எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, March 14, 2014

ஃப்ரூட் சாலட் – 84 – விருந்தாவன் விதவைகள் – ரெஜியா - பேய்இந்த வார செய்திகள்:

மதுராவினை அடுத்த பிருந்தாவனம் [அ] விருந்தாவன் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். அங்கே கிருஷ்ண பகவான் நடத்திய லீலைகள் பற்றி பல கதைகள் உண்டு. இன்றைக்கும் அங்கே சுற்றுலாப் பயணிகள் அங்கே வந்து கிருஷ்ணன் விளையாடிய இடங்கள், கோவில்கள் என பார்த்துச் செல்கிறார்கள். 

இங்கே இன்னுமொரு விஷயமும் சொல்ல வேண்டும்.  வங்காள மாநிலத்தினைச் சேர்ந்த பலர் கணவனை இழந்த பெண்களை இங்கே கொண்டுவந்து விட்டுவிடுவார்கள். இப்படி இருப்பவர்களுக்காகவே பல ஆஸ்ரமங்கள் இங்கே உண்டு. அவர்களில் பலர் இங்கே கையேந்தி நிற்பதை பார்த்திருக்கிறேன்.


நீல மேல் சட்டை அணிந்திருக்கும் பெண் தான் கோபல்.... 

அப்படிப்பட்ட பெண்களின் முகங்களில் கொஞ்சமாவது சந்தோஷம் வர வைக்கவேண்டும் என ஒரு அமெரிக்காவில் இருக்கும் கோபல்எனும் இந்திய ஆடை வடிவமைப்பாளர் முன் வந்திருக்கிறார். வடிவமைத்துக் கொடுத்தபடி விருந்தாவனில் இருக்கும் கைவிடப்பட்ட இந்த பெண்மணிகளின் உதவியோடு உடைகளை தைத்து அதை அமெரிக்கா மற்றும் மற்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முன்வந்திருக்கிறார்.

இந்த முயற்சியில் Sulabh International நிறுவனரான மருத்துவர் பிந்தேஷ்வர் பதக் உதவியாக இருக்கிறார். சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ஆம் தேதி சில பெண்களுக்கு உடைகள் வடிவமைப்பு/தயாரிப்பு ஆகிவற்றிற்கு பயிற்சி வகுப்புகள் கொடுத்து துவங்கி இருக்கிறது இந்த சிறந்த முயற்சி. 

கணவனை இழந்து விட்ட ஒரே காரணத்திற்காக இவர்களை இப்படியே தனித்து விட்டுவிட்ட சமுதாயத்தில் அவர்களுக்கு உதவும் நல்லெண்ணம் கொண்ட கோபல் போன்றவர்களை பாராட்டுவோம்......

     செய்தி: மெயில் டுடே.....

இந்த வார முகப்புத்தக இற்றை:

எனக்கு ஒரு Blackberry அல்லது Apple தான் வேண்டுமென்று உறுதியுடன் என் பெற்றோர்களிடம் சொன்னேன்.... 

அம்மா சொன்னார்: வீட்டுல சாத்துக்குடி இருக்கு அத முதல்ல சாப்பிடு!

இந்த வார குறுஞ்செய்தி:

SUCCESS SEEMS TO BE CONNECTED WITH ACTION. SUCCESSFUL PEOPLE KEEP MOVING. THEY MAKE MISTAKES, BUT THEY DON’T QUIT – CONRAD HILTON.

ராஜா காது கழுதை காது:

 நாங்களும் பூ வரைவோம்டே!

சமீபத்தில் தில்லியில் ஒரு கண்காட்சி. அதில் National Disaster Response Force-ஐ சேர்ந்த வீரர்கள் பெரும் விபத்துகளில்/இயற்கை சீற்றங்களில் எப்படி உதவுகிறார்கள் என்பதைக் காண்பித்தார்கள்.  கூடவே இடிபாடுகளில் சிக்கிய மனிதர்களை கண்டுபிடிக்க இருக்கும் பழக்கப்பட்ட நாய்கள் கொண்டு ஒரு DOG SHOW ஏற்பாடு செய்திருந்தார்கள். அதைக் கண்டுகளிக்க வந்த ஒரு பெண்மணி ஒவ்வொரு நாயையும் தடவிக்கொடுத்து, அதை பழக்குபவரிடம் நாயின் பெயரைக் கேட்டுக் கொண்டிருந்தார். நாய்களின் பெயரை தன்னு, ப்ரீத்தி என வரிசையாகக் கேட்டுக்கொண்டே வந்தவர் ஒரு நாயின் பெயர் “ரெஜியாஎன்று கேட்டதும், துள்ளலோடு சொன்னது......

“ஐ....  இந்த நாயோட பெயரும் ரெஜியாவா.... என் பேரும் ரெஜியா... 

இந்த வார ரசித்த பாடல்:

இந்த வார ரசித்த பாடலாக “மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்டஎனும் அருமையான பாடல். இசை அமைத்து பாடலை பாடியது: இளையராஜா. பெண் குரல்: ஜானகி?

)

ரசித்த கார்ட்டூன்:நன்றி: தி இந்து.

படித்ததில் பிடித்தது:

பேயைக் கண்டவர்கள் கிடையாது. ஆனால் அதனைக் கண்டு, அதன் குணங்களைத் தெரிந்து கொண்டவர்களைப் போல ஜனங்கள் பேசிக்கொள்கிறார்கள். பேயின் உருவம் தெரியாது என்றும், அது மனிதர்களைப் பிடித்துக் கொண்டால், அவர்கள் செய்யும் சேஷ்டைகளின் மூலம், பேயின் போக்குத் தெரிந்து கொள்ள முடியுமென்றும் பேசுகிறார்கள். இந்தப் பைத்தியக்காரத்தனமான எண்ணம், எவ்வளவு விபரீதமான நடவடிக்கைகளுக்கு இடம் தருகிறது. என்னைக் கொட்டி வேதனை கொடுத்த தேளை அடிக்க நான் என் அப்பாவின் தடியை எடுத்தேன். எனக்குப் பேய் பிடித்திருப்பதாக நம்பியதால், நான் தடியை எடுத்ததும், தங்களுக்கு ஆபத்து வரும் என்று பயந்து, என் தகப்பனாரும், புருஷனும் ஓடினார்கள். என்னால் சிரிப்பைத் தாங்கமுடியவில்லை. மகா சூரர்கள், வீரர்கள் இந்த ஆண்பிள்ளைகள்! எதிலே! பெண்களை மிரட்டுகிற விஷயத்திலே! நான் என்ன சின்னப் பிள்ளையா? எனக்கென்ன பயம்? என்று பெருமையாக பேசுவார்கள். பெண் என்றால் பயங்காளி, ஆண்களேதான் தைரியசாலிகள் என்று எப்படியோ ஒரு தப்பான எண்ணத்தை நாட்டிலே பரப்பிவிட்டார்கள். இரண்டு ஆடவர்கள் ஓடினார்கள், நான் கையிலே தடியை எடுத்ததும்! அவ்வளவு பயம்! பேய் என்ன செய்துவிடுமோ என்ற பயம்!

- பேரறிஞர் அண்ணாதுரை எழுதிய ரங்கோன் ராதாபுத்தகத்திலிருந்து......   

என்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

60 comments:

 1. மிகவும் அருமை. உங்கள் ஒவ்வொரு பதிவும் தனித்துவம் நிறைந்ததாக இருக்கிறது.

  இன்று என் தளத்தில்.... சிற்றுலா (சிறுகதை).

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்....

   Delete
 2. //அமெரிக்காவில் இருக்கும் ’கோபல்” எனும் இந்திய ஆடை வடிவமைப்பாளர் முன் வந்திருக்கிறார்.//

  டச்சிங் டச்சிங். நல்லா இருக்கணும் அந்த கோபல்.

  விருந்தாவன விதவைகளைப்பார்த்து திக்கிச்சு நின்னேன் என் பயணத்தில்:(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   ஒவ்வொரு முறை விருந்தாவன், கோவர்த்தன் போன்ற இடங்களுக்குச் செல்லும்போதும் எனக்கும் மனதில் பயங்கரமாக கோபம் வரும் - அப்படி அவர்களை விட்டுச் சென்ற அவர்கள் குடும்பத்தின் மீது.....

   Delete
 3. எல்லாமே அருமை. அதிலும் முகபுத்தக இற்றை மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 4. கோபல் அவர்களின் சேவைக்கு வாழ்த்துக்கள்...

  கார்ட்டூன் செம...

  மற்ற ஃப்ரூட்சாலட் அனைத்தும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. கணவனை இழந்துவிட்ட ஒரே காரணத்திற்காக, பெண்களை அனாதைகளாக தனித்து விடுதல் மனதினைக் கனக்கச் செய்கிறது ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 6. Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 7. நல்ல தொகுப்பு. கோபல் அவர்களுக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 8. ஃப்ரூட்சாலட்-ஐ ரசிக்கவைத்தது..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 9. முத்து வரைந்துள்ள கார்ட்டுனில் விஜியின் முகபாவத்தை ரசித்தேன் !
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 10. ரா.ஈ. பத்மநாபன்March 14, 2014 at 9:52 AM

  => அந்த கோபால்தான் கோபல் ஆக வந்திருக்கிறாரோ!

  => ரெஜியாவை நானும் ரசித்தேன். (ஆனாலும் மனுஷா! ஒரு கடுவன் நாயோட பேர் கூடவா ஞாபகம் இல்லை.). அருமையான நாய்களின் காட்சி.

  => பெண் இதனால்தான் அடிக்கடி பேயாகிறாளா! அப்படியாவது அடக்கி வைக்க நினைக்கும் ஆண்கள் அடங்கட்டும்.

  மொத்தத்தில் Black Berry, Apple மற்றும் சாத்துக்குடி ருசியுடன் ஒரு நல்ல ஃப்ரூட் சாலட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

   Delete
 11. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 12. விருந்தாவனம் குறித்த செய்தி நாம் எங்கிருக்கிறோம் எனும் புரிதலைக் கொடுத்தது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 13. கணவனை இழந்து விட்ட ஒரே காரணத்திற்காக இவர்களை இப்படியே தனித்து விட்டுவிட்ட சமுதாயத்தில் அவர்களுக்கு உதவும் நல்லெண்ணம் கொண்ட கோபல் போன்றவர்களை பாராட்டுவோம்..// பாராட்டுவோம்! கோபல் அவர்களுக்கு ராயல் சல்யூட்!!1

  இளையராஜ, எஸ். ஜானகிதான்

  ஃப்ரூட் சாலட் மிக அருமை வழக்கம் போல்!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 14. அந்த நாய் காட்சிப் படம் ரொம்ப க்யூட்டாக இருக்கிறது

  பகிர்வுக்கு மிக்க நன்றீ!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 15. நல்ல தொகுப்பு அண்ணா...
  ரசிக்க வைத்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

   Delete
 16. கணவனை இழந்து நிற்கும் பெண்களின் நல் வாழ்வுக்காக உதவிடும் நோக்குடன்
  கோபால் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியானது போற்றப்பட வேண்டிய
  செயலாகும் ! இந்தக் காலத்துப் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வைக்கும் பெயர்களை
  நினைத்துப் பார்த்தாலே மனதிற்கு வருத்தமாகத்தான் உள்ளது சகோதரா சுவிசன் ,
  சுவிசிகா ,இன்னும் கொஞ்சம் சொல்லப் போனால் எந்தெந்த நாட்டில் வாழ்கின்றார்களோ
  அந்தத்த நாட்டின் பெயரைத் திணிப்பதற்கு எடுக்கும் முயற்சியானது நாம் தமிழர்
  என்ற உணர்வையே வேரோடு சாய்த்து விடுகின்றது .கார்ட்டுனைக் கண்டு ரசித்தேன் .
  மொத்தத்தில் இன்றைய ஃப்ரூட்சாலட் அருமை ! வாழ்த்துக்கள் சகோதரா .த .ம 1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்......

   Delete
 17. கோபல் அவர்களின் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! மெட்டி ஒலி காற்றோடு... பாடலின் இசைக் கோர்வைகள் அற்புதமாக இருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 18. ரெஜியா ..... :))

  மெட்டி பாடல் எனக்கும் பிடிக்கும். இதே படத்தில் பிரும்மானந்தன் பாடிய 'சந்தக்கவிகள் பாடிடும்' பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  கார்ட்டூன் நானும் ரசித்தேன்.


  ReplyDelete
  Replies
  1. முதலில் அந்தப் பாடலை தான் பகிர நினைத்திருந்தேன்.... எனக்கும் பிடித்த பாட்டு அது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 19. படத்தில் ஒரு பெண் வித்தியாசமாய்த் தெரிகிறாரே அவரும் விருந்தாவன் விதவையா. ? ஃப்ரூட் சலாட் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   அவர் தான் உதவி செய்யும் கோபல்.....

   Delete
 20. விருந்தாவனத்தில் விதவைகளைக் கொண்டு வந்து விடும் செய்தி இதுவரை அறியாதது.
  ஈவு இரக்கமற்ற மூடர்கள்... எப்படி இவனுங்களுக்கு மனம் வருகின்றது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 21. //நாங்களும் பூ வரைவோம்டே!// ரொம்ப தான் லொள்ளு!
  சாலட் அருமை!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.....

   Delete
 22. பழக்கூட்டு அருமை.
  இந்த பிருந்தாவன விதவைகள் பற்றிய ஒரு விபரணச் சித்திரம் பார்த்தேன், நம் புண்ணிய பாரதத்திலா இப்படி என கண்ணீர் வந்தது. பலர் பிள்ளைகள் இருந்தும் கைவிட்டப்பட்டதும்,கைவிட்ட போதும் இத் தாய்மார்கள் அந்த பிள்ளைகளுக்காக வேண்டுதல் செய்வது, தாயன்பின் மகத்துவத்தை சொல்லியது.
  இப் பெண் கோபலுக்கு சகல நலமும் கிட்டட்டும்.
  "மெட்டியொலி காற்றோடு" ராஜாவை நிலைநிறுத்திய பாடலில்களில் ஒன்று, அடியேனும் ரசிப்பேன்.
  ரங்கூன் ராதா- படம் பார்த்துள்ளேன்...இதையும் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருதுப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யோகன் பாரீஸ்....

   Delete
 23. அனைத்தும் அருமை.

  ஏன் உங்களின் வலைத்தளம் என் டாஷ்போர்டில் தெரிவதில்லை?
  ஒவ்வொரு முறையும் தமிழ்மண முதல் பக்கத்தில் கண்டதும் தான் வருகிறேன்:(

  ReplyDelete
  Replies
  1. எல்லோருடைய டாஷ்போர்டில் தெரிகிறதே..... ஏன் உங்கள் டாஷ்போர்டில் அப்டேட் ஆவதில்லை...... புரியவில்லை.

   சில மாதங்களாக ஒவ்வொரு நாளும் இந்திய நேரப்படி காலையில் ஒரு பதிவு வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். அதனால் தினம் ஒரு விசிட் அடிச்சுடுங்க! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 24. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 25. அருமையான செய்திகள்! விருந்தாவன் விதவைகளுக்கு உதவும் பெண்மணி பாராட்டத்தக்கவர்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 26. ஆனந்தமடம் என்று சொல்லும் பிருந்தாவன பெண்களுக்கு உதவும் கோபால் அவரகளுக்கு நன்றி.

  மெட்டி ஒலி பாடல் நன்றாக இருக்கிறது. எஅனக்கும் பிடித்த பாடல்.

  ரங்கோன்ராதா கதையும் படித்து இருக்கிறேன்., சினிமாவும் பார்த்து இருக்கிறேன். விரக்தியாக சிரித்துக் கொண்டு பானுமதி அவர்கள் இந்த வசனத்தை பேசுவார்கள். சொத்துக்காக இரு பெண்களை மணந்து முதல் மனைவியை படுத்தும் பாடு! கொடுமை.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 27. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 28. கோபல் அவர்களின் சேவைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 29. விருந்தாவன விதவைகள் பற்றி ஒரு கட்டுரை படித்திருக்கிறேன். பரிதாபத்திற்குரியவர்கள். அவர்களுக்கு வாழ்வு தரும் கோபல் வாழ்க, வாழ்க!
  Blackberry, apple என்பதெல்லாம் பழங்கள் என்ற நினைவே போய்விட்டது. என் பிள்ளை சொல்வான்: technology kills people என்று. மிகவும் உண்மை.
  அண்ணாவின் தமிழ் படிக்க நன்றாக இருந்தது.
  ப்ரூட் சாலட் இனிமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 30. ஃப்ரூட் சாலட் மிகவும் அருமை.
  அதிலும் அந்த கார்ட்டூன் படம் மிகவும் பொருத்தமான ஒன்று.

  ReplyDelete
 31. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....