ஞாயிறு, 2 மார்ச், 2014

திருப்பராய்த்துறை – சில சிற்பங்கள்
சமீபத்தில் தமிழகம் வந்திருந்தபோது, வழக்கம்போல் திருப்பராய்த்துறை சென்றேன். தமிழகம் வரும்போதெல்லாம் திருப்பராய்த்துறை செல்லாது வருவதில்லை – அங்கே எனது பெரியம்மா இருப்பதாலும், அந்த ஊர் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதாலும்! அப்படிச் செல்லும்போது அங்கே குடிகொண்டிருக்கும் பராய்த்துறை நாதரின் ஆலயத்திற்குச் செல்வதும் தவறாது நடக்கும் ஒரு விஷயம்.

பராய்த்துறை நாதரின் ஆலயத்தினுள் பல சிற்பங்கள் உண்டு. வெளிப்புறத்தில் நிறைய புகைப்படங்கள் எடுத்திருந்தாலும், கோவிலுக்குள் இருக்கும் சிற்பங்களையோ, அல்லது கடவுள் சிலைகளையோ இதுவரை புகைப்படம் எடுத்ததில்லை. இம்முறை பிரகாரத்தில் சுற்றி வரும்போது ஒரு தக்ஷிணாமூர்த்தி சிலையைக் காண்பித்து பெரியம்மா, இந்த சிலையை புகைப்படம் எடுத்துக்கொள்என்று சொன்னார்.  புகைப்படம் எடுக்கலாமா என்று கேட்டதற்கு, கர்ப்பக்கிரகத்தினுள் இருக்கும் மூலவர் தவிர மற்ற எல்லா சிலைகளையும் இங்கே புகைப்படம் எடுக்கிறார்கள்என்று சொன்ன பிறகு கோவிலில் இருந்த பல சிற்பங்களைப் புகைப்படம் எடுத்தேன்.

பராய்த்துறைநாதர் கோவிலில் இருக்கும் சில சிற்பங்கள் இன்றைய ஞாயிறில் புகைப்படப் பகிர்வாக இதோ.....


தக்ஷிணாமூர்த்தி – குருபகவான்


நீ பாதி நான் பாதி கண்ணே – அர்த்தநாரீஸ்வரர்


நான் ஒரு படைப்பாளி – பிரம்மா


ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்.....


நர்த்தன விநாயகர்


யோகாசனம் – அற்புதமான கலை – அதன் சிலை!


இவர் தான் பதஞ்சலி முனிவரோ?


கோவிலின் மேற்கூரையில் ராசி சக்கரம்....


இடது கால் தலை வரை தூக்கி ஒரு நடனம்.....  


கோவில் வாசலில் உள்ள ஒரு பெண்ணின் சிற்பம்......


இத்தனை இடமிருந்தும் கோவிலுக்குள் உனக்கு இடமில்லையா.....  வேப்ப மரத்தடியில் இருந்த சிலை.....

என்ன நண்பர்களே, இந்த வாரம் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களை ரசித்தீர்களா?  மீண்டும் அடுத்த வாரம் மேலும் சில புகைப்படங்களைப் பார்க்கலாம்.

மீண்டும் சந்திக்கும் வரை.....

நட்புடன்....

வெங்கட்.
புது தில்லி.


26 கருத்துகள்:

 1. அனைத்தும் அருமை - உங்களின் குறிப்புகளுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 2. புகைப்படங்கள் அருமை. முப்பரிமாண படங்கள் போல் இருந்தது. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 3. தனியாக வெளியில் நிற்பதால் கவனம் அதிகம் கிடைக்கிறது பாருங்கள்!

  எல்லாப் படங்களையும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. அழகான சிற்பங்கள். அருமையாகப் படமாக்கியுள்ளீர்கள்.

  நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 5. அனைத்து சிற்பங்களும் அழகாக இருக்கிறது. அதை படமாக்கி குறிப்புகளோடு தந்த விதம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 6. இவை தான் நீங்க அன்று குறிப்பிட்ட புகைப்படங்களா.. அருமை அருமை அருமை.. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஆவி. ரசித்தமைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   நீக்கு
 7. இவர் தான் பதஞ்சலி முனிவரோ?

  பதஞ்சலி முனிவர் பாம்பின் உடலும் மனித தலையும் கொண்டு இருப்பாரே..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதனால் தான் கேள்விக்குறி.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 8. அழகான தமிழ்க் கைவண்ணங்கள். அமைதியே உருவான தெட்ஷணாமூர்த்தி, அழகிய புன்னகையுடன் அர்த்தநாரீஸ்வரர்,சாந்தப் பொலிவுடன் பிரமா,கருணைப் பார்வையுடன் துர்க்கா, உக்கிரமான நோக்குடன் தாண்டவமாடும் தெய்வம், மிக நளினமான பார்வையுடன் வேம்படி அம்மன்
  அற்புதம்.
  நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யோகன் பாரிஸ்.....

   நீக்கு
 9. அற்புதம்! அற்புதம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 11. ஏற்கனவே இந்த ஊரைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ளதாக நினைவு. இன்று காலை சிறுகமணியில் உள்ள உறவினர் வீட்டு கிரகபிரவேச நிகழ்ச்சிக்கு சென்று வந்தேன். பஸ்ஸில் செல்லும் போது வழியில் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண குடில் வாசலில் இருந்த விவேகானந்தர், ராமகிருஷ்ணர் சிலைகளைக் கண்டேன். இவற்றை போட்டோ எடுத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்த போது உங்கள் ஞாபகம்தான் வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   அங்கே இருக்கும் சிலைகள் மிக அருமையாக இருக்கும். ஆனால் இதுவரை ஏனோ அவற்றை காமெராவில் சிறைபிடித்ததில்லை. அடுத்த பயணத்தின் போது எடுத்துவிடலாம்!

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி......

   நீக்கு
 13. பாடலுக்கு அர்த்த நாரீஸ்வரர் ரொம்ப பொருத்தம் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....