எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, March 9, 2014

மதுபனி [MADHUBANI] ஓவியங்கள்
நேற்று நானும் நண்பர் பத்மநாபன் அவர்களும் தில்லியின் ஜன்பத் பகுதியில் இருக்கும் ஒரு கிராமிய கலை மற்றும் உணவு திருவிழா சென்றிருந்தோம். இப்போதெல்லாம் ஏதாவது கண்காட்சி என்று சொன்னால், அதுவும் கிராமிய/பழங்குடிகளின் கண்காட்சி என்று சொன்னால் அத்தனை மக்களை ஈர்க்கமுடியாது என்பதாலோ என்னவோ உணவினையும் தலைப்பில் சேர்த்து விட்டார்கள் போல!

அங்கே சில கிராமிய/பழங்குடி மக்கள் பழக்கத்தில் இருந்த ஓவியங்களை கண்காட்சியாகவும், விற்பனைக்காகவும் வைத்திருந்தார்கள். பல இடங்களிலிருந்து வந்திருந்தாலும், இன்றைக்கு நாம் பார்க்கப்போவது மதுபனி ஓவியங்கள் மட்டுமே. மதுபனி [MADHUBANI] எனும் நகரம் பீஹார் மாநிலத்தில் இருக்கிறது. மிதிலா அல்லது மைதிலி என்ற மொழி பேசும் மக்கள் அதிகம் இருக்கும் இடம் இது. மதுபனி என்பதன் அர்த்தம் தேன் நிறைந்த காடு!

பெரும்பாலான மதுபனி ஓவியங்கள் இந்து கடவுள்களான ராமர், கிருஷ்ணர், சிவன், சரஸ்வதி, துர்க்கை போன்றவர்களையும் இயற்கை அழகினையும் காண்பிப்பவை. பெரும்பாலும் பெண்களால் தான் இந்த ஓவியங்கள் வரையப்படுகின்றன என்றாலும் ஆண்களும் வரைவதில் வல்லவர்கள் தான். முதன் முதலில் இந்த ஓவியங்களை வரைந்தது மிதிலையின் மன்னரான ஜனக மஹாராஜா காலத்தில் என்றும், அவரது மகள் சீதையின் திருமணத்தின் போது இந்த ஓவியங்களை வரைய வைத்தார் எனவும் சொல்வார்கள்.

பொதுவாகவே இந்த ஓவியங்களில் காலி இடங்களே இருப்பதில்லை. முன்பெல்லாம் மண்ணாலான வீடுகளின் சுவர்களில் முழுக்க முழுக்க இந்த ஓவியங்களை வரைந்து வைப்பார்களாம். இப்போதெல்லாம், துணி, காகிதம் போன்றவற்றிலும் வரைகிறார்கள்.  இதில் இன்னுமொரு விசேஷமும் உண்டு. இந்த ஓவியங்களை வரைவதற்கு பயன்படுத்துவது அனைத்துமே இயற்கை வண்ணங்கள் தான் – செடி, பூ, இலைகள் போன்றவற்றிலிருந்து வண்ணங்களை எடுத்து ஓவியங்களை வரைகிறார்கள்.

இந்த ஞாயிறில் சில மதுபனி ஓவியங்களை நாம் பார்க்கலாம்.


கிருஷ்ணரும் கோபிகைகளும்.....


குகனின் படகில் செல்லும் ராமன், சீதை மற்றும் இலக்குவன்.....


தேரோட்டியாக கிருஷ்ணன்....எவ்வளவு அழகாய் இருக்கிறது இந்த ஓவியம்!
 


அர்த்தநாரீஸ்வரர்
 
 
என்ன நண்பர்களே இந்த ஓவியங்களை ரசித்தீர்களா? அடுத்த ஞாயிறன்று வேறு சில புகைப்படங்கள் பார்க்கலாம்!

தொடர்ந்து சந்திப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

56 comments:

 1. ஓவியங்களை ரசித்தேன். அனைத்தும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்!

   Delete
 3. அற்புதமான ஓவியங்கள்
  பதிவாக்கி நாங்களும் கண்டு களிக்கத்
  தந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 4. மிக மிக அற்புதமாக இருக்கீன்றன இந்த ஓவியங்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 5. Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 6. இதுவரை அறிந்திராத மதுபனி ஓவியம் பற்றிய தகவல்களைத் தந்தமைக்கு நன்றி. ஓவியங்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 7. what is the price of these paintings? (just order of magnitude)?

  ReplyDelete
  Replies
  1. படம் வரைந்திருக்கும் பொருள் [துணி [அ] பேப்பர்], படத்தின் அளவு போன்றவை பொருத்து ஓவியங்களின் விலை இருக்கிறது. நான் பார்த்த கடையில் 500 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையான ஓவியங்கள் இருந்தன.....

   பெயர் சொல்லா விரும்பாத நண்பரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 8. ஒவ்வொன்றும் அழகு..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 9. அருமையான புகைப் படங்கள் ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 10. எவ்வளவு நுணுக்கமான ஓவியங்கள்...!

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 11. Visit : http://wallposterwallposter.blogspot.in/2014/03/blog-post_9.html

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 12. எவ்வளவு அழகாய் இருக்கிறது இந்த ஓவியம்! - பதிவும் அழகு..! பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 13. கலர்புல இருக்கு!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.

   Delete
 14. அத்தனையும் அற்புதம். பகிர்வுக்கு நன்றி.

  /செடி, பூ, இலைகள் போன்றவற்றிலிருந்து வண்ணங்களை எடுத்து / வரையப்பட்ட சீன ஓவியம் ஒன்று வீட்டிலுள்ளது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 15. ஒவ்வொரு ஓவியமும் கண்ணுக்கு விருந்தாக இருக்கிறது. இத்தனை ஓவியங்களையும் மிக அழகாக படம் பிடித்து பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 16. மிக அருமையான ஓவியங்கள்! இயற்கை வண்ணங்களை கொண்டு வரைந்தார்கள் என்பது ஆச்சர்யமான செய்தி! அழகான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 17. சில ஆண்டுகளுக்கு முன் - தஞ்சையில் நடந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் இந்த மதுபனி ஓவியங்கள் பலவும் இடம் பெற்றிருந்தன. தாங்கள் சொல்லியது போல அப்போது மதுபன் (மது வனம் ) என்றுதான் சொன்னார்கள்..

  மீண்டும் அவற்றை தங்கள் பதிவின் மூலமாகக் காண்பதில் மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 18. மதுபனி பெயரே அட்டகாசமாய் உள்ளது சார்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 19. ஓவியங்கள் அனைத்தும் அருமையா இருக்கு பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள் சார்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆர்.வி. சரவணன்.

   Delete
 20. மது பனி ஓவியங்கள் என்று படித்திருக்கிறேன். அதைப்பற்றிய முழு விவரங்கள், ஓவியங்களுடன் பதிவை அசத்தி விட்டீர்கள். மதுபானி ஓவியம் காணக் கிடைத்ததற்கு நன்றி வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 21. அழகு அழகு அத்தனையும் அழகு!

  மதுபனமே ராதிகா நாச்சேஹே.... பாடல் நினைவுக்கு வருது:-))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்....

   மதுபன்மே ராதா நாச்சே.... மிக அழகானதோர் பாடல்.....

   Delete
  2. எனக்கு தெரிந்ததெல்லாம் மாதுரி தீத்ஷித்தின் சோளி கே பீசா .தான் !

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 22. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை.....

   Delete
 23. Oviyangal miga azhagu. Kannukku nalla virundhu.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 24. என்னவொரு திறமை & நுணுக்கம் !!

  இயற்கை வண்ணங்கள் என்பதால்தான் கண்ணை உறுத்தாமல் இருக்கிறது போலும் ! படங்களைப் பெரிதாக்கி பலமுறை ரசிச்சாச்சுங்க. பகிர்விற்கும் நன்றிங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்......

   Delete
 25. ரா.ஈ. பத்மநாபன்March 13, 2014 at 10:02 AM

  ஒவ்வொன்றும் எளியவர்கள் உருவாக்கிய அரிய ஓவியங்கள். அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 26. தமிழில் நாம் மதுவனம் என்கிறோமே அதுதான் ஹிந்தியில் மதுபன் என்றாகிறதோ?
  ஓவியங்கள் கண்களை விட்டு அகல மறுக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. அதே தான்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

   Delete
 27. அற்புதமான பதிவு, முன்பே வாசித்திருந்தால் இந்த விவரங்களையும் நான் சேர்த்திருப்பேன். இந்த பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....