எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, April 2, 2014

ஒய்ஃபை!
படம்: இணையத்திலிருந்து....

இந்த ஒய்ஃபை ஒய்ஃபைன்னு சொல்றாங்களே அந்த வார்த்தை முதன் முதலா கேட்கும்போது என்ன தோணும் உங்களுக்கு? யாரோ அவர் ஒய்ஃபை பத்தி சொல்லப் போறார்னு தோணுமா உங்களுக்கு?

சில நாட்கள் முன்னர் கட்டில் சப்ஜி பதிவு எழுதியபோது ஒரு ஹரியானா மாநிலத்தினைச் சேர்ந்த நண்பர் சக்ரீன் டச் பற்றிக் கேட்டதை எழுதி இருந்தேன். அதே ஆசாமி சென்ற வாரம் கேட்டார் என் பையன் இப்பதான் படிக்கிறான். அதுக்குள்ள ஒய்ஃப் வேணும்னு கேட்கறான்! கல்யாணத்துக்கு என்ன அவசரம்னு சொல்லி சத்தம் போட்டேன்என்று சொன்னார். படிக்கற பையனுக்கு எதுக்கு ஒய்ஃப்? என்று என்னிடம் கேட்கவே குழப்பம். அட அது ஒய்ஃப் இல்ல! ஒய்ஃபை! என்று சொல்ல, யாரோட ஒய்ஃபையும் விக்க மாட்டாங்க!என்று கூறிவிடுவாரோ என எனக்குள் பயம்!

அவரிடம் ஒய்ஃபை அதாவது WI-FI என்றால் Wireless Fidelity என்பதன் சுருக்கம். ஒரு இணைப்பினை வாங்கி வீட்டில் உள்ள கணினி, அலைபேசி என அனைத்திலும் இணையத்தினை பயன்படுத்தும் வசதி என்று ரொம்பவே கஷ்டப்பட்டு புரிய வைத்தேன். சரி எதுக்கு இந்த முகாந்திரம் என்று கேட்டால், இன்னிக்கு உங்களுக்கு அறிமுகம் செய்யப் போகும் குறும்படம் ஒய்ஃபை! 

‘காலை மாலை திங்கறதும் தூங்கறதும் இவன் வேலைஎன்று ஒரு இளைஞர் இருக்கிறார் – அவர் ஒரு பெண்ணிற்காக பால்கனியில் நின்று கொண்டிருக்கிறார். அப்படி இருப்பவரை அந்த பெண்ணின் சகோதரனும் நண்பர்களும்  எப்படி உபயோகப் படுத்திக் கொள்கிறார் என்று பாருங்க!
என்ன நண்பர்களே படம் பிடித்ததா?

மீண்டும் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

42 comments:

 1. 9 to ? மின்வெட்டு... பிறகு வந்து பார்க்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. மின்வெட்டு... கோடை கூடவே மின்வெட்டினையும் கூட்டிக் கொண்டு வந்துவிட்டது போலும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. இப்படித்தான் தலை கீழா ஏதாவது ஆகும் .. ன்னு - நெனைச்சேன்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 3. தலைப்பு பார்த்து உங்க வூட்டம்மாவை பத்திதான் ஏதோ சொல்லப் போறீங்கன்னு ஓடி வந்துப் பார்த்தேன். ப்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... ஏமாந்துட்டீங்களா ராஜி! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 4. புத்திசாலிகள்..சரியாக வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கிறார்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 5. இளமைக் கலாட்டாவில் கடைசியில் நானும் டியூப் லைட் ஆகிட்டேன் !
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 6. படம் அருமை.இரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 7. குறும்படப் பகிர்வுக்கு நன்றி. (ஹிஹிஹி.. குறும்படம் பார்க்கவில்லை என்று உங்களுக்குப் புரிந்துவிடப் போகிறது)

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி.... உங்களுக்கு குறும்படம் பிடிக்காதுன்னு சொல்லி இருக்கீங்களே! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. நானும் வீட்டம்மாவை பற்றிய பதிவு என்றே நினைத்து வந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அடடா நீங்களும் பல்பு வாங்கிட்டீங்களா! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா!

   Delete
 9. ஹாஹாஅ! செம பல்பு! இந்த மாதிரிதான் எங்கள் உறவினர் வீட்டிலும், பக்கத்து வீட்டு Wi-Fi ஆன் ஆகி இருந்தால் சின்ன பசங்க உபயோகப் படுத்தறாங்க! முதலில் ரொம்ப வியப்பாக இருந்தது! எப்படி அப்படி உபயோகப்படுத்த முடியும் என்று! பிறகுதான் தெரிந்தது...டெக்னிக்! பசங்க சும்மா புகுந்து விளையாடறங்க! ஆனா டெக்னாலஜி வளர வளர என்னதான் உபயோகங்கள் இருந்தாலும், நமது ப்ரைவசியும் குறவதாகத்தான் தோன்றுகின்றது!

  நல்ல பகிர்வு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்.

   இன்றைய இளைஞர்கள் ரொம்பவே கெட்டிக் காரர்கள்! - இது போன்ற விஷயங்களில்!

   Delete
 10. நல்ல கலாட்டாதான்! அருமையான பகிர்வு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 11. "//”யாரோட ஒய்ஃபையும் விக்க மாட்டாங்க!” என்று கூறிவிடுவாரோ என எனக்குள் பயம்!//"

  அடாடா, என்ன ஒரு பயம் உங்களுக்கு!!!!

  நல்ல படம் பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. பயம்! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 12. சுவாரஸ்யமான காணொளி
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 13. Replies
  1. தமிழ் மணம் ஏழாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி.

   Delete
 14. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete
 15. படிக்கற பையனுக்கு எதுக்கு ஒய்ஃப்?” //
  நல்ல நகைச்சுவை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 16. நாங்க டியூப் லைட் இல்லீங்க...பாட்டெல்லாம் நல்லா இருந்தது பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 17. wifi படம் ஸூப்பர். பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 18. பாதி படத்தில் கரண்ட் கட் சவுண்ட் இல்லை. UPS உபயத்தால ஊமைப் படமா பார்த்தேன். நல்லாவே இருந்தது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 19. இட் ஈசு குட்டு தேட்டு யூ ஆரு நாட்டு கலாச்சிஃபையிங்...!

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முட்டா நைனா.....

   Delete
 20. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 21. Ilainzargal usharaga irukkaavendiya kaalam.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....