எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, March 10, 2014

நைனிதால் – பனிப்போர்வைஏரிகள் நகரம் – பகுதி 3

ஏரிகள் நகரம் – பகுதி 1 பகுதி 2

ஏரிகள் நகரம் தொடரின் பகுதி இரண்டினை முடிக்கும்போது கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.


அறையினுள் வந்து நானும் நித்ரா தேவியின் தாலாட்டில் உறங்க ஆரம்பித்தேன். எட்டு மணிக்காவது எழுந்திருக்க வேண்டும் என நினைத்தபடியே உறங்கினேன். எழுந்தது எத்தனை மணிக்கு......? அடுத்த பகுதியில் சொல்கிறேன்.நித்ரா தேவியின் தாலாட்டில் உறங்கிய எங்களை அவள் விடவே இல்லை. தழுவியபடியே இருக்க, நான் அவள் பிடியிலிருந்து விடுபட்டபோது மணி காலை 09.00. அப்போதும் மற்ற நண்பர்களை அவள் பிடித்திருக்க, காலைக்கடன்களை முடித்து, அறையிலிருந்து வெளியே வந்தேன். வந்து பார்த்தபோது எதிரே முழுவதும் பனிபடர்ந்த மலை – மலையினை ஒரு பனிப்போர்வை போட்டு மூடி வைத்த மாதிரி இருந்தது. நாங்கள் இருந்தது தங்குமிடத்தின் இரண்டாம் தளத்தில். கண்களை கீழே சாலை நோக்கி செலுத்தியபோது நின்றுகொண்டிருந்த அத்தனை வாகனங்களிலும் பனி படர்ந்திருந்தது. பனிப்போர்வை போர்த்திய மலை

பொதுவாகவே பனிப்பொழிவு இரவு நேரங்களில் தான் அதிகம் இருக்கும் என்று சொல்கிறார் நாங்கள் தங்குமிடத்தில் பணிபுரியும் ஒரு நேபாளி. காரணமாக அவர் சொன்னது அறிவியல் ரீதியாக உண்மையோ பொய்யோ, மிகவும் ரசனையோடு சொன்னார். பனிப்பொழிவினை இரண்டு விதமாக பிரித்துவிடுகிறார் இவர் – ஒன்று பனிக்கட்டி மழை மற்றொன்று பஞ்சு போன்ற பனி மழை – அதிலும் பஞ்சு போன்ற பனிக்கு வெட்கம் அதிகம் அதனால் யாரும் பார்க்காத இரவு வேளையில் தான் பஞ்சு போன்ற பனி அதிகம் பொழியும் என்று சிலாகித்தார்.

 பனியைத் தாங்கும் இலைகள்! எங்களுக்கும் பலம் உண்டு என்று சொல்கிறதோ?

சில பல படங்களை எடுத்து விட்டு, எல்லோருமாக தயாராகி வெளியே வந்தோம். சாலை எங்கும் மனிதர்கள் தங்களை தலை முதல் கால் வரை சூடு தரும் உடைகளால் மூடி இருந்தார்கள் – திறந்திருந்தது முகம் மட்டுமே! முகத்தில் கூட சிலருக்கு குளிரின் காரணமாக நடுக்கம் தெரிந்தது – பற்கள் கிடுகிடுத்ததால்! தலைக்கு குல்லா, கைகளுக்கு கையுறைகள், மேலே ஜாக்கெட், மஃப்ளர் என இருக்கும் அனைவரையும் பார்த்த என்னுடன் வந்த ஒரு நண்பர் கொஞ்சம் கிண்டல் செய்து, “அப்படி ஒன்றும் குளிரவில்லையே! ஏன் இவ்வளவு PACKING?என்றார். சிறிது நேரம் கழித்து அவர் கேட்டது – ‘வெங்கட் ஜி! குல்லா மற்றும் கையுறைகள் வாங்கணும்.... உள்ளங்கையெல்லாம் உறைந்துவிட்டது!

 எனக்கு அத்தனை பலமில்லை - என் இலைகள் உதிர்ந்து விட்டன! ஆனாலும் வீடில்லாது தவிக்கும் இரு பறவைகளுக்கு நான் அடைக்கலம் தந்தேன்! அதுவும் ஒருவிதத்தில் பலம் தான்!


நேரே நாங்கள் சென்றது உணவகம் நோக்கி. மால் ரோடு முழுவதும் தங்குமிடங்களும் உணவகங்களும் தான். பெரும்பாலான வட இந்திய உணவகங்களில் காலை நேரத்தில் பராட்டா தான் கிடைக்கும் – ஆலு பராட்டா முக்கியம்!

 பனிப்போர்வையில் நிற்கும் நாங்கள்.  புகைப்படம் எடுத்துதவியது ஓட்டுனர் மத்லூப்.

ஆளுக்கு இரண்டு ஆலு பரோட்டா சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வு வந்துவிடும்! ஆலு பரோட்டா – தொட்டுக்கொள்ள ஊறுகாய், தயிர், பச்சைமிளகாய் என மிகச் சாதரணமான ஒரு உணவு! ஆலு பராட்டா எப்படி செய்வது என எதாவது சந்தேகம் வந்துவிட்டால் அதற்கும் இங்கே விளக்கம் இருக்கிறது! பாருங்க! [ஒரு சின்ன விளம்பரம் தான்! :)] வயிறு நிறைந்ததும், அடுத்ததாய் எதற்கு வந்தோமோ அந்த வேலையை ஆரம்பிக்க வேண்டும்! உணவகத்திலிருந்து வெளியே வரும் சுற்றுலா பயணிகளை அப்படியே இனிப்பினில் படரும் ஈக்கள் போல சிலர் முற்றுகை இடுகிறார்கள்.

 ”என்னதான் நீங்கள் கூரை போட்டிருந்தாலும் அதற்கு அழகு சேர்த்திருப்பது நான் தான்” என்று சொல்லாமல் சொல்கிறதோ பனி!


அந்த ஊரில் இருக்கும் முக்கியமான சுற்றுலா தளங்களை சுற்றிக் காண்பிக்கும் வாகன ஓட்டிகள் தான் அவர்கள். தில்லியிலிருந்தே வாகனம் எடுத்து வந்தாலும், உள்ளூரில் இருக்கும் வாகன ஓட்டியாக இருந்தால் பல இடங்களை சுலபமாக பார்க்க முடியுமே என ஒரு வாகன ஓட்டியிடம் பேசினோம். அவர் பெயர் மத்லூப் [Mathloob] – சுறுசுறுப்பான இளைஞர். வெளியூர் என்றாலே அவர்களிடமிருந்து விரைவில் பணம் சம்பாதிக்க நினைப்பார்கள். இவரிடம் கொஞ்சம் பேசியதில் அதிக ஆசைப் படாதவராக இருக்க, அவரிடம் பேசி அவர் வாகனத்தில் செல்ல முடிவு செய்தோம்!

 பனியில் விளையாடும் இளைஞர்கள்..

நான்கு மணி நேரம் சுற்றிக் காண்பிக்க 500 ரூபாய் என பேசிக்கொண்டு அவரது 4+1 இருக்கைகள் கொண்ட சிற்றுந்தை அமர்த்திக்கொண்டோம். நேராகச் சென்றது ஒரு சமவெளிப் பகுதிக்கு. கொஞ்சம் மலைப்பாங்கான பாதையில் நடந்து சென்றால் நம் கண்ணெதிரே பனிப்போர்வை விரித்து வைத்திருந்தது! அங்கே குழந்தைகளும் பெரியவர்களும் பனிக்கட்டிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடினார்கள்.

 இச்சமவெளியில் முழுதும் என் ஆதிக்கம் தான்! - இப்படிக்கு..... பனி.

சில குழந்தைகள் பனிக்கரடி செய்ய, மற்றவர்கள் ஏற்கனவே யாரோ செய்து வைத்த பனிக்கரடியுடன் விதவிதமாய் படங்கள் எடுத்துக் கொண்டார்கள். சிலர் அப்படியே பனிக்கரடியை கடித்துத் தின்பது போல படங்களை எடுத்துக் கொண்டார்கள்! நானும் நண்பர் பிரமோதும் சுற்றிச் சுற்றி படங்கள் எடுக்க, எங்களை அழைத்து வந்த மத்லூப் எங்களிடம் காமெராவினை வாங்கி, எங்கள் அனைவரையும் சேர்த்து சில புகைப்படங்கள் எடுத்தார்!

 யாரோ செய்து வைத்த பனிக்கரடி!

அங்கேயே இருந்துவிடலாம் எனத் தோன்றினாலும் இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் இருந்ததால் மீண்டும் மலைப்பாதை வழியே இறங்கி சாலைக்கு வந்தோம். அடுத்த இடத்தினை நோக்கி பயணிக்கும்போது சாலை முழுவதும் பனி இருந்ததால் பல இடங்களில் தடை ஏற்பட்டது. பனியைப் பார்த்ததால் பலர் தங்களது வாகனங்களை அந்த குறுகிய சாலையில் நிறுத்தி விளையாட ஆரம்பித்திருக்க, எதிரும் புதிருமாய் வாகனங்கள் நிற்க ஆரம்பித்தன! – மிகக் குறுகிய சாலை ஆனால் அதுவும் தில்லி நோக்கிச் செல்லும் ஒரு சாலை.  அதனால் அங்கே போக்குவரத்து ஸ்தம்பிக்க, நாங்களும் கொஞ்சம் இறங்கி நடந்தோம்.

 சாலை முழுவதும் பனி....  தடுமாறும் வாகனம்.


இன்றைக்கு யாரை நான் சுமப்பேனோ?” - தெரிந்து கொள்ள காத்திருக்கும் குதிரை.
அரை மணி நேரத்தில் போக்குவரத்து கொஞ்சம் சீராக, நாங்கள் மீண்டும் பயணித்து ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அந்த இடம் Goda Point! ஹிந்தியில் goda என்றால் குதிரை. அந்த இடத்தில் நிறைய குதிரைகள் நின்று கொண்டிருக்கும். அவர்கள் வைத்திருக்கும் குதிரைகள் மீது பயணித்தோ, அல்லது மலைப்பாதையில் நடந்து சென்றோ ஒரு அழகான இட்த்தினைப் பார்க்க முடியும். அது எந்த இடம் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்!


வேறொரு பகிர்வில் மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

50 comments:

 1. இனிய பதிவு.. அழகான படங்கள்..
  கண்கள் குளிரும்படிக்கு... அழகிய காட்சிகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 2. Padhivu romba nandraga irundhadhu. Kudhirai savaari paarkka avaludan irukkiren.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 3. அருமையான படங்கள் ஐயா.
  ஆனால் படங்களைப் பார்க்கும்போதே குளிர்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 4. Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்கும்மர் ஜி!

   Delete
 5. எங்கும் பனி... எதிலும் பனி... ஜில்லிட்ட வைக்கும் பயணம்... அடைக்கலம் தந்த படம் உட்பட அனைத்தும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. நைனிதாலில் 9 மணிக்கு விடிந்துவிட்டதா!? ஆச்சர்யம்தான்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 7. இப்படிக்கு பனி.. அழகு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 8. பனியின் ஊடே வண்டியோட்டுவது ஒரு திகில் அனுபவம்.. என் பழையஅனுபவங்களை கிளறி விட்டது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 9. பனியைத் தாங்கும் மரத்தின் இலைகளும்,
  பறவையைத் தாங்கும் இலைகளை உதிர்த்த மரமும்,
  பனி போர்த்த மலைகளும் கண்களுக்கு விருந்தளித்தன..
  பகிர்வுகளுக்கு நிறைவான பாராட்டுக்கள்...வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 10. என்னதான் நீங்கள் கூரை போட்டிருந்தாலும் அதற்கு அழகு சேர்த்திருப்பது நான் தான்” என்று சொல்லாமல் சொல்கிறதோ பனி!//

  கவித்துவமான கமென்ட்! அழகிய தொகுப்பு! பனி படர்ந்த படங்கள் மிக அருமையாக இருக்கிறது! உடனே பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று தோன்றுகின்றது! பனிக்கரடி படம் "இயற்கை இயற்கைதான்! அதற்கு நிகர் எதுவும் இல்லை! என்று சொல்லுகின்றது!

  பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 11. பஞ்சு போன்ற பனிமழைக்கு வெட்கம்... ஆஹா!

  இதோ... குதிரைக்குப் பக்கத்தில் நாங்களும் வந்து விட்டோம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 12. இந்தக் குளிரிலா நைநிடால் போனீங்க?? முந்தினபதிவுகளையும் படிச்சுட்டு வரேன்.:)))

  ReplyDelete
  Replies
  1. குளிரில் செல்வதில் தானே த்ரில்! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 13. பனி படர்ந்த மலையையும், மரத்தையும் விடுதியின் கூரையையும் நேரில் பார்ப்பது போல் இருக்கிறது உங்கள் புகைப்படங்களைப் பார்க்கின்றபோது. அருமையான படங்கள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 14. கொடுத்து வைத்தவர். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 15. பனிமழையில் நனைந்தேன்! அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 16. பனியில் வழுக்காமல் நடக்கவும் பழக வேண்டும். அடிக்கடி சாலைகளைச் சுத்தம் செய்கிறார்களா.. அழகான படங்கள் . இங்கேயும் அதே கதை.

  ReplyDelete
  Replies
  1. சாலைகளை சுத்தம் செய்வதில்லை..... பனி தானாக உருகி விடுகிறது.....

   அதில் வண்டி ஓட்டிகள் தாறுமாறாக ஓட்டுகிறார்கள்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 17. என் நைனிதால் பயணமும் நினைவுக்கு வருகிறது ,மணிக்கூண்டு அருகில் இருந்து நாலைந்து கிலோமீட்டர் இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டே சாலையில் நடந்து சென்றதும்,பனிக்கட்டியை எறிந்து கொண்டு விளையாடியதும்இன்றும் மறக்கவே முடிய வில்லை !
  உங்களின் படங்களே ஜில்லென்ற உணர்வை தருகின்றன !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 18. நைனிதால் பனியில் உங்கள் அனுபவம் நன்றாக, சுவாரஸ்யமாக செல்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 19. பனியில் பயணம் படங்கள் அருமை...
  உங்கள் அனுபவமும் ரசித்துப் படிக்க வைத்தது அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 20. உங்களுடனே நேரில் பயணித்தது போல இருக்கு, கூடவே படங்களும் கண்ணிற்கு குளிர்ச்சி வழக்கம் போல !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 21. ஏமாற்றம்! பல படங்கள் வரவேயில்லை!

  ReplyDelete
  Replies
  1. அடடா.... மீண்டும் ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள் புலவர் ஐயா..

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி .

   Delete
 22. பயணம் இனிதாக போய்க்கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.
  ஒவ்வொரு புகைப்ப்டத்தின் கீழ் கொடுக்கும் கமெண்ட் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 23. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 24. பனி படர்ந்த இடங்களைப் பார்த்துவிட்டு 'கொடா பாயிண்ட்'க்கு நாங்களும் ரெடியாயிட்டோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 25. ரா.ஈ. பத்மநாபன்March 13, 2014 at 10:08 AM

  பனிவிழும் மலர்வனம். படங்களும் அற்புதம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....