வெள்ளி, 28 மார்ச், 2014

ஃப்ரூட் சாலட் – 86 – பஞ்சரத்னா – குக்கூ பாடல் – சிகரெட்....இந்த வார செய்தி:1995-ஆம் வருடம். ரமா தேவி எனும் பெண்மணிக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் – நான்கு பெண்கள், ஒரே ஒரு ஆண். உத்திரம் நாளில் பிறந்ததால், அந்த குழந்தைகளுக்கு உத்ரா, உத்ரஜா, உத்ரஜன், உத்தாரா, உத்தமா என பெயர் வைத்தார்கள் குழந்தையின் பெற்றோர்கள். அவர்கள் இருந்த வீடு பஞ்சரத்னா என அழைக்கப்பட்டது. பள்ளியில் அவர்கள் சேர்ந்தபோதும், அவர்கள் சபரிமலை பயணம் சென்ற போதும் அதை நாளிதழ்களில் எழுதினார்களாம்!

குழந்தைகள் பிறந்த ஏழாம் வருடம் – குழந்தையின் தந்தை தற்கொலை செய்து கொண்டுவிட, தாய் ரமாதேவி ஒரு இதய நோயாளியாக இருந்தும், தனது வாழ்க்கையில் பிடித்தம் வைத்திருக்க ஒரே காரணம் – தனது குழந்தைகள். தெரிந்தவர்கள் சிலர் செய்த உதவிகளினால் குழந்தைகளை வளர்த்து வந்தார். மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலை கிடைக்க அவருக்கு பண உதவி செய்தவர்கள் அனைவரும் பணத்தினைத் திரும்பிக் கேட்க, அனைவருக்கும் திருபித்தந்து விடுவதாக பத்திரம் எழுதிக் கொடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட நான்கு லட்சம் கடனையும் திருப்பிக் கொடுத்து விட்டார். 

இப்போது அந்த ஐந்து குழந்தைகளும் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேறி விட்டார்கள். ரமா தேவியின் ஒரே வருத்தம் தனது குழந்தைகளை சுற்றுலா கூட்டிச் செல்ல முடியவில்லையே என்பது தான்! வருடம் ஒரு முறை குருவாயூர் கோவில் செல்வதைத் தவிர வேறெங்கும் போக முடியவில்லையாம்!

தனது குடும்பத்தினை நல்ல விதமாகக் காப்பாற்ற முடியாது என்று தற்கொலை செய்து கொண்ட தகப்பனை விட, தனது உடல் நிலை சரியில்லாவிட்டாலும் குழந்தைகளுடைய நல்ல எதிர்காலத்திற்காக போராடும் தாய் ரமாதேவிக்கு நமது பாராட்டுகள்.

இந்த வார முகப்புத்தக இற்றை:

பெண்ணின் நெற்றியில் இருக்கும் பொட்டு,
ரெகார்ட் பட்டனைத்தான் நினைவுபடுத்துகிறது.

பத்து வருஷ, இருவது வருஷ பஞ்சாயத்து எல்லாம் கரெக்டா ஞாபகத்தில் இருக்கு இவங்களுக்கு.


இந்த வார குறுஞ்செய்தி:

உங்களிடம் என்ன இல்லை என்பதைப் பற்றி யோசிக்காதீர்கள்; உங்களிடம் இருப்பதையும் அதை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றியும் யோசியுங்கள்.


இந்த வார ரசித்த புகைப்படம்:Excuse me…..  என்னையா ஃபோட்டோ புடிக்கறீங்க! நான் இன்னும் ட்ரஸ்ஸே போடலை...... 

இந்த வார ரசித்த பாடல்:

குக்கூபடத்திலிருந்து ஒத்த நொடியில தான்”....  பாடல்.  முதல் முறை கேட்கும்போதே பிடித்த பாடல்.....  இனிமையான இந்த பாடலை நீங்களும் ரசிக்க....
ரசித்த கார்ட்டூன்:படித்ததில் பிடித்தது:

சிகரெட் ஒரு அபத்தமான பழக்கம். இதைச் சொல்லுவதற்கு என்னை விட தகுதியுள்ளவர்கள் வேறு எவரும் இல்லை. நான் கதாசிரியன். நான் எழுதுவதற்கும், சிந்திப்பதற்கும், சிகரெட் உதவி செய்கிறது என்று பொய்யாக நம்பி வந்தேன். சிகரெட் என்னுடைய மனோநிலையைச் சமன் செய்கிறது என்று இன்னொரு அசட்டு நம்பிக்கையும் எனக்குள் இருந்தது. இவை எல்லாமும் பொய். கலப்படமற்ற பொய்.

சிகரெட் என்ற கொடிய பழக்கத்தை நான் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருந்தால், அதிகப்படுத்திக் கொள்ளாமல் இருந்தால், இன்னும் ஆரோக்கியமாக இன்னும் தெளிவாக, இன்னும் அமைதியாக இருந்திருப்பேன்.

உங்களில் எவருக்கேனும் இந்தப் பழக்கம் இருந்தால், உடனடியாக அதை அறுத்தெறியும் வேகத்தை மேற்கொள்ளுங்கள். சட்டென்று விடுதலை பெறும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். செயலாக்குங்கள். ஒவ்வொரு இந்தியனுக்கும் கௌரவமும், கம்பீரமும் ஐம்பது வயதிற்கு மேல் தான் கிடைக்கின்றன. அந்த எண்ணிக்கையைத் தாண்டாமல் நீங்கள் இறந்து போவீர்கள் எனில், இதைவிட துரதிர்ஷ்டம் வேறு எதுவும் இல்லை. எனவே, சிகரெட்டிலிருந்து உடனடியாக விடுதலை பெறுங்கள்.

இதைச் சொன்னது நான் இல்லீங்க்ணா! இதைச் சொன்னவர் பாலகுமாரன்..... 

என்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


60 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. த்ங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 2. தாய் ரமாதேவி அவர்களின் நிலை மேலும் சிறக்க வேண்டும்...

  குறுஞ்செய்தி அருமை... புகைப்படம் அழகோ அழகு...

  "இறந்து போனாலும் பரவாயில்லை" என்று அடிமையானவர்களை ஒன்றும் செய்யவும் முடியாது... சிகரெட் பழக்கம் மட்டும் அல்ல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 3. பெண்ணின் நெற்றியில் இருக்கும் பொட்டு ரெகார்ட் பட்டனை நினைவுபடுத்துகிறதா? எழுதினவருக்கு வயது 80க்கு மேல இருக்கும் போல... இப்பல்லாம் கடுகைவிடச் சின்ன சைஸ்ல அதும் மூக்கு மேல தானே பெண்கள் பொட்டு வெச்சுக்கறாங்க. அதத் தேடிக் கண்டுபிடிச்சு பாக்கறதுக்குள்ளயே தாவு தீந்துடுமே...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.ஹா.... எனக்கும் அந்த டவுட் இருக்கு.. அந்த கடுகளவு ஸ்டிக்கர் பொட்டை அட்டையிலிருந்து எப்படி பிரித்து எப்படி ஒட்டிக்கொள்கிறார் என்று! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

   நீக்கு
 4. ரமாதேவி போனற்வர்கள் தாய்மை என்னும் வார்த்தைக்கு வாழும் உதாரணங்கள். குறுஞ்செய்தியும், கார்ட்டூனும் ரசிக்க வைத்தன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

   நீக்கு
 5. ரமாதேவிக்குப் பாராட்டுக்கள்... குக்கூ இப்போது எனது பேவரிட்.... பாலகுமாரன் அவர்கள் சொன்னது மிகச்சரி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை. சரவணன்.

   நீக்கு
 6. ரமாதேவி தாய்மைக்கு உதாரணம் ..ஃப்ரூட் சாலட் அருமை..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 7. சமூகத்திற்குத் தேவையானது ரமாதேவி அவர்களைப்பற்றிய அறிமுகம் !
  குழந்தைபடமும் கமெண்டும் அருமை !
  பாலகுமாரனின் அனுபவம் பல பேரைத் திருத்தட்டும் !
  த ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 8. ஆண்களை விட பெண்கள் அதிகமாய் பிரச்சனைக்குப் பயந்தாலும் குழந்தைகள் அவர்களின் நம்பிக்கையை வளர்த்துவிடுகிறார்கள்....குக்கூ பாட்டு ஏன் முடியுதுன்னு இருக்கு.... சிகரெட் பிடிப்பவர்கள் தங்களை மட்டுமல்ல தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் அதன் பாதிப்பை கொடுத்து விடுகிறார்கள்(Passive Smoking)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Passive Smoking - பல சமயங்களில் எரிச்சலூட்டும் விஷயம்.

   நீக்கு
 9. பஞ்சரத்னங்களின் தாய் ரமாதேவிக்கு பாராட்டுகள்!

  முகப்புத்தக இற்றை - உண்மை! உண்மை!

  குழந்தைகள் எப்போதுமே அழகுதான்.

  சிகரெட் - சோம்பேறிகளின் பொழுதுபோக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

   நீக்கு
 10. ரமாதேவி பற்றி செய்தி நெகிழ செய்தது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   நீக்கு
 11. அந்த அம்மாவுக்கு ஒரு சல்யூட்...
  கார்ட்டூன் அருமை...
  மொத்தத்தில் ப்ரூட் சாலட் அருமை அண்ணா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

   நீக்கு
 12. இன்றும் பெண்மையைப் போற்றி நிற்கும் காரணம் அறியத் தந்த சிறப்பான பகிர்வு கண்டு
  மகிழ்ந்தேன் !! அம்மா ஆயிரம் முறை சொன்னாலும் அலுக்காத வார்த்தை .குழந்தைகளைக்
  காக்கும் இந்த சக்திக்கு ஈடு இணை எவரும் இல்லை எனலாம் .அழகிய குழந்தைகளின்
  கள்ளமற்ற சிரிப்பில் உயர்ந்து நிற்கும் தாயிவளை வாழ்த்தி வணங்கும் அதே சமயம்
  இப் பகிர்வினைத் தந்த அன்புச் சகோதரர் தங்களுக்கும் என் நன்றி கலந்த வாழ்த்தினைத்
  தெரிவிப்பதில் ஆனந்தம் அடைகின்றேன் .வாழ்த்துக்கள் சகோதரா .பகிர்வுக்கு மிக்க ¨
  நன்றி ¨! த .ம .6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   நீக்கு
 13. பஞ்சரத்னாக்களை பெற்ற தாய் ரமா தேவியின் தைரியமும் தன்னம்பிக்கையும் சிறப்பு! சிகரெட் விழிப்புணர்வு வாசகங்கள் அருமை! க்ளிக் செம அழகு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 14. நல்ல தொகுப்பு. ரமாதேவி பாராட்டுக்குரியவர்.பஞ்சரத்தினங்கள் நன்றாகப் படித்து வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 15. ரமாதேவி பற்றியும் அவர் குழந்தைகள் பற்றியும் தெரியும். ஆனால் அவர் குடும்ப விவரம் தெரியாது. வாழ்க்கையில் ஒரு பெண் எப்படி இருக வேண்டும் என்பதற்கு ரமாதேவிதான் உதாரணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 17. அந்த புகைப்படத்தை எங்கேயிருந்து பிடித்தீர்கள் வெங்கட்? கொள்ளை அழகு!

  ரமா தேவிக்கு ஒரு சல்யூட்! ஒரு குழந்தையை வளர்ப்பதற்கே அலுத்துக்கொள்ளுபவர்கள் இடையே ஐந்து குழந்தைகளை பல அல்லல்களிடையே வளர்ப்பது சாதாரண விஷயமில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இணையத்தில் தான்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு
 18. ஃப்ரூட் சாலட் அனைத்தும் அருமை நாகராஜ் ஜி.

  படம் சூப்பர்ங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   நீக்கு
 19. பஞ்சரத்னாவில் தொடஞ்கி சரியான பஞ்ச் வைத்து முடித்துள்ளீர்கள் !
  அருமை சகோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   நீக்கு
 20. அந்த தாய் ரமா தேவியின் ஆசைப்படி குழந்தைகள் நன்கு படித்து வாழ்க்கையில் செட்டில் ஆவார்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   நீக்கு
 21. தாய்மையின் சிறப்பை ரமாதேவியிடம் கண்டேன்.
  குழந்தைகள் நல்லபடியாக வளர்ந்து தன் தாயை சந்தோஷப்படுத்த வேண்டும். ரமாதேவியும் உடல்நலத்துடன் இருக்க அந்த இறைவன் அருள்புரிய வேண்டும்.
  மற்ற பகிர்வுக்ளும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 22. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 23. தாய்மையின் பெருமையென போற்ற வேண்டிய இத்தாயை, இப்பிள்ளைகள் மேலும் உயர்த்துவார்கள்.
  இவ்வாரம் நீங்கள் ரசித்த புகைப்படத்தையும், அடக்ற்குக் கொடுத்துள்ள விளக்கம் எவருமே ரசிக்கக் கூடியதே!
  எழுத்தாளர்களோ, நடிகர்களோ எதைச் சொன்னாலும் செய்யும் நம் மக்கள் புகைத்தல், குடித்தலில் அசைவதேயில்லை.
  புருட் சலாட் சுவைத்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யோகன் பாரிஸ்.

   நீக்கு
 24. அருமையான குழந்தைகளை தாயுடன் தவிக்கவிட்டு தற்கொலை செய்துகொள்ள எப்படித்தான் தந்தைக்கு மனசு வந்ததோ! அந்த தாயின் மன தைரியத்தைப் பாராட்டியே ஆகவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்.

   நீக்கு
 25. //குழந்தைகளுடைய நல்ல எதிர்காலத்திற்காக போராடும் தாய் ரமாதேவிக்கு நமது பாராட்டுகள்// உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர். குயிலோசை கேட்டேன்! பகிர்விற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   நீக்கு
 26. சமவயதுள்ள ஐந்து பிள்ளைகளையும் ஒன்றாகப் பார்க்கும்போது அவர்களின் மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக்கொள்கிறது. இந்த சிரிப்புக்கு எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார் !

  ரமாதேவியின் கணவர் மாதிரியே எங்கள் ஊரிலும் மருத்துவமனயில் இருந்த மனைவியைப் பார்க்க போனவன் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்த செய்தியைக் கேட்டு பயந்து ஓடிவந்தவன்தான், வேறு திருமணம் செய்துகொண்டு மனவி குழந்தைகளுடன் சுகமாக இருக்கிறான். முதல் மனைவியோ பால் வாங்கக்கூட வசதியில்லாமல் ஒவ்வொரு குழந்தையாய் இழந்துவிட்டு கூலி வேலை செய்துகொண்டு இருக்கிறார்.

  குட்டிப்பாப்பா அழகு.

  ரமாதேவியின் கணவர் மாதிரியே எங்கள் ஊரிலும் மருத்துவமனயில் இருந்த மனைவியைப் பார்க்க போனவன் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்த செய்தியைக் கேட்டு பயந்து ஓடிவந்தவன்தான், வேறு திருமணம் செய்துகொண்டு மனவி குழந்தைகளுடன் சுகமாக இருக்கிறான். முதல் மனைவியோ பால் வாங்கக்கூட வசதியில்லாமல் ஒவ்வொரு குழந்தையாய் இழந்துவிட்டு கூலி வேலை செய்துகொண்டு இருக்கிறார்.

  குட்டிப்பாப்பா அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு முறை ? :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   நீக்கு
 27. ரமாதேவி பாராட்டுக்குரியவர். குழந்தைகளும் அவரும் பலகாலம் நல்லபடியாக வாழ இறைவன் அருள்புரியட்டும். பஞ்சரத்னங்களுக்கு வாழ்த்துக்கள்!
  பெண்களின் பொட்டு பற்றிய செய்தி இதழ்களில் புன்னகை வரவழைத்தது.
  ஆடு பாவம்!
  சிகரெட் பற்றி பாலகுமாரன்....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   நீக்கு
 28. பாலகுமாரன் இன்னும் சிகரெட் புகைப் பவராக இருந்தால் அதை நிறுத்தச்சொல்லும் அருகதை அவருக்குக் கிடையாது .ரமாதேவியின் கடமை உணர்வு பாராட்டத்தக்கது.

  பதிலளிநீக்கு
 29. ஒரு நாளைக்கு பத்து பனிரெண்டு பாக்கெட் சிகரெட் குடித்து வந்தவர். மேலே சொன்னது அவற்றை அறவே நிறுத்திய பிறகு!

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

  பதிலளிநீக்கு
 30. முதல் விஷயம் டாப். அந்த ஆண்மகனிடம் இல்லாத தன்னம்பிக்கை இந்தப்பென்மநியிடம். பாராட்டப்படவேண்டியவர். மற்ற எல்லாவற்றையுமே ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெண்மணி பென்மநி ஆனதுக்கு வருந்துகிறேன்! :(.......... :))))

   நீக்கு
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....

   தன்னம்பிக்கை மிக்க பெண்மணி.....

   நீக்கு
  3. Transliteration - சில சமயங்களில் இப்படித்தான் படுத்தி விடுகிறது ஸ்ரீராம்! :)))

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....