதியில், நகைக் கடைகள் இருக்கும் பகுதியில் இருக்கும் சாக்கடைகளில் இதுபோல் தங்கம் அரிப்பவர்களைப் பார்த்து இருக்கிறேன். பாதாள சாக்கடை வந்த பிறகு அவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. நீங்கல் சுட்டிய தி இந்து லிங்கில் சம்பந்தப்பட்ட கட்டுரை இல்லை.

  காணொளி பாட்டின் அர்த்தம் எனக்கு தெரியவில்லை என்றாலும் ரசித்தேன்.

  த.ம.5


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!.

   சுட்டி இப்போது சரி செய்து விட்டேன்.

   Delete
 12. சாக்கடைத் தங்கம் நானும் படித்தேன்.

  இற்றை ஓகே

  குறுஞ்செய்தி :)))))))))))))))))

  காணொளி ஓகே

  சாலைக்காட்சி : செல்லமா அடிச்சிருப்பாங்க...

  புகைப்படம் அழகு. ப.பி : ஹா ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 13. பாவம்! ஏழைகள் எப்படி யெல்லாமே வாழ முயற்சிக்கிறார்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 14. ஃப்ரூட் சாலட் நன்றாக இருக்கிறது. மக்கள் வாழ எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் (சாக்கடையில் தங்கம்)

  புகைப்படம் மிக அழகு.


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 15. பந்தால் டீ டமளாரை உடைத்த பையனையும் திட்டாமல் அவன் பந்தை அன்பாய் தலையை தடவி கொடுக்கும் பாட்டி வணங்க தக்கவர். செய்யும் உதவியை இந்த சிறு வயதில் தெரியாமல் செய்து விட்டு மகிழ்ச்சியாக போகும் சிறுவன் எல்லாம் அருமை.
  குறும்படம் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நல்ல காணொளி என்பதால் இங்கே பகிர்ந்து கொண்டேன்....

   Delete
 16. பகிர்வு அருமை
  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 17. Replies
  1. தமிழ் மணம் பத்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 18. அனைத்துமே அருமை.
  காணோளி மனத்தைத் தொட்டது....

  அந்தக் கணவன் தன் மனைவியிடம்....” உனக்கு அடிக்கத் தெரியுமா...?“ என்று கெட்டிருப்பாரோ...

  ReplyDelete
  Replies
  1. உனக்கு அடிக்கத் தெரியுமா என்று கேட்டிருக்க வாய்ப்பில்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 19. அந்தச் சிறுவனின் உயர்ந்த உள்ளம்!.. சில தினங்களுக்கு முன் எனது Fb - வந்திருந்தது.

  டின் கட்டப்பட்ட கணவன் பாவம்!..

  மற்றவர்களை கிறுக்கனாக்கிய - டாக்டரின் கிறுக்கல் - புன்னகை..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 20. தங்கம் படுத்தும்பாடு பெரும்பாடுதான். மருத்துவர் ஐயா மருந்தை எழுதினாலும், சும்மா கிறுக்கினாலும் அப்படித்தானே இருக்கிறது. பனித் துளியுடன் கூடிய பூ அழகாக உள்ளது. குப்பைத் தொட்டி இதில் யாரையாவது செலக்ட் பண்ணுச்சாமா ?

  ReplyDelete
  Replies
  1. குப்பைத் தொட்டி யாரையாவது செலக்ட் பண்ணுச்சா? நல்ல கேள்வி! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 21. மக்களும் பிழைக்க ஏதோ ஒரு வழியைத் தேடிக் கொள்கிறார்கள். உண்மையில் அதை நம்பி இருக்கமுடியுமா என்றார் ஐயம் எழத்தான் செய்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 22. ஒரு சுவைக் கலவை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 23. அனைத்தும் அருமை - காணொளியும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 24. வாய்யா வா! பேனா எழுதலைன்னு கிறுக்கி பார்த்த பேப்பரை நீ தான் எடுத்துட்டுப் போனியா!//

  டாக்டருங்க எழுதி குடுக்குறதும் அப்பிடித்தானே இருக்கு, இதுக்குன்னே தனியா டிரைனிங் குடுப்பாங்களா ? இல்லை கள்ளபயலுக சிலரால் கற்பிக்கப் படுகிறதா ?

  பலவகைகள் நல்லா இருக்கு !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 25. அனைத்தும் அருமை. இரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 26. ஃப்ரூட் சாலட் ஒவ்வொன்றும் ஒரு சுவை. காணொளி நெகிழவைத்தது. அழகான பூவும் அதற்கேற்ற கமெண்ட்டும். ரசித்தேன் வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 27. நவரசக் கலவை. காணொளி அற்புதம். அடிவைத்த மனைவிக்கு என்ன கோபமொ:) மீண்டும் தங்க வேட்டையா பாவம் அழுக்கில் கைவைத்து வேலை செய்வது பாவம்தான்..ஏழ்மை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 28. எல்லாம் நன்று.
  படமும் வரியும் மிக மிக இனிமையானது.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் அவர்களே.

   Delete
 29. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 30. முதல் செய்தி: சுகாதாரம் நிச்சயம் கேள்விக்குறிதான்.

  பூ மிக அழகு.

  நல்ல தொகுப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 31. ஃப்ரூட் சாலட்- வித்தியாசமான கலவைகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....