புதன், 5 மார்ச், 2014

வகுப்பிற்கு கட் அடிப்போமா?நீங்கள் பள்ளியில் அல்லது கல்லூரியில் படித்த சமயத்தில் எதற்காகவது கட் அடித்ததுண்டா? கட் அடித்து சினிமாவிற்கோ அல்லது பூங்காவிற்கோ சென்றதுண்டா? இப்போதாவது உண்மையைச் சொல்லுங்களேன்! :) இந்த வாரம் நாம் பார்க்கப் போகும் குறும்படமும் பள்ளிச் சிறுவன் கட் அடிப்பது பற்றி தான்.

படத்தின் ஆரம்பத்தில் மகாத்மா காந்தியின் பொன்மொழி ஒன்று வருகிறது. அது என்ன என்பதை பிறகு பார்க்கலாம்!

வீட்டில் ஒரு சிறுவன் காந்தி படம் போட்ட ஒரு புத்தகத்தின் மீது அவனது பொம்மை வாகனத்தினை ஓட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார். சிறுவனின் தந்தை காந்தியின் புத்தகத்தினைத் தேடிக் கொண்டிருக்கிறார் – எல்லா வீடுகளிலும் குடும்பத்தலைவர் கேட்பது போல, இவரும் தனது மனைவியிடம் புத்தகம் எங்கே, நான் இங்கே தானே வைத்தேன் என்று கேட்கிறார்! மகன் அந்தப் புத்தகத்தினை வைத்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவனைக் கொஞ்சம் அதட்டி, “இந்தப் புத்தகம் விளையாட்டுப் பொருளல்ல!என்று கண்டிக்கிறார்.

காலை உணவினை எடுத்துக் கொண்டிருக்கும் சிறுவனிடம் அவனது அம்மா, விரைவாகச் சாப்பிடு, பள்ளிக்குச் செல்ல நேரமாகிறது என அனுப்புகிறார். அவரும் உணவு மேஜையில் இருக்கும் ஒரு ஆப்பிளை பையில் எடுத்துப் போட்டுக்கொண்டு வீட்டினை விட்டு வெளியேறுகிறார். அடுத்த காட்சியில் சிறுவனின் வீட்டிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.

பல விருதுகளைப் பெற்றுள்ள The Missed Class எனும் இந்த குறும்படத்தில், பள்ளியில் படிக்கும் மாணவன், வீட்டிலிருந்து பள்ளிக்குக் கிளம்பிச் சென்றாலும் பள்ளிக்குச் செல்லாது வேறெங்கோ செல்கிறான். அவனது வகுப்பாசிரியர் வீட்டிற்குத் தொலைபேசியில் அழைக்கும்போது தான் இந்த விஷயமே அவனது தந்தைக்குத் தெரியவருகிறது.

அன்று சிறுவன் வீட்டிற்கு வந்ததும் அவனது தந்தை, சிறுவனிடம் “பள்ளிக்குச் செல்லாது விளையாடத்தானே சென்றாய்?என்று கேட்க, இல்லை என பதில் சொல்கிறான் சிறுவன். பொய் வேறு சொல்கிறாயா?என்று சிறுவனை தண்டிக்கிறார் அப்பா. அடுத்த நாள் சிறுவன் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றதும் அவன் அறியாத வண்ணம் பின் தொடர்கிறார். அங்கே அவர் காணும் காட்சி அவரை கலங்கச் செய்கிறது. அப்படி அவர் கண்ட காட்சி என்ன? படத்தினைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்!
பதிவின் ஆரம்பத்தில் சொன்ன பழமொழி இது தான்!

A reformer cannot afford to wait till others are converted. He must take the lead and venture forth alone even in the teeth of universal opposition – Mohandas Karamchand Gandhi

என்ன நண்பர்களே, இந்த வார குறும்படத்தினை ரசித்தீர்களா? குறும்படத்தினை இயக்கிய மற்றும் அதில் நடித்த அனைவருக்கும் பாராட்டுகள்.

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

34 கருத்துகள்:

 1. மனதை உலுக்கி எடுத்துவிட்டது! அதே சமயம் மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது! மகாத்மா இன்னும் உயிரோடு இருக்கிறார்!! மனித நேயம் சாகவில்லை! இளைய பாரதம் மனித நேயத்துடன் வாழும் எனும் நம்பிக்கைத் துளிர்விடுகிறது! பரவசம்!!!!

  பழைய மாவையே அரைக்கும் வகுப்பறையை, இது போன்று கட் செய்வதில் தவறில்லையோ?!!!!

  இந்த அற்புதமான குறும்படத்தைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 2. மகாத்மாவின் படத்தை தொட்டுக் கொண்டே கண் கலங்கும் தந்தையைப் போல கலங்க வைத்தது... சிறப்பான குறும்படம்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 3. இன்றைய பகிர்வில்...

  வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...! - இந்த தலைப்பில் உள்ள விவரங்கள் உங்களுக்கு உதவக் கூடும்... நன்றி...

  Link : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html

  பதிலளிநீக்கு
 4. அருமையான குறும்படம் பகிர்விற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   நீக்கு
 5. மகாத்மாவின் புத்தகத்தை வாசிக்கும் தந்தையவிட -
  அந்த புத்தகத்தை வைத்து விளையாடிய தனயன்
  மகாத்மாவின் சிலையை விட விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்..பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 6. நன்று! ஆனால் அவன் வாழ்க்கைப் பாழாகக் கூட்டாதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் அந்த எண்ணம் வந்தது புலவர் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. அருமையான குறும்படத்தை பார்க்கும் வாய்ப்பைத் தந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 8. சாதாரணமாகக் குறும்படம் பார்க்கும் பொறுமை இல்லை. நீங்கள் முன்கதை சொல்லி ஆவலைத் தூண்டி இரண்டு முறையாகப் பார்க்க வைத்து விட்டீர்கள்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.....

   எனக்கு நீண்ட திரைப்படங்களை விட குறும்படங்கள் பார்க்க பிடித்திருக்கிறது... பொறுமையும் இருக்கிறது - சில நிமிடங்கள் மட்டுமே என்பதால்!

   நீக்கு
 9. அருமையான குறும்படம்! கண்கலங்க வைத்தது! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 11. நல்ல கதை.
  ஆனால் பள்ளியைக் கட் பண்ணிவிட்டு தான் உதவி செய்யனுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.....

   நீக்கு
 12. "//கட் அடித்து சினிமாவிற்கோ அல்லது பூங்காவிற்கோ சென்றதுண்டா? இப்போதாவது உண்மையைச் சொல்லுங்களேன்! :) //"
  - இப்படி வெளிப்படையாக எல்லாம் கேக்கலாமா வெங்கட் சார்.
  இப்ப பாருங்க நான் உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயம் வந்துடுச்சு. நான் பள்ளியில் எல்லாம் கட் அடிக்கலை, கல்லூரியில் மட்டும் தான் கட் அடித்திருக்கிறேன்.

  போதுமா உண்மையை சொல்லியாச்சு.

  நல்ல ஒரு குறும்படத்தை பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கல்லூரியில் கட் அடிக்காதவர் யார்..... :))) உண்மையை நீங்களும் ஒத்துக்கொண்டதற்கு ஒரு பூங்கொத்து!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 13. மகனின் போக்கை ஆராய்ந்து தெளிந்த அப்‌பா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   நீக்கு
 14. இதைப் பார்த்தவுடன் ஒரு விளம்பரப் படம் கண்டது நினைவுக்கு வருகிறது. ஒரு சிறுவன் தாயுடன் நடந்து செல்லும் போது ஒரு லாலிபாப் சுவைக்க எடுப்பான் சாலையில் ஒருசிறுவன் ஏக்கத்தோடு பார்ப்பதை கவனிப்பான். தன் லாலிபாப்பை அவனிடம் கொடுத்து விடுவான் அச்சமயம் கொடுத்த சிறுவனும் கிடைத்த சிறுவனும் மகிழ்வார்கள். கொடுப்பதன் இன்பம் தெரியும். பள்ளிக்குச் செல்ல வேண்டிய சிறுவன் கட் அடித்து கொடுப்பதோ பாடம் சொல்லிக் கொடுப்பதோ சரியா சிந்திக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு
 15. இதுல ஒரு சின்ன ஒற்றுமை இருக்கு
  நானும் என் friend ராணியும் மதுரை காமராஜ்ல
  u.g படிக்கும்போது கிளாசை கட் அடுச்சுட்டு காந்தி ம்யூசியம் போனோம்!
  ஆன இந்த படம் டச்சிங் !!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா நீங்களும் கட் அடித்த உண்மையைச் சொன்னதுக்கு ஒரு பூங்கொத்து!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 17. நெடும் படங்களை விட இப்படிப்பட்ட குறும் படங்கள் அருமை !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....