வெள்ளி, 7 மார்ச், 2014

ஃப்ரூட் சாலட் – 83 – வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் -இளவரசி – நல்ல தலைவர்
இந்த வார செய்திகள்:

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் வாணியம்பாடி செல்லும் சாலையோரத்தில் இருக்கிறது ஏலகிரி ஓட்டல். அங்குச் சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம் கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர். கல்லாவில் இருந்தவரும் காசு கேட்பதில்லை. பணத்துக்குப் பதில் வணக்கம் செலுத்தினால் போதுமா? விசாரித்தபோதுதான் மேலே தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக் காட்டினார். விஷயம் புரிந்தது.

முதியோர், ஊனமுற்றோர்களுக்கு காலை 8 முதல் 11 மணி வரை இலவச உணவு’ (100 பேர் வரை), ‘பால் வாங்கப் பணமில்லையென்றால் குழந்தைகளுக்கு இலவசமாகப் பால்’, ‘வாரம் 100 மாணவர்களுக்கு இலவசமாக பேனா அல்லது பென்சில்’, ‘1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை முதல் மாலை வரை பாதி விலையில் உணவுஇந்த அறிவுப்புகள் சிலேட்டுப் பலகைகளில் சாக்பீஸால் எழுதப்பட்டிருந்தன.

ஆச்சரியத்துடன் கேட்டால், “பணத்துக்காக வாழ்றதில்லிங்க; வாழ்றதுக்குதாங்க பணம்பெரிய தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார் இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ். அவர் இந்தச் சேவையை 25 ஆண்டுக்கும் மேலாகச் செய்துவருகிறார். ஒரு நாளைக்கு ஏறக்குறைய 100 பேர் வரை இந்த ஓட்டலை நம்பியே காலம் தள்ளுகின்றனர்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வட மற்றும் தென் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தை இணைக்கும் முக்கியச் சந்திப்பு. இந்த நிலையத்தைக் கடந்ததுதான் அனைத்து ரயில்களும் பயணிக்கின்றன.

பயணத்தின்போது காலி தண்ணீர் பாட்டிலை ஜன்னல் வழியே வீசுவதைப்போல குடும்பத்தில் பாரமென கருதப்படும் மனிதர்களை ரயிலில் அழைத்து வந்து இங்கே இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் முதியவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். மாதந்தோறும் குறைந்தபட்சம் 15 பேராவது இப்படி அனாதைகளாகத் தனித்து விடப்படுகின்றனர்.

திக்குத் தெரியாமல் தவிக்கும் அவர்கள் ஜோலார்பேட்டையிலேயே சுற்றித்திரிகின்றனர். இவர்களுக்கு இந்த ஓட்டல் ஒரு அன்னச் சத்திரமாக இருக்கிறது. பசி என்ற உணர்வு மட்டும்தான் சுயநினைவு இல்லாத வருக்குக்கூட உணவு நமக்கு தேவை என்பதை உணர்த்து கிறதுஎன்கிறார் நாகராஜ்.

இவர்கள் தவிர சுற்றுவட்டாரங்களில் வீடுகளில் கவனிக்க முடியாத நிலையில் இருக்கும் முதியவர்களுக்குத் தேவையான உணவை அவர்களது குடும்பத்தினர் வந்து இலவசமாக பார்சல் வாங்கிச் செல்லலாம். நாகராஜின் மனைவி சுஜாதாவும் தன் கணவரின் இந்தத் தொண்டுக்குப் பக்கபலமாக இருக்கிறார்.

மிகச் சின்ன வருமானத்தில் இதையெல்லா எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “இவர்களுக் கென்று தனியாக உலை வைக்கப்போதில்லை. வழக்க மாக சமைக்கும் அளவோடு கொஞ்சம் கூடுதலாக சமைக்கிறேன். 5 கிலோ மாவு புரோட்டோ போட்டாலும் 10 கிலோ மாவு போட்டாலும் மாஸ்டருக்கு ஒரே கூலிதான். எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான் செலவாகிறது.

சில ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்புதான் என்றாலும் எனக்கு குடும்பம் நடத்தத் தேவையான லாபம் கிடைக்கிறது. மனதுக்கும் சந்தோஷமாக இருக்கிறதுஎன்கிறார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி நிற்கும்' நாகராஜ்.
 
நன்றி:  தி இந்து.

இந்த வார முகப்புத்தக இற்றை:

அரண்மனையில் ஒரு போட்டி!

விஷ பாம்புகள் மற்றும் முதலைகள் நிறைந்த ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000 வராகன் பொன், அல்லது 10 கிராமங்கள், அல்லது தன் ஒரே மகளான இளவரசியை திருமணம் செய்வது, இந்த மூன்றில் ஒரு பரிசை போட்டியாளர் தேர்ந்தெடுக்கலாம்.

உயிர் பிழைப்பது சிரமம் என்பதால் போட்டி அறிவித்து வெகு நேரம் ஆகியும் யாரும் போட்டிக்கு வரவே இல்லை.

திடீர் என்று ஒரு இளைஞன் குளத்தில் குதித்ததும் மன்னருக்கு குஷி. உயிரையும் துச்சமாக மதித்து ஒரு சாதனையாளன் போட்டிக்கு தயாராகி விட்டானே?

ஒரு வழியாக நீந்தி பத்திரமாக கரையேறி விட்டான். அவனை கட்டி அணைத்து, பாராட்டுகளை தெரிவித்து, ‘உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள்! ஆயிரம் வராகன் பொன்னா?

"இல்லை..."

"
பின்னே... 10 கிராமங்களா?"

"
ப்ச்! வேண்டாம்..."

"
ஆஹா! அப்படி என்றால் இளவரசியை திருமணம் செய்து கொள்கிறாயா?"

"தேவை இல்லை..."

“இது மூன்றில் ஒன்றை தானே பரிசாக அறிவித்து இருந்தேன். மூன்றுமே வேண்டாம் என்று சொல்லி விட்டாயே? ஆனாலும் உன்னை வெறும் கையுடன் அனுப்ப எனக்கு மனம் வரவில்லை உனக்கு என்ன வேண்டுமோ அதை கேள், கட்டாயம் தருகிறேன்!
 
அதற்கு அவன் சொன்ன பதில்: "என்னை எவன் இந்த குளத்தில் தள்ளி விட்டான் என்று தெரியனும்...!"

இந்த வார குறுஞ்செய்தி:

THERE ARE THREE KINDS OF PEOPLE IN THE WORLD – THE WILLING, THE WON’T AND THE CAN’T. THE FIRST ACCOMPLISH EVERYTHING; SECOND OPPOSE AND THE 3RD FAIL IN EVERYTHING.

ரசித்த ஓவியம்:இந்த வார ரசித்த பாடல்:

வயசு பொண்ணு படத்திலிருந்து காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்துபாடல் – இந்த வார ரசித்த பாடலாய்....
ரசித்த கார்ட்டூன்:

தேர்தல் 2014 தேதிகள் அறிவித்த பின் பல நாளிதழ்களில் மிகச் சிறப்பான கார்ட்டூன்கள் வெளி வருகின்றன.  அவற்றில் ரசித்த சில டூன்கள் இந்த வாரம் முதல் ஃப்ரூட் சாலட்-ல் ஒரு பகுதியாக வெளியாகும் என்று இத்தளத்தின் வாசகர்களை எச்சரிக்கிறேன்! முதல் படம் இன்றே! நானும் கட்சி ஆரம்பித்து விட்டேன்!நன்றி: தினமணி.

படித்ததில் பிடித்தது:

ஒரு நல்ல ட்ரைவருக்கு இலக்கணம்.... அவரு வண்டியை ஓட்டும்போது உட்கார்ந்திருக்கறவங்களுக்கு அவர் ஓட்டறது மாதிரி தெரியப்படாதாம். அதாவது சடன் பிரேக் போடறது... குண்டு குழியில் வண்டிய விடறது.... அடுத்த வண்டிக்காரனைப் ‘போடா கய்தேன்னு திட்டறது... இந்த மாதிரி தெருக் காரியங்களைச் செய்யாம ஓட்டுறவரே நல்ல டிரைவர். இதே இலக்கணத்தைத் தான் ஒரு தலைவருக்கும் சொல்வாங்க. நல்ல தலைவர் என்கிறவரு, தான் தலைமை தாங்கி நடத்தறோம் என்பதைக் காட்டிக்காமலே, மக்களுக்கு வழி காட்டணும்

-   திரு க. சமுத்திரம் எழுதிய பூநாகம் சிறுகதையிலிருந்து.....

என்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

38 கருத்துகள்:

 1. , “பணத்துக்காக வாழ்றதில்லிங்க; வாழ்றதுக்குதாங்க பணம்” பெரிய தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார்..

  பெரிய பெரிய தத்துவங்களெல்லாம் மிக எளியவைகள் தாம்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 2. நாகராஜின் செயல்கள் சமுக தலைவர்களை மட்டுமல்ல இந்த செய்தியை படிக்கும் நம்மளையும் வெட்கப்படச் செய்கிறார்..இந்த செய்தியை படித்து முடித்தவுடன் யாரோ நம்மை செருப்பால் அடித்த உணர்வுதான் தோன்றுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 4. நாகராஜ் போன்றோரின் செயல்களைப் படிக்கும் போது சமூகத்தின் மேல் நம்பிக்கை வருகிறது. இது போல் நற்சிந்தனைத் தகவல்களை மேலும் மேலும் அள்ளித் தாருங்கள். வாழ்க.

  (க - இல்லை - சு. சு. சமுத்திரம் அவர்களின் வரிகள் அழகு. நான் தலைவனானால் கடைபிடிக்கிறேன்.
  (தலைவனாவது அப்புறம் இருக்கட்டும். முதல்ல நல்ல ட்ரைவராகுமய்யா என்று சொல்வது கேட்கிறது.)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

   நீக்கு
 5. இந்த வார பழக்கலவை வழக்கம்போல் சுவையாக இருந்தது. நாகராஜ் தம்பதியனர் போன்றவர்கள் இருப்பதால் தான் மழை பெய்கிறது என நினைக்கிறேன். நீங்கள் இரசித்த கேலிச் சித்திரத்தை நானும் இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா...

   நீக்கு
 6. நாகராஜ் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்... மற்ற ஃப்ரூட் சாலட் நல்ல சுவை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 7. //ஆச்சரியத்துடன் கேட்டால், “பணத்துக்காக வாழ்றதில்லிங்க; வாழ்றதுக்குதாங்க பணம்” பெரிய தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார் //
  அவருக்கு ஆயிரம் பாராட்டுக்கள்! GREAT MAN!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 9. உள்ளத்தவும் உயரிய பண்பு நிறைந்த தம்பதிகளின் தொண்டு வியப்பை
  ஊட்டுகிறது ! பணமே தான் வாழ்வென்று கருதும் இக் காலத்திலும் இவர்கள்
  போன்ற மனிதநேயம் மிக்க உறவுகளும் உள்ளதே என்று நினைக்கும் போது
  மகிழ்வு பிறக்கிறது .அருமையான இன்றைய பகிர்வுக்குப் பாராட்டுக்களும்
  வாழ்த்துக்களும் சகோதரா .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்......

   நீக்கு
 10. நாகராஜ் தம்பதியினர் உண்மையிலேயே போற்றப்பட வேண்டியவர்கள். இப்படியும் ஒரு சில நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
  அரண்மனைப் போட்டி அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 11. Man management -ல் அதிகாரி பணியாளிடம் அவன் அவர் சொல்லி வேலை செய்வதா நினைக்கக் கூடாது என்பது முக்கியம் .க.சமுத்திரத்தின் “பூ நாகம் “ சிறுகதையில் இருந்து எடுத்து எழுதி இருந்ததைப் படித்தபோது தோன்றியது. ருசிக்கும் ஃப்ரூட் சலாட்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஜீவன் சுப்பு..

   நீக்கு
 13. முதல் செய்தி நானும் 'பாசிட்டிவ்'க்காக எடுத்து வைத்திருக்கிறேன்!

  இற்றை வெவ்வேறு ரூபங்களில் படித்திருக்கிறேன்!

  குறுஞ்செய்தி அருமை.

  காணொளி என் பாஸுக்கு பிடித்த பாடல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 14. Aranmanail potti... Nalla kadhai . Nagaraj avargal paarattukkuriyavargiral, Nall manam. vaazhththukkal. Kanch Pattuduththi... perumbalanor rasikkum nalla paadal. Nennda naatkalukkuppiragu kettu rasiththen.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 15. இன்று ரொம்ப ஸ்வீட்டா இருந்தது சாலட் !
  நாகராஜ் போன்றோரால் எல்லோர்க்கும் பெய்யும் மழை!!
  அப்புறம் இளவரசி ஜோக் இன்னும் சிரிச்சுட்டு தான் இருக்கேன் !!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.

   நீக்கு
 16. அருமையான பகிர்வு! ஜோலார்பேட்டை விசயம் நானும் இந்துவில் படித்தேன்! அருமையான மாமனிதர் நாகராஜ்.பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 17. நாகராஜ் அவர்களுக்கு சல்யுட்.. காஞ்சிப் பட்டுடுத்தி அருமைங்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   நீக்கு
 18. பணத்துக்காக வாழ்றதில்லைங்க... ஓட்டல்
  காஞ்சிப்பட்டுடுத்தி... பாடல்
  கார்ட்டூன்... என அனைத்தும் அசத்தல் அண்ணா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   நீக்கு
 19. நாகராஜ் அவர்களின் பேட்டி ஏற்கெனவே படித்திருந்தேன்... மிகப் பெரிய தத்துவத்தை மிக இயல்பாய் சொல்லிச் செல்கிறார்கள்....
  அந்த காலத்தில் இலங்கை வானொலி நிலைய ஒலிபரப்பில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்ட பாடல் இன்றுதான் அதன் படமும், ஒளிப்படமும் பார்த்தேன்.. ஒருவேளை இப்போது இந்தப் பாடல் வந்திருந்தால் பெண்ணாதிக்க பாடல் எனச் சொல்லியிருப்பேனோ என்னவோ ஏற்கெனவே ரசித்த பாடலாகையால் பார்த்தும் ரசித்தேன் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்......

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....