எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, May 6, 2014

பனீர் சாம்பார்

இரயில் பயணங்களில்-1

விடுமுறைக்கு இந்த வருடம் தமிழகம் வருவதாக ஒரு எண்ணம் இருந்தது. பயணத்திற்கான முன்பதிவு செய்யாததால் கடைசி நேரத்தில் தத்கால் மூலம் முன்பதிவு செய்ய கணினியின் முன் அமர்ந்தேன். சாதாரணமாகவே தத்கால் முறையில் பயணச் சீட்டு முன்பதிவு செய்வது மிகவும் கடினமான வேலைஅதற்கான தளத்திற்குள் செல்லவே பல நிமிடங்கள் பிடிக்கும். அதுவும் இந்த விடுமுறை காலம் என்றால் கேட்கவே வேண்டாம்!

ஒரு மாதிரி பிரம்மப் பிரயத்தனம் செய்து கடந்த 2-ஆம் தேதி தில்லியிலிருந்து சென்னை வரும் ராஜ்தானி விரைவு வண்டியில் முன்பதிவு செய்தேன். எனக்கு கிடைத்த படு[இரு]க்கை Side Upper – கஷ்டம்டா சாமி! இந்த 6 அடி ஒரு அங்குல உயர உடம்பினை இந்த படுக்கைக்குள் சுருட்டுவது ரொம்பவே கடினமான வேலை. படுத்துக் கொண்டால் காலோ தலையோ வெளியே வைத்துதான் படுக்க முடியும்! இப்படியாக தில்லியிலிருந்து சென்னை நோக்கிய பயணம் துவங்கியது.

இந்த இரயில் பயணத்தில் பார்த்த/அனுபவித்த சில விஷயங்கள் இப்பதிவில் பார்க்கலாம்!

வண்டி நடைமேடைக்கு வந்து சேர்ந்ததும் எனது உடைமைகளை அதற்கான இடத்தில் வைத்து அமர்ந்து கொண்டேன். பக்கத்து இருக்கையில் இருந்த ஒரு இளைஞர் திரைச்சீலைகளை நகர்த்தினார். உள்ளே குடிகொண்டிருந்த பல கொசுக்கள், “யாரடா இது எங்களை தொந்தரவு செய்வதுஎனப் பார்த்து “Attack the Blacky” என்று அந்த இளைஞரை நோக்கி பாய்ந்தன!

பக்கத்து Cabin-ல் ஒரு குடும்பம்கணவன், மனைவி, ஒரு மகன், இரண்டாவது குழந்தை அம்மாவின் வயிற்றில்! வந்து அமர்ந்ததும் குட்டிப் பையன் சொன்னது – “அப்பா, ஒரு மணி நேரத்தில் சென்னை வந்துடும்!” – அப்படி ஒரு மணி நேர பயணத்தில் தில்லியிலிருந்து சென்னை வந்து விட்டால் எவ்வளவு சுகம்!

பயணம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தேநீர் தயாரிக்கத் தேவையான பால் பவுடர், சர்க்கரை, Tea Bag, Patties எனும் உணவுப் பொருளும் கொடுத்தார் எங்கள் Coach-க்கான Waiter. மற்றொருவர் Flask-ல் சூடான தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். இவர்கள் இருவரும் சென்னை வரை எங்களுக்கு அன்னதாதா!..... ஏனோ இருவருக்குள்ளும் ஆரம்பத்திலிருந்தே சண்டை. ஒருவர் மற்றவரை குறை சொல்லியபடியே இருந்தார்.

இரவு உணவிற்கு முன் Soup Sticks, Salt, Pepper, Butter என ஒருவர் தர, மற்றொருவர் ஒரு Cup-ல் Soup வழங்கியபடிச் சென்றார்சாதாரணமாக ஒரு Salt ஒரு Pepper Sachet தான் இருக்கும். அந்த நினைப்பில் அனைவரும் அவற்றைப் பிரித்து Soup-ல் போட்டு Soup Stick கொண்டு கலக்கி, இருக்கும் Butter-ஐயும் சேர்த்து குடிக்க ஆரம்பிக்கும் போது அனைவர் முகமும் அஷ்ட கோணலானது! – உப்பிட்டவரை உள்ளளவும் நினை! என்பதாக இரண்டு Sachet-வும் உப்பு!

இரவு உணவு முடிந்து Ice Cream சாப்பிட்டு படுத்து உறங்கியாயிற்று. காலை எழுந்து காலைக் கடன்களை செவ்வனே முடித்து மீண்டும் எனது இருக்கைக்கு வரும் வழியில் அதே Coach-ல் பார்த்தால் எனது நெய்வேலி பால்ய கால நண்பர் முரளியும் பயணிக்கிறார்! – பிறகென்ன மீண்டும் நெய்வேலி கதைகளும்மனச் சுரங்கத்திலிருந்துபகுதிக்கான விஷயங்களும் பேச ஆரம்பித்தோம்!

எங்களது Coach-ல் இரண்டு கர்ப்பிணிப் பெண்கள்அதிலும் ஒருவர் நிறை மாதம் போலிருக்கிறது! ஒவ்வொரு முறையும் மூச்சு முட்ட, ரொம்பவே கஷ்டப்பட்டு என்னைத் தாண்டி [கதவுக்கருகில் தான் எனது இருக்கை – A2-6] செல்லும்போதும் அவர்களை விட நான் அதிகம் கவலைப் பட்டேன்பயணத்திலேயே பிரசவம் ஆகிவிடுமோ என! இத்தனை நிறைமாதத்தில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் என்னவோ என்ற எண்ணமும் மனதில்!

முதல் முதலாய் குறிப்பிட்ட இளைஞர் எல்லா வேளையும் Non-Vegetarian உணவு தான் வேண்டும் என அடம் பிடித்தார். அவரது எண்ணம்இரயிலில் தரும் உணவில் Vegetarian- விட Non-Vegetarian மேல் என்பது! ஆனால் எங்களுடன் பயணித்த ஒரு வட இந்திய குடும்பத்தில் உள்ள ஒரு பெண்மணிக்கு இந்த Non-Vegetarian வாடையே பெரும் பிரச்சனையாக இருந்தது! – இரண்டு மூன்று முறை அலறி அடித்துக் கொண்டு Washroom பக்கம் ஓடினார்வேறெதற்குவாந்தி எடுக்கத்தான்!

மதியம் உணவு கொடுத்தார்கள்மீண்டும் இரண்டு சப்பாத்தி, ஒரு Dhal, ஒரு பனீர் சப்ஜி, ஒரு கவளம் சாதம், ஒரு Cup தயிர், ஒரு ஊறுகாய் பாக்கெட்! ”ஒரு கடி ஒரு குடிஏனோ சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வந்தது. அந்த பனீர் சப்ஜியைத் தொட்டு ஒரு விள்ளல் சப்பாத்தி வாயினுள் போனதும் – “என்ன கொடுமை சரவணன் இது!” எண்ணம் தான்ஏனோ புளி சாம்பாரில் பனீர் போட்டு செய்த மாதிரி இருந்தது! சாம்பாரும் இல்லாது பனீர் சப்ஜி போலும் இல்லாது ஏதோ ஒரு கலவை! ரொம்பவே மோசமான சாப்பாடுஇதில் இந்த ராஜ்தானி விரைவு வண்டி தான் இந்தியன் ரயில்வேயின் Premier Train! கொடுமை…..

மதியம் ஆந்திர மாநிலத்தினை கடந்து கொண்டிருக்கும் போது Duggirala எனும் ஒரு சிறிய ஊர். அந்த ஊரின் ரயில் நிலையத்திற்கு மிக அருகிலேயே கொடுக்காபுளி மரங்கள்மரம் முழுவதும் கொடுக்காய்புளி நிறைந்திருக்க, அங்கேயே வண்டியை நிறுத்தி கொஞ்சம் கொடுக்காப்புளி சுவைக்கலாம் என எண்ணம் தோன்றியது உண்மை!

தெனாலி ரயில் நிலையத்திற்கு அருகே ஒரு வீடுஅந்த வீட்டின் மேல் ஒரு கார் நின்று கொண்டிருந்தது! என்ன என்று கொஞ்சம் உற்று கவனித்தால்அது தான் அந்த வீட்டின் தண்ணீர் தொட்டி! – கார் வடிவில் செய்திருக்கிறார்கள் – ”ஒரு கார் தான் வாங்க முடியல, தண்ணித் தொட்டியாவது கார் மாதிரி இருக்கட்டுமேஎன நினைத்திருப்பாரோ அந்த வீட்டின் உரிமையாளர்!

பயணத்தில் ஒரு தாலாட்டு கேட்க வாய்த்ததுதாலாட்டுப் பாடும் கலையே மறந்து விட்டோமோ என்று நினைக்க வைத்தது அந்த தாலாட்டு – “அம்முக் குட்டி ஜோஜோ, அப்புக்குட்டி ஜோஜோ, செல்லக்குட்டி ஜோஜோஎன்பது தான் அந்த தாலாட்டு! – கேட்ட குழந்தையும் – “அப்பா, உனக்கு பாடவே தெரியல, நீ கம்முனு இரு, நானே தூங்கறேன்என்று சொல்லிவிடுமோ என்று தோன்றியது எனக்கு.

அலைபேசியில் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார் – “ Conceive ஆயிருக்காங்களா? ரொம்பவே சந்தோஷம் – Doctor கிட்ட எழுதி வாங்கிக் கோங்க! – அந்த Report- அவங்க மாமியார் முகத்தில் வீசுங்க!” என்று கோபத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார். அவரது கோபத்தில் அந்த மாமியார்குழந்தை இல்லை எனஅப்பெண்ணை படுத்தியிருப்பாரோ எனத் தோன்றியது.

ஒரு முன் ஜாக்கிரதை முத்தண்ணா, அவரது Mobile Charger மேல் K. Murugan என தனது பெயரை Correcting Pen கொண்டு எழுதி வைத்திருந்தார்!

இரயில் பயணங்களில் தான் எத்தனை எத்தனை விஷயங்கள் நம் கண் முன்னே நடக்கின்றன. பல சமயங்களில் ஸ்வாரசியம், சில சமயங்களில் மனதினை கஷ்டப் படுத்தும் சமாச்சாரங்கள்…… 

பயணங்கள், அதுவும் நீண்ட ரயில் பயணங்கள் ஸ்வாரசியமானவை தான்! நீங்க என்ன சொல்றீங்க!

மீண்டும் சந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து….

54 comments:

 1. நீண்ட ரயில் பயணங்கள் ஸ்வாரசியமானவை தான்!//

  நீங்கள் சொல்வது உண்மைதான்..
  பயண அனுபவங்கள் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
 2. அனைத்தும் "கலந்த" பயணம்... சுவாரஸ்யம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 3. // இரயில் பயணங்களில் தான் எத்தனை எத்தனை விஷயங்கள் நம் கண் முன்னே நடக்கின்றன. பல சமயங்களில் ஸ்வாரசியம், சில சமயங்களில் மனதினை கஷ்டப்படுத்தும் சமாச்சாரங்கள்…… //

  உங்கள் அனுபவம் பேசுகிறது. இன்று (06.05.14) இரவு 12 மணி வரை நீண்டநேரம் கம்ப்யூட்டரில் இருந்து விட்டேன். தூக்கம் வருகிறது. குட் நைட்!
  த.ம - 4

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 4. உடன் பயணிக்கிற உணர்வு
  பயணம் சிறக்கவும்
  பயணம் சிறக்கவும்
  அனுபவப் பதிவுகள் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 5. Replies
  1. தமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 6. ரயில் பயணங்களில் தான் எத்தனை சுவாரஸ்யம்! எவ்வளவு மனிதர்கள்! நல்ல பகிர்வு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை.

   Delete
 7. //பயணங்கள், அதுவும் நீண்ட ரயில் பயணங்கள் ஸ்வாரசியமானவை தான்!//
  உண்மைதான். எழுத்தாளனுக்கு கதைக்கான கரு கிடைப்பதும் அங்கேதான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 8. #ரொம்பவே மோசமான சாப்பாடு#
  பயமாய் இருக்கிறது ,அடுத்த மாதம் இதே ராஜ் தானியில் ரிசர்வ் செய்துள்ளேன் !
  த ம 8

  ReplyDelete
  Replies
  1. அடுத்த மாதமா? வாருங்கள். ஒரு புதிய அனுபவம் கிடைக்கட்டும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 9. சுவாரஸ்யமான பயணங்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 10. Sir, neenga ovvoru sambavathai vivarikkumpothum naanum rayilil ungalodu payanippathu pola irunthathu..... arumai !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ் குமார்.

   Delete
 11. TRன் இரயில் பயணங்கல் next venkatnagarajன் இரயில் பயணங்கல்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சூர்ய பிரகாஷ்.

   தங்களது முதல் வருகை மகிழ்ச்சி அளித்தது!

   Delete
 12. சுதா த்வாரகாநாதன் புது தில்லிMay 7, 2014 at 11:08 AM

  ஒவ்வொரு ரயில் பயணத்திலும் விதவிதமான மனிதர்கள் விதவிதமான அனுபவங்கள். வாழ்க்கைப் பயணத்திலும் அப்படியே. விதவிதமான மனிதர்களும் அனுபவங்களும் நினைவுகளும் கடந்து போகின்றது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

   Delete
 13. சுவாரசியமாய்த்தான் இருக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 14. பயண அனுபவங்கள் சுவாரஸ்யம்.

  கடமைகளால் பதிவுபக்கங்கள் வரமுடியவில்லை. தொடர்கிறேன்.....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   ஓய்வு கிடைக்கும்போது படியுங்கள். கடமை முக்கியம்.

   Delete
 15. பயணங்கள் கசப்பதில்லை! (புளிப்பதில்லை?)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 16. ஏதோ பனீர் போட்டு சாம்பார் செய்முறையைத் தான் விளக்கப் போகிறீர்கள் என்று நினைத்தேன்....(((

  உண்மை தான். நீண்ட பயணங்கள் பல பல அனுபவங்களை நமக்குக் கொடுக்கிறது.
  இங்கே பிரான்சிலிருந்து சென்னைக்குப் போக குறைந்தது பதினான்கு மணி நேரம். ஒவ்வொரு முறை போய் வரும் போதும் புதுபுது மனிதர்கள்.... நிறைய விசயங்கள்....
  (எழுத உட்கார்ந்தால் எதுவும் வரமாட்டேங்கிறது... கஷ்டம்)
  நீங்கள் அருமையாக பயண அனுபவத்தை எழுதி இருக்கிறீர்கள் நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 17. தங்களைப் பார்க்கும் போது எனக்குக் கொஞ்சம் பொறான்மையாக இருக்கிறது
  சகோதரா மிகவும் ரசித்து ரசித்துத் தங்களின் பயண அனுபவங்களைச் சொல்லிச்
  செல்லும் விதம் அடிக்கடி ஊர் சுற்றி வரும் இந்த வாய்ப்பு எல்லோருக்கும் அமைவதில்லைத்
  தங்களுக்கு அமைந்துள்ளது வாழ்த்துக்கள் .மிகவும் அருமையான பகிர்வு நீண்ட ரயில்
  பயண அனுபவமே ஒரு தனீ சுகம் தான் தொடரட்டும் இனிதாகத் தங்களின் பயண
  அனுபவங்கள் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 18. ரயில் வேகத்தில் ஓடி வந்த சகோதரா மூன்று ஆக்கத்திற்கும் கருத்து மட்டும் போதாது
  ஓடிப் போய் லைக் போட்டிருங்க :))))

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்த பயணம் என்பதால் பதிவுகளைப் படிக்க மட்டுமே முடிகிறது. இனிமேல் வாக்கும் அளிக்கிறேன் அம்பாளடியாள்.

   Delete
 19. எதையும் சுவைபட எழுதுவதற்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 20. ரயில் பயணங்களில்னு ஒரு தனி புத்தகம் போடுங்கள். அவ்வளவு ரசித்துப் படிக்க வைக்கிறது உங்கள் பதிவு. நிறைமாத கர்ப்பிணிக்கு இன்னும் டேட் டியூ ஆகி இருக்காது. இதற்கெல்லாம் கவலைப் படாதீர்கள். ராஜதானியே இவ்வளவு மோசமா. ராஜதானின்னு பெயர் வைத்திருக்கக் கூடாது.:))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 21. Train il nadakkum sambavangal neril parppadhu polave irukku.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 22. அனைத்தும் "கலந்த" பயணம்... சுவாரஸ்யம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 23. நெய்வேலி கதைகளும் ”மனச் சுரங்கத்திலிருந்து” நல்ல உவமை! ரசித்தோம்!

  ஐயோ ரயில் சாப்பாடு மிகவும் மோசம் சார்! அதுவும் ராஜதானி போன்ற உணவு வழங்கப்படும் ரயில்களில் நாமும் எடுத்துச்செல்ல முடியாது...வேறு என்ன நாம்தான் ரூபாய் கட்டியிருக்கின்றோமே என்ற எண்ணம்தான்......

  அந்த கார் போன்ற னீர் தொட்டி பார்த்திருக்கிறோம்....ஃபோட்டொ இருந்தது.....தேடினோம் கிடைக்கவில்லை...கிடைத்திருந்தால் அதைத் தந்திருக்கலாமே என்று நினைத்தோம்......

  நல்ல அருமையான பயண விவரணம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 24. ஏதோ புது சமையல் குறிப்பு என்று எண்ணி வந்தேன்!பயண அனுபவ வர்ணனை அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 25. ரயில்வே சாப்பாடு பற்றி எத்தனை சொன்னாலும் ரயில்வே நிர்வாகம் கேட்பதாகவே இல்லை. ஒருமுறை மதுரா, பிருந்தாவன் போகும் போது துராந்தோ எக்ஸ்ப்ரெஸ் வண்டியில் கொடுத்த சாப்பாடு நினைவு வருகிறது, உங்களின் இந்தப் பதிவைப் படித்தவுடன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

   Delete
 26. ராஜ்தானி அறிமுகம் செய்த புதுசுலே எல்லாமும் நன்றாகவே இருந்தது. சமீப காலங்களில் தான் அதாவது மம்தா பானர்ஜி, லாலு ப்ரசாத் போன்றவர்கள் ரயில்வே துறையைக் கட்டி மேய்த்தபோது லாபம் காட்டுவதற்காக ஏதேதோ செய்து தரத்தைக் குறைத்துவிட்டார்கள். ஆனால் வட மாநிலங்களின் ஷதாப்தி பயணங்களில் தரும் சாப்பாடு தரமாகவே இருக்கிறது. அதோடு அங்கே டிப்ஸும் கேட்க மாட்டார்கள். இங்கே இறங்குவதற்குள்ளாக ஒரு நோட்டைத் தூக்கிக் கொண்டு வந்துடுவாங்க. துரந்தோ இன்னமும் மோசம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

   Delete
 27. அட, நீண்ட தூர ரயில் பயணங்களில் இத்தனை சுவராசியங்கள் இருக்கிறதா?????

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....