சென்ற
ஞாயிறன்று மதுபனி [MADHUBANI] ஓவியங்கள் என்ற
தலைப்பில் பீஹார் மாநிலத்தின் ஓவியங்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டிருந்தது உங்களுக்கு
நினைவிருக்கலாம். இந்த ஞாயிறில் அதே
கண்காட்சியில் ரசித்த சில கோண்ட் ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு....
கோண்ட்
ஓவியங்கள் மத்தியப் பிரதேசம் மற்றும் தற்போதைய சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும்
பழங்குடி மக்கள் தங்களது வீடுகளின் சுவர்களிலும், தரைகளிலும் வரைந்து
வைப்பது. காலப் போக்கில் இந்த ஓவியங்களை
காகிதத்திலும் வரைய ஆரம்பித்து விட்டார்கள். இவர்களும் திராவிடர்கள் வழியைச்
சேர்ந்தவர்கள் என்றும் மலைப்பிரதேசங்களில் வசிப்பவர்கள் என்றும் சொல்கிறார்கள்.
பொதுவாக
இந்த வகை ஓவியங்கள் நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்டவை. ஒரு A3 அளவு கொண்ட
ஓவியத்தினை வரைய ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை ஆகும் என்கிறார் தில்லியில் நடந்த
கண்காட்சியில் தான் வரைந்த ஓவியங்களை கண்காட்சிக்கு வைத்திருந்த ரமேஷ் டேகாம் [RAMESH
TEKAM]. சிறிய அளவு [A4/2] ஓவியத்திற்கு
ரூபாய் 400/- என விலை சொல்கிறார். சில
பெரிய அளவு ஓவியங்கள் 10000/- ரூபாய் அளவிற்கு விற்கிறோம் எனச் சொன்ன இவர், கிட்டத்தட்ட
பதினைந்து நாட்களாக கண்காட்சியில் இருந்தாலும் அத்தனை விற்பனை இல்லை என்று கொஞ்சம்
மனக் கஷ்டத்தோடு சொன்னார் – “கடைவிரித்தேன் கொள்வாரில்லை!” என்பது தான்
நினைவிற்கு வந்தது.
ஓவியர் திரு ரமேஷ் டேகாம்.
திரு ரமேஷ் அவர்கள் மத்தியப் பிரதேசத்தின் போபால்
நகரில் இருக்கிறார். அவரது முகவரி கீழே:
SHRI RAMESH TEKAM,
HOUSE NO.689/2, PREM NAGAR,
WARD NO.27, BANGANGA NORTH
T.T. NAGAR, BHOPAL [MADHYA PRADESH]
MOBILE: 0-9826016884.
பொதுவாகவே விலங்குகள், இயற்கைக் காட்சிகள், கடவுளின்
படங்கள் என வரைகிறார்கள். சில படங்களைப் பார்க்கும்போதே அதிலுள்ள நுணுக்கமான
வேலைகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. நான்
ரசித்த ஓவியங்களில் சிலவற்றை உங்கள் ரசிப்பிற்கு இங்கே பகிர்ந்திருக்கிறேன். ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்......
என்ன நண்பர்களே இந்த ஞாயிறின் பகிர்வினை ரசித்தீர்களா?
மீண்டும் அடுத்த ஞாயிறன்று வேறு சில படங்களைப் பார்க்கலாம்!
தொடர்ந்து சந்திப்போம்.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
திரு ரமேஷ் அவர்களின் கோண்ட் ஓவியம் மிக அழகு.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....
நீக்குஅருமையான ஓவியங்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குஅழகான ஓவியங்கள்!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கோவை ஆவி.
நீக்குரமேஷ் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா..
நீக்குஒவ்வொன்றும் எவ்வளவு நுணுக்கம்...!
பதிலளிநீக்குரமேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஓவியரின் கையெழுத்தைப் பார்த்துதான் மேல் பக்கத்தை கணிக்க முடியும் ,அப்படிப்பட்ட மாடர்ன் ஆர்ட் ஓவியங்கள் வேண்டுமானால் லட்சங்களில் விலைபோகும் .பாவம் gont ஓவிய கலைஞர் !
பதிலளிநீக்குத ம +1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குமிக அருமையான ஓவியங்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்.....
நீக்குஎன்னை பொறுத்தவரை இந்த ஒவியங்கள் சின்ன பிள்ளைகள் வரைந்த ஒவியம் போலத்தான் இருக்கிறது இதற்கு அவர் வைத்திருக்கும் விலை சற்று அதிகம்தான் அதுதான் விலை போகாமல் இருக்கிறது..
பதிலளிநீக்குஇந்த வகை ஓவியங்களில் நுணுக்கமான வேலைப்பாடுகள் அதிகம். கூடவே இயற்கை வர்ணங்களை பயன்படுத்தி இருக்கிறார்கள் - இயற்கை வர்ணங்களின் விலையும் அதிகம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்..
நுணுக்கமான வேலைகள் பிரமிக்க வைக்கின்றன
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குGond ஓவியங்கள் பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும், வரைவதற்கு மிக நுணுக்கமானத் திறமை வேண்டும்! அதைவிடப் பொறுமை வேண்டும்!
பதிலளிநீக்குமிக அழகான ஓவியங்கள்! திரு. ரமேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!
பகிர்வுக்கு மிக்க நன்றி!
த.ம.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
நீக்குஓவியங்கள் அனைத்தும் அசத்துகின்றன. ஓவியருக்குப் பாராட்டுகள். பகிர்ந்தமைக்கு நன்றி வெங்கட்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.
நீக்குஅழகான, அருமையான ஓவியங்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குஒரிசாவிலும் இவ்வகை ஓவியங்கள் உண்டு எனக் கேள்வி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நீக்குநானும் பிரமித்து தான் போனேன். ஒவ்வொரு ஓவியத்திலும் எத்தனை நுணுக்கங்கள். இந்தக் கலை அழியாமல் இருக்க வேண்டுமே என்கிற ஆதங்கம் தான் மேலோங்குகிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!
நீக்குஅழகான ஓவியங்கள்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஃபோட்டாவில கமல்ஹாசன் மாதிரி இருக்கீங்க.
பதிலளிநீக்குஹலோ பெயரிலி.....
நீக்குஇதை மட்டும் கமலஹாசன் படிச்சா நொந்துடுவார்! :))
ஏன் இந்த குசும்பு!
தங்களது வருகைக்கு நன்றி!
ஆம். சுவர்களிலும் தரைகளிலும் வரையப்பட்டு வந்தவை. காகிதத்திலும் இப்போது என்பது புதிய தகவல். அற்புதமாக வரைந்திருக்கிறார். எதிர்பார்த்தபடி விற்பனையாமல் போவது வருத்தமான விஷயமே.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குகுண்டுகுண்டு கண்களுடன் ஓவியங்கள் அனைத்தும் அருமை. அதிலும் குட்டி மானுடன் உள்ள கலைமான், பறவைகள் நிரம்பிய மரங்கள் என எல்லாமும் அழகு. என்னவென்றே புரியாத மாடர்ன் ஓவியங்கள் எல்லாம் மில்லியன் மில்லியன் விலைக்குப் போகும்போது .......... திரு ரமேஷ் டேகாமின் திறமை வியக்க வைக்கிறது. பகிர்ந்துகொண்டதற்கு நன்றிங்க.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.
நீக்குமிகச் சிறந்த பதிவு. சத்தீஸ்கர், மகாராஷ்ட்ரா, ஒரிசா, மத்திய பிரதேசத்தில் வியாபித்துள்ள தம் தாயகத்தை மீட்க போராடி வரும் திராவிட பழங்குடி இனம் கோண்டுகள் (குன்றர்கள்).. தமிழோடு மிக நெருக்கம் கொண்ட கோண்டுகளின் மிக பிரபலமான கலைப்படைப்பு இந்த வகை ஓவியங்கள்.. ராய்ப்பூரில் ஒருமுறை காண வாய்ப்புக் கிட்டியிருந்தது. தனித்துவமானவை..!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இக்பால் செல்வன்.
நீக்குசற்றே இடைவெளிக்குப் பிறகு தங்கள் வருகை.... மகிழ்ச்சி.
எந்தப் படமும் தாங்கள் எடுத்தால், அது மேலும் பொலிவு பெறுகிறது வெங்கட்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
நீக்குOviyangalai paarththukkonde irukkalam pola irukkiradhu. Ramesh avargalukku vaazhththukkal.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குநுணுக்கமான அழகான ஓவியங்கள்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் மேடம்.
நீக்குஅற்புதமான ஒவியங்கள்! பகிர்ந்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.
நீக்குதிரு ரமேஷ் அவர்களின் கோண்ட் ஓவியம் மிக அழகு.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.
நீக்குமிகவும் அழகான ஓவியங்கள். நீங்கள் மட்டும் ரசிக்கவில்லை, நாங்களும் தங்களின் இந்த பதிவின் மூலம் கண்டு, களித்து, ரசித்தோம்.
பதிலளிநீக்குபகிர்ந்தமைக்கு நன்றி.
இந்த பகிர்வின் மூலம் கோண்ட் ஓவியங்களை பலரும் ரசிக்க முடிந்ததில் எனக்கும் மகிழ்ச்சி சொக்கன் சுப்ரமணியன்.
பதிலளிநீக்கு