எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, March 24, 2014

நைனிதால் – தற்கொலை[க்கு] முனை[யாதே]!ஏரிகள் நகரம் – பகுதி 5


ஏரிகள் நகரம் தொடரின் பகுதி நான்கினை முடிக்கும்போது கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.

மலையேற்றம் [அ] குதிரை சவாரி என நீங்களும் சென்றிருப்பதால் சற்றே ஓய்வு எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது அல்லவா? சற்றே ஓய்வெடுத்துக் கொள்வோம்....  அடுத்த பகுதியில் உங்களை அழைத்துச் செல்லப் போவது ஒரு ஆபத்தான இடத்திற்கு..... அதற்கென்று பயந்து கொண்டு வராமல் இருந்து விடாதீர்கள். அடுத்த திங்களன்று உங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல நான் பொறுப்பு!

 எங்கே செல்லும் இந்தப் பாதை..... 
யார் தான் யார் தான் அறிவாரோ?

மலைவாசஸ்தலங்களுக்குச் செல்லும்போது பார்த்திருக்கிறீர்களா? அந்த ஊரில் நிச்சயம் ஒரு Suicide Point இருக்கும்! அது ஏனோ மலைக்கு வரும் எல்லோரும் அங்கே செல்வதே இதற்காகத்தானோ என்பது மாதிரி. தமிழகத்தின் கொடைக்கானலிலும் ஒரு தற்கொலை முனை உண்டு. நைனிதாலும் இதற்கு விதிவிலக்கல்ல..... இங்கேயும் ஒரு தற்கொலை முனை உண்டு. இது போன்ற இடங்களுக்குப் பொதுவான கதைகளும் உண்டு. முதலில் நைனிதால் தற்கொலை கதையைப் பார்க்கலாம்!

 ”மலையோரம் மயிலே....  விளையாடும் குயிலே...” என்று பாடத் தோன்றுகிறதா?


சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் அதிகாலைப் பொழுது. நல்ல பனிக்காலம். மலைப் பிரதேசத்தில் அடர்த்தியான பனிமூட்டம். [G]கோ[d]டா நிறுத்தம் வரை நடந்தே வந்தது ஒரு ஜோடி. எந்த வித பேரமும் பேசாது குதிரைக்காரர் சொன்ன பணத்தினைக் கொடுத்து விடுவதாகச் சொல்லி சைனா பீக் பார்த்து வந்தார்களாம். திரும்ப வரும்போது தங்களது பயணத்தினைத் துவக்கிய இடத்தில் விடாது அதன் அருகே இருக்கும் மற்றொரு சுற்றுலாத் தலமான தற்கொலை முனைக்கும் அழைத்துச் செல்லச் சொல்லியிருக்கிறார்கள் அந்த ஜோடி. கொஞ்சம் அதிகப் பணம் வேண்டும் என குதிரைக் காரர் கேட்க அதற்கும் ஒப்புக் கொண்டு தற்கொலை முனைக்கு வந்து விட்டார்கள். அவ்விடம் வந்ததும் இறங்கி நேராக தற்கொலை முனைக்கு சென்ற இளம் ஜோடி சிறிது நேரம் ஒருவரை ஒருவர் அணைத்தபடி நின்று கொண்டிருந்தார்களாம்!

 ”யாருப்பா அது? கீழே குதிக்க சொல்றது?”

குதிரையை ஒரு ஓரத்தில் கட்டி வைத்து பணம் வாங்க வந்த குதிரைக்காரர் அவர்களை பார்த்தபடி இருக்க, சில நொடிகளில் அங்கே இருந்த கம்பித் தடுப்புகளின் மேலே ஏறி குதித்து விட்டார்களாம்! பணமும் கொடுக்காது குதித்து விட்டார்கள்....  மேலும் இங்கே இருந்தால் காவல்துறை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமென்று அங்கிருந்து காதல் ஜோடியை திட்டியபடியே திரும்பி வந்தாராம் குதிரைக்காரர்.

 ”நான் அப்படி நின்னது, இந்த ஃபோட்டோ புடிக்கத்தானுங்க!”

என்ன! கதை கேட்டாச்சா? இது உண்மையோ பொய்யோ, இது போன்ற பல கதைகள் ஒவ்வொரு தற்கொலை முனையிலும் உண்டு. இறைவன் கொடுத்த உயிரை தாமாகவே மாய்த்துக் கொள்வதில் என்ன லாபம். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளிப்பதில் தான் திறமை இருக்கிறது. அதை விட்டு தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம் அல்லவா? 

 'மேகம் கருக்குது... மின்னல் வெடிக்குது...’ அப்படின்னு சொல்ல ஆசை... 

நாங்களும் தற்கொலை முனைக்கு வந்து சில பல புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அங்கே இருந்த மற்றவர்களை கவனித்தோம். சில இளைஞர்கள் ஒரு குழுவாக வந்திருந்தார்கள். வந்திருந்தவர்களில் சிலர் நல்ல போதையில் இருந்தார்கள்.  தற்கொலை முனையில் சில இளம்பெண்களைப் பார்த்தவருக்கு, போதை இன்னும் தலைக்கேறியது! பாறைகளில் நின்றுகொண்டு ஒரு பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார்:

 ’அதோ தெரிகிறதே ஒரு மலை முகடு.... அதில் நின்று கவிதை சொல்ல ஆசை......’ 
(கவிதை தான் எழுத தெரியலையே.... அப்புறம் எதுக்கு இந்த ஆசை! - கேட்டது உள்மனது!]

ஏ பெண்களே... உங்களைப் போன்ற ஒரு பெண் என்னை ஏமாற்றிவிட்டாள். நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்என்று ஏதேதோ பேச ஆரம்பித்தார். கேட்டுகொண்டிருந்த எங்களுக்கு அதிர்ச்சி. குதித்து விடுவானோஎன அச்சத்தோடு சிலர் பார்க்க, ஒரு பெண், ‘குடிச்சுட்டு உளறுகிறான்....  இதுக்காகவே அந்த பெண் ஏமாற்றி இருக்கலாம்! சும்மா உதார் விடாது குதிடா பார்க்கலாம்!என்று கொஞ்சம் மெல்லிய குரலில் சொன்னார். 

 இது என்ன மரம்? நெய்வேலியில் இருந்து தில்லி வந்த பிறகு மரம் ஏறுவதில்லை.... இதில் முயற்சி செய்ய ஆசை.....

என்னது அப்புறம் என்ன ஆச்சு?, குதித்தானா இல்லையா?என்று தானே கேட்டீங்க! அதெல்லாம் குதிக்கலை. அந்தப் பெண் சொன்ன மாதிரி வெறும் உதார் விட்டதோடு சரி! கற்களின் மீது ஒரு குத்தாட்டம் போட்டுவிட்டு தனது கோமாளித்தனத்தினை மேலும் காட்சிப் படுத்திக் கொண்டிருந்தார்.

 இங்கேயும் வீடு கட்ட ஆரம்பித்து விட்டோம்... ஒரு இஞ்ச் இடம் கூட விட மாட்டோம்லே!

நாங்கள் தற்கொலை முனைக்கு வந்து சில நிமிடங்கள் ஆகிவிடவே, எங்கள் ஓட்டுனர் மத்லூப் எங்களைத் தேடிக் கொண்டு அங்கே வந்துவிட்டார். ஒரு வேளை பணம் கொடுக்காது நாங்களும் காணாமல் போய்விடுவோம் என்று எண்ணியிருப்பாரோ?  பயப்படாதே மத்லூப், நாங்கள் இங்கே விழப்போவதில்லை! கொஞ்சம் இயற்கையையும், மக்களின் செயற்கையான செயல்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம்எனச் சொல்லி அங்கிருந்து நகர்ந்தோம்.

அடுத்ததாய் நாம் பார்க்கப் போகும் இடத்திற்கும் குதிரைக்கும் சம்பந்தம் உண்டு. அது என்ன சம்பந்தம்? அடுத்த பகுதியில் பார்க்கலாமா?   

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.
 

50 comments:

 1. கீழே விழுந்த அந்த ஜோடி லேசான காயங்களோடு எழுந்து போயிருக்குமோ! :))

  படங்கள் சுவாரஸ்யம்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல கேள்வி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. படங்கள் எல்லாம் மிக அழகு.
  இயற்கையை கெடுக்க அங்கேயும் வீடுகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 4. Replies
  1. தமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 5. வழக்கம்போல் காமிராவில் கவிதை படைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 6. நைனிடால் - அழகு - மிக அழகு.
  படங்களிலாவது - பார்த்து வைத்துக் கொள்வோம்..
  இருப்பதைக் கெடுப்பதற்கு அங்கேயும் வீடுகள் !..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 7. கொஞ்சம் இயற்கையையும், மக்களின் செயற்கையான செயல்களையும் அழகாகப் பதிவு செய்திருக்க்கிறீர்கள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 8. படங்களுடன் சேர்ந்து தலைப்பும் போட்டி போடுகிறதே !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   உங்களுக்கு தலைப்பு பிடித்திருப்பதில் மகிழ்ச்சி....

   Delete
 9. இந்த வெயிலுக்கு உங்கள் புகைப்படங்கள் இதமாய் இருக்கிறது... நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 11. போதையில் அந்த இடத்துக்கு போனா மரணம் நிச்சயம்தான்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 12. கண்கவர் காட்சிகள்! படம் எடுப்பதும் கலைதான்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 13. //இறைவன் கொடுத்த உயிரை தாமாகவே மாய்த்துக் கொள்வதில் என்ன லாபம். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளிப்பதில் தான் திறமை இருக்கிறது. அதை விட்டு தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம் அல்லவா? //

  பல சமயங்களில், ஏன் இப்பை ஒவ்வொரு மலைவாழ் சுற்றுலா இடங்களிலும் தற்கொலை முனை என்று ஒரு பெயர் வைத்து அதை ஒரு சுற்றுலா இடமாக வைத்திருக்கின்றார்கல் நெறுத் தோன்றியதுண்டு! இது பலருக்கு இலை மறை காயாக ஒரு தூண்டுகோலாக அமைவதாகத் தெரிகின்றது!

  படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன! பார்க்க அலுக்குமா என்ன? தலைப்பு நன்ராக உள்ளது! எங்கள் இடுகையயும் தற்கொலைக் குறித்துதான்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் இடுகை படிக்கும்போதே, இன்று எனது இடுகையும் அதே என்று தோன்றியது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 14. கொடைக்கானல் தற்கொலை பாறை என்று சொல்லாமல் இப்போது பசுமை பள்ளத்தாக்குஎன்று பாலிஷாய்சொல்கிறார்கள் !
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   பசுமைப் பள்ளத்தாக்கு -இது நன்றாக இருக்கிறது!

   Delete
 15. அதுதானே யாரு இவரைக் குதிக்கச் சொன்னது ?..ஒரு வேளை அம்பாளடியாள்
  சொல்லியிருக்குமோ ?...:)))) ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று வியக்க
  வைக்கும் பகிர்வுகளுக்கு வாழ்த்துக்கள் சகோதரா .படங்கள் மிகவும் அருமையாக
  வந்துள்ளது பாராட்டுக்கள் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்!

   Delete
 16. சூப்பர் ஆ இருக்கிறது இடம் .... முடிந்தால் நாங்களும் சென்று வருவோம்

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது சென்று வாருங்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கலை.

   Delete
 17. படங்கள் எல்லாம் செம்ம அசத்தல் வெங்கட்....

  அதிலும் அந்தந்த படங்களுக்கு ஏற்ப டயலாக் டெலிவரியாக பாட்டு வரிகளை போட்டிருக்கீங்க பாருங்க அது இன்னும் சூப்பர்.

  சூசைட் பாயிண்ட் இருக்கும் இடத்தில் எல்லாம் ஒரு கதை அல்ல நிறைய கதைகள் இருக்கத்தான் செய்கிறது. குதிரைக்காரனுக்கு பணம் கொடுக்காம குதிச்சது எந்த விதத்தில் நியாயம்?

  இந்தக்காலத்து பிள்ளைகளுக்கு யோசிக்கும் திறன் இருந்தும் சீர்தூக்கி பார்க்கும் திறன் இருந்தும் உபயோகிப்பது இல்லை... அவசர முடிவு எதிலும்.. அதனால் தற்கொலைகளும் கொலைகளும் பெருகி வருகிறது.

  வெங்கட்.. ஒருத்தர் குதிக்கிற மாதிரியே பாவ்லா பண்ணிட்டு இருக்காரே ஒரு போட்டோவில்.. யாருப்பா அவரு? செம்ம போஸ் கொடுத்து வீரப்பாண்டிய கட்டபொம்மன் போலவே நிக்கிறாரு? :)

  அருமையான கட்டுரை... அசத்தலான படங்கள் வெங்கட்.. லைக் த.ம.11

  ReplyDelete
  Replies
  1. குதிக்கற மாதிரி நிக்கறவரை உங்களுக்குத் தெரியாதா! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி.

   Delete
 18. அதுதான் படங்கள் ஒவ்வொன்றும் கவிதை சொல்லுதே.. நீங்க வேற தனியா சொல்லணுமா?

  ReplyDelete
  Replies
  1. ஆஹா..... இப்படி சொல்லியே நம்மை கவுத்துடறாங்களே! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி!

   Delete
 19. மலைகளில் மரங்கள் குறைந்து வீடுகள் வளர்கின்றனவே.. இயற்கை அன்னையைக் கொஞ்சம் நிம்மதியாகவிட்டால் நாமும் பிழைப்போம். நல்லதொரு தலைப்பும் அதற்கேற்றப் பளிச் படங்களும் ஜோர். .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

   Delete
 20. போகாத ஊர். போகமுடியாதோ என்று ஏங்க வைக்கும் ஊர். ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 21. பதிவும் படமும் அருமை நாகராஜ் ஜி.

  குளிர் அங்கே அதிகமோ...?

  ReplyDelete
  Replies
  1. நாங்கள் சென்றது ஜனவரி மாதம் என்பதால் குளிர் கொஞ்சம் அதிகம் தான்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 22. ரா.ஈ. பத்மநாபன்March 24, 2014 at 5:42 PM

  கோழைகளுக்கு தற்கொலை முனை. மற்றோர்க்கு தன்னம்பிக்கை முனை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 23. படங்கள் ஒவ்வொன்றும் அருமை... பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்....

   Delete
 24. மலை வாச ஸ்தலத்தின் குளிர்ச்சி புகைப் படத்திலேயே தெரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.....

   Delete
 25. தங்களின் படங்களும் வர்ணனையும் பார்த்து படிக்கும்போது, மீண்டும் ஒரு முறை நைனிதால் செல்ல தூண்டுகிறது. அருமை வெங்கி. கீப் இட் அப்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லதா விஜயராகவன் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....