எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, May 5, 2014

நைனிதால் – மணி கட்டலாம் வாங்க!

ஏரிகள் நகரம் – பகுதி 11

ஏரிகள் நகரம் – பகுதி 01 02 03 04 05 06 07 08 09 10

ஏரிகள் நகரம் தொடரின் பத்தாவது பகுதியினை முடிக்கும்போது கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.

பிரதான சாலையிலேயே 52 உயரத்தில் அசால்டாக நிற்கிறார் அனுமந்தலு. ஜம்முவில் உள்ள வைஷ்ணவ் தேவி கோவில் போலவே இங்கே செயற்கையாக குகை அமைத்து சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறார்கள்.  பொதுவாகவே வட இந்திய கோவில்களுக்குச் செல்லும் போது ஏதோ கண்காட்சி பார்ப்பது போன்ற உணர்வு தான் எனக்குள் தோன்றும். இங்கேயும் அப்படியே! வெளியே நின்றபடியே அனுமனுக்கு ஒரு வணக்கம் செலுத்திவிட்டு பயணத்தினைத் தொடர்ந்தோம்.

அடுத்து நாங்கள் சென்ற இடத்திற்கும் குளிருக்கு இதமாய் நாங்கள் அருந்திய தேநீருக்கும் ஒரு தொடர்பு உண்டு. அது என்ன அடுத்த பதிவில் பார்க்கலாமா!


 படம்: இணையத்திலிருந்து...

அனுமந்தலு பற்றி சொல்லிவிட்டு அவரின் புகைப்படம் போடவில்லையே என்று சிலர் கேட்டிருந்ததால் முதலில் அனுமந்தலுவின் புகைப்படம் பார்த்து விடுங்கள்!


 தேநீர்த் தோட்டத்திற்கு செல்லும் வழி...

சென்ற பகுதியில் பார்த்த ஒன்பது முனை ஏரியிலிருந்து புறப்படும் போது தேநீர் தோட்டத்திற்கும் அருகில் உள்ள ஒரு கோவிலுக்கும் செல்ல முடிவு செய்திருந்தோம். இந்த தேநீர் தோட்டம் இருக்கும் இடத்திற்குப் பெயர் [G]கோரா[kh]கால் என்பதாகும். இந்த [G]கோரா[kh]கால் தேயிலைத் தோட்டம் பற்றி கேள்விப்பட்டதும், என்னுடன் வந்திருந்த வட இந்திய நண்பர்கள் இருவருமே அங்கே செல்ல வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் இருந்தார்கள். வழியைக் கேட்டுக் கொண்டு அங்கே செல்வதற்குள் எங்கள் ஓட்டுனர் பப்புவுக்கு விழி பிதுங்கிவிட்டது.

குறுகிய, மற்றும் மண்ணால் போடப்பட்ட மலைவழிச் சாலைகளில் பயணிப்பது எங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. உத்திராகண்ட் அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட இந்த தேயிலைத் தோட்டத்தினை நாங்கள் சென்றடைந்த போது மாலை 05.30 – அதாவது தோட்டம் மூடும் நேரம். உள்ளே செல்ல ஆளுக்கு ஐந்து ரூபாய் கட்டணம் வாங்கிக் கொண்டு, ஐந்து நிமிடங்களில் வெளியே வந்துவிடும்படிச் சொன்னார் அங்கே இருந்த அலுவலர்.

படம்: இணையத்திலிருந்து...

விரைவாக உள்ளே சென்று, தேயிலையின் வாசனையை நாசியில் ஏற்றிக் கொண்டு வெளியே வந்தோம். அங்கே இருக்கும் மற்றொரு நபர், “நீங்க ரொம்பவே தாமதமா வந்ததால் உங்களால் முழுதும் சுற்றிப் பார்க்க இயலவில்லை, தேயிலை தயாரிப்புகளைப் பார்க்கவும் முடியாது. அதற்கு வருந்துகிறேன். காலையில் மீண்டும் வாருங்கள்” என்ரு சொன்னார். மேலும், அப்போது இருந்த குளிருக்கு, அங்கே தரும் சூடான தேநீர் எங்களுக்கு அமிர்தம் போல இருந்திருக்கும் எனச் சொன்னார் – வெந்த புண்ணில் வேல்! சரி நாளை முடிந்தால் வருகிறோம் எனச் சொல்லி அங்கிருந்து வெளியே வந்தோம்.

நாங்கள் அடுத்ததாய்ச் சென்றது ஒரு கோவிலுக்கு. சரியாக மாலை நடக்கும் ஆரத்தியின் போது தான் அங்கே சென்றோம். மந்திர உச்சாடனம் போன்ற ஆரத்தி பாடல்களை பாடியபடி, பலர் மணிகளை ஒலிக்க அங்கே குடிகொண்டிருக்கும் கடவுளான [G]கோலு தேவதாவிற்கு சிறப்பான ஆரத்தி நடந்து கொண்டிருந்தது.கும்பலோடு கோவிந்தாவாக நாங்களும் அங்கே நின்று தரிசனம் செய்தோம். ஆரத்தி நடக்கும்போதே இந்த கோவிலின் சிறப்பினைப் பார்த்து விடலாம் வாருங்கள்.  [G]கோலு தேவதா கோர பைரவ் அதாவது சிவனின் ஒரு அவதாரமாக நம்பப்படும் ஒரு கடவுள். உத்திராகண்ட் மாநிலத்தவர்கள் அனைவருமே இந்த [G]கோலு தேவதா மேல் அபாரமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தங்களுக்கு ஏற்படும் எல்லா பிரச்சனைகளுக்கும் இவர் நீதி வழங்குவதாக நம்பிக்கை.

நமது நாட்டின் நீதிமன்றங்களில் வழக்குகளில் தீர்ப்பு கிடைக்க பல வருடங்கள் ஆகிறது. ஆனால் இந்த நீதி தேவனான [G]கோலு தேவதாவின் கோவிலில் முறையிட்ட சில தினங்களிலேயே நீதி கிடைப்பதாக இவர்களுக்கு நம்பிக்கை. தங்களது வழக்கினைப் பற்றி முத்திரைத் தாளில் எழுதி [G]கோலு தேவதாவின் கோவிலில் அவர் காலடியில் சமர்ப்பித்து தங்களது வேண்டுகோளை நிறைவேற்றும்படி மனதார வேண்டிக்கொண்டு செல்கிறார்கள். அவர்களது வேண்டுகோள் சரியானதாகவும், நியாயமானதாகவும் இருந்தால் நிச்சயம் அது நிறைவேற்றப்படும் என்பது இவர்களது அசைக்க முடியாத நம்பிக்கை.

மணியே....  மணியின் ஒலியே...
படம்: இணையத்திலிருந்து....

வேண்டுகோள்கள் நிறைவேறியதன் அடையாளமாக இந்தக் கோவிலில் மணிகளை கட்டித் தொங்க விடுகிறார்கள்.  ஆயிரக் கணக்கில் சிறியதும் பெரியதுமாக மணிகள் கட்டித் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது பலரது வேண்டுகோள்கள் ஏற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து மணி சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அங்கே பல அளவுகளில் இருக்கும் மணிகளைப் பார்க்கும்போது நமக்கே ஒரு மணி கட்டத் தோன்றுகிறது!

நாட்டில் நடக்கும் அநீதிகள் பல இருக்கும்போது இந்த [G]கோலு தேவதா கோவிலில் வெண்கல மணிகள் கட்டுவது தொடர்ந்து கொண்டிருக்கும் எனத் தோன்றுகிறது! நல்ல ரம்மியமான சூழல் – மலைப்பகுதியில் அடிக்கும் குளிர் – காலுறை அணிந்திருந்தபோதும் கால்களின் வழியே உச்சி மண்டை வரை ஏறிய குளிர் – அங்கே அதிக நேரம் எங்களை நிற்க விடவில்லை. அங்கே நம்பிக்கையோடு ஆரத்தியை பாடி[?] கொண்டிருந்தவர்களுக்கு குளிர் ஒரு பொருட்டே இல்லை!

கிட்டத்தட்ட நூறு படிகளை ஓடியே கடந்து எங்கள் வாகனம் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம். மலை மேலேயே குளிரின் காரணமாக இயற்கை உபாதைகள் இருக்க, அதை தீர்ப்பதற்கு எந்த விதமான வசதிகளும் இல்லாதது நமது நாட்டின் எல்லா பகுதிகளிலும் இருக்கும் ஒரு பிரச்சனை என்பது புரிந்தது! விரைந்து பயணித்து தங்குமிடத்தினை அடைய வேண்டியிருந்தது!

அடுத்தது என்ன என்பதை ஏரிகள் நகரம் தொடரின் பன்னிரெண்டாம் பகுதியில் பார்க்கலாமா!

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்

திருவரங்கத்திலிருந்து…..

58 comments:

 1. Iyarkai ubhadhai theerppadharku idam illadhadhu periya varuththam

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 2. காணக்கிடைக்காத அருமையான காட்சிகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. சற்று முன்பு தான் காணாமல் போன கனவுகள் என்னும் தளத்தில் ஒரு தமிழக மலைக்கோவில் சார்ந்த ஒரு பயணத் தொடர் படித்தேன், இங்கே வந்தால் வட இந்திய மலைத்தொடர் சார்ந்த ஒரு திருவுலா,

  கோவிலில் மானசீகமாக எனக்கும் ஒரு மணி கட்டிக்கொண்டேன், கஷ்டங்கள் தீர வேண்டுமென, தீர்ந்த கஷ்டங்களோடு தீரபோகும் என் கஷ்டமும் அங்கே மணியாய் மாறட்டுமே

  சில சோகங்கள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியே பரவிக் கிடக்கிறது அதில் ஒன்று இந்த இயற்கை அழைபிற்கான ஒதுக்குபுறம் இல்லாதது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமிப் பேரன்.

   தங்களது முதல் வருகை. மிக்க மகிழ்ச்சி நண்பரே. தொடர்ந்து சந்திப்போம்.

   Delete
 4. ஆஞ்சி நல்லா இருக்கார். பொதுவா வட மாநிலங்களில் இயற்கை உபாதையைத் தவிர்க்கக் கழிவறைகள் இருக்கும். இங்கே இல்லை போல! :(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 5. இந்த பைரவர் பத்திப் படிச்சப்போ நம்ம ஊரு கருப்பு நினைவில் வந்தார். மதுரை அழகர் கோயில் கருப்பண்ணசாமியைப் பத்தியும் இப்படித் தான் சொல்வாங்க. :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நம்ம ஊர் கருப்பு - சரிதான்!

   Delete
 6. அருமையான பகிர்வு பயண அனுபவங்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரா .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 7. வணக்கம்
  ஐயா.

  நன்றாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 8. வணக்கம்
  த.ம3வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரூபன்.

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் குணசீலன்.

   Delete
 10. இயற்கையின் அழைப்பிற்கு தேவையான இடம் மற்றும் வசதி தமிழகத்தில்தான் குறைவு என்று நினைத்தேன், இந்தியா முழுமையும் இதில் சமநிலைதான் நிலவுகிறது என்பது புரிகிறது.
  தங்களின் படங்கள் ஒவ்வொன்றும் அற்புதம் ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி.

   Delete
 11. Replies
  1. தமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 12. #நமக்கே ஒரு மணி கட்டத் தோன்றுகிறது!#
  #இயற்கையின் அழைப்பிற்கு தேவையான இடம் மற்றும் வசதி#வேண்டுமென்று யார் வேண்டிக் கொள்வது என்றுதான் புரியவில்லை !
  த ம 6 (கைமாறு கருதாத ஆறாவது இன்ஸ்டன்ட் வோட்!)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!. தமிழ் மண வாக்கிற்கும்! :)

   Delete
 13. ஆஞ்சி வித்தியாசமாக இருக்கிறார். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 14. நீங்கள் தேயிலை தோட்டத்தைப் படம் பிடிக்க வில்லையா...?

  பகிர்வு அருமை நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தேயிலைத் தோட்டமும் கோவிலும் செல்லும் நேரத்தில் நல்ல இருட்டு. ஆகையால் படம் எடுக்கவில்லை!

   Delete
 15. நமக்கு நல்ல ஆட்சியாளர் அமைய வேண்டி கோலு தேவதா கோவிலில் நீங்கள் ஒரு மணி கட்டியிருக்கலாமே!

  ReplyDelete
  Replies
  1. நீதி கிடைத்த பிறகு தான் மணி கட்டுவது வழக்கம்! முதலில் நல்ல ஆட்சியாளர் கிடைக்கட்டும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 16. அருமையான படங்கள்...

  இனிமையான பயணம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 17. மணி கட்டும் வேண்டுதல் விசேஷம்.. ஆஞ்சநேயர் அருள் புரியட்டும்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 18. அருமையான பயணத் தொடர் புதுமையான கோலு தேவதா! தொடர்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   Delete
 19. //இயற்கை உபாதைகள் இருக்க, அதை தீர்ப்பதற்கு எந்த விதமான வசதிகளும் இல்லாதது நமது நாட்டின் எல்லா பகுதிகளிலும் இருக்கும் ஒரு பிரச்சனை என்பது புரிந்தது!//

  இதுக்கு என்ன வசதி வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை. இந்திய ரோடுகளெல்லாம் எதற்கு இருக்கின்றன?

  ReplyDelete
  Replies
  1. இந்திய ரோடுகளேல்லாம் எதற்கு இருக்கின்றன! :))

   நல்ல கேள்வி தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி கந்தசாமி ஐயா.

   Delete
  2. வாங்க, வாங்க, இந்த பதிலைத்தான் நான் இந்த கருத்துத் தொகுப்பில் தேடினேன்.

   இந்திய ரோடுகளும், மறைவான இடங்களும் எதற்கு இருக்கின்றன... இப்படி ஆத்திர அவசரத்திற்கு உதவுவதற்குத் தானே இருக்கின்றன.

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   போதிய வசதிகள் இல்லாத போது இப்படிச் செய்வது தானே வழி..... பயணம் செய்யும் பெண்கள் நிலை தான் மோசம்.....

   Delete
 20. அனுமனை வணங்கிக்கொண்டு பயணத்தையும் தொடர்கிறோம் !

  அப்படியே வசதிகள் இருந்தாலும் அதைப் பயன்படுத்திவிட முடியுமா என்ன!!

  ReplyDelete
  Replies
  1. பல இடங்களில் வசதிகள் இருந்தும் சுத்தம் சுத்தமாக இல்லை! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 21. ஆஞ்சிநேயர் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.

  ரம்யமான ஒரு பயணம். தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 22. பொதுவாகவே வட இந்திய கோவில்களுக்குச் செல்லும் போது ஏதோ கண்காட்சி பார்ப்பது போன்ற உணர்வு தான் எனக்குள் தோன்றும்.

  சரியாகச் சொன்னீர்கள்! எனக்கும் அதே உணர்வுதான்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 23. சென்னை நேற்று முதல் கூல்!அதோடு நைனிதால் விசயம் இன்னும் கூல்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 24. நல்ல தகவல்களுடன் பயண அனுபவம் சிறப்பு! படங்கள் அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 25. நல்ல தகவல்கள் ரம்மியமான காட்சிகள். நைனிடாலுக்கு போக வாய்ப்பு கிடைத்தால் உங்கள் பதிவுகளை மீண்டும் ஒருமுறை படித்துப் போகவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 26. /அங்கே பல அளவுகளில் இருக்கும் மணிகளைப் பார்க்கும்போது நமக்கே ஒரு மணி கட்டத் தோன்றுகிறது!/ இப்படித் தோன்றிக் கட்டிய மணிகள் எத்தனையோ

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 27. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 28. மன்னிக்கவும் சகோதரா இன்றும் ஓட்டுப் போட மறந்து விட்டீர்கள் :))
  http://rupika-rupika.blogspot.com/2014/05/blog-post_9392.html

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   தமிழ் மண வாக்கு அளித்தேனே.... சரியாக வரவில்லை போலும்... பார்க்கிறேன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....