வெள்ளி, 9 மே, 2014

ஃப்ரூட் சாலட் – 91 – +2 முடிவுகள் - டாடி எனக்கொரு டவுட்! - தலையில் கல்!

இந்த வார செய்தி:

இன்று +2 தேர்வு முடிவுகள் வெளி வந்திருக்கின்றன. பல மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்கள்.  முதல் மதிப்பெண் பெற்ற மாணவி 1193/1200 எடுத்து இருக்கிறார்.  கன்யாகுமரி மாவட்டத்தில் 1188 மதிப்பெண்கள் எடுத்தவர் தான் மாவட்டத்தில் முதலிடம்.  அவருக்கு எனது வாழ்த்துகள்.  அதே சமயத்தில் இங்கே ஒரு குறைபாட்டினையும் சொல்ல வேண்டி இருக்கிறது…..

அதே மாவட்டத்தில் படிக்கும் நண்பர் பத்மநாபனின் மகள் எடுத்த மதிப்பெண்களும் 1188/1200 – ஆனால் அவர் பெயர் எந்த செய்தியிலும் வரவில்லை – காரணம் அவர் தமிழுக்கு பதிலாக ஃப்ரென்ச் மொழியினை எடுத்திருந்தது தான்.  ஆரம்பப் பள்ளியில் இருந்து தில்லியில் படித்துக் கொண்டிருந்ததால் அவரால் தமிழில் அத்தனை சிறப்பாக படிக்க முடியாது என்ற எண்ணத்தால் தான் அவர் இங்கே பள்ளியில் சேரும்போதே ஃப்ரென்ச் மொழியினை எடுத்திருந்தார்.

தமிழ்நாட்டில் படித்தும், தமிழ் மொழி எடுக்காததால் இந்த மாநிலத்தின் அரசு நடத்தும் தேர்வில், மாவட்ட்த்திலேயே முதல் மதிப்பெண் பெற்றும் இவருக்கு பரிசு கிடைக்காது எனும்போது மனதுக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இந்த மாதிரி நடந்து கொண்டே தான் இருக்கிறது – இதற்கு என்னதான் தீர்வு?

மாவட்டத்தில் முதல் மதிப்பெண் எடுத்திருக்கும் நண்பரின் மகளை நாம் வாழ்த்துவோம்!

இந்த வார முகப்புத்தக இற்றை:

டாடி எனக்கொரு டவுட்டு
::::::::::::::::::::::::::::::::::::::

"திடப் பொருளுக்கும், திரவப் பொருளுக்கும் என்ன வித்தியாசம், டாடி?"
"திடப் பொருள் கெட்டியா இருக்கும்.... திரவப் பொருள் தண்ணியா இருக்கும்.."

"அப்ப திரவப் பொருள்னா கொட்டும் தானே?"
"ஆமாம்...ஆமாம்.."
"
அப்ப, தேள் திரவம் தானே?"
"
தேளா... தேனா.."
"
தேள்!"
"
எப்பூடி?"
"
அது கொட்டறதே!"


இந்த வார குறுஞ்செய்தி:

உங்களுடைய ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் கடவுளிடம் மூன்று பதில்கள் உண்டு – “தந்தேன்!” என்பது முதலாம் பதில்.  “கொஞ்சம் காத்திரு!” என்பது இரண்டாவது பதில். மூன்றாவது என்ன? “உனக்கு நான் வேறு ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்!” – இறைவன் எப்போதும் இல்லை என்று சொல்வதில்லை! கடவுளை நம்பினோர் கைவிடப்படார்!

சுஜாதாட்ஸ்:

சமீபத்திய ரயில் பயணத்தின் போது மற்றவர்களை கவனித்தது போக மீதமிருந்த நேரத்தில் சுஜாதாவின் “கணையாழியின் கடைசி பக்கங்கள்” புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன்! அதில் ரசித்த சில பகுதிகள் அவ்வப்போது இங்கே பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கிறேன்…..

“ரேடியோவில் சில சமயம் சில ரத்தினங்கள் எனக்குக் கிடைக்கின்றன. ஒரு வியாழக்கிழமை இரவு என நினைக்கிறேன். தேசிய நாடகம், சர்வ மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு, இன்ச்சுக்கு இன்ச் வேறு வேறு ரூபங்களில் அலறும் நாடகம். திலீபன், பிரதாபன் போன்ற பெயர் கொண்ட பாத்திரங்கள் சுத்தத் தமிழில் பேசுகிறார்கள். கதை கச்சா முச்சா என்று போகிறது. நாடகத்தை என்னால் மூன்று நான்கு நிமிஷங்களுக்கு மேல் கேட்க முடியவில்லை. அதற்குள் ஒரு ரத்தினம் “நான் நீதிக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தந்தை ஒரு நீதிபதி என் தாய் ஒரு நீதிபதியின் மனைவி!”

-    கணையாழியின் கடைசி பக்கங்கள் – ஏப்ரல் 1975.

ராஜா காது கழுதைக் காது:

ஒரு உணவகத்தில் காலை உணவிற்குக் காத்திருந்த போது வயதான பெண்மணி ஒருவர் – “ஏம்பா தம்பி….  இது என்ன சாம்பார்? – உப்பு உரைப்பு ஒன்றுமே இல்லை! இதையெல்லாம் சாம்பார்னு சொல்லி ஏன் ஏமாத்தறீங்க!”

புகைப்படம்:“என்னைச் சாப்பிடேன்!” கெஞ்சும் மாங்காய் துண்டுகள்!

படித்ததில் பிடித்தது:

ஒரு சீடன் குருவைப் பார்த்துக் கேட்டான் குருவே நான் பேரிச்சம்பழங்களைச்  சாப்பிட்டால் மதக்கோட்பாடுகளைப் புறக்கணித்தவன் ஆவேனா? இல்லையே தாராளமாகச் சாப்பிடலாம் என்றார் குரு.

உடன் சீடன் கேட்டான். கூடவே ஈஸ்ட் சேர்த்துக் கொண்டால் அது தவறா குருவே? என்றான் அதிலொன்றும் தவறில்லை சாப்பிடலாம்..

மறுபடியும் சீடன் கேட்டான் மேலும் சிறிது நீர் உட்கொண்டால் என்ன குருவே? ஒரு குறையும் இல்லை என்றார் குரு அவர் முடிப்பதற்குள் சீடன் கேட்டான். இம்மூன்றும் சேர்ந்ததுதான் பேரிச்சம்பழ மது. அதை மட்டும் நான் ஏன் அருந்தக்கூடாது என்கிறீர்கள் குருவே என்றான்.

குரு கேட்டார் - கைப்பிடி மண்ணையள்ளி உன் தலையில் போட்டால் உனக்கு வலிக்குமா? வலிக்காது குருவே என்றான் மேலும் சிறிது நீரை ஊற்றினால்... குரு கேட்டார். அதுவும் வலிக்காது குருவே என்றான்.

குரு அமைதியாகச் சொன்னார் இரண்டையும் சரியான விகிதத்தில் கலந்து சுட்ட செங்கல்லாக்கி உன் தலையில் போட்டால் என்ன ஆகும்? என் தலை பிளந்துவிடும் குருவே என்றான்.

உன் கேள்விக்கான விடை கிடைத்து விட்டது. என்றார் குரு.

என்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து…..


50 கருத்துகள்:

 1. தங்கள் நண்பரின் மகளுக்கு வாழ்த்துகள்! அனைத்தும் அருமை! நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   நீக்கு
 2. State First Highest Mark 1193 இங்கு எங்கள் திருச்சி வடக்கு ஆண்டார் தெருவில் உள்ள என் குடும்ப நண்பரும் BHEL சக ஊழியருமான திரு. H. பரமேஸ்வரன் அவர்களின் இரண்டாம் பெண் ஆனந்தி என்பவள் எடுத்திருக்கிறாள். தமிழ் இல்லாமல் SANSKRIT எடுத்துள்ளதால், அவள் பெயரும் முன்னிலைப் படுத்தப்படாமல் உள்ளது, வெங்கட்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி...

   குமாரி ஆனந்தி அவர்களுக்கும் வாழ்த்துகள்....

   நீக்கு
 3. நண்பரின் மகளை நாம் வாழ்த்துவோம். எங்கள் வாழ்த்துகள். எல்லாமே ரசிக்கும்படி இருந்தன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. மாவட்டத்தில் முதல் மதிப்பெண் எடுத்திருக்கும் மாணவர்களை வாழ்த்துவோம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி.....

   நீக்கு
 5. தங்கள் நண்பரின் மகள் பாராட்டப்பட வேண்டியவர்
  வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தமிழ் மணத்தில் இணைத்து முதலாம் வாக்களித்தமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 7. இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தேன் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் குணசீலன்.

   நீக்கு
 8. உங்கள் நண்பரின் மகளுக்கு என் வாழ்த்துக்கள்! வழக்கம்போல் பழக்கலவை வெகு அருமை. அதுவும் அந்த குரு சிஷ்யன் கதை அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 9. மொத்த சாலட்டுமே நன்றாக இருக்கிறது. ஆஹா , மாங்காயைப் பார்க்கும்போதே சாப்பிடத் தூண்டுகிறது.

  (என்னுடைய கருத்து மட்டுமே) தமிழ் மாநிலத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தருவது வரவேற்கத்தக்கதே. தமிழ்மொழி படிக்கும்போது பாடத்திட்டங்கள் 12 ஆம் வகுப்பிற்கான அளவில் இருக்கும். அதுவே வேற்றுமொழி எனும்போது ஆரம்ப நிலையில்தானே இருக்கும். உழைத்தவர் அனுபவிக்கட்டுமே :) தங்கள் நண்பரின் மகளுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   வேற்று மொழியும் ஆரம்பப் பாடத்திலிருந்தே படித்தது தானே... அந்த வகுப்பிற்கன அளவில் தான் இருக்கும்.

   உழைத்தவர் அனுபவிக்கட்டுமே.... அனைத்து மாணவர்களுமே உழைப்பவர்கள் தானே..... :)))

   நீக்கு
 10. உங்கள நண்பரின் மகளுக்கு என் வாழ்த்துக்கள். ப்ருட் சாலட் வழக்கம் போல் சுவையோ சுவை. குருவின் அறிவுரை மிகவும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   நீக்கு
 11. நண்பரின் மகளை நாம் வாழ்த்துவோம். எங்கள் வாழ்த்துகள். எல்லாமே ரசிக்கும்படி இருந்தன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   நீக்கு
 12. உங்களின் நண்பரின் மகளைப் பாராட்டுகிறேன்.
  அனைத்தும் அருமை.
  மாங்காய் சீப்பைப் பார்க்கும் பொழுது வாயில் நீர் ஊறுகிறது நாகராஜ் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   நீக்கு
 13. வணக்கம்
  ஐயா

  தேர்வில் முதன்மையான இடம் பெற்ற மாணவிக்கு எனது பாராட்டுக்கள் ஐயா
  என்பக்கம் கவிதையாக
  அன்று ஒருநாள்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன். உங்கள் கவிதை படிக்கிறேன்.

   நீக்கு
 14. படித்ததில் பிடித்தது உட்பட அனைத்தும் அருமை... நன்றி..

  மாவட்டத்தில் முதல் மதிப்பெண் எடுத்திருக்கும் இருவருக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 15. #“என்னைச் சாப்பிடேன்!” கெஞ்சும் மாங்காய் துண்டுகள்! கெஞ்சவே வேண்டாம் பார்த்த உடனே எச்சில் ஊறுதே !
  த ம 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 16. தங்கள் நண்பரின் மகளுக்கும் திருச்சி ஆனந்திக்கும் (சமஸ்க்ருதம்) நல்வாழ்த்துகள்!

  நல்ல குரு.. நல்ல சிஷ்யன்.. குரு சொல்லிக் காட்டியதை குருவின் தலையில் சோதனை செய்து பார்க்காமல் இருந்தால் சரி!..

  இனிய பதிவினைக் கண்டு மிக்க மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   நீக்கு
 17. இதற்கு முன் இட்ட பின்னுட்டம் போயேபோச்.... ஒன்றிரண்டு மதிப்பெண்கள் குறைவாய் வாங்கியவர்கள் அறிவில் குறைந்தவர்களல்ல. மதிப்பெண் மாயையில் கட்டுண்டு வேதனை வேண்டாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பின்னூட்டம் வரவில்லையே :( இரண்டு நாட்களாக வலைப்பக்கம் வரவில்லை. அதனால் தான் வெளியிடுவதில் தாமதம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு
 18. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் அவர்களே....

   நீக்கு
 19. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 20. கடைசி குரு-சிஷ்யன் கதை ஏற்கெனவே படிச்சது. மாங்காய் என்னமோ பச்சையாகச் சாப்பிட எனக்குப் பிடித்தது இல்லை. குறைந்த பக்ஷம் உப்புப் போட்டு பச்சைமிளகாய், கடுகாவது தாளிக்கணும். :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   பச்சை மாங்காய் பார்க்கும்போதே படம் எடுக்கத் தோன்றியது - சாப்பிடத் தோன்றியதோ இல்லையோ :))))

   நீக்கு
 21. முதல் மதிப்பெண்கள் பெற்ற குழந்தைகளுக்கு வாழ்த்துகள். எப்போ வந்தீங்க அரங்கத்துக்கு? ம.மு? அல்லது ம.பி???? :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 4-ஆம் தேதி வந்தேன்.......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   நீக்கு
 22. மாவட்டத்தில் முதல் மதிப்பெண் எண்டுத்திருந்த மாணவர்களுக்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 23. நண்பரின் மகளுக்கு வாழ்த்துக்கள்! படித்ததில் பிடித்ததும் முகப்புத்தக இற்றையும் ரசிக்க வைத்தன! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 24. Congrats to your friends daughter, she will shine anyway !!
  Good story at the end, I liked it !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ் குமார்.

   நீக்கு
 25. நான் போட்ட பின்னூட்டம் என்னாச்சு.?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்ப தான் வெளியிட்டேன். இரண்டொரு நாட்களாக வலைப்பக்கம் வர இயலவில்லை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....