செவ்வாய், 13 மே, 2014

நைனிதால் – சிறிது வயிற்றுக்கும்……

ஏரிகள் நகரம் – பகுதி 12

ஏரிகள் நகரம் – பகுதி 01 02 03 04 05 06 07 08 09 10 11

ஏரிகள் நகரம் தொடரின் பதினொன்றாம் பகுதியினை முடிக்கும்போது கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.

கிட்டத்தட்ட நூறு படிகளை ஓடியே கடந்து எங்கள் வாகனம் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம். மலை மேலேயே குளிரின் காரணமாக இயற்கை உபாதைகள் இருக்க, அதை தீர்ப்பதற்கு எந்த விதமான வசதிகளும் இல்லாதது நமது நாட்டின் எல்லா பகுதிகளிலும் இருக்கும் ஒரு பிரச்சனை என்பது புரிந்தது! விரைந்து பயணித்து தங்குமிடத்தினை அடைய வேண்டியிருந்தது! அடுத்தது என்ன என்பதை ஏரிகள் நகரம் தொடரின் பன்னிரெண்டாம் பகுதியில் பார்க்கலாமா!

தங்குமிடத்திற்கு வந்து கொஞ்சமாக ஓய்வெடுத்துக் கொண்டு இரவு உணவிற்காக மீண்டும் வெளியே வந்தோம். இரவு நேரமானதால் குளிர் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அப்போதைய வெட்ப அளவு 02.00 டிகிரி என ஒரு கடையில் இருந்த மானி காண்பித்துக் கொண்டிருந்தது. அணிந்திருக்கும் குளிர்கால உடைகளையும் தாண்டி நரம்புகளும் எலும்புகளும் நடுங்கிக் கொண்டிருந்தன!

நாங்கள் தங்கும் இடம் மால் ரோடு என அழைக்கப்படும் நைனிதால் நகரின் பிரதான சாலையில் அமைந்திருக்கிறது. மால் ரோடு முழுவதும் சுற்றுலா பயணிகளால் நிறைந்திருந்தது. அடிக்கும் குளிரை எவரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. பொதுவாகவே வட இந்தியர்களுக்கும், குளிர் பழகியவர்களுக்கும் குளிரை அனுபவிக்கத் தெரியும். என்னையும் சேர்த்து! ஆனால் என் உடன் வந்திருந்த கேரள நண்பர் தான் கொஞ்சம் தடுமாறிவிட்டார்.

கசோடி....

நல்ல குளிரில் கோன் ஐஸ், கப் ஐஸ், குல்ஃபி போன்றவை விற்பனை கன ஜோராக நடந்து கொண்டிருந்தது! கூடவே [G]கோல் [G]கப்பா, ஆலு டிக்கி, போன்ற நொறுக்குத் தீனிகளும். சாலை ஓரங்களை இப்படிப்பட்ட சிறிய உணவகங்கள் ஆக்ரமித்திருக்க, பெரிய உணவகங்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து தங்களது உணவகங்களை நோக்கி வரவேற்க விதம் விதமாக முயற்சி செய்கிறார்கள். ஒரு சிலர் இதற்கெனவே சிலரை நியமித்து இருக்க, அவர் போகும் அனைவரையும் அழைக்கிறார். சில இடங்களில் செயற்கை முயற்சிகளும்!  சாலை ஓர உணவகங்களையும், சாலையில் நடந்து கொண்டிருக்கும் சக சுற்றுலாப் பயணிகளையும் பார்த்தவாறே நாங்களும் நடந்து கொண்டிருந்தோம். மால் ரோட் முடிவடையும் இடத்தில் லால்கிலா என அழைக்கப்படும் செங்கோட்டை முகப்பில் தெரிய, ”தில்லியில் இருக்கும் செங்கோட்டை நைனிதாலில் எங்கே வந்தது?” என்ற கேள்வியுடன் மேலே கவனித்தோம் – அது ஒரு உணவகம் – பெயர் Chandni Chowk – பழைய தில்லியில் இருக்கும் ஒரு முக்கியமான இடம்.தில்லியின் பழைய தில்லி பகுதியில் இருக்கும் Chandni Chowk உணவகங்களுக்கு பெயர் பெற்றது – அதுவும் அசைவ உணவு வகைகளுக்கு. கூடவே சைவ உணவகங்களும் அங்கே நிறைய உண்டு, முக்கியமாக ”பரான்டே வாலி கலி”. அதன் சுவையை நைனிதாலில் கொடுக்க முயற்சிக்கும் உணவகம் இது. வாசலில் நான்கு பெரிய பொம்மைகள் – ஒரு மோட்டார் மூலம் அசைந்த படியே இருக்கின்றன. ஒரு பக்கத்தில் சுடச்சுட பாலும் ஜிலேபியும் இருக்க, கூடவே [G]கோல் [G]கப்பா, ஆலு டிக்கி, கச்சோடி வகைகள்.

Dum Aloo

Shahi Paneer

அதையெல்லாம் தாண்டி நாங்கள் நேரே உணவகத்தினுள் சென்றோம். நல்ல அலங்காரங்கள் – பழைய தில்லியை நினைவு படுத்தும் அமைப்புகள் – சப்பாத்தி மற்றும் Shahi Paneer, Daal Makkani, Alu Mutter, Dum Alu ஆகியவற்றை எங்களுக்கு தரச் சொல்லிக் கேட்டோம். சுற்றி முற்றி பார்த்தபோது உணவகம் முழுவதிலும் வாய்க்கும் கைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்தது! அனைவரும் உணவினை ருசித்து உண்பதைப் பார்த்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.

சுடச்சுட பால்..... 

சுடச் சுட சப்பாத்தி வந்த படியே இருக்க, அனைத்தையும் கபளீகரம் செய்தோம். நான்கு பேரும் இரவு உணவினை எடுத்துக் கொண்டபிறகு வெளியே வந்தோம். பழைய தில்லியின் பல பகுதிகளில் இருக்கும் பால் கடைகள் வெளியே இருக்க, அனைவரும் ஒரு டம்ளர் பால் அருந்தினோம். இங்கே ஒரு பெரிய கடாய் – ஹிமாலய சைஸ் கடாய் – அதிகம் குழிவாக இல்லாமல் கிட்டத்தட்ட தாம்பாளம் போலவே இருக்கும் கடாய் – இதன் விட்டம் குறைந்த பட்சம் ஒன்றரை மீட்டர் இருக்கலாம் – பால் அதிலே விட்டு தொடரந்து சூடுபடுத்தியபடியே இருப்பார்கள்.

அதிலிருந்து ஒரு பெரிய டம்ளரில் – அரை லிட்டராவது பிடிக்கும் – பாலை விட்டு அதன் மேல் கடாயின் ஓரத்திலிருந்து படிந்திருக்கும் பாலேடுகளை எடுத்து போட்டு சுடச்சுட கொடுப்பார்கள். ஆஹா! என்னவொரு சுவை! தில்லியில் கூட இப்போதெல்லாம் இந்த பால் கடைகள் குறைந்து விட்டன. பழைய தில்லியில் மட்டும் இன்னும் சில இடங்களில் இருக்கின்றன.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த மாதிரி இடத்தில் பால் குடிக்கிறேன்.

வெளியே வந்து அங்கிருந்து மீண்டும் மால் ரோடில் இருப்பவர்களை பார்த்தபடியே மெதுவாய் நடந்து எங்களது தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். இனி இரவு முழுவதும் ஓய்வு. நாளை எங்கே செல்ல வேண்டும் – இன்னும் நைனிதாலில் பார்ப்பதற்கு என்ன இடங்கள் இருக்கின்றன – நாங்கள் நைனிதாலில் இருந்தோமா இல்லை வேறெங்கும் சென்றோமா என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து…..


டிஸ்கி: உணவு உண்ணச் செல்லும்போது காமிரா எடுத்துச் செல்லாததால் இப்பகுதியில் இருக்கும் படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து…..

46 கருத்துகள்:

 1. பதிவு வட இந்திய உணவுகளை மனதளவில் சுவைக்க வைத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   நீக்கு
 2. //கடாயின் ஓரத்திலிருந்து படிந்திருக்கும் பாலேடுகளை எடுத்து போட்டு சுடச்சுட கொடுப்பார்கள். ஆஹா! என்னவொரு சுவை! தில்லியில் கூட இப்போதெல்லாம் இந்த பால் கடைகள் குறைந்து விட்டன.//

  தங்கள் பதிவை படித்தபோது 1968 இல் ‘சரஸ்வதி மார்க்’ கில் ராமநாத ஐய்யர் மெஸ்ஸில் நான் தங்கியிருந்தபோது, தினம் அஜ்மல்கான் சாலையும் ஆர்ய சமாஜ் சாலையும் சந்திக்கும் இடத்தில் உள்ள ஒரு கடையில் இரவு வேளையில் ஆடையோடு கூடிய சுவைமிகுந்த பாலை அருந்தியது நினைவிற்கு வருகிறது. அப்போதெல்லாம் அஜ்மல் கான் சாலையில் பிரியும் ஒவ்வொரு சந்தின் முனையிலும் இரவில் இது போன்ற சூடான பால் விற்கும் கடைகள் இருந்தன. ஒரு டம்ளர் பாலின் விலை அப்போது 40 காசுகள் தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதெல்லாம் இந்த கடைகள் கரோல் பகுதியில் மொத்தமாக எடுத்துவிட்டார்கள். 1991-94 வரை தினம் தினம் இந்தக் கடைகளில் பால் அருந்தியதுண்டு. அப்போது இரண்டு ரூபாய்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 5. எனக்கும் பாலைப் பார்த்ததும் பூனா நினைவு வந்தது. கண்பதி விழாவின்போது பத்துமணிக்குப் புறப்பட்டு நடுராத்திரி கணக்கெல்லாம் இல்லாம ஊர்சுத்துவதும், அங்கங்கே இப்படி சூடான கடாய் பாலும் குடிச்சுட்டு பொழுதுவிடிய ஒரு மணி நேரம் இருக்கும்போது வீடுதிரும்புவதுமா...... ஜோரே ஜோர்!

  கச்சோரி சூப்பரா இருக்கும் போல! படமே தூக்குதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தில்லியில் பல இரவுகள் இப்படி செய்ததுண்டு....

   கச்சோரி ஒரு சில இடங்களில் ரொம்பவே சுவைதான்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 6. வங்கி ஆய்வுப்பணியில் ஹரியானா,உ.பிஎன்று அலைந்தபோது ருசித்த விதவிதமான உணவுகளை நினைவூட்டி விட்டீர்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தமிழ் மணம் வாக்கிற்கு மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   நீக்கு
 8. கமென்ட் போகலை! எரர் காட்டுது. :( பால்க்கடைகள் இப்போது வடமாநிலங்களில் சில குறிப்பிட்ட நகரங்களில் தான் இருக்கின்றன. பஞ்சாபில் கூடத் தேடினோம் கிடைக்கலை. :(

  விடப் போறதில்லை. அதுக்கா எனக்கானு ஒரு கை பார்த்துடுறேன். நான்காம் முறையாக் கொடுக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பஞ்சாபில் எல்லாம் வெர்க்கா [Verka] மயம்! இங்கே ஆவின் மாதிரி அங்கே வெர்க்கா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 9. போயிருக்குனு நினைக்கிறேன். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்துரை வந்துவிட்டது! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 10. //கடாயின் ஓரத்திலிருந்து படிந்திருக்கும் பாலேடுகளை எடுத்து போட்டு சுடச்சுட கொடுப்பார்கள். ஆஹா! என்னவொரு சுவை! ..//

  சமீபத்தில் மும்பையில் - இப்படி அருந்தியதை மறக்கவே முடியவில்லை.

  இனிய - சுவையான பதிவு!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   நீக்கு
 11. Super sir...... after reading your blog, I feel that I should go to this place and eat immediately. Good writing style..... looking forward for more Nainital experience and pictures !!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ் குமார்.

   நீக்கு
 12. நீங்கள் சிறிது(?) வயிற்றுக்கு எடுத்துக் கொண்டதைச் சொன்ன விதம் மனசுக்கு நிறைவாய் இருந்தது.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறிது[?] :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு
 13. உணவின் சுவையை பற்றி சொல்லி படிக்கும் எங்களுக்கு சாப்பிடும் ஆர்வத்தை தந்து விட்டீர்கள் பகிர்வுக்கு நன்றி சார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குடந்தையூர் சரவணன்.

   நீக்கு
 14. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  பதிலளிநீக்கு
 15. என்னடா, இந்த பயணத்துல சாப்பாடு பற்றி மிகப் பெரிய அளவுல இன்னும் சொல்லாக்கானோமேன்னு நினைச்சேன். எழுதிட்டீங்க.

  படங்கள் எல்லாம் அருமை. ஆமா, அந்த பால் காரர் முகத்துக்கு நேராக காமிராவை புடிச்சு போட்டோ எடுத்திங்களோ???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க டிஸ்கி படிக்கலை போல! இப்பதிவில் இருக்கும் படங்கள் நான் எடுத்தவை அல்ல! இணையத்திலிருந்து எடுத்தவை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 16. நாவில், எச்சிலை ஊறவைத்து விட்டீக்கள்.
  Killergee
  www.killergee.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜீ... உங்கள் முதல் வருகை.
   உங்கள் தளத்திற்கும் வருகிறேன்.

   நீக்கு
 17. கச்சோரி கவர்கிறது. அந்த அகலக் கடாயில் தருகம் பால் இதே போல மதுரையில் இன்றும் தந்து கொண்டிருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   மதுரையில் கிடைப்பது புதிய செய்தி. ஆனாலும் வட இந்தியாவில் இருப்பது போல பால் இங்கே இருப்பது இல்லை.

   நீக்கு
 18. உணவுகளின் பெயர்கள் தான் புரியவில்லை! ஆனால் படத்தை பார்த்ததும் சாப்பிட தோன்றியது! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 19. ரெண்டு டிகிரி குளிர் அடிக்கும்போது எப்படித்தான் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு முறை சாப்பிட்டு பாருங்க ஸ்.பை. உங்களுக்கும் பிடிக்கலாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை.

   நீக்கு
 20. அந்த பூரிமாதிரி இருக்குதே அதைப் பார்க்கும் போது தான் எனக்கும் அதைச் சாப்பிடனும் போல ஆசை வந்துவிட்டது நாகராஜ் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதற்குப் பெயர் கச்சோடி[ரி].

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   நீக்கு
 21. வட இந்திய காய்கறி சாப்பாடுகள் பிரமாதமாக இருக்கும் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   நீக்கு
 22. இதை ரபரி என்று சொல்வார்கள் அல்லவா? மதுராவில் சின்ன சின்ன மண் கிண்னங்களீல் ருசித்து சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரபரி வேறு. அதில் பலவித ட்ரைஃப்ரூட்ஸ் சேர்ப்பார்கள்... இது சாதாரண பால் மட்டும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு
 23. கடாய்பால் புதிதாக இருக்கிறது. சுவைத்தோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....