எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, March 31, 2014

நைனிதால் – [kh]குர்பாதால்ஏரிகள் நகரம் – பகுதி 6


ஏரிகள் நகரம் தொடரின் பகுதி ஐந்தினை முடிக்கும்போது கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.


நாங்கள் தற்கொலை முனைக்கு வந்து சில நிமிடங்கள் ஆகிவிடவே, எங்கள் ஓட்டுனர் மத்லூப் எங்களைத் தேடிக் கொண்டு அங்கே வந்துவிட்டார். ஒரு வேளை பணம் கொடுக்காது நாங்களும் காணாமல் போய்விடுவோம் என்று எண்ணியிருப்பாரோ?  பயப்படாதே மத்லூப், நாங்கள் இங்கே விழப்போவதில்லை! கொஞ்சம் இயற்கையையும், மக்களின் செயற்கையான செயல்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம்எனச் சொல்லி அங்கிருந்து நகர்ந்தோம்.அடுத்ததாய் நாம் பார்க்கப் போகும் இடத்திற்கும் குதிரைக்கும் சம்பந்தம் உண்டு. அது என்ன சம்பந்தம்? அடுத்த பகுதியில் பார்க்கலாமா?  


தற்கொலை முனையிலிருந்து புறப்பட்ட எங்களது பயணம் அடுத்ததாய் நின்றது ஒரு மலை முகட்டில். இங்கே என்ன இருக்கிறது என்று ஓட்டுனர் மத்லூபிடம் கேட்க, மேலேயிருந்து ஒரு அற்புதமான இடத்தினை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள் என்று சொன்னார். அது என்ன இடம் என்று பார்க்கலாமா?

 ’என் பெயர் மோகனாங்கி...  அட இல்லைப்பா வேற எதுவோ நினைப்புல சொல்லிட்டேன்! - நான் தான் [KH]குர்பா தால்’

சில அடிகள் நடந்தால் சில மரங்களும், மரங்களின் ஊடே பார்த்தால் ஒரு சிறிய ஊரும் தெரிகிறது. அந்த ஊரின் பெயர் குர்பாதால் [khurpa tal]. இந்த தொடரின் முதல் பகுதியில் சொன்னது போல தால் என்ற ஹிந்தி சொல்லிற்கு ஏரி என்ற பெயர். நைனிதால் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நிறையவே சின்னச் சின்ன ஏரிகள். அப்படி ஒரு ஏரி தான் குர்பா தால். மேலிருந்து பார்க்கும்போது குதிரைக் குளம்பு போன்ற வடிவத்தில் இருப்பதால் இந்த ஏரிக்கும் அது இருக்கும் சிறு கிராமத்திற்கும் குர்பாதால் என்று பெயர் எனச் சிலர் சொல்கிறார்கள். 

 ’குதிரைக் குளம்பு என்பதை விட TROWEL போல இருக்கிறது என்பது தான் பொருத்தமா இருக்கும்!’

ஹிந்தி மொழியில் குர்பா என்றால் சிறிய மண்வெட்டி! இந்த குர்பா தால் நைனிதால் நகரிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. முன்பு இங்கே நிறைய இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்கள் நடந்ததாகவும், அவையெல்லாம் இப்போது குறைந்து காய்கறித் தோட்டங்கள் அதிக அளவில் வந்து விட்டதாகவும் ஓட்டுனர் சொல்லிக் கொண்டிருந்தார். மிக அழகிய கிராமம் என்று சொன்னாலும் நாங்கள் மேலேயிருந்து அதன் அழகினைப் பார்த்ததோடு சரி. தனிமை விரும்பிகள் மற்றும் இயற்கை விரும்பிகள் அங்கே சென்று கிராமிய சூழலில் இருக்கலாம்!

 ”அந்தா தெரியுதே ரோடு.... அது மேலே போனா குர்பா தால் வந்துடும்!”

மேலே இருந்து பார்த்தபோது அவ்வளவு அழகான சூழலாக இருந்தது. அங்கே ஒரு மரம். ஆரம்பிக்கும்போதே நான்கு கிளைகளோடு இருப்பது போல தோன்றியது. அந்த கிளைகளைப் பிடித்துக்கொண்டு சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். சில மணித்துளிகள் அங்கிருந்தோம். அவ்விடத்தினை விட்டு நகர மனதில்லை. இருந்தாலும் இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே என்பதால் வெளியே வந்தோம்.


”என்ன குற்றம் செய்தோம் கொற்றவனே? 
எங்களை இப்படி தூக்கிலிட்டது எதற்காக?”

வாசலில் சில சிறிய கடைகள் – ஒரு டேபிள் சில குப்பிகள், பாத்திரங்கள் – அவ்வளவு தான் கடை! சுடச்சுட MAGGIE, மோமோஸ் மற்றும் தேநீர் தயாரித்துக் கொடுக்கும் கடைகள் இருந்தன. குளிர் மிகவும் அதிகமாக இருந்ததால், கொஞ்சம் சூடாக தேநீர் அருந்தினால் நன்றாக இருக்கும் என நண்பர்கள் அனைவரும் ஒரு சேரக் கருதவே ஐந்து பேருக்கும் [அட ஐந்தாவது எங்கள் ஓட்டுனர் மத்லூப் தான்] தேநீர் தயாரிக்கச் சொன்னோம். இஞ்சி, ஏலக்காய் போட்டு அவர் தயாரித்த தேநீர் மிகவும் சுவையாகவே இருந்தது.

 ”யாரப்பா அது? எங்களுக்கு நடுவே எங்களைப் போலவே நிற்பது?”

ஐந்து தேநீருக்கு விலை 75 ரூபாய். என்னது விலை அதிகம் என்று தோன்றுகிறதா? அங்கே இருந்த குளிருக்கு இதமாக இருந்தது அந்த சூடான தேநீர். எங்களுடன் வந்த நண்பர் ஒருவர் எனக்கு குளிராது. அதனால் தொப்பி, கையுறை எல்லாம் போட்டுக் கொள்ள மாட்டேன்என்று சொல்லிக் கொண்டிருந்தார். அங்கே நின்றபோது கொஞ்சம் குளிர் அதிகம் என்பதைப் புரிந்து கொண்டு விட்டார்.  தேநீர் நிச்சயம் தேவை என்று முதலில் உணர்ந்ததும், சொன்னதும் அவர் தான்!


 ”கோப்பையில் இருப்பது தேநீர் தானே? என்று சந்தேகத்துடன் கேட்பவர் யார்?”

ஆகவே ஐந்து தேநீருக்கான விலை அதிகமில்லை ஜென்டில்மேன் என்று சொல்லி, பணம் கொடுத்துவிட்டு தேநீர் தயாரித்துக் கொடுத்த அந்த நல்லுள்ளத்திற்கு நன்றியையும் சொல்லி புறப்பட்டோம்!  தேநீர் தயாரித்தவருக்கு தன் சொத்தையே எழுதித் தரத் தயார் என்று சொன்னார் மேலே சொன்ன ஆசாமி!

 ”இந்த இடத்தினைப் பார்த்தபோது ‘உள்ளம் கொள்ளை போகுதே’ எனப் பாடத் தோன்றியது. பக்கத்தில் குதிரை/கழுதை இருந்ததால் பாடவில்லை!”

மேலே இருந்து பார்க்கும்போதே மிக அழகாக இருக்கிறதே இந்த இடம், அருகில் சென்று பார்த்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும் என மனதுக்குள் ஒரு ஆசை இருந்தபடியே இருந்தது எங்களுக்கு.  ஆனாலும் இன்னும் சில ஏரிகளையும், நைனிதால் நகரில் இருக்கும் சில இடங்களையும் பார்க்க வேண்டும் என்பதால் அங்கிருந்து நகர்ந்தோம். 

 ”மலையோரம் வீசும் காத்து..... 
மனதோடு பாடும் பாட்டு.....  
கேட்குதா கேட்குதா?”

இந்தப் பதிவில் மேலே ஒரு புகைப்படம் வெளியிட்டு இருக்கிறேன். வரிசையாக குளிர்பான குப்பிகளை கட்டித் தொங்க விட்டிருப்பதைப் பார்த்தீர்களா? இது எதற்காக என்று யாருக்காவது தெரிந்தால், பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! அது எதற்கு என்பதை அடுத்த பதிவில் நான் சொல்வதற்குள்! :)

   
தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

52 comments:

 1. படங்கள் ஒவ்வொன்றும் பேசுகிறது ஐயா
  அருமை
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா...

   Delete
 2. Replies
  1. தமிழ் மணம் முதலாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. இந்த இடங்களுக்கு சென்றால், குறிப்பிட்ட பாடல்களுடன் பல பாடல்கள் பாடத் தான் தோன்றும்... அழகான இடம்...

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் தனபாலன். ஆனா நான் பாடினால் யாரு கேட்பது..... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. மலையோரம் வீசும் காத்து.....
  மனதோடு பாடும் பாட்டு.....
  கேட்குதா கேட்குதா?”//

  கேட்குதே ! கேட்குதே!
  இயற்கை அழகை அள்ளிதந்த இடத்தை பார்க்கும் போது பாடல்கள் மனதில் வராமல் இருக்குமா?
  படங்கள் எல்லாம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா உங்களுக்கும் கேட்டுடுச்சா என் பாட்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 5. படங்கள் எல்லாமே சூப்பர்! நான் பார்த்ததை விட பதிவில் பார்க்கும் போது தான் இன்னும் அழகாகத் தோன்றுகின்றன....:)

  குளிர்பான பாட்டில்கள்....அது எதற்கென்று எனக்குத் தெரியும்...:))) சொல்லி விடவா?

  ReplyDelete
  Replies
  1. ”எல்லாம் எமனுக்குத் தெரியும்” என்று கமல் எருமை மாட்டின் மேல் உட்கார்ந்து ஒரு படத்தில் வசனம் பேசுவாரே அது ஏனோ இப்போது மனதில் ஓடுகிறது!

   Delete
 6. கடைசி இரண்டு படங்கள் ”வானம் தொட்டு விடும் தூரத்தில்” என்பது போல் உள்ளது...:)

  ReplyDelete
  Replies
  1. வானம் தொட்டு விடும் தூரத்தில் தான் - சில இடங்களில் நிற்கும்போது மேகம் நம் மீது முட்டிச் செல்வது போல இருக்கும்.....

   Delete
 7. குர்பா தாலுக்கு நேரில் சென்றதுபோல் இருந்தது உங்களின் வர்ணனைகளை படித்தபோது. நீங்கள் சொல்லாமால் விட்டதை உங்கள் புகைப்படங்கள் சொல்கின்றன. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. எழுத்து சொல்வதை விட படங்கள் அதிகம் சொல்லும் என்பதில் எனக்கும் உடன்பாடு தான்.......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 8. பேசும் படங்கள்.. அழகிய வர்ணனை..
  குர்பா தால் கிராமத்தின் அழகை படத்தில் பார்க்கும் போதே மனம் மயங்குகின்றது.

  ReplyDelete
  Replies
  1. பேசும் படம்..... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 9. குளிர் பாட்டில்கள் தாண்டினால் மரணக் குழியில்தான் விழ வேண்டியிருக்கும் இல்லையா ?
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. நான் ஒரு கேள்வி கேட்டா, நீங்களும் என்னை ஒரு கேள்வி கேட்டு இருக்கீங்க! :) அடுத்த பதிவில் சொல்றேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 10. நான் பார்க்காத பார்க்க விரும்பும் இரண்டு இடங்களின் படங்களுமே எப்போதும்போல இப்போதும் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி க்வியாழி கண்ணதாசன்.

   Delete
 11. நேரே சென்று வந்த உணர்வை ஏற்படுத்திய பதிவு! அடுத்த பதிவில் விடை அறிய ஆவல்! நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 12. ரா.ஈ. பத்மநாபன்March 31, 2014 at 11:04 AM


  அருமை! அருமை!

  (//பக்கத்தில் குதிரை/கழுதை இருந்ததால் பாடவில்லை!//. உதைக்குப் பயந்துதானே!

  மனைவி பக்கத்தில் இருக்கும்போது பாடியதுண்டா!”)

  ReplyDelete
  Replies
  1. ஏன் அண்ணாச்சி..... அண்ணி இருக்கும் போது நீங்க பாடியதுண்டா? :))) நீங்க பதில் சொல்லலைன்னா நானே கேட்டுடுவேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 13. Replies
  1. தமிழ் மணம் ஏழாம் வாக்கிற்கு மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 14. Ariel view படங்கள் மிக அருமை! தாங்கள் இடும் ஒவ்வொரு நைனித்தால் பதிவும் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றது!
  பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 15. அந்தப் பக்கம் இருக்கிறவங்களுக்குக் குடிநீரை இப்படித் தொங்க விட்டு அனுப்பறாங்களா, இல்லை ஏதானும் வேண்டுதலா? :))))

  படங்கள் எல்லாம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... அப்படி எல்லாம் இல்லை கீதாம்மா! இது வேற :) அடுத்த பதிவில் சொல்லிடறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 16. உங்க மனைவி என்னவோ சொல்ல வராங்க போல! அதைச் சொல்ல விட்டிருக்கலாம் இல்ல! :)))))

  ReplyDelete
  Replies
  1. அவங்களுக்கு அந்த கேள்விக்கான விடை தெரியும். அதைச் சொன்னதே நான் தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 17. மீண்டும் கூறுகிறேன் எனக்கு உங்கள் மேல் பொறாமை...!

  ReplyDelete
  Replies
  1. அடடா.... உங்களுக்கு பொறாமை வர வழைத்து விட்டேனே.....

   அடுத்த முறை செல்லும்போது நிச்சயம் உங்களையும் அழைத்துச் செல்கிறேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.....

   Delete
 18. பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோதரா .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்....

   Delete
 19. அருமையான பயணப் பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 20. பாட்டில்கள் எங்கேயோ பயணம் செய்கின்றன போலும்! படங்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.....

   அவை எங்கும் பயணம் செய்யவில்லை. ஒரே இடத்தில் தான் இருக்கின்றன!

   Delete
 21. படங்களும் பதிவும் அருமை நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 22. Padikkumbodhu naane yedhukku ippadi bottlegalai katti thonga vittu irukkirargal yendru ninaiththen.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 23. குளிர்பான கம்பெனியின் விளம்பரங்களா அந்த பாட்டில்கள் ?

  ReplyDelete
  Replies
  1. இல்லை இது விளம்பரம் அல்ல!

   த்ங்களது வருகைக்கும் கருத்துப் ப்கிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 24. hanging garden கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் இது புதுசா இருக்கே. ஒருவேளை Recycle concept ஆக இருக்குமோ. இல்லை ஏதோ மரத்திலிருந்து எண்ணெய் அல்லது திரவம் எடுத்து காயவைக்க வேண்டுமோ !

  படங்கள் எல்லாம் மிக அழகாக வந்துள்ளன. அதிலும் முதல் படம் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா எப்படியெல்லாம் யோசிக்க வைத்துவிட்டது இந்த குப்பிகள்...... :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 25. பேசும் படங்கள்.. அழகிய வர்ணனை..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 26. தேநீர் விலை அதிகம் தான். ஆனால் இப்போது சென்னையில்,தம்மாத்துண்டு தேநீரின் விலை ரூபாய் 8.00, அதனால் அந்த இடத்திற்கு இந்த விலை பரவாயில்லை. தான்.

  படங்கள் எல்லாம் கொள்ளை அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....