ஞாயிறு, 30 மார்ச், 2014

பூப்பூவாய் பூத்திருக்கு....
பூக்களில் தான் எத்தனை வகைகள்! பூக்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். மனதுக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்போது ஏதோ ஒரு பூங்காவிற்குச் சென்று அங்கிருக்கும் பூக்களைப் பார்த்தாலே மகிழ்ச்சி பொங்கும் என நினைக்கிறேன்!பூக்களைப் பற்றி நினைக்கும் போது சில வருடங்களுக்கு முன்னர் படித்த ஒரு கவிதை நினைவுக்கு வர, அதைத் தேடினேன். பூக்களைப் பார்க்கு முன்னர் அந்த கவிதையைப் பார்க்கலாமா?

செடியில் பூக்கும் சிலபூக்கள்
மரத்தில் பூக்கும் சிலபூக்கள்
கொடியில் பூக்கும் சிலபூக்கள்
கொஞ்சும் அழகாய் இப்பூக்கள்!

நீரில் பூக்கும் சிலபூக்கள்
நிலத்தில் பூக்கும் சிலபூக்கள்
நாரில் இணைக்கக் கதம்பமென
நாளும் சிரிக்கும் இப்பூக்கள்!

காலையில் பூக்கும் சிலபூக்கள்
கண்ணைப் பறிக்கும் சிலபூக்கள்
மாலை அந்தி இரவினிலே
மலரும் மயக்கும் சிலபூக்கள்!

வெண்மை நிறத்தில் சிலபூக்கள்
வண்ண வண்ணமாய் சிலபூக்கள்
எண்ணம் தன்னை ஈர்க்கின்ற
எழிலின் வடிவாய் சிலபூக்கள்!

வாச மின்றிச் சிலபூக்கள்
வாசம் தூக்கும் சிலபூக்கள்
பூசை செய்ய சிலபூக்கள்
பிணத்தின் மாலையாய் சிலபூக்கள்!

வகைவகைப் பூக்கள் மலர்ந்திருக்கும்
வையம் முழுதும் மணந்திருக்கும்
தொகைதொகை தொகையாய் பலருக்கும்
வாழ்வை யளிக்கும் இப்பூக்கள்!

இந்தக் கவிதையினை எழுதியவர் வெற்றிப்பேரொளி!


கவிதையை ரசித்தீர்களா? இப்போது இயற்கையின் கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்!


யாருப்பா அது பிங்க் கலரு சிங்குச்சான்னு பாடறது?


’எனக்குள்ளும் வேறு வண்ணமுண்டு.... 
அதை உன்னிடம் சொல்வதெப்போ?


’பெரிசானதும் நாங்க எப்படி இருப்போம்னு பார்க்க வந்தோம்’- சொல்லாமல் சொல்கிறதோ அந்த மொட்டுக்கள்?
 ’நடுவில் என்னை அடித்தது யார்? 
பாருங்க கருரத்தம் கட்டிக் கொண்டது போலாகி விட்டது!’


’கருப்பு சிவப்புன்னு நினைச்சுடாதீங்க....
தேர்தல் சமயத்தில் பலருக்கு எல்லாமே கட்சிக் கொடி மாதிரி தோணுது!’


 ’நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க!’
ஜோடிப் பொருத்தம் சரியா இருக்கா?


’வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு....”


’அப்படி என்ன எனக்கு அதிக வயசாயிடுச்சு
எனக்கு கையில குச்சி கொடுத்துட்டீங்களே ராசா?’
 


’ஹலோ... உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லட்டா?
எனக்கு வெல்வெட் மேனி’


 ’எனக்கு கொஞ்சம் வெட்கம் அதிகம்! 
அதான் தலை குனிந்து நிக்கறேன்!


என்ன நண்பர்களே, இந்த வாரம் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களை ரசித்தீர்களா? அடுத்த ஞாயிறன்று வேறு சில புகைப்படங்களைப் பார்க்கலாம்.மீண்டும் சந்திக்கும் வரை....நட்புடன்.....வெங்கட்.

புது தில்லி.


62 கருத்துகள்:

 1. அற்புதமான பூக்களுடன் உங்களின் கருத்துகளும் அருமை...

  வெற்றிப்பேரொளி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 2. மலர்களைப் போன்றே உங்களின் கமெண்ட்டும் அருமை !
  த .ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தமிழ் மணம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 5. படத்துக்கு பொருத்தமான கேப்சன் ரசிக்கவைகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   நீக்கு
 6. வெற்றிப்பேரொளி எழுதிய‌ கவிதையும் நீங்கள் எடுத்த‌ புகைப்படங்களும் அருமை வெங்கட்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   நீக்கு
 7. பூக்கள் பாடல். மற்றும் பூக்கள் படங்கள் எல்லாம் மனதை கவர்ந்து விட்டது.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 8. பார்த்துக்கொண்டே இருக்கத்தோன்றும் கொள்ளை அழகு மலர்கள்... ரசிக்கவைக்கும் குறும்பான கமெண்டுகள். பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   நீக்கு
 9. டாலியாப் பூக்கள் கொள்ளை அழகு! படம் 1 முதல் 8)

  எனக்குமிப்போ தில்லி, சண்டிகர் நினைவு வந்துருச்சு:-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   டேலியாவில் தான் எத்தனை எத்தனை வண்ணங்கள். பார்த்துக் கொண்டே இருக்கலாம்!

   நீக்கு
 10. அழகிய பூக்களும் - கவிதை வரிகளும்!..
  அருமை... இனிமை!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ....

   எனக்குப் பிடித்தவை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 11. என்ன ஒரு அழகு! சலிக்காத, திகட்டாத ஒரு அழகு! இயற்கையில் என்ன நிறம் இருந்தாலும், கண்ணிற்குக் குளிர்ச்சியாகத்தான் இருக்கின்றது! அழகு மலர்கள்! புகைப்படங்கள் அருமை! அதிலும் தங்கள் கமென்ட்ஸ் பளிச்!

  பகர்வுக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான்... பூக்களின் அழகு - சலிக்காத, திகட்டாத அழகு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 12. கவிதையும், இயற்கையின் கவிதையும் மிக அருமை. ரசித்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் ரசித்தவற்றை நீங்களும் ரசித்தமைக்கு நன்றி ரீகன் ஜோன்ஸ்.

   நீக்கு
 13. என் மனத்திலும் இன்பப் பூக்கள் இன்று பூத்துக் குலுங்குகின்றது
  அவை வாடாமல் வதங்காமல் வாழ்க என்றே வாழ்த்துரைக்க
  வாருங்கள் சகோதரா .அருமையான படைபிற்குப் பாராட்டுக்களும்
  வாழ்த்துக்களும் த .ம.7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் மனதிலும் இன்பப் பூக்கள் பூத்துக் குலுங்கினவா..... மிக்க மகிழ்ச்சி அம்பாளடியாள்....

   நீக்கு
 14. பூக்களும் அழகு முதல்க்கவிதையும் மிக அழகு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூக்களையும் கவிதையையும் ரசித்தமைக்கு நன்றி தனிமரம் நேசன்...

   நீக்கு
 15. சிறு வயதில் பார்த்து வைத்துக் கொள்ள ஆசைப்பட்ட ஊட்டி டேலியா பூக்கள் ... அத்தனையும் அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறுவயதில் வைத்துக் கொள்ல ஆசைப்பட்ட பூக்களா இவை! உங்கள் நினைவுகளை மீட்டி விட்டது போலும் இந்த பூக்கள்...

   தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 17. அழகு பூக்களின் புகைப்படங்கள் எல்லாம் வெங்கட் ஃபோடோக்ராஃபியா.?இதந்தரும் மலர்கள் அனுபவித்து எழுதிய கவிதை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் GMB சார் எல்லாம் நான் எடுத்த புகைப்படங்கள் தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 18. இயற்கையின் கவிதை ரச்னை மிக்க அழகான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 19. மலர்களும் அதன் வண்ணங்களும் கருத்தைக் கவருகின்றன. மிக அழகாகப் படமாக்கியிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 20. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 21. கண்ணுக்கு அழகாக வண்ணப்பூக்கள். மென்மையில் மேன்மை காட்டுகின்றன. நன்றி வெங்கட். அற்புதமான படங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மென்மையில் மேன்மை.... இதுவே கவிதை மாதிரி தான் இருக்கு வல்லிம்மா....

   தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 22. கண்கவரும் பூக்கள் களிப்படைய வைத்தன! நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் எடுத்த புகைப்படங்கள் உங்களை களிப்படையச் செய்ததில் எனக்கும் மகிழ்ச்சி சேஷாத்ரி.

   நீக்கு
 23. கவிதையும் அழகு, புகைப்படம் எழுதிய கவிதையும் அழகு. பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புகைப்படம் எழுதிய கவிதை.... :) ரசித்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 24. http://thulasidhalam.blogspot.co.nz/2009/01/dahlia.html

  உங்கள் பார்வைக்கு:-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களும் டேலியாவின் கதையும் நன்றாக இருந்தது டீச்சர். இணைப்பு இங்கே கொடுத்தமைக்கு நன்றி.

   நீக்கு
 25. இந்த டாலியா பூக்களைப் பார்த்ததும் நம் ஊர் குட்டிப்பிள்ளைகளின்(ஒரு காலத்தில் நாங்களும்) பின்னலில் இருந்ததுதான் நினைவுக்கு வருகிறது.

  கவிதையும், பூக்களும், பூக்களுக்கான கமெண்டுகளும் ரசிக்கும்படி உள்ளன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு பெரிய் டேலியா பூவை தலையில் சூடிக்கொண்டால் தலையே மறைந்து விடுமோ என எனக்கு ஒரு டவுட்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   நீக்கு
 26. அச்சச்சோ......... இது தலையில் சூடும் ரகம் இல்லை. பூவுக்குள் ஒளிஞ்சிருக்கும் பூச்சி earwig, பெயருக்கேத்தமாதிரி காதுக்குள் நுழையும் அபாயம் இருக்கு:(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யார் யாரெல்லாம் தலையில் வைச்சுக்க ஆசைப்பட்டீங்களோ அவங்கல்லாம் துளசி டீச்சர் சொன்ன விஷயத்தை நோட் பண்ணிக்கோங்க!

   காதுக்குள்ள பூச்சி போனா அவ்வளவு தான்! :(

   நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 27. கவிதை அருமை..உங்கள் படங்கள் மிக அருமை..அதற்குக் கொடுத்த உரைகளும் கலக்கல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   நீக்கு
 28. படங்களும், வர்ணனைகளும், ம்ம்ம்ம்! ஃபுல் ஃபார்ம்-ல் இருக்கிற மாதிரி தெரியுதே!

  (வெல்வெட் மேனியைத் தொட்டுப் பார்க்க, ஒரு முள்ளன் இல்லை வில்லன் வர்றாண்டோய்!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா..... இந்தப் படம் எடுக்கும்போது வில்லன் கூடவே ஒரு கூட்டாளியும் இருந்தாரு டோய்... அவரு பேரு பத்மநாபன் டோய்... :)

   என்னை விட அதிக ஃபார்மல இருப்பது எப்பவும் நீங்க தானே பத்மநாபன் அண்ணாச்சி....

   நீக்கு
 29. படங்களையும் ரசித்தேன். கவிதையையும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 30. Poopoova Pooththirukku... Boomiyile Ayiram Poo ... Poovile Sirandha Poo Yenna Poo ? Yendra paadal varigal ninaivirku varugiradhu. Kannukku kulirchchiyaga irundhadhu.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த பாடல் கூட நல்ல பாடல்... ஆனால் எனக்கு அது ஏனோ நினைவிற்கு வரவில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 31. உங்க உஷா சித்தி பின்னூட்டம் பார்த்ததும் பாடலோடு இணைந்த ஒரு சம்பவம் கொசுவத்தி.

  நாங்கள் (நானும்தோழிகளும்) ஊர் சுத்திவிட்டு ஹாஸ்டலுக்கு நடந்து வந்துகிட்டு இருக்கோம். அப்ப ஆட்டோவெல்லாம் கிடையாது. வெறும் மஞ்சள் டாக்ஸி மட்டுமே. அதுலே எல்லாம் வரக் காசு நஹி ஒல்லிக்குச்சி உடம்பு என்பதால் நடை ஒரு பிரச்சனையே இல்லை:-)

  எங்க பின்னால் வரும் ஒருத்தன் எங்களைக் கிண்டல்செய்தபடியே.... பாடிக்கிட்டு வர்றான்.

  "பூப்பூவாய் பூத்திருக்கு.பூமியிலேஆயிரம் பூ. பூவிலே சிறந்த பூ என்ன பூ?"

  'செருப்பூ' ன்னு எசப்பாட்டு பாடினேன். எடுத்தான் ஓட்டம்:-)))))
  .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன பூ... செருப்பூ :) இது சூப்பரப்பூ!

   இப்படி எல்லா பெண்களும் தைரியமாக இருந்துவிட்டால் நல்லது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....