வெள்ளி, 30 மே, 2014

ஃப்ரூட் சாலட் – 94 – தொடரும் வன்முறை – தண்ணீர் - யானைஇந்த வார செய்தி:உத்திரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் மட்டுமே மூன்று மாவட்டங்களில் பெண்களை மானபங்கப்படுத்தியதும், தட்டிக் கேட்ட ஒரு பெண்ணின் தாயை கொடுமையாகக் காயப்படுத்தியதும், ஓர் இடத்தில் காக்க வேண்டிய காவல் துறையே இது போன்ற இழிவான செயல்களில் ஈடுபட்டதும் நடந்திருக்கிறது.

உத்திரப் பிரதேசத்தின் பதௌன் [Badaun] மாவட்டத்தில் இரண்டு பெண்களை கற்பழித்து அவர்களை தூக்கில் தொங்க விட்டிருக்கிறார்கள். இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் இருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது பாதிக்கப்பட்டவர்கள் எங்கே சென்று முறையிடுவார்கள் எனத் தோன்றுகிறது.

எடாவா மாவட்டத்தில் நேற்று நடந்த ஒரு சம்பவம் இன்னும் மோசமான விஷயமாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்தவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அந்த வழக்கினை திரும்பப் பெறச் சொல்லி, குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயைக் கொடுமையாகத் தாக்கி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

பெண்களைப் போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் மனநிலை மாறும் வரை, இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்களுக்கு விரைவான தண்டனை, அதுவும் முன்னுதாரணமான தண்டனை தரப்படும் வரை இது போன்ற இழிவான செயல்கள் தொடரும் என்றே தோன்றுகிறது.

உத்திரப் பிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக அதிகம் – அதுவும் வெளி வராத குற்றங்கள் மிக மிக அதிகம். தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை வெட்கப்பட்டும், பயம் கொண்டும் வெளியே சொல்லாத பெண்கள் தான் அதிகம்.

பெண் விடுதலை, முன்னேற்றம் என்று பலமாக குரல் கொடுத்தபடியே இருந்தாலும், இன்னமும் இது போன்ற குற்றங்கள் இந்தியாவின் பல பகுதிகளில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது வருத்தம் தரும் விஷயம்….. 


இந்த வார முகப்புத்தக இற்றை:

உங்களுக்குப் பிடித்தவரின்
தீய குணங்கள்
உங்கள் கண்களுக்குத் தெரியாது!

உங்களுக்குப் பிடிக்காதவரின்
நல்ல குணங்கள்
உங்கள் கண்களுக்குத் தெரியாது!


இந்த வார குறுஞ்செய்தி:

BEST THING TO LEARN FROM WATER:

ADJUST YOURSELF IN EVERY SITUATION AND IN ANY SHAPE BUT MOST IMPORTANTLY ALWAYS FIND OUT YOUR OWN WAY TO FLOW….


சுஜாதாட்ஸ்:

உரைநடையை எளிதாக எழுதுவதற்கு ஒரு கழகம் ஆரம்பித்தால் அதற்கு நான் உடனே ஆயுள் சந்தா அனுப்புவேன். தற்போது தமிழில் கொஞ்சம் தீவிரமாகச் சிந்திப்பவர்கள் மிகச் சிக்கலாக எழுதுகிறார்கள். அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கு திரும்பத் திரும்பப் படித்து படம் வரைந்து பாகங்களைக் குறிக்க வேண்டியிருக்கிறது. என்னைச் சராசரிக்குச் சற்று மேற்பட்ட வாசகனாகக் கொள்ளலாம். எனக்குப் புரியவில்லை என்றால், புரிவது கஷ்டமாக இருக்கிறது என்றால் இது யார் தவறு?


உதாரணம் சொல்கிறேன்.

“இலக்கியத்தில் நேற்று இல்லாதிருந்தது இன்று இக்கணம் புதிதாக நிகழ்ந்து சாத்தியமாகி உள்ள ஒரு பரிமாண விஸ்தாரம் புகைப்படக்கலை அல்லது தியேட்டரைச் சார்ந்துள்ள எல்லைகளிலிருந்து பிய்த்து எடுக்கப்பட்டதனாலும் விஸ்தாரம் சாத்தியமாகிவிட்ட இக்கணமீதிலிருந்து அது இலக்கியத்தைச் சார்ந்த எல்லையாகிவிடுகிறது.”


-    கணையாழியின் கடைசி பக்கங்களில் சுஜாதா.

ரசித்த பாடல்:

மண் வாசனை படத்திலிருந்து “ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில்” பாடல் – இந்த வார ரசித்த பாடலாக உங்களுக்கு இசை விருந்தாக…..ரசித்த ஓவியம்:

திருவரங்கம் கோவிலின் யானையாகிய ஆண்டாள் 48 நாள் ஓய்விற்குப் பிறகு மீண்டும் கோவில் பணியில் சேர்ந்தது – செய்தி.

Eric Marette என்பவர் வரைந்த யானை ஓவியம் இந்த வார ரசித்த ஓவியமாக…..

படித்ததில் பிடித்தது:

இங்கிலீஷ் பேப்பர் கிலோ ஒன்பது ரூபாய் தமிழ் பேப்பர் நாலு ரூபாய்என்பதைப் பார்த்ததும் தனது எண்ணத்தை செயலாற்றத் துவங்கினாள் அவள்.
இங்கிலீஷ் பேப்பபரின் இடை இடையே தமிழ் பேப்பரை வைத்துக் கட்டி பேப்பர்காரனுக்குப் போட்டாள்.
"எல்லாம் இங்கிலீஷ் பேப்பர்பா, பார்த்து நல்லா எடை போட்டு எடுத்திட்டுப் போப்பா…!"
"சரிங்கம்மா, மொத்தம் பத்து கிலோகிட்ட வருது, இந்தாங்கம்மா
தொண்ணூறு ரூபாய்" என அவன் கொடுத்து சென்றான்.
ஏதோ சாமர்த்தியமாய் சாதித்ததாய் பூரித்துப் போனாள் அவள்!
மாலை அதே பேப்பர்காரனைப் பார்த்ததும் கொஞ்சம் வெல வெலத்துப் போனாள்
"என்னம்மா இப்படிப் பண்ணிட்டீங்க…? பேப்பருக்கு இடையில"
அவன் பேசப் பேச அவளுக்கு வியர்த்தது!
"இந்த பவுன் செயின் இருந்தது, பவுன் விற்கிற விலைக்கு, இப்படியா அலட்சியமா இருக்கிறது. இந்தாங்கம்மா! என எடுத்து நீட்ட"
அவன் தங்கமாகவும் தான் கிழிந்த பழைய பேப்பருமாக மாறி இருந்ததை அவளால் உணர முடிந்தது!!

என்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து…..


74 கருத்துகள்:

 1. குறுஞ்செய்தியும் குட்டிக் கதையும் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   நீக்கு
 2. படித்ததில் பிடித்த கதை
  எனக்கும் அதிகம் பிடித்தது
  உத்திரபிரதேசம் மற்றும் பீகார்
  மாறினால இந்தியாவே மாறியதாகக் கொள்ளலாம்
  போல உள்ளது
  யானை ஓவியம் தத்ரூபமாக இருந்தது
  சுஜாதாவே இந்தப்பாடு பட்டால் நம் பாடு என்ன சொல்வது ?
  ஃபுரூட் சாலட் மிகமிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 3. Padiththadhil pidiththadhu manadhai thottadhu. Matrapadi yeppodhum pol fruit salad arumai.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 4. உத்தரப் பிரதேசச் செய்தி மனதைக் கடுமையாகப் பாதிக்கிறது. :( மற்றச் செய்திகளுக்கும் நன்றி. சுஜாதா சொல்லி இருக்கிறாப்போல் கடுமையான இலக்கியவாதிகளைப் புரிந்து கொள்வது கடினமே. ஆண்டாள் பாவம்! இன்னமும் ஶ்ரீதரைப் பிரிந்த சோகத்தில் இருக்கும் போல! :( வெளியே சொல்லக் கூட முடியாத நிலைமை அதுக்கு! என்ன செய்யும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   நீக்கு
 5. //அவன் தங்கமாகவும் தான் கிழிந்த பழைய பேப்பருமாக மாறி இருந்ததை அவளால் உணர முடிந்தது!!//

  அருமையான நிகழ்ச்சி. படித்ததில் பிடித்தது ..... எனக்கும் கூட. ;))))) பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 6. பெண்களுக்கான கொடுமை கண்டிக்கத்தக்கது.
  .இற்றை அருமை.
  இந்தக் குறுஞ்செய்தியை ப்ரூஸ்லீ வாயால் சமீபத்தில் ஒரு வீடியோவில் கேட்டேன்!
  சுஜாதாட்ஸ் அருமை.
  பாடல் பிடிக்கும்.
  ப.பி சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. உ.பி. :- பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!

  சுஜாதாட்ஸ்:- சரியாகச் சொன்னார் சுஜாதா. உரைநடையோ! கவிதையோ! ஓவியமோ! பல அறிவுஜீவிகள் புரிந்தவர்களுக்கு புரிந்தால் போதும் என்று நினைத்து எழுதுகிறார்கள் அல்லது வரைகிறார்கள். ஆனால் புரிந்தது என்று சொல்பவர்கள் பலர் புரிந்தது போல் நடிக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

  படித்ததில் பிடித்தது - எங்களுக்கும் பிடித்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி...

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ் குமார்.

   நீக்கு
 9. ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில்... தித்திப்பான பாட்டு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 10. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும்
  பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தடுக்கப் படவில்லை
  நிறுத்தப்பட வில்லை என்பது கொடுமையிலும் கொடுமை
  தம 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 11. //உத்திரப் பிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக அதிகம்.//

  நீங்கள் தமிழ் நாட்டில் இல்லாததால் இங்கு நடப்பது உங்களுக்கு தெரியவில்லை என் நினைக்கிறேன். இந்தியா முழுதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. வேலியே பயிரை மேயும் போது என் செய்ய.

  இவ்வார முகப்புத்தக இற்றையும் Eric Marette இன் யானை ஓவியமும் மிக அருமை.

  நீங்கள் படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   நீக்கு
 13. படித்ததில் பிடித்தது மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 14. பெண்களுக்கு எதிராகத் தொடரும் வன்முறை செய்தியை மனதை ரணமாக்கியது. கொடுமையில் ஈடுபட்ட காவலர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.

  மற்ற அம்சங்கள் - அனைத்தும் அருமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   நீக்கு
 15. வணக்கம்
  ஐயா

  பெண்களை பகடைக்காயாக பயன்படத்துவது உலகம் முழுதும் விசுவரூபம் எடுத்துள்ளது... தங்களின்பதில் இறுதில் நல்ல கருத்தை முன்வைத்துள்ளீர்கள் ... கதையும் நன்றாக உள்ளது ஓவியமும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு

 16. உங்களுக்குப் பிடித்தவரின்
  தீய குணங்கள்
  உங்கள் கண்களுக்குத் தெரியாது!

  உங்களுக்குப் பிடிக்காதவரின்
  நல்ல குணங்கள்
  உங்கள் கண்களுக்குத் தெரியாது

  அருமையான வரிகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 17. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   நீக்கு
 18. மண் வாசனை பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் எல்லாம் தண்டனை கடுமையானால் தான் குறையும் யானை ஓவியம் சூப்பர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குடந்தையூர் சரவணன்.

   நீக்கு
 19. பல்வேறு சுவைகளுடன் இனித்தது ப்ரூட் சாலட்.. கதை செம்ம..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   நீக்கு
 20. சுஜாதாட்ஸ், படித்ததில் பிடித்தது, யானை ஓவியம் என அனைத்தும் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   நீக்கு
 21. #அவன் தங்கமாகவும் தான் கிழிந்த பழைய பேப்பருமாக மாறி இருந்ததை அவளால் உணர முடிந்தது!!#
  கதைக்கு சிகரம் வைத்த வரிகள் ,எழுதியவர் பெயரைக் குறிப்பிட்டு இருக்கலாம் !
  த ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 22. உ.பி. நிலைமை வருந்த வைத்தது! குட்டிக்கதை நெகிழவைத்தது! யானை ஓவியம் அருமை! சுவையான சாலட்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 23. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவன் சுப்பு.

   நீக்கு
 24. சுவையான செய்திகளும் கதையும்.ஃப்ரூட் சாலட் வகையும் அமிர்தம். இளைய ராஜாவின் பாடல் இனிமை.சுஜாதாவே திணறினாரா.அதிசயம். ஆண்டாள் யானை மீண்டும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   நீக்கு
 25. பிரதமர் மோடி , பெண்களுக்கு எதிரானதும், இந்தியாவின் பெருமைக்குக் களங்கம் சேர்க்கும் இந்த நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இக் கேவலமான செய்தியைக் கேட்டுக் கேட்டு சீ என்றாகிவிட்டது. டெல்லி மாணவி வன்கலவி- இங்கு பத்திரிகை, தொகா என நாறியது. காவற்துறையும் சேர்ந்து செய்வது கொடுமையிலும் கொடுமை!
  முகநூல், குறுஞ்செய்தி, பாடல் பிடித்தது.
  சுஜாதா- அருமையாகக் குட்டியுள்ளார். சிலர் எம்மைக் கொல்லவென்றே எழுதுபவர்கள்.
  யானை ஓவியம் அருமை, ஆனால் செய்தி வேதனையே- ஏதோ யானைகளைக் கோவில்களின்
  கட்டி வதைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இந்த 48 நாளும் அது சுதந்திரத்தை அனுபவித்து விட்டு வந்துள்ளது. அந்த ஏக்கம் அதற்கு இருக்குமே!
  இந்தியக் கோவிலெங்கும் யானைகளை மீண்டும் காட்டினுள் அனுப்புவதென முடிவு செய்தால் நான் மகிழ்வேன். என்னை மன்னியுங்கள் அண்ணா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யோகன் பாரீஸ்.

   நீக்கு
 26. பெண்களுக்கெதிரான வன்முறை மிக வேதனையளிக்கிறது! ஓவியம், பாடல், கதை அனைத்தும் அருமை! நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   நீக்கு
 27. பழக்கலவை சுவையாக இருந்தது.
  ரசித்தேன்.
  நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி.

   நீக்கு
 28. உங்களுக்கு படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு
 29. படித்ததில் பிடித்ததுதான் சூப்பர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 30. உத்த்ரப் பிரதேசம்/// இந்த இழிநிலை என்று மாறும்!?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 31. படிச்சுட்டு கருத்துபோடுறதுக்குள்ள மற்றொரு அவலம் உ.பி. யில் :((
  பேப்பர்காரர் கதை செம டச்சிங் னா.
  நீங்கள், அண்ணி மற்றும் குட்டீஸ் நலமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைவரும் நலம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   நீக்கு
 32. பெண்கள் விடுதலை, முன்னேற்றம் என்பதெல்லாம் சும்மாதான். பெண்களே அதற்கு எதிரியாக இருக்கும் போது ....அவர்கள் ஏதாவது ஒரு சம்பவம் நட்கக்கும் போது கூகுரல் எழுப்புவார்கள்! கொஞ்ச நாளில் அது அடங்கிவிடும்.....முதலில் மருமகளும், மாமியாரும், நாத்தனாரும் ஒற்றுமையாக இருந்தாலே பெண்கள் விடுதலை, முன்னேற்றம் பாதி வெற்றி அடைந்தது போலத்தானே!
  முகப் புத்தக இற்றை மிக அருமை!

  படித்ததில் பிடித்தது, சுஜாதாட்ஸ் அருமையோ அருமை! அந்த ஓவியம் ஆஹா!

  எல்லாமே இனிமைதான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்.

   நீக்கு
 33. நல்ல பகிர்வு அண்ணே!
  பேப்பர் கதை மிக சிறப்பு ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   நீக்கு
 34. முதல் செய்தி.. தொடரும் அவலம் கலக்கம் தருகிறது. படித்ததில் பிடித்தது நல்ல பகிர்வு.

  நல்ல தொகுப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 35. உ.பியின் செய்தி மனதை வருத்துகிறது! பிடித்த, பிடிக்காதவர்களின் குணங்கள் நம் பார்வையில் வேறுபடுவது உண்மை! யானை ஓவியமா? நம்ப முடியவில்லை! நிஜ யானையின் தோற்றத்தைத் தருகிறது. படித்ததில் பிடித்தது!!! எனக்கும், படித்ததும், பிடித்தது! அனைத்தும் அருமையாக இருந்தது.

  நன்றியுடன், கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 36. அணைத்து பதுவுகளும் மிகவும் அருமையாக உள்ளது. உங்களுடைய சேவை தொடர வாழ்த்துகள். மேலும் தமிழக செய்திகள் மற்றும் உலக செய்திகளை அறிய தமிழன்குரல் இணையதளத்தை பார்க்கவும்.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....