ஏரிகள் நகரம் – பகுதி 4
ஏரிகள் நகரம் தொடரின் பகுதி மூன்றினை
முடிக்கும்போது கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.
அரை மணி நேரத்தில் போக்குவரத்து
கொஞ்சம் சீராக, நாங்கள் மீண்டும் பயணித்து ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அந்த
இடம் Goda
Point! ஹிந்தியில்
goda என்றால் குதிரை. அந்த
இடத்தில் நிறைய குதிரைகள் நின்று கொண்டிருக்கும். அவர்கள் வைத்திருக்கும்
குதிரைகள் மீது பயணித்தோ, அல்லது மலைப்பாதையில் நடந்து சென்றோ ஒரு அழகான
இட்த்தினைப் பார்க்க முடியும். அது எந்த இடம் என்பதை அடுத்த பகுதியில்
பார்க்கலாம்!
நண்பர்களே, உங்களுக்கு குதிரை சவாரி செய்வதில் ஏதும் பயமுண்டா? இல்லையெனில்
கரடுமுரடான மலைப்பாதையில் நடந்து பழக்கமுண்டா? குதிரை சவாரி செய்ய பயமிருந்தால் நடப்பதைத்
தவிர வேறு வழியில்லை. இன்று நாம்
பார்க்கப் போகும் இடத்திற்கு ஒரு மலைப்பாதையில் ஆறு கிலோமீட்டர் தொலைவு பயணிக்க
வேண்டும். நடந்து சென்றால் ஒன்றரை-இரண்டு மணி நேரத்தில் அந்த இடத்தினை அடைந்து
விடலாம். குதிரை சவாரி எனில் ஒரு மணி நேரம் போதுமானது.
இடம் என்ன என்று சொல்லவே இல்லையே என கோபம் கொள்ள வேண்டாம்! அந்த இடத்தின்
பெயர் நைனா பீக் [NAINA
PEAK]!
இந்த இடத்தினை முன்பெல்லாம் சைனா பீக் [அ]
சீனா பீக் என்று தான் அழைத்து வந்தார்கள்.
சில வருடங்களாகத் தான் இந்த இடத்தின் பெயரை நைனா பீக் என்று மாற்றி
இருக்கிறார்கள். கடல்மட்டத்திலிருந்து சுமார்
2615 மீட்டர் அதாவது 8580 அடி உயரத்தில் இருக்கிறது இந்த நைனா பீக்.
நைனிதால் நகரிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர்
தொலைவில் இருக்கும் இந்த இடத்திற்கு நடந்து செல்வது அடிக்கடி மலையேற்றம் செய்யும்
நபர்களுக்கே சவாலாக இருக்கும். ஆனாலும் அங்கே சென்றுவிட்டால் நீங்கள் பார்க்கபோவது
உங்களை அப்படியே அசத்திவிடும் படி இருக்கும். பட்ட கஷ்டம் என்றும் பலன் தரும்
என்பது இந்த மலையேற்றத்தின் முடிவிலும் உங்களால் உணர முடியும்.
வழியில் இருக்கும் மலைகளில் அத்தனை மரங்கள்,
இயற்கைக் காட்சிகள் என மிக அழகாய் இருக்கும். அவற்றைப் பார்த்துக் கொண்டே வந்தால்
நீங்கள் மூச்சு வாங்கி மேலே நடந்து செல்வது உங்களுக்குத் தெரியாமல் போகலாம்! வாங்க
உங்களுக்கும் மூச்சு வாங்குவது தெரிகிறது.....
அட இதோ வந்துட்டீங்க! பார்க்கவே கண்கொள்ளாக் காட்சி உங்கள் கண்முன்னே!
அங்கே பாருங்க இமயமலை பனியை போர்வையாக்கி மூடிக்கொண்டு உங்களுக்கு காட்சி தருது!
ஆங்கிலத்தில் Bird’s Eye View என்று சொல்வது போல இந்த இடத்திலிருந்து நைனிதால்
நகரை நீங்கள் பார்க்க முடியும். கூடவே சுற்றிப் பார்த்தால் வெறும் மலை....
மலை... எங்கெங்கு காணினும் மலையடா! என்று
நீங்கள் பாட முடியும்.... ஆனால் வாயைத் திறந்தால் கையில் சிகரெட் இல்லாமலே புகைக்க
ஆரம்பித்து விடுவீர்கள்!
நாங்கள் சென்ற அன்று இரவில் பனிப்பொழிவு அதிகம்
இருந்தமையால் ஒரு உயரத்திற்குப் பிறகு எங்களால் நடக்க முடியவில்லை. அங்கேயே
இருந்துவிடலாம் எனத் தோன்றினாலும், நைனிதால் நகரில் நாங்கள் அமர்த்திக்கொண்ட வாகன
ஓட்டி மத்லூப் அதிக நேரம் காத்திருக்க முடியாது என்பதாலும் கீழே விரைந்து வந்தோம்.
அதே போல மலை உச்சியில் இருக்கும் இன்னுமொரு இடம் “Tiffin Top”! யாரோ வேலை
இல்லாதவர் அந்த மலை உச்சியில் தன்னுடைய டிஃபன் பாக்ஸை திறந்து சாப்பிட்டார் என
நினைத்துவிட வாய்ப்புண்டு! இந்த இடத்திற்கு Dorothy’s Seat என்ற பெயரும் உண்டு. நம்மை பல ஆண்டுகள் ஆண்ட
ஆங்கிலேயர்களில் ஒருவர் தனது ஆசை மனைவி Dorothy Kellet என்பவருக்கு கட்டிய நினைவிடம் தான் இந்த Tiffin Top எனும் Dorothy’s Seat. இந்த இடத்திற்கும்
நடந்தோ அல்லது குதிரை சவாரி செய்தோ செல்ல முடியும். நடந்து செல்வதென்றால் நல்ல
காலணிகளை அணிந்து கொண்டு, குளிருக்குத் தகுந்த உடையும் அணிந்து செல்வது நல்லது.
இந்தப் பயணத்தில் நாங்கள் நைனா பீக் மட்டும் தான்
சென்றோம். மேலே சொன்ன மற்ற இடமான Tiffin Top செல்ல வேண்டாமென முடிவு செய்து விட்டோம். இங்கே
ஒரு விஷயத்தினைச் சொல்ல வேண்டும். குதிரை சவாரி செய்வது என்றால், குதிரைக்காரரிடம்
முன்னரே பேசிக் கொள்வது நல்லது. ஆறு கிலோ மீட்டர் தொலைவு செல்லவே 1000 ரூபாய் வரை
கேட்கிறார்கள் – அதுவும் உங்களுக்கு ஹிந்தி தெரியவில்லை எனில் 1500 ரூபாய் கூட
கேட்பார்கள்.
நைனா பீக் வரை சென்று மீண்டும் திரும்ப கோடா
பாயிண்ட் வரை வருவதற்கு எத்தனை என்பதை முன்னரே அவர்களோடு பேசி முடிவு செய்து
குதிரையில் பயணிப்பது நல்லது.
மலையேற்றம் [அ] குதிரை சவாரி என நீங்களும்
சென்றிருப்பதால் சற்றே ஓய்வு எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் எனத்
தோன்றுகிறது அல்லவா? சற்றே ஓய்வெடுத்துக் கொள்வோம்.... அடுத்த பகுதியில் உங்களை அழைத்துச் செல்லப்
போவது ஒரு ஆபத்தான இடத்திற்கு..... அதற்கென்று பயந்து கொண்டு வராமல் இருந்து
விடாதீர்கள். அடுத்த திங்களன்று உங்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல நான்
பொறுப்பு!
தொடர்ந்து பயணிப்போம்......
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
படங்கள் அழகோ அழகு
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குத.ம.1
பதிலளிநீக்குதமிழ் மணம் முதலாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஹிந்தி கற்றுக் கொண்டு சென்றால் 500 ரூபாய் மிச்சம்... ! ? ஹிஹி...
பதிலளிநீக்குநைனா பீக் - என்னவொரு அருமையான இடம்... படங்கள் அனைத்தும் அட்டகாசம்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குtha.ma 3
பதிலளிநீக்குதமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு நன்றி மதுரைத் தமிழன்.
நீக்குஇந்தியாவில் அறியாத அதே நேரத்தில் பார்க்க வேண்டிய பல இடங்களை உங்கள் தளம் மூலம் அறிய முடிகிறது அதுமட்டுமில்லாமல் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் வருகிறது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
நீக்குமுழுவதும் பனி படராமல் கொஞ்சமாகத்தானே உள்ளது. ஒருவேளை குளிர் நாட்களில் பணி மூடி வெள்ளைவெளேர்னு இருக்குமோ ! ஆங்காங்கே ஒரு சில வீடுகள் தென்படுகின்றன. வழிப்பறியெல்லாம் உண்டா !
பதிலளிநீக்குபரந்த மலைப்பரப்பு பார்க்கவே ரம்மியமாக உள்ளது. இங்கேயெல்லாம் எங்கே போகப்போகிறோம் ! உங்கள் பதிவின் மூலம் பார்த்த திருப்தி கிடைத்துவிட்டது. நன்றிங்க.
காஷ்மீர் அளவிற்கு இங்கே அதிகம் பனிப்பொழிவு இருப்பதில்லை. கொஞ்சமாகத் தான் இருக்கும். சமீப காலமாக நைனிதால் பகுதிகளில் பனிப்பொழிவு வெகுவாக குறைந்து விட்டது என்பதையும் இங்கே சொல்ல வேண்டும். பெரும்பாலானவர்கள் ஏப்ரல்-மே மாதங்களில் கோடையின் கொடுமையிலிருந்து தப்பிக்க மட்டுமே செல்கிறார்கள்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.
பணி படர்ந்த மலையின் அழகே அழகு! அருமையான புகைப்படங்களை எடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! தொடர்ந்து பயணிக்க காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குஅன்பின் வெங்கட்..
பதிலளிநீக்குஅழகிய நைனிதால்!..
இயற்கையின் கொஞ்சும் எழிலை - கண்முன் காட்டியது தங்களின் பதிவு!..
பகிர்வுக்கு நன்றி!..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
நீக்குசைனா பீக்லந்து சைனா தெரியுதுனு சொல்வீங்களோனு பாத்தேன். நம்ம மக்கள் டோரதி என்பதை மொழிமாற்றம் செய்யாமலிருப்பது ஆச்சரியம்.
பதிலளிநீக்கு:)))))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.
அழகான படங்கள்..அருமையான படங்கள்..பாராட்டுக்கள்..!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குவணக்கம் அய்யா ,முதல் முறை வருகிறேன் ,,ரொம்ப நன்றாக இருக்கிறது இடம் ..
பதிலளிநீக்குஅய்யா.... அட என்னையா சொல்றீங்க! :) வெங்கட் என்று சொன்னாலே போதும்!
நீக்குதங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கலை.....
நீக்குஐயா என்று கூப்பிட்டால் கொஞ்சம் வயசான மாதிரி இருக்கு... நம்ம வெங்க்ட் பார்ப்பதற்கு என்றும் இளமையாக உலகம் சுற்றும் வாலிபன் போல இருக்கிறார், நானும் ஐயான்ன்னு கூப்பிடலாம் என்றுதான் நினைத்தேன் ஆனால் அவர் வீட்டில் கிரிக்கெட் மட்டை இருப்பது ஞாபகம் வந்திருச்சு. அதனாலதான் விட்டு விட்டேன்
அது..... அந்த நினைப்பு இருக்கட்டும் மதுரைத் தமிழன்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...
ரம்மியமான காட்சிகள் ,நான் சில வருடங்கள் முன்பு சென்ற சிக்கிம் பயணத்தை நினைவுபடுத்தியது .இங்கே அடிக்கின்ற வெயிலுக்கு குளுமை தருகின்றன உங்கள் படங்கள் !
பதிலளிநீக்குத ம 5
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குPaarkkavendia idam. Nalla photography.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குசிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .
பதிலளிநீக்குத .ம .7
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்..
நீக்குமுதலில் பதிவைப் படித்துவிட்டு அப்புறம் ஆற அமர புகைப்படங்களைப் பார்ப்பேன். சுவாரஸ்யமாக இருக்கிறது. வெட்ட வெளியில் குதிரையின் மீது செல்வதென்றாலே பயமாக இருக்கும். மலைப்பாதையில் என்றால் சொல்லவே வேண்டாம்! நாமென்ன குதிரை பழகி இருப்பதற்கு ராஜகுமாரர்களா என்ன!
பதிலளிநீக்கு”நாமென்ற ராஜகுமாரர்களா என்ன?” :)))))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
படங்கள் விழிக்கு மிக ரம்மியமாக அழகாக இருக்கின்றன! அருமையான வர்ணனை! உடனேயே பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விடலாமா என்ற ஆவாலைச் தூண்டும் அளவு இருக்கின்றது! பாரதத் தாய் கொடுத்து வைத்தவள்தான்! தன்னகத்தே இத்தனை அழகிய வியத்தகு ரகசியங்களை உள்ளடக்கிக் கொண்டு தன் குழந்தைகளை எல்லாம் தன்னைக் கண்டு ரசிக்க, வரவேற்கும் அளவு அழகுப் பெட்டகங்களை உள்ளட்க்கி வைத்திருப்பவளை என்னவென்று சொலவது!
பதிலளிநீக்குத.ம.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்......
நீக்குபாரதத் தாய் தன்னுள்ளே கொண்ட விஷயங்கள் பலவும் அற்புதம் தான்.....
ஓ,பேரை மாத்திட்டாங்களா .. நாங்க சைனா பீக் தான் போயிருந்தோம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.
நீக்குஅழகாக நைனி பீக்கை சுற்றி காண்பித்து விட்டீர்கள்! எந்த ஆபத்தான பகுதிக்கும் உங்களுடன் வர நான் தயார்! தொடருங்கள்! நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குசைனா நைனா பீக் நன்றாக இருக்கு. பனியைத்தான் காணொம். எல்லாம் இங்க வந்துட்டது போல. மிக ரம்ழமான படங்கள்.குதிரையில் ஏறினால் முதுகு வலி வரும் என்கிற பயம் உண்டு. உங்கள் புண்ணியத்தில் நைனிடாலைப் பூரணமாக்ப் பார்க்க முடிகிறது.
பதிலளிநீக்குசிகாகோ அளவிற்கு இங்கே பனி இருக்காதும்மா......
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா..
நைனா பீக் அழகான .இடம்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குநைனா பீக் அழகாய் இருக்கிறது. அழகான படங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குபதிவும் படங்களும் அருமை நாகராஜ் ஜி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.
நீக்குபதிவும் படங்களும் அழகு!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்....
நீக்குஉங்களுடைய படங்களும் குறிப்புகளும் அருமை. இரண்டு தடவை ஏப்ரலில் சென்றிருக்கிறேன். ரம்மியமான இடம். இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் இடங்களில் ஒன்று. மே ஜூன் மாதங்களில் தங்குமிடம், கார் மற்றும் குதிரை சவாரிகள் ரேட் மிகவும் அதிகமாக இருக்கும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் மேடம்...
நீக்குபடங்களைப் பார்க்கும்போது பொறாமைப் பெருமூச்சு வருகிறது. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.
நீக்குபடங்கள் அனைத்தும் ரசித்தேன் சார் தங்களின் எழுத்தில் கை பிடித்து அழைத்து சென்றது போல் இருந்தது பதிவு நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆர்.வி. சரவணன்.
நீக்குபடங்கள் அழகோ அழகு
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.
நீக்குநீங்கள் குதிரை சவாரி செய்யவில்லையா????(நீங்கள் நடந்து சென்றதைப் போலத்தான் குறிப்பிட்டிருக்கிறீரகள்!!!)
பதிலளிநீக்குஅடுத்த பகுதியின் முன்னோட்டம் அபாயம் என்று சொல்லிவிட்டீர்கள், ஒழுங்காக எங்களை கொண்டு போய் சேருங்கள்.
வாழ்த்துக்கள்.
நாங்கள் குதிரை சவாரி செய்யவில்லை. நடப்பதில் தான் அதிக ஆர்வம்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.