ஞாயிறு, 23 மார்ச், 2014

சிறு வியாபாரிகள்.......தமிழில் புகைப்படக் கலை அதாவது Photography in Tamil வலைப்பூவில் ஒவ்வொரு மாதமும் ஒரு தலைப்பில் போட்டி வைப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் உள்ள அனைவரும் மாதாமாதம் நடக்கும் போட்டியினை ஆர்வத்துடன் எதிர்பார்த்து, அறிவிப்பு வந்த பின் அந்த மாத தலைப்பிற்கேற்ப தாங்கள் எடுத்த புகைப்படங்களை போட்டிக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.  ஒரு சில முறை மட்டுமே நான் அனுப்பி இருக்கிறேன்.

ஒவ்வொரு மாதமும் அனுப்ப நினைத்தாலும், ஏனோ அனுப்புவதில்லை! இந்த மாதமும் அதே! கடைசி தேதியான 20-03-2014 முடிந்து விட்டது. இந்த மாத தலைப்பு சிறு வியாபாரிகள்”.  ஒவ்வொரு ஊருக்குச் செல்லும்போதும் எனது காமிராவுக்குள் சில வியாபாரிகளை சிறைபிடிப்பதுண்டு! அப்படி சிறை பிடித்த வியாபாரிகளின் படங்கள் இந்த ஞாயிறில் பார்க்கலாம்!சமீபத்தில் ஹோலி விழா வட இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இப்போதெல்லாம் தென்னிந்தியாவில் கூட கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.....  இந்த ஹோலி கொண்டாட்டத்தின் முக்கிய தேவையான வண்ண வண்ணப் பொடிகள் விற்கும் ஒரு பெரியவர் – படம் எடுக்கப்பட்ட இடம் – [G]கோவர்த்தன், உத்திரப் பிரதேசம். மற்ற நாட்களில் இவர் சிறுவர்களுக்கான பொம்மைகள் விற்கும் வியாபாரி.  [B]பேல் பூரி சாப்பிடதுண்டா? பார்க்கும்போதே கொஞ்சம் கலங்க வைக்கும் வண்ணத்தில் இருக்கும் இவற்றில் போடப்படும் வஸ்துகள்! :) இங்கே ஒரு வியாபாரி [B]பேல் பூரி தயாரிக்க, வெங்காயம் வெட்டிக் கொண்டு இருக்கிறார். பக்கத்திலே அதில் கலக்கப்படும் மற்ற வஸ்துகள்! படம் எடுத்த இடம் தில்லி-ஆக்ரா நெடுஞ்சாலை - “பல்வல்எனும் இடத்திற்கு அருகில் உள்ள சாலையோர உணவகம் ஒன்றின் வெளியே!என்ன தான் பல வண்ணங்களில் வெளிநாட்டு பானங்கள் வந்துவிட்டாலும், வட இந்தியாவின் பாரம்பரிய பானமான “லஸ்ஸிக்கு ஈடாகுமா? லஸ்ஸி விற்கும் வியாபாரி – வாகனத்தில் இருந்தபடியே எடுத்ததில் வியாபாரி கொஞ்சம் Out of Focus! :( ஆனாலும் அவர் தயாரிக்க வைத்திருக்கும் தயிரைப் பாருங்கள்..... மேலே ஒரு அழகுக்காக வைத்திருக்கும் ரோஜாப்பூ! – படம் எடுத்தது விருந்தாவன், உத்திரப் பிரதேசம்.

 
சிறு வியாபாரி – தலைப்புக் கேற்ப இவர் சிறு வியாபாரி – அதாவது சிறுவன்! இளம் வயதிலேயே வியாபாரத்திற்கு வந்து விட்ட இவர் விற்பது என்ன என்று யூகிக்க முடிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். படம் எடுத்த இடம் – [G]கோவர்த்தன், உத்திரப் பிரதேசம்.மேலுள்ள படம் எடுக்கப்பட்ட இடம் – கோவர்த்தன மலையை வலம் செய்யும் பாதையில்.  கிரிவலம் பாதையில் இவர் விற்பது என்ன? கண்டுபிடிக்க முடிகிறதா பார்க்கலாம்! பதிவின் முடிவில் இதற்கான விடையைச் சொல்கிறேன். ம்ம்ம்ம்... யாருப்பா அது படிக்காம வேகமா ஸ்க்ரோல் பண்ணிட்டு போறது! ம்ம்ம்.....  பேச்சு பேச்சாதான் இருக்கணும் சொல்லிட்டேன்!என்னைப் புகைப்படம் எடுத்து “[Ch]சாய் வாலிஎன்று போடப் போகிறீர்களா? என்று கேட்ட அவருக்கு நான் சொன்ன பதில்...  நீங்கள் தேநீர் விற்பவர் என்று ஏன் உங்களை தாழ்வாக நினைத்துக் கொள்ள வேண்டும்.....  நீங்கள் ஒரு தொழிலதிபர் என்று உயர்வாக நினைக்க வேண்டும். உழைத்து முன்னேற நினைக்கும் நீங்கள் உயர்வானவர் தான்!  - இந்தப் படமும் எடுத்தது [G]கோவர்த்தன், உத்திரப் பிரதேசத்தில் தான்!என்னம்மா கண்ணு, என்னை ஏன் ஃபோட்டோ புடிக்கிற.....  என்று பார்வையால் கேட்கும் இளம் வியாபாரி!  ஹோலி என்றால் இந்த மாதிரி வண்ண வண்ணப்பொடிகள் விற்கும் கடைகள் வட இந்தியா முழுவதும் முளைத்துவிடும். இந்தப் புகைப்படம் எடுத்தது – ராதாகுண்ட் எனும் இடம்.சில மாதங்கள் முன்னர் என்னுடைய பக்கத்தில் வெளியிட்ட ‘அப்பள வியாபாரிபதிவினை படித்திருக்கலாம். அந்த பதிவிற்காக நான் எடுத்த புகைப்படம் இது. ஆனால் பதிவினில் வெளியிடாத படம்! எடுத்த இடம் – இந்தியா கேட், புது தில்லி.  அதே இந்தியா கேட் பகுதியில் சிறிய மணிகள் கோர்த்து உங்கள் பெயரை கைகளில் கட்டிக்கொள்ளும் கயிறாக செய்து விற்பனை செய்யும் ஒரு பெண்மணியின் படம் கீழே..... இவர் பற்றிய தகவல்கள் வேறொரு பதிவாக பின்னர் வெளியிடுகிறேன்!

இந்த இளைஞர்கள் விற்பது பல விதமான களிமண் பொம்மைகள். மேற்கு வங்கத்தினைச் சேர்ந்த இவர்கள் தாங்கள் தயாரித்த பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த இடம் புது தில்லியின் ஒரு கண்காட்சி.....  அதில் இருந்த பல பொம்மைகள் அழகாய் இருந்தன.  குறிப்பாக மண்பானையில் தண்ணீர் அருந்த முயலும் காக்கை! பானையின் அடியில் தண்ணீர் இருக்க, கற்களைப் போட்டு தண்ணீர் மேலே வந்ததும் அதை அருந்திய காக்கை கதை நினைவுக்கு வருகிறதா?

என்ன நண்பர்களே.....  இந்த ஞாயிறில் பகிர்ந்து கொண்ட “சிறு வியாபாரிகள்படங்கள் பிடித்திருந்ததா?  மீண்டும் அடுத்த ஞாயிறில் வேறு சில படங்களோடு உங்களைச் சந்திக்கிறேன்....

ம்...  நினைவிருக்கிறது! சிறுவன் விற்பது என்ன என்று பின்னூட்ட்த்தில் சொல்லுங்கள்.....  இரண்டாம் இளைஞர் விற்பது என்ன என்பதை இங்கேயே, இப்போதே சொல்லி விடுகிறேன் – இவர் விற்பது ஐம்பது பைசா/ஒரு ரூபாய் நாணயங்கள்.  நூறு ரூபாய் கொடுத்தால் 90/95 ரூபாய்க்கு நாணயங்கள் தருவார். கிரிவலம் வரும் பலர் இந்த நாணயங்களை வாங்கிக் கொண்டு வழியில் கை நீட்டும் பல பிச்சைக்காரர்களுக்கு தானமாக வழங்குகிறார்கள்.....

மீண்டும் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.  

54 கருத்துகள்:

 1. காசுகளைப் பார்த்ததும்... யூகம் செய்தது சரி தான்...

  களிமண் பொம்மைகள் மிகவும் அருமை...

  படங்கள் ஒவ்வொன்றும் பளிச் பளிச்... இனிமேல் கடைசி தேதிக்கு முன் மறக்காமல் அனுப்பி, போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 2. எல்லாப் படங்களுமே சுவாரஸ்யம். போட்டிக்கு அனுப்பியிருக்கலாமே வெங்கட்... கடைசி நாள் இன்னும் இருக்கிறதே என்று நினைத்து ஒத்திப் போடாமல் உடனே அனுப்பி விட்டால் மிஸ் ஆகாமல் இருக்குமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. கோவரத்தன கிரிவலப்பாதையில் விற்பது சில்லைறை காசுகள் பை.
  கிரிவலம் வரும் போது அங்கு யாசிப்பவர்களுக்கு அளிக்க சில்லறை காசுகள் என நினைக்கிறேன்.
  அந்த சிறுவன் விற்பது வத்தல்(வடகம்). அல்லது மரவள்ளி கிழங்கு வத்தல்
  என்று நினைக்கிறேன்.
  படங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   வத்தல் தான்..... :)

   நீக்கு
 4. மண் பானை. காகம் அருமையான பொம்மை. கொலுவில் வைக்கலாம்.நான் கீழே பார்க்காமல் விடை சொன்னேன்.
  பழனி கோவிலில் படி ஏறும் போது மக்கள் யாசிப்பவர்களிடம் சில்லறை காசு வாங்கி செல்வார்கள் பார்த்து இருக்கிறேன்.
  பத்ரிநாத்தில் காசு மூட்டை விற்பார்கள் அதை கோவிலில் வைத்து வணங்கி வீட்டில் வைத்துக் கொண்டால் காசுக்கு பஞ்சம் இருக்காதாம். சில நம்பிக்கைகள். ல்ட்சுமி காசும் விற்பார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   மேலதிகத் தகவல்களுக்கும் நன்றிம்மா...

   நீக்கு
 5. ”நீங்கள் தேநீர் விற்பவர் என்று ஏன் உங்களை தாழ்வாக நினைத்துக் கொள்ள வேண்டும்..... நீங்கள் ஒரு தொழிலதிபர் என்று உயர்வாக நினைக்க வேண்டும். உழைத்து முன்னேற நினைக்கும் நீங்கள் உயர்வானவர் தான்!” //

  அருமையான பதில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 6. அருமையான புகைப்படங்கள்
  ஒரு பெரிய சந்தைக்குள் போய்வந்த திருப்தியை
  ஏற்படுத்தியது.சில்லறைக் காசு என்பதை
  கண்டுபிடிக்க முடிந்தது சந்தோசமாயிருந்தது
  அருமையான விளக்கத்துடன் கூடிய
  புகைப்படங்கள் அருமை
  பகிர்வுக்கும்தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 7. வண்ணமயமான ரசனையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 10. வித்தியாசமான புகைப்படங்கள்....அருமை.கூடவே அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு... அந்த சில்லறை பொட்டலம் விற்பவரைக் கண்டுபிடிக்க முடிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   நீக்கு
 11. தமிழில் புகைப்படக் கலை அதாவது Photography in Tamil வலைப்பூவில் ஒவ்வொரு மாதமும் ஒரு தலைப்பில் போட்டி வைப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்///

  என்கிட்டே யாருமே சொல்லவே இல்லை ....எனக்கும் போட்டோ புடிக்கிறதுல ஆர்வம் தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட இப்பதான் நான் சொல்லிட்டேனே! :))) ஒவ்வொரு மாதமும் ஒரு தலைப்பில் போட்டி நடத்துகிறார்கள். கூடவே புகைப்படங்கள் எடுப்பதற்கும் ஃபோட்டோஷாப் பயன்படுத்தவும் சொல்லித் தருகிறார்கள்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கலை.....

   நீக்கு
 12. ஒவ்வொரு மாதமும் அனுப்ப நினைத்தாலும், ஏனோ அனுப்புவதில்லை! இந்த மாதமும் அதே! கடைசி தேதியான 20-03-2014 முடிந்து விட்டது.///

  கர்ர்ர்ரர்ர்ர்ர்ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ..........போட்டி முடிஞ்சப்புறம் சொன்னதுக்கு ,,,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த மாதம் முதல் வாரத்தில் PIT தளத்தினைப் பாருங்கள்.... ஏப்ரல் மாத போட்டியில் கலந்து கொண்டு பரிசுகள் பெற வாழ்த்துகள்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கலை.

   நீக்கு
 13. படங்கள் அருமை. பகிர்வு சுவாரஸ்யம். போட்டிக்கு அனுப்பியிருந்திருக்கலாமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனுப்பி இருந்திருக்கலாம்! ஏனோ அனுப்பவில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 14. எல்லாப் படங்களுமே சூப்பரோ சூப்பர் ...நல்லா எடுத்து இருக்கீங்க ...எந்த கேமரா ???செட்டிங்க்ஸ் பிரமாதம் ...மூணாவது போட்டோ ல கொஞ்சோண்டு தலைய வெட்டியாச்சி ...கண்டிப்பா அவரசதுல போட்டோ எடுக்கும் போது நுட்பமா எடுக்க முடியாது ...எல்லாமீ செம சூப்பர் .....நானும் உங்கள மாறி பெரிய ஆட்களிடமிருந்து இப்போதான் கொஞ்ச கொஞ்சம் படிச்சிகிட்டு வாறன் photography

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களது பாராட்டிற்கு நன்றி கலை......

   மூன்றாவது படம் நான் அமர்ந்திருந்த வண்டியிலிருந்து எடுத்தது - அதனால் கொஞ்சம் தவறிவிட்டது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கலை.

   நீக்கு
 15. படங்கள் அனைத்தும் அருமை. துல்லியமாக படம் பிடித்திருக்கிறீர்கள். திருமதி கலை அவர்கள் கேட்ட கேள்வியைத்தான் நானும் கேட்க விரும்புகிறேன். எந்த கேமராவில் படம் எடுத்தீர்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா....

   என்னிடம் இருப்பது Canon DSLR 600D.......

   நீக்கு
 16. இவர்களுக்கெல்லாம் நல்ல படியாக வியாபாரம் ஆகி -
  அவரவருக்கும் தேவைகள் நிறைவேற வேண்டுதலாகின்றது!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   நீக்கு
 17. சிறுவியாபாரி விற்பது சோளப் பொரி அல்லது உருளைச் சிப்ஸ்/ சரியா.?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் விற்பது கோமதிம்மா சொன்னது போல பொரித்த வடகம்/வற்றல்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு
 18. மூட்டைக்குள் இருப்பது பூரிதானே.பானிப்பூரிக்கான பூரின்னு நினைக்கிறேன். எல்லாப் படங்களும் சூப்பர் வெங்கட். நானும் இந்தத் தடவை போட்டிக்கு அனுப்பவில்லை. இந்த ஊரில் சின்ன வியாபாரிக்கு எங்க போவேன். சாய்வாலியினால் எத்தனை பேருக்குத் தாகம் தீர்கிறது. அருமையான பதில் சொன்னீர்கள். வாழ்த்துகள் வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லைம்மா.... இது பொரித்த வடாம்/வற்றல்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   நீக்கு
 19. அழகான படங்கள்! போட்டியில் கலந்து கொண்டிருந்தால் பரிசு வென்றிருக்கலாம் என்று தோன்றுகிறது! வாழ்த்துக்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.....

   நீக்கு
 20. திறமை வாய்ந்த உழைப்பாளிகளின் படங்கள் மனத்தைக் கவர்ந்து செல்கிறது !
  அருமையான படப் பிடிப்பிற்கும் படைப்பிற்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
  சகோதரா த.ம 9

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   நீக்கு
 21. எல்லாப் படங்களுமே அருமை! அதில் நீங்கள் குறிப்பிடிருந்த இந்த வரிகள் "”நீங்கள் தேநீர் விற்பவர் என்று ஏன் உங்களை தாழ்வாக நினைத்துக் கொள்ள வேண்டும்..... நீங்கள் ஒரு தொழிலதிபர் என்று உயர்வாக நினைக்க வேண்டும். உழைத்து முன்னேற நினைக்கும் நீங்கள் உயர்வானவர் தான்!"

  மிக உன்னதமான வரிகள்! நாங்கள் தங்களைத் தாழ்வாக நினைக்கும் இது போன்ற வியாபரிகளிடம், அவர்களிடம் மட்டுமல்ல வீட்டிற்கு உதவி செய்ய வரும் பெண்களிடமும், ஆண்களிடமும் கூட சொல்லும் வரிகள்! மிகவும் சந்தோஷமாக இருந்தது அதை வாசிக்கும் போது!

  இறுதித் தேதிக்குள் போட்டிக்கு அனுப்பி விடுங்கள் படங்களை!

  நாணயம் கண்டுபிடிக்க முடிந்தது! ஆனால் அந்த மூட்டைக்குள் இருப்பது ஜவ்வரிசி மாவில் செய்யப்படும் ஃப்ரைஅம்ஸ் என்று சொல்லப்படும் ஒருவகை வத்தல்கள் என்பது அனுமானம்! சரியா?

  வாழ்த்துக்கள் போட்டியில் கலந்து கொள்ள!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 22. போட்டித் தேதி முடிந்து விட்டது போல உள்ளஹ்டே! நீங்கள் அனுப்பவில்லையா? நல்ல அழகான படங்கள்! நீங்கள் அனுப்பியிருக்கலாமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!.

   போட்டி தேடி முடிந்து விட்டது. நான் அனுப்பவில்லை!

   நீக்கு
 23. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 24. சிறு வியாபாரிகளுக்கான இவ்வளவு படங்களை வைத்துக்கொண்டு கொஞ்சம் முனைந்து அனுப்பியிருக்கலாமே ! படங்கள் எல்லாமும் சூப்பரா வந்திருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனுப்பியிருக்கலாம்... :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   நீக்கு
 25. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 26. இவ்வளவு பேரையும் புகைப்பிடித்திருக்கிறீர்களா? பாராட்டுக்கள்.
  ஒவ்வொரு புகைப்படத்தைப் பற்றிய விளக்கமும் அருமை.
  வாழ்த்துக்கள்.
  உங்களிடம் தான் நான் புகைப்படம் எடுப்பதைப் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா.. புகைப்படம் எடுப்பதில் நான் கற்றது கைமண் அளவில் கால் பகுதி மட்டுமே! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....