எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, February 24, 2014

நைனிதால் பார்க்கலாம் வாங்க!



ஏரிகள் நகரம் – பகுதி 1

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைஎன்ற தலைப்பில் சபரிமலை சென்று வந்த அனுபவங்களை எழுதியது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். மொத்தம் பதிமூன்று பகுதிகளாக அந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்ட பிறகு சுமார் ஒன்றரை மாதமாக பயணக்கட்டுரைகள் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை.  சென்று வந்த பயணங்கள் இருந்தாலும் ஏனோ எழுத இயலாமல் போனது. 



இப்போது மீண்டும் ஒரு பயணத்தொடர் இன்றிலிருந்து ஆரம்பிக்க இருக்கிறேன். கடந்த சில பயணத்தொடர்கள் ஆன்மீகம் சம்பந்தமாக அமைந்துவிட்டதால் மீண்டும் ஒரு ஆன்மீக ஸ்தலம் சென்றதை தொடராக எழுத வேண்டாம் என நினைத்தேன். அதனால் முதலில் சென்ற ஆன்மீகப் பயணம் பற்றி பிறகு எழுத முடிவு செய்தேன். இந்த வாரம் முதல் ஏரிகள் நகரம் என்று அழைக்கப்படும் நைனிதால் சென்று வந்த அனுபவங்களையும், அங்கே கண்ட காட்சிகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணி இருக்கிறேன்.



உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கின்ற ஒரு மலைவாசஸ்தலம் நைனிதால். புது தில்லியிலிருந்து சாலை வழிச் சென்றால் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏரிகளின் நகரத்தினை அடைய நீங்கள் [G]காசியாபாத், ஹாபூர், மொராதாபாத், ஹல்த்வானி வழியாகச் சென்றால் சுமார் ஏழு மணி நேரம் ஆகலாம். மொராதாபாத் வரை சாலை நன்றாக இருக்கும். அதன் பிறகு ராம்பூர் வரை குண்டுகுழியாக இருக்கும் சாலை தான் – பிரசவத்திற்கு இலவசம் என்று ஆட்டோவில் எழுதி இருப்பதை இந்தச் சாலையில் தைரியமாக எழுதி வைக்கலாம்.



அப்படி சாலையில் செல்வது உங்களுக்குப் பிடிக்காது எனில், ஆகாய மார்க்கமாகவும் செல்லலாம். ஆனால் நைனிதால் நகரில் விமான நிலையம் இல்லை. அருகிலுள்ள விமான நிலையம் பந்த்நகர் எனும் இடத்தில் இருக்கிறது. நைனிதால் நகரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. ஆனால் தில்லியிலிருந்து பந்த்நகர் செல்லும் விமானங்கள் அதிகம் இல்லை.  



அப்படி இல்லையெனில், ரயிலிலும் செல்ல முடியும். நைனிதால் நகரத்தில் ரயில் நிலையம் ஏதுமில்லை. பக்கத்திலிருக்கும் ரயில் நிலையம் காத்கோதாம் [KATHGODAM] – தில்லி நகரிலிருந்து இரண்டு ரயில்கள் காத்கோதாம் வரை செல்லும் – சுமார் ஏழு மணி நேரப் பயணம்.  காத்கோதாம் நகரிலிருந்து நைனிதால் சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவு. அதை சாலை வழியாகத்தான் கடக்க வேண்டும்.



நாங்கள் தேர்ந்தெடுத்தது சாலைப் பயணம் தான் – எனக்குப் பிடித்ததும் அதுதான். எட்டு மணி நேரத்திற்கும் குறைவான பயணம் எனில் நிச்சயம் சாலை வழிப் பயணம் தான். கேரள நண்பர் ஜனவரி மாதத்தில் வரப் போவதாக தகவல் வந்ததும் எங்காவது செல்ல முடிவு செய்தோம். கூடவே இன்னும் சில தில்லி நண்பர்களும் சேர்ந்து கொள்ள மொத்தம் ஆறு பேர் செல்ல முடிவானது. உடனே ஒரு 6 + 1 இருக்கைகள் கொண்ட Toyato Innova  வாடகைக்கு ஏற்பாடு செய்து விட்டோம்.



ஜனவரி மாதம் 10-ஆம் தேதி [வெள்ளிக் கிழமை] இரவு 07.30 மணிக்கு தில்லியிலிருந்து புறப்படுவதாக முடிவு செய்திருந்தோம்.  கடைசி நேரத்தில் ஆறு பேர் பயணிக்க இருந்தது நான்கு பேராக குறைந்து விட்டது – அலுவலகத்தில் ஆணி அதிகம் என்பதால்! சுபயோக சுபதினம் என்று சொல்லக்கூடிய வேளையில் எனது இல்லத்திலிருந்து புறப்பட்டோம். தில்லியில் வருவாய் வரி அலுவலகம் இருக்கும் பகுதி வழியாகச் செல்லும்போது சாலையில் நிறைய வாகனங்கள்.  தில்லியின் எல்லையைக் கடப்பதற்கே எட்டரை மணி ஆகிவிட்டது.



[G]காசியாபாத் பகுதியைக் கடக்கும்போது அந்த பகுதிகளில் வரிசையாக சாலை ஓரங்களில் நிறைய கடைகள் – தரைக் கடைகள். ஜனவரி மாதம் – பொதுவாக குளிர் காலங்களில் வட இந்தியாவில் வேர்க்கடலை வியாபாரம் நிறையவே நடக்கும். ஓடுடன் இருக்கும் கடலையை வாங்கி அதன் ஓடுகளை உறித்து தெருவெங்கும் இறைத்தபடியே போவதில் இங்குள்ளவர்களுக்கு அலாதி ஆனந்தம்.  சாலை ஓரங்களில் தரையில் மண் அடுப்புகள் வைத்து வேர்க்கடலை வறுத்துக் கொண்டிருந்தார்கள்.



மதியம் சாப்பிட்டது, இந்த வேர்க்கடலைக் கடைகளைப் பார்த்ததும் கொஞ்சம் பசிக்கவும் ஆரம்பித்தது!  வேர்க்கடலை மட்டுமே சாப்பிட்டு பசியைப் போக்க முடியாது என்பதால் வண்டி தொடர்ந்து சென்றது. தில்லியிலிருந்து சுமார் 130 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கஜ்ரோலா எனும் இடத்தில் சில நல்ல உணவகங்கள் இருப்பதாக அலுவலக நண்பர் சொல்லி இருந்ததால் கஜ்ரோலா வரும் வரை வயிற்றையும் மனதையும் கட்டுப்படுத்தியபடி பயணித்தோம். கஜ்ரோலா பகுதியில் உள்ள மோ[G]கா உணவகத்தில் உணவு நன்றாக இருக்கும் என எங்களது வாகன ஓட்டுனர் பப்புவும் சொல்லவே அங்கே 10.45 மணி அளவில் சென்று அடைந்தோம்.



அங்கே நாங்கள் பஞ்சாபி தட்[d]காவுடன் அருமையான உணவு உண்டோம்.  ஐந்து பேர் [நாங்கள் நான்கு பேர் மற்றும் ஓட்டுனர் பப்பு] சாப்பிட 700 ரூபாய் மட்டுமே ஆனது. உணவகத்தில் உட்கார்ந்த உடனே நாம் கேட்காமல் அவர்களே Bislery சுத்திகரித்த தண்ணீர் வைக்க, பரவாயில்லையே என நினைத்தால் அதற்கும் சேர்த்து நம்மிடம் தான் வசூலிக்கிறார்கள் – எப்படியும் நீங்கள் தண்ணீர் வாங்கத்தானே போகிறீர்கள் என நினைத்திருப்பார்கள் போல!



உண்ட களைப்பில் கொஞ்சம் அசறலாம் என நினைத்தால் அந்த குளிரில் அங்கிருப்பதை விட பயணிப்பதே மேல் என ஓட்டுனர் பப்புவும் அபிப்ராயப்பட, எங்கள் பயணம் தொடர்ந்தது. இரவு நேரப் பயணம் எப்போதுமே எனக்குப் பிடித்தது. முன் இருக்கையில் அமர்ந்ததால் தூங்கவும் முடியாது – நாம் தூங்கி ஓட்டுனர் பப்புவும் தூங்கிவிட்டால்! அதனால் அவருடன் பேசியபடியே இரவின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டே நாங்கள் பயணித்தோம். 

சுகமான பயணமாக அமைந்தது அந்த இரவு நேரப் பயணம். என்னுடன் வந்த மற்ற மூன்று நபர்களும் பின் இருக்கைகளில் சுகமாக உறங்க, நான் பப்புவிடம் பேச்சுக் கொடுத்தபடி வந்தேன். பப்பு ஓரிரு வார்த்தைகள் மேலே பேசுவதில்லை.  சரி பயணம் முழுவதும் இப்படியே இருந்தால், அவருக்கும் போரடிக்குமே என நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் அவரையும் பேச வைத்துவிட்டனர் எங்கள் நண்பர்கள்.

என்னென்ன இடங்கள் பார்த்தோம், தங்கும் வசதிகள் எப்படி, பக்கத்தில் இருக்கும் பார்க்கவேண்டிய இடங்கள் என்னென்ன என்பதை வரும் பதிவுகளில் பார்க்கலாம்....  நைனிதால் நகரில் எடுத்த சில படங்கள் இங்கே முன்னோட்டமாகத் தந்திருக்கிறேன்.  கொடுத்த படங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். 

தொடர்ந்து ஒவ்வொரு திங்கள் கிழமையும் ஏரிகள் நகரம்பயணத்தொடர் வெளியிடலாம் என எண்ணம்....  வெளியிடலாம் தானே?

வேறொரு பகிர்வில் மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

60 comments:

 1. //ஓடுடன் இருக்கும் கடலையை வாங்கி அதன் ஓடுகளை உரித்து தெருவெங்கும் இறைத்தபடியே போவதில் இங்குள்ளவர்களுக்கு அலாதி ஆனந்தம்!..//
  என்ன ஒரு நகைச்சுவை.. வறுத்த கடலையைப் போல!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 2. அருமையான பயணப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜ்ராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. நைனிதால் படங்கள் அருமை... நாங்களும் கூடவே ஜில்லென்று பயணிக்கிறோம்...

  ReplyDelete
  Replies
  1. பயணத்தில் தொடர்ந்து வருவதில் மகிழ்ச்சி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. படங்களுடன் பயணக்கட்டுரையும் சுவாரஸ்யமாக உள்ளதுப்பா..

  இங்குள்ள வண்டியில் போனால் பிரசவம் இலவசம் என்பது போல் ரோட் அத்தனை கரடுமுரடு.. இது தான் வெங்கட் டச் என்பது...

  நைனிதால் தில்லிக்கு வந்தால் கண்டிப்பாக எங்களையும் கூட்டிட்டு போங்கப்பா...

  படங்களை பார்க்கும்போது நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை அதிகப்படுத்திவிட்டீர்கள்.

  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி.

   தில்லி வந்தால் நிச்சயம் அழைத்துச் செல்கிறேன்..... :)

   Delete
 5. அடுத்து எப்ப நைனிடால் போலாம் பாஸ்.. :)

  கண்டிப்பா எழுதுங்க.. படிக்க நாங்க இருக்கோம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி....

   நல்ல பீக் விண்டர்ல போகலாம்! :)

   Delete
 6. படங்கள் அருமை.

  அதானே.. ஓட்டுனரும் தூங்கிட்டா என்னாகிறது?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!

   Delete
 7. ரொம்ப நாளாக பார்க்க நினைத்த இடம்..தொடர் உபயோகமாக இருக்கும்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா...

   Delete
 8. டொயோட்டா இன்னோவாவிற்கு போக வர எவ்ளோ ஆகிறது???

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் கேட்ட தகவல்கள் அடுத்து வரும் பாகங்களில்....

   Delete
 9. டில்லியில் பணி புரிந்தபோது நைனிதாலை 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 இல் பார்த்தது. உங்களைப்போல இரவு முழுதும் பயணித்து ஹல்த்வானி, ராணிக்கெட் வழியாக பிம்தால்(அதுவும் ஒரு ஏரி நகரம்) போய்விட்டு நைனிதால் போனோம்.
  திரும்பவும் உங்களின் பதிவு வாயிலாக அதை பார்க்க வாய்ப்பு கிட்டுவது மகிழ்ச்சியே. படங்கள் அனைத்தும் வழக்கம்போல் அருமை. ஆவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்கு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா....

   உங்கள் நினைவுகளை இப்பதிவுகள் மீட்டெடுக்கும் என்பதில் மகிழ்ச்சி.

   Delete
 10. Arumayana pugaippadangal. Yerigal Nagaram Avaludan yedhiparkorom.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 11. //பிரசவத்திற்கு இலவசம் என்று ஆட்டோவில் எழுதி இருப்பதை இந்தச் சாலையில் தைரியமாக எழுதி வைக்கலாம்.//

  ஹா...ஹா..ஹா..

  படங்கள் அருமை. தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 12. போட்டோக்களைக் காணும் போதே, நேரில் சென்று வர ஆவல் ஏற்படுகின்றது. அதிக எதிர்பார்ப்புடன் அடுத்த பதிவை எதிர்நோக்கி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முஹம்மது யாசிர்.... தொடர்ந்து சந்திப்போம்.....

   Delete
 13. இதைப் படிக்கையிலே நான் அரைகுறையாக எழுதி வைத்துள்ள எனது, மணிக்கரன், மண்டி, கொத்தி, குலாபா, மணாலி, குலு பயணத்தை தூசு தட்ட தூண்டியுள்ளது.

  //அலுவலகத்தில் ஆணி அதிகம் என்பதால்//
  ரசித்தேன்...

  //மூன்று நபர்களும் பின் இருக்கைகளில் சுகமாக உறங்க, நான் பப்புவிடம் பேச்சுக் கொடுத்தபடி//
  என் நண்பர்களுடன் போனாலும் எனக்கும் இதே பொழப்பு தான்...!!

  போட்டாச்சு... போட்டாச்சு....

  வாகமானுக்குச் சென்ற எனது ""கன்னி"ப் பயணக் கட்டுரை" இத்தளத்தில்...
  http://malarinninaivugal.blogspot.com/2012/06/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. மணிகரன் நல்ல இடம் - தில்லி வந்த புதிதில் சென்றது.....

   உங்கள் பயணக் கட்டுரையையும் படிக்க ஆவல். எழுதுங்களேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மலரின் நினைவுகள்..

   Delete
 14. நல்ல் புகைப்படங்கள். இந்தக் குளிரில் நைனிடால் போவதே துணிச்சல் தான். சபாஷ். எங்களுக்கு நால் செய்திகள் சுவையாகக் கிடைக்கும் .உணவு விஷயங்களை விலாவாரியாக எழுதவும். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   பொதுவாக வட இந்திய உணவுகள் தாம்மா.. அடுத்த பகுதிகளில் எழுதுகிறேன்.....

   Delete
 15. போய்ப்பார்க்க விரும்பிய இடங்களில் ஒன்று. தொடர்கிறேன்.

  வேர்க்கடலையோட கூட ஆட்டுப்பால் கிடைக்கலியா?

  ReplyDelete
  Replies
  1. மாட்டுப்பாலிலேயே கலப்படம்!!! இதில் ஆட்டுப் பால் கேட்டால் நிச்சயம் கொடுத்து விடுவார்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை....

   Delete
 16. படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு. இயற்கை அன்னையின் அழகுக்கு நிகர் இயற்கை அன்னை தான்.
  நானும் பயணிக்கிறேன் தங்களுடன். அடுத்த திங்கட்கிழமையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 17. சூப்பர் சார்.. பயணங்கள் எவ்வளவோ சுவாரசியமோ பயணங்களை ரசிக்கும் மனிதர்களும் அவ்வளவு சுவாரசியமாகவே இருப்பார்கள்.. விட பகல் நேரம் பயணம் ரொம்பவும் பிடிக்கும்.. இரவின் நிசப்தம் அழகு என்றால் வெளிச்சத்தின் பிரமாண்டம் அற்புதம் :-)

  படங்களில் இருக்கும் மலை பாதைகளை பார்க்கும் போதே பயணிக்க வேண்டும் போல் இருக்கிறது. சூப்பர் சார்

  ReplyDelete
  Replies
  1. பகல் பயணம் ஒரு விதத்தில் சிறப்பென்றால் இரவு பயணம் வேறு விதத்தில். மொத்தத்தில் பயணமே ஸ்வாரசியமானது தான் சீனு.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.....

   Delete
 18. ஸ்மூத் தா தொடங்கியிருக்கு பயணம்!
  நல்ல அனுபவம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.

   Delete
 19. இரவுநேரக் குளிர்! காரில் டிரைவருக்கு அருகில் முன்னிருக்கை ! கதகதப்பான பயணம்! - நானாக இருந்தால் தூங்கி விடுவேன்! தங்களின் சபரிமலைப் பயணம் தொடர்ந்து படித்தேன். இந்த நைனிதால் பயணத்தையும் ரசிக்க விரும்புகிறேன். தொடருங்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 20. அருமையான பயணக்கட்டுரை.
  படிக்கப் படிக்க கண்களில் காட்சிகள் விரிந்துகொண்டே போகிறது.
  தொடர்கிறேன் நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 21. கரும்பு தின்ன கூலியா? தாராளமாக வெளியிடுங்கள் படிக்க நாங்கள் காத்திருக்கிறோம்! ஆரம்பமே அசத்தல்! தொடருங்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 22. We have also been to Nainitaal. It is a quite beautiful hill station. (differently beautiful from other hill stations). If given an opportunity, I would again like to visit that place. Waiting to read your series. Thanks.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லதா ஜி!

   இப்பதிவு நீங்கள் சென்று வந்த அனுபவங்களை நினைவுபடுத்தியதில் மகிழ்ச்சி.

   Delete
 23. அண்ணே..!
  நல்ல படங்கள்..

  பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 24. ரொம்ப்ப்ப்ப்பஃப்ப்பஃப்பஃ காலத்திற்கு முன்பு, அதாவது 1972ம் ஆண்டு, பந்த் நகர் விவசாயப் பல்கலைக் கழகத்தில் ஒரு கோர்ஸ் படிக்கச் சென்றிருந்தபோது நைனிடால் சென்று வந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு ஒரு வயதாக இருக்கும்போது சென்று இருக்கீங்க! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி கந்தசாமி ஐயா.

   Delete
 25. முன்னோட்டமாக அளித்த படங்களும் பகிர்வும் அருமை. ஒவ்வொரு திங்களும் பகிரவிருக்கும் அனுபவங்களை வாசிக்கக் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 26. காரில் இரவு நேரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. ஓட்டுனரைப் பேச்சு கொடுத்து விழித்திருக்க வைப்பது சில நேரங்களில் பயன் தராமல் போகலாம். வடக்கே செல்லாத இடங்களில் இதுவுக் ஒன்று. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. இரவு நேரப் பயணம் தவிர்ப்பது நல்லது தான். சில சமயங்களில் நேரம் இல்லாத காரணத்தினால் இரவு நேரத்தில் பயணம் செய்வது அவசியமாகிவிடுகிறது.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 27. சமீபத்தில் (அது ஆச்சு ஒரு வருடம்) சென்று வந்த இடம். மீண்டும் காணக் காத்திருக்கிறோம் உங்கள் பதிவு வாயிலாக.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 28. நைனிதால் நேரா பார்த்தமாதிரி இருக்கு!
  நன்றி!
  தமிழ்மணம் +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நம்பள்கி......

   Delete
 29. ம்ம்ம்ம்பெப்ரவரியிலேயே குளிர் அதிகமாய் இருந்தது. நீங்க ஜனவரியிலே போயிருக்கீங்க? ஹிஹிஹி, ஒரு வேளை எனக்கு வயசாயிடுச்சோ?:))))))) அதான் குளிர் தெரியுதோ?

  ReplyDelete
 30. குளிர் காலத்தில் சென்றால் தானே அங்கே குளிர் எப்படி எனத் தெரிந்து கொள்ள முடியும்! :)))

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

  ReplyDelete
 31. நைனிதால் படங்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....