ஒரு
சில மாதங்களுக்கு முன்னர் தில்லியின் Indira Gandhi National Centre for
Arts ஒரு அருமையான கண்காட்சிக்கு ஏற்பாடு
செய்திருந்தது. அதன் தலைப்பு “MIGHTY MUGHALS”. அந்த கண்காட்சியினை இங்கிலாந்து தூதரகத்துடன்
இணைந்து நடத்திய IGNCA, இங்கிலாந்து நாட்டிற்கு எடுத்துப் போன முகலாயர்
கால ஓவியங்கள், புத்தகங்கள் என அனைத்துப் பொருட்களின் கண்காட்சியாக மக்களின்
பார்வைக்கு வைத்திருந்தார்கள். அங்கே
இருந்த பெரும்பாலான ஓவியங்களின் புகைப்படங்களும், சில புத்தகங்களும் நம்மை
முகலாயர் காலத்திற்கு அழைத்துச் சென்ற உணர்வு.
அந்த
கண்காட்சியில் இருந்த ஓவியங்களை/ஓவியங்களின் புகைப்படங்களை நான் எனது காமெராவில்
படம் பிடித்து வந்தேன். அத்தனை படங்களையும் ஒரே நாளில் இங்கே பதிவேற்றுவது என்பது
முடியாத காரியம். அதனால் ஒரு சில படங்களை மட்டும் இங்கே இன்று வெளியிடுகிறேன்.
உங்களுக்கு விருப்பமிருந்தால் மற்ற புகைப்படங்களையும் வரும் ஞாயிறுகளில்
வெளியிடுகிறேன்.
இந்த
ஞாயிறில் சில புகைப்படங்களைப் பார்க்கலாம்!
மத்திய
ஆசியாவின் பேரரசரான தைமூர் வழி வந்தவர்கள் என்பதில் முகலாயப் மன்னர்களுக்கு
நிறைந்த பெருமை. 1398-ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் படையெடுத்து வந்த தைமூரின்
ராணுவத்தின் பெருமையை தொடர்ந்து தக்க வைக்கவும், அதை விட அதிகம் புகழ்பெறவும்
விரும்பினார்கள். அவர்களுக்கு எப்போதும் தைமூர் மீது ஒரு மரியாதை உண்டு. இந்த படத்தில்
தைமூர் உடன் முகலாயப் பேரரசை உருவாக்கிய பாபர், ஹுமாயூன், ஜெஹாங்கீர் போன்றவர்கள்
இருப்பது போன்ற ஓவியம் வரைந்திருக்கிறார் ஹஷிம் எனும் ஓவியர். வரைந்த ஆண்டு 1620.
தனது
பதினோறாவது வயதில் மத்திய ஆசியாவில் இருந்த Fergana Valley
எனும் இடத்திற்கு அரசராக முடிசூட்டப்பட்ட பாபர் [1483-ஆம் வருடம் பிறந்தவர்]
அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பிறகு காபூல் நகரில் புதிய ராஜாங்கத்தினை
ஏற்படுத்தினார். 1526-ஆம் ஆண்டு நடந்த பானிபத் போரில் வெற்றி பெற்ற பாபர் மற்ற
சிறிய ராஜயங்களையும் கைப்பற்றி முகலாயப் பேரரசினை உருவாக்கினார். இந்த ஓவியம்
வரையப்பட்ட ஆண்டோ, அல்லது வரைந்தவர் பெயரோ இதில் குறிப்பிடப்படவில்லை.
வேட்டைக்குச்
சென்ற இடத்தில் ஓய்வெடுக்கும் ஹூமாயூன். மாடிப்படிகளிலிருந்து கீழே விழுந்து இறந்த
ஐம்பது வருடங்களுக்கு பின்னர் வரைந்த ஓவியம் இது. வரைந்தவர் பெயர் இல்லை.
வரையப்பட்ட காலம் 1600-10 ஆக இருக்கலாம்.
ஓய்வெடுக்கும்
ஜஹாங்கீர். வரையப்பட்ட ஆண்டு 1620. ஓவியர் பெயர் இல்லை.
சிங்கத்தினைக்
கொல்லும் யானை. முகலாயர்களுக்கு யானைகள் மேல் அதிக பிரியம் உண்டு. மலையைப் போன்ற
அதன் பலத்தில் அவர்களுக்கு அதிக நம்பிக்கை. இந்த ஓவியம் வரையப்பட்ட ஆண்டு 1770.
தில்லியில்
உள்ள செங்கோட்டையை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆங்கிலத்தில் Bird’s eye
view என்று சொல்லப்படும் கோணத்தில் பார்த்ததுண்டா? ஒரு
ஓவியர் தனது கற்பனையில் வரைந்திருக்கிறார் இந்த செங்கோட்டையை. வரைந்த ஆண்டு
1780-90 க்குள் இருக்கலாம்.
செங்கோட்டையின்
அருகே ஷாஜஹான் குதிரையில் பயணம் செய்வது போன்ற இந்த ஓவியம் வரையப்பட்டது 1815-ஆம்
வருடம். முகம்மது சலி கன்பூ எனும் ஆசிரியரால் எழுதப்பட்ட “ஷாஜஹானின் வரலாறு” புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த ஓவியம் இரண்டாம் அக்பரால் J.T. Roberdean எனும் ஆங்கிலேயருக்கு பரிசாக தரப்பட்டது.
ஆக்ரா கோட்டை – 1573-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட
இந்த கோட்டையின் ஓவியம் வரையப்பட்ட ஆண்டு 1730. யமுனா நதி ஓடிக்கொண்டிருக்கும்
இந்த ஓவியம், ஆக்ரா கோட்டையினை கிழக்குப் பகுதியில் இருந்து பார்த்தால் எப்படி
இருக்கும் என்பதைக் காட்சிப்படுத்துகிறது.
என்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் பகிர்ந்து கொண்ட
ஓவியங்களை ரசித்தீர்களா? இந்த கண்காட்சியில் பார்த்த இன்னும் நிறைய ஓவியங்கள்
உண்டு. உங்களுக்கு விருப்பமிருந்தால் மற்றவற்றையும் பகிர்ந்து கொள்கிறேன்!
மீண்டும் சந்திப்போம்......
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
ஓவியங்கள் - பொக்கிசங்கள்...
பதிலளிநீக்குநன்றி...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குBird’s eye view கோணத்தில் தில்லி செங்கோட்டை ஓவியம் அற்புதமாக உள்ளது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாடிப்படி மாது.
நீக்குதங்களது முதல் வருகை மகிழ்ச்சி தந்தது.
இத்தனை நூற்றாண்டுகளுக்கு பின்னும் ஓவியங்கள் அருமையாக இருக்கின்றன !
பதிலளிநீக்குத ம 3
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குஎல்லா படங்களும் அருமை. அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட(வரையப்பட்ட) கலர்ப்படங்கள்! தொடருங்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅருமையான ஓவியங்கள். ஆனால் இவற்றைப் பார்க்கும் போது அந்தக் காலமன்னர்களின் படங்கள் கற்பனைக் கண்கொண்டு வரையப்பட்டதுதானே. அவர்களது ஒவியங்களில் உருவ ஒற்றுமை இருக்க வேண்டுமென்றால் சம காலத்தவரால் வரையப் பட்டிருக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.
நீக்குநிறைய ஓவியங்களில் வரையப்பட்ட காலமும் கொடுக்கப்பட்டிருந்தது....
அழகிய தத்ரூபமான ஓவியங்கள் வெங்கட்.. ஆச்சர்யமாக இருக்கிறது. அடேங்கப்பா.. எத்தனை வருடங்களுக்கு முன்னால் வரைந்த ஓவியங்கள் எனினும் அதன் நிறம் மங்காமல் அத்தனை அழகாக இருக்கிறதேப்பா..
பதிலளிநீக்குஇன்னும் இருக்கும் அத்தனை படங்களையும் நிதானமாக பகிருங்கள்....
த.ம.5
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி.
நீக்குபடங்களும் அவற்றுக்கான விளக்கங்களும் என நிறைய புகைப்படங்கள் - கிட்டத்தட்ட 300. பொறுமையாக அவற்றில் சிறந்தவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.
முகலாயர்களின் ஓவியங்கள் மிக அழகு! தொடர்ந்து பகிருங்கள்! நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குபடங்களோடு , அவற்றை பற்றிய விரிவான தகவல் அருமை அண்ணா!
பதிலளிநீக்குசுவாரஸ்யமான வரலாற்றுப்பதிவு!!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.
நீக்குஆஹா, படங்கள் அருமை. அதற்கான விளக்கங்களும் மிக அருமை. மற்றவைகளையும் பகிருங்கள் பிளீஸ்....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
நீக்குகாலத்தால் அழியாத ஒவியங்கள்.எங்களால் சென்று பார்க்க முடியாததை உங்கள் முலம் அறிந்து கொள்ள முடிகிறது.நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுபா.
நீக்குமிக அழகான ஓவியங்கள். ஓவியரின் கற்பனையில் Bird’s eye view பிரமாதம். எடுத்த படங்களைத் தொடர்ந்து பகிர்ந்து வாருங்கள். செங்கோட்டை,
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குதொடர்ந்து பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கிறேன்.
அற்புத பகிர்வு. ரசித்தேன்.. தொடருங்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி.
நீக்குஅருமையான புகைப்படங்கள்...
பதிலளிநீக்குபொக்கிஷப் பகிர்வு...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.
நீக்குஓவியங்கள் அருமை
பதிலளிநீக்குஅதிலும் அந்த கோட்டை ஓவியம் அருமையோ அருமை
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா...
நீக்குஓவ்யரின் கற்பனையும் திறமையும் என்னை வியக்க வைத்தது. பலருக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி.
த.ம.8
பதிலளிநீக்குதமிழ் மணம் எட்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஆஹா அருமையான ஓவியங்கள்! அந்தக்க் காலத்திலேயே, எந்தவித டெக்னாலஜியோ, இப்போது கிடைக்கும் அளவு கலர்களோ, பிரஷ்களோ இல்லாமல், இவ்வளவு அழகாக வரையப்பட்டிருக்கிறதே! ஓவியர்களின் திறமையை வியந்து பாராட்டியே ஆக வேண்டும்! கண்டிப்பாகப் பாதுகாக்கப்படவேண்டிய ஓவியங்கள்!
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
நீக்குகாலங்கள் பல கடந்தும்
பதிலளிநீக்குகண்களுக்கு விருந்து படைக்கும் ஓவியங்கள்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
பதிலளிநீக்குAzhagana Oviyoangalai manamara rasiththen.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குஅருமையான பகிர்வு.
பதிலளிநீக்குதொடருங்கள் நாகராஜ் ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.
நீக்குபடங்களை இரசித்தேன். காணக் கிடைக்காத படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குவாவ்! அதிலும் அந்த ஓவியம் இருக்கிறதே - சூப்பர்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்கு