புதன், 12 மார்ச், 2014

மச்சான் அவ உன்ன பார்க்கறாடா.....இந்த வார குறும்படம் மலையாள மொழியில். ஆனாலும் உங்களுக்கு மலையாளம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை! ஏனெனில் இதில் வசனமே இல்லை! :) மலையாளத்தில் “அலியா அவளு நின்னே நோக்குன்னுஎன்ற பெயரில் வெளிவந்த இந்த குறும்படத்தின் எழுத்தும் இயக்கமும் டோனி டேவிஸ். Say Creations தயாரிப்பில் வெளி வந்த இக்குறும்படத்தின் கதையைப் பார்க்கலாம்!

ஒரு அறையில் பல மாணவர்கள் தேர்வு எழுத தயாராக அமர்ந்திருக்கிறார்கள். தேர்வு ஆரம்பிக்கிறது. அனைத்து மாணவர்களும் கேள்வித்தாளை வாங்கி விடைகளை எழுதத் துவங்க, ஒருவர் மட்டும் கேள்விகளுக்கு விடை தெரியாது முழித்துக் கொண்டிருக்கிறார். முன்னால் இருக்கும் நபரிடம் அவரது விடைத்தாளை காண்பிக்கும்படி கேட்கிறார். அவர் மறுக்க, தவிக்கிறார்.

அங்கும் இங்கும் பார்த்து யாராவது தனக்கு கேள்வித்தாளை தரமாட்டார்களா என தவிக்கிறார்.  இன்னும் ஒருவரிடம் கேட்க அவரும் தர மறுக்க, என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறுகிறார். பிறகு அவருக்கு ஒரு யோசனை வருகிறது. காண்பிக்க மறுத்த நபரிடம் மச்சான் அவ உன்ன பார்க்கறாடாஎன்று சொல்ல, பின்னால் இருக்கும் பெண்ணைத் திரும்பிப் பார்க்கிறார்.

பெண்ணைப் பார்த்ததும் அந்த நபருக்கு பல நினைவுகள். இப்போது முதல் நபர் விடைத்தாளைக் கேட்க, சற்றே நகர்த்தி வைத்து விடைகளை காண்பிக்கிறார். சில நிமிடங்களுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை திரையில் பார்க்கலாமே! குறும்படம் பார்க்க உங்களுக்குத் தேவை ஐந்து நிமிடங்கள் மட்டுமே! :)

)என்ன நண்பர்களே, இந்த வார குறும்படத்தினை ரசித்தீர்களா? மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

38 கருத்துகள்:

 1. குறும்படத்தை இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 2. அடக்கடவுளே....
  ஒரு பார்வைக்கே ஒரு பரிட்சை வீணா....
  பாவம் அந்தப் பையன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்...

   ஒரு பார்வை கூட இப்படி ஆக்கிடுகிறது சில இளைஞர்களை! :(

   நீக்கு
 3. இறுதி ட்விஸ்ட் பரிதாபமுண்டாக்குகிறது. காலத்தே பயிர் செய் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்? நல்ல ரசிக்கவைத்த குறும்படம். பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. கோவிந்தா! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி!

   நீக்கு
 5. ரசித்தேன்.....ரசித்தேன்......ரசித்தேன் tha.ma 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 6. அய்யோ பாவங்க அந்த பையன்.... மலையாளம்னு சொன்னவொன்ன எளிதாக புரிஞ்சிக்கற மாதிரி பேசியிருப்பாங்கன்னு பார்த்தா யாருமே பேசவேயில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   நீக்கு
 7. பகல் கனவா?ரசித்தேன். அப்துல் கலாம் இதைப் பார்க்க வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 9. குறும்படமா? மாணவர்களைக் கேலி செய்யும் குறும்புப் படமா? இந்தப் படத்தை பார்த்த எந்தப் பையனும் பரீட்சை ஹாலில் எந்தப் பெண்ணையும் திரும்பிப் பார்க்க மாட்டான் என்று தோன்றுகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   நீக்கு
 10. தலைப்பைப் பார்த்து வியந்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 11. பதில்கள்
  1. இந்த வாரமும் குறும்படம் பார்த்துட்டீங்க போல! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 12. பகிர்வுக்கு நன்றி! இணையம் ஸ்லொ! பின்னர் பார்க்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 13. அடப் பாவமே. பரீட்சையே கனவாகி விட்டதே. குறும்புப் படம் இந்தக் குறும்படம். மிக நன்றி. மிக ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா..

   நீக்கு
 14. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யோகன் பாரிஸ்.

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 16. இந்த படத்தை நேற்றே அலுவலகத்தில் பார்க்க முடியாமல் போய், வீட்டிலும் பார்க்க முடியாமல் போய், கடைசியில் இன்று அலுவலகத்துலேயே பார்த்து விட்டேன்.

  நல்ல படம். பகிர்ந்துக்கொந்த்தற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 17. ”அளியா! அவளு நின்னே நோக்குன்னு”

  ஞானும் திரிச்சி நோக்கி சேட்டோய்!.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி......

   நீக்கு
 18. "அவ யாரோ எண்ணி சிரிக்க இவன் தன்னை தான் நினைக்க " ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

   நீக்கு
 19. அய்யோ பாவம் பையன் என்றாகிவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படம் முதல் முறை பார்த்தபோது எனக்கும் அதே உணர்வு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....