வியாழன், 3 ஏப்ரல், 2014

தேர்தலும் சில பாதிப்புகளும்.....சென்ற வாரத்தில் ஒரு நாள் மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப பேருந்து நிலையத்தில் நின்றிருந்தேன். பொதுவாக நடந்தே வீடு திரும்புவது வழக்கம். அந்த நாள் ஏனோ நடந்து செல்ல ஒரு சோம்பேறித்தனம். பேருந்தில் செல்லலாம் எனத் தோன்றிவிடவே, பேருந்திற்காகக் காத்திருந்தேன். பக்கத்திலேயே என்னுடைய அலுவலக நண்பர் ஒருவரும் நின்றிருந்தார். நானும் அவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தோம்.


படம்: இணையத்திலிருந்து....

அப்போது ஒரு மனிதர் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். தலையில் ஒரு தொப்பி – குளிர்காலத்தில் தில்லியில் அணிவது போன்ற தொப்பி – கோடை ஆரம்பித்துவிட்டாலும் அதைப் போட்டுக் கொண்டிருந்தார். மாலை வேளைகளில் கொஞ்சம் குளிர் காற்று இருப்பதால் குல்லா போட்டுக் கொண்டிருப்பார் என நானாகவே நினைத்துக் கொண்டேன். நானும் நண்பரும் பேசிக் கொண்டிருந்ததை கவனித்தபடி இருந்தார்.

சிறிது நேரம் கழித்து, எங்களை நோக்கி ஒரு கேள்விக் கணையை வீசினார் – “15, ரகாப்கஞ்ச் ரோடுஎங்கே இருக்குன்னு சொல்ல முடியுமா?நாங்கள் நின்று கொண்டிருந்தது ரகாப்கஞ்ச் குருத்வாராவின் அருகில். அந்த குருத்வாராவின் பின்புறத்தில் தான் ரகாப்கஞ்ச் சாலை இருப்பதால், அவருக்கு வழி சொன்னேன். ரகாப்கஞ்ச் சாலைக்கு இப்படி செல்ல வேண்டும் என்று சொன்ன பிறகு என்னை முறைத்துப் பார்க்க ஆரம்பித்தார். சிறிது நேரம் முறைத்தபின் “அது அங்க தான் இருக்குன்னு யாருக்கு தான் தெரியாது?என்று சொன்னார்.

என்னடா வம்பாப் போச்சு! என அமைதி காத்தேன். அடுத்த கேள்வியும் அவரிடமிருந்து என்னை நோக்கி வந்தது! இந்த நோக்கியா கம்பெனி காரன் இத்தனை மொபைல் தயாரிக்கிறானே, இந்தியாவிற்கு எதாவது காசு தரானா? எல்லாம் அவன் ஊருக்கு எடுத்துட்டு போயிடறான்! அதையெல்லாம் நீ கேட்க மாட்டாயா? உனக்கு வெட்கமாயில்லையா?என்று கேட்டார். என்னவோ நான் தான் நோக்கியா நிறுவனத்தினரை வெற்றிலை பாக்கு வைத்து இங்கே அழைத்ததாக நினைத்து விட்டாரோ என்று எனக்கு ஒரு சம்சயம்!

இரண்டாவது கேள்வியிலாவது நானும் என்னுடன் இருந்தவரும் கொஞ்சம் சுதாரித்திருக்க வேண்டும், அங்கிருந்து நகர்ந்திருக்க வேண்டும். மீண்டும் அவரைக் கவனிக்காதபடி திரும்பி நின்று கொண்டு எங்களது பேச்சைத் தொடர்ந்தோம். கொஞ்சம் நேரம் எங்கள் பேச்சினை கவனித்தபடியே நாங்கள் அவர் பக்கம் திரும்ப காத்திருந்தார் போலும். நாங்கள் அவரைக் கண்டுகொள்ளாததாலோ என்னமோ கொஞ்சம் நகர்ந்து எங்கள் எதிரே வந்து நின்று கொண்டார்.

அடுத்த கேள்விக்கணை எங்களை நோக்கி பாய்ந்தது.  நாட்டுல எவனுக்கும் சோறில்லை, இங்கே இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவையா? எவ்வளவு பணம் வீண்.... நீயும் சாதாரணமானவன் தானே? உன்னை மாதிரி ஆளுக்கு எதுக்கு பாதுகாப்பு? என்றார். நடுநடுவே கையை நீட்டி நீட்டி பேசும்போது அப்படி கை நீட்டி பேசுவது தான் அவர் சுபாவமா இல்லை என்னை அடிக்க கையை ஓங்குகிறாரா என்பது புரியவில்லை!


படம்: இணையத்திலிருந்து....
 
சம்பந்தா சம்பந்தமில்லாது கேள்விகள் என்னை நோக்கிக் கேட்டுக் கொண்டிருக்க, வடிவேலுவிடம் ஒருவர் “ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ....  இந்த அட்ரஸ் எங்க இருக்கு?என்று பின் லேடன் முகவரி கேட்பாரே அந்த காட்சி என் மனதில் ஓடியது. அந்தக் காட்சியின் முடிவில் வடிவேலுவின் சட்டையை கிழித்தது போலவே எனது சட்டையைக் கிழித்து ஆட்டம் போடுவாரோ என்று தோன்றவே, அங்கிருந்து நகர முயற்சித்தேன். நண்பரும் என்னைப் பின் தொடர, “என் கேள்விக்கு பதில் சொல்லாம எங்கே போகப் பார்க்கிறே?என்று கேள்வி கேட்டார் தொப்பி ஆசாமி.

அதற்குள் ஒரு பேருந்து வரவே, அந்த பேருந்தினைப் பார்த்த மாத்திரத்தில் தொப்பி ஆசாமி, “ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ.... 15, ரகாப்கஞ்ச் சாலை போகுமா?என்று கேட்டபடி பேருந்தினுள் தாவி ஏறிச் சென்றுவிட்டார்.

இந்த ஊர்ல யார் யார் எந்த ரூபத்துல வராங்கன்னு புரிஞ்சுக்கவே முடியல!அதுவும் என்னை மட்டும் தான் இந்த மாதிரி ஆசாமிங்க கண்ணுக்கு தெரியுதோ? ஒண்ணுமே புரியல!

அந்த மனிதர் எங்களை ஒன்றும் செய்யாது சென்று விட்டாலும், அவர் ஏனோ மனதினை விட்டு அகலவில்லை.  தேர்தல் நேரம் என்பதால் அரசியல்வாதிகளையும், வேட்பாளர்களையும் நோக்கி கேட்க வேண்டிய கேள்விகளை பார்க்கும் அனைவரிடமும் கேட்கும் அளவிற்கு அவருக்கு மனோ வியாதி வந்து விட்டது போலும்.

தற்கால அரசியல் பலரையும் பாதித்து விடுகிறது! என்று நினைத்துக் கொண்டேன். நாங்கள் செல்ல வேண்டிய பேருந்தும் வந்துவிட, அதில் வீடு நோக்கிச் சென்றோம்.

தேர்தல் முடிவுகள் வரும் வரை நான் கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தான் இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது! நீங்க என்ன சொல்றீங்க!

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

54 கருத்துகள்:

 1. ஹா ஹா... சினிமாவில் பார்த்த ஆளை நேரில் பார்த்துட்டீங்க....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட ஆமாம் சரவணன்.... சில நிமிடங்கள் சட்டையை பிடித்தபடியே நின்று கொண்டிருந்தேன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை. சரவணன்.

   நீக்கு
 2. பதிவைப் படிக்க ஆரம்பித்ததுமே வடிவேலுவும், அவர் பக்கத்தில் இருப்பவரையும்தான் நினைத்துக்கொண்டே .......... படித்துக்கொண்டே வந்தால் ........ அந்த காட்சியையே போட்டாச்சுபோல‌.

  பல வருடங்களாச்சுங்க‌, நம்ம ஊர் தேர்தல் பரபரப்புகளைப் பார்த்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுநதர்.

   நீக்கு
 3. மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலகட்டம்தான்.
  எப்படியோ தப்பித்துவிட்டீர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 5. பதில்கள்


  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 6. ஒரேயடியாக ஒரே சிந்தனையில் குழப்பிக் கொள்பவர்களுக்கு இது போல் நடந்து கொள்வதுண்டு... சில வேளைகளில் அத்துமீறி போய் வடிவேலு போல் அவர்களும் "வாங்குவதும்" உண்டு... பார்ப்பதற்கே வருத்தமாகவும் இருக்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 7. தேர்தல் முடிவுகள் வரும் வரை நான் கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தான் இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது! நீங்க என்ன சொல்றீங்க//

  நீங்கள் சொல்வது சரிதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 8. தப்பிச்சுட்டீங்க பரவாயில்லை, அடுத்த தடவை அவர் கிட்ட வசமா மாட்டாமலா போயிடுவீங்க!!!!

  நீங்களும் அந்த பஸ்ல எறியிருந்தா என்னாயிருக்கும்?????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... இன்னுமொரு முறை வேற நான் மாட்டணுமா?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 9. நல்ல வேளை! வா! சைக்கிள்ள அமெரிக்கா போய் ஒபாமாக்கிட்ட இதுப்பத்தி பேசலாம்ன்னு கூப்பிடல. அதுவரைக்கும் சந்தோசப்பட்டுக்கோங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி....

   நீக்கு
 10. நீங்க சொல்றது சரிதான். தேர்தல் முடிவு வரும் வரை கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்.

   நீக்கு
 11. அட! அந்த மனுஷன் இன்னும் இந்தப் பக்கம்தான் சுத்திக்கிட்டு இருக்காரா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா....

   நீக்கு
 13. Mudhal kelviyileye nagarndhu irukkanum. Nalla velai veru asambavidham yedhum nadakkavillai. irundhalum romba interesting aga irundhadhu.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 14. சுதா த்வாரகாநாதன் புது தில்லி3 ஏப்ரல், 2014 அன்று முற்பகல் 10:38

  இந்த மாதிரி மாட்டிய பின் நல்ல படியாக தப்பித்ததே போதும். 'தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்' என்ற மொழி கவனத்தில் வந்தது. இந்த ஊரில் க்யூவில் வரச் சொன்னதற்கே போட்டுத் தள்றாங்கப்பா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

   நீக்கு
 15. இதுபோல இன்னும் எத்தனை ஆசாமிகளை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள் என்று தெரியவில்லை
  tha.ma.7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   நீக்கு
 16. நல்ல அனுபவம்! இது போன்ற ஆசாமிகள் பேசும்போது சாதுர்யமாக நகர்ந்து விட வேண்டியதுதான்.இல்லாவிடில் தப்பிக்க ‘ஸ்ரீரங்கத்து உலக்கை’ கதைபோல அடுத்தவர் வரும் வரை காத்திருக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீரங்கத்து உலக்கை! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 17. நீங்கள் சொன்ன காட்சி வர்ணனை படித்தபோது எனக்கும் அதே வடிவேலு நடித்த காட்சிதான் நினைவுக்கு வந்தது! பார்த்து பாஸ்... ஏதாவது ரகசிய உளவாளியாய் இருக்கப் போறாரு...! :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. //ரகசிய உளவாளியாய்//

   ஸ்ரீராம் சார், இது அதீத கற்பனை.. ஹஹஹா..

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி....

   நீக்கு
 18. மனநிலை பாதித்தவர் என்றுதான் தெரிகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 19. ஆம் ஆத்மி ஆசாமிகிட்டே மாட்டிக்கிட்டேங்க போலிருக்கு! நல்ல வேளை தப்பிச்சிட்ட்டீங்க! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 20. முதல் கேள்விய தவிர மத்தது எல்லாம் நியமாதான் இருந்தது...
  நல்ல வேலை பஸ் வந்தது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நியாயமான கேள்விகள் தான்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ் பிரபு.

   நீக்கு
 21. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு
 22. ஜாக்ரதை பாஸ், அப்படியே பேச்சு கொடுத்து ஆட்டைய போட்டுட போறாங்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   நீக்கு
 23. இந்தத் தடவ தப்பிச்சிட்டீங்க. இன்னொரு தபா மாட்டினீங்க, மகனே கொடல உருவாட்டி நானெ இந்தியன் இல்லே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி கந்தசாமி ஐயா.

   நீக்கு
 24. அரசியல்வாதிகளையும், வேட்பாளர்களையும் நோக்கி கேட்க வேண்டிய கேள்விகளை பார்க்கும் அனைவரிடமும் கேட்கும் அளவிற்கு அவருக்கு மனோ வியாதி வந்து விட்டது போலும்.

  உண்மைதான் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் குணசீலன்.

   நீக்கு
 25. நீங்களும் இந்திய நாட்டில் ஒரு குடிமகன் தானே...? அதே சமயம் பிரபல பதிவர் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கிறது போல. கேட்டுவிட்டார்.
  அவர் தான் உண்மையான இந்தியர்!!
  பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நாகராஜ் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், மிக்க நன்றி அருணா செல்வம்.

   நீக்கு
 26. சில நேரம்களில் சில மனிதர்கள் ..அதில் இவர் ஒரு வகை !
  த ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....