வெள்ளி, 4 ஏப்ரல், 2014

ஃப்ரூட் சாலட் – 87 – இதுவல்லவோ கொண்டாட்டம் – தேவதை – பிறந்த நாள்இந்த வார செய்தி:

இதுவல்லவோ பிறந்த நாள்....! 10 வயது சிறுவனின் காருண்யம்!

ஜெர்மனைச் சேர்ந்த தமிழ் சிறுவன் ஒருவன் தனது 10 வது பிறந்த நாளை அனைத்து தமிழ் மக்களையும் கண்கலங்க வைக்கும் வகையினில் தாயகத்தினில் கொண்டாடியுள்ளான்.

தனது கைச்செலவிற்கென பெற்றோர் வழங்கிய பணத்தினை சேமித்து வைத்திருந்த அவன் பிறந்த தின கொண்டாட்டங்களிற்கென பெற்றோர் வைத்திருந்த பணத்தினையும் கேட்டுப்பெற்றுள்ளான்.

தாயக செய்திகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டுள்ள அவன் தனது பிறந்த தினத்தினை யுத்தத்தினால் நடமாட முடியாதிருக்கும் தாயக உறவுகள் இரண்டு பேருக்கு உதவ விருப்பங்கொண்டுள்ளான்.

அவனது உதவிகளை ஊடகவியலாளர்கள் சிலரது உதவியுடன் கள செயற்பாட்டாளரும் வலி.வடக்கு பிரதேசசபை உப தலைவருமான ச.சஜீவன் மூலம் அவன் சேர்ப்பித்துள்ளான்.

கண்ணீருடன் நூறு வருடம் வாழ அவனை வாழ்த்தின தாயக உறவுகள், அச்சிறுவன் சிறீரஞ்சன் தமிழ்பிரியனிற்கு அனைவரதும் வாழ்த்துக்களும் நிச்சயமிருக்கும்.

     செய்தி: இணையத்திலிருந்து.....

இந்த வார முகப்புத்தக இற்றை:
என்றைக்கோ வரப்போகிற மாமியாரைச் சொல்லிச்சொல்லியே இன்றைக்கும் என் அதிகாலைத் துயில் கலைத்துவிட்டாளே அம்மா!

 கீதா மதிவாணன்.

இந்த வார குறுஞ்செய்தி:

இன்று உனக்கு
பிறந்த நாள்
மட்டும் அல்ல
இந்த உலகுக்கு
தேவதை வந்த
நாளும் கூட..!

இந்த வார ரசித்த படம்:இந்த வார ரசித்த பாடல்:

பிதாமகன் படத்திலிருந்து “இளங் காத்து வீசுதேபாடல் இந்த வார ரசித்த பாடலாய்......   இந்தப் படத்தில் இந்த பாடல் மட்டும் ரொம்பவும் பிடித்த பாடல். இதோ உங்கள் ரசனைக்கு...
ரசித்த கார்ட்டூன்:இது கார்ட்டூன் அல்ல! இருந்தாலும் இந்த பகுதியில்.... உத்திரப் பிரதேச மாநிலத்தில் பள்ளி செல்லும் சிறுவர்கள் அணிந்திருந்த முகமூடிகள்! அரசியல் பள்ளி வரை வந்துவிட்டது... இவர்கள் எதிர்காலத்தில் நம்மை ஆண்டாலும் ஆளலாம்!

படித்ததில் பிடித்தது:


உன்னைப்பற்றி
கவிதை எழுத
நினைக்கும்போதெல்லாம்
இனிய கவிதையாய்
நீயே
என் முன் வந்து
நிற்கிறாய்
செல்லமே !!!

-          மஞ்சுபாஷிணி சம்பத்குமார்

என்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி: இன்றைய ஃப்ரூட் சாலட்-ல் பிறந்த நாள் பற்றிய விஷயங்கள் கொஞ்சம் நிறையவே! காரணம் இன்று எங்கள் தேவதை - ரோஷ்ணியின் பிறந்த நாள்!

68 கருத்துகள்:

 1. ஜெர்மனியைச் சேர்ந்த அந்த தமிழ்ச் சிறுவனைப் பாராட்டுவோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 2. என்னே சிறுவனின் காருண்யம்...!

  கார்ட்டூன் கலக்கல்...

  அம்மா படம் மிகவும் அழகு...!

  தேவதைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 3. பிறந்த நாள் வாழ்த்துகள் ரோஷ்ணி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   நீக்கு
 4. என்ன ஒரே பிறந்த நாள் செய்தியாய் இருக்கிறதே என நினைத்தேன். கடசியில் விடை கிடைத்துவிட்டது. உங்கள் தேவதை ரோஷ்ணிக்கு உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 5. ரோஷ்ணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

  சிறுவன் சிறீரஞ்சன் தமிழ்பிரியனின் செயல் பாராட்டுக்குரியது.

  தவழும் குழந்தை அழகு. நல்ல தொகுப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 6. ரோஷ்ணிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..!
  !நீண்ட ஆயுளுடன் வளமோடு வாழ இறைவன் அருள் புரியட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 7. பல்லாண்டு வாழ்க! தங்கள் அன்பு மகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 8. மஞ்சுவின், கீதாவின் வரிகள் ரசிக்க வைத்தன வெங்கட். அந்தச் சிறுவனின் கருணை மனம் வியக்க வைத்தது. அன்புச் செல்லம் ரோஷ்ணிக்கு மகிழ்வான இனிய பிறந்ததின நால்வாழ்த்துகளும் ஆசிகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கணேஷ்.....

   நீக்கு
 9. மஞ்சுபாஷிணி சம்பத்குமாரின் கவிதை அருமை!
  ரோஷ்ணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 10. தமிழ்ச் செல்வன் - சிறீரஞ்சன் தமிழ் பிரியனின்
  பாராட்டுக்குரிய செயல் கண்டு மனம் நெகிழ்கின்றது..
  ரோஷ்ணிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!..
  அன்னை அபிராமவல்லியின் திருவருளால் வாழ்க.. வாழ்க!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ...

   நீக்கு
 11. ரோஷ்ணி பாப்பாக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். ஜெர்மன் வாழ் தமிழ் குழந்தைக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 12. சிறுவன் சிறீரஞ்சன் தமிழ்பிரியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  “உண்டால் அம்ம இவ்வுலகம்” எனும் புறநானூறுதான் நினைவுக்கு வருகிறது. பழக்கலவை மிகவும் சுவையாக இருந்தது அய்யா., நல்லவற்றைத் தொடர்ந்து பகிருங்கள். நன்றி
  குழந்தை ரோஷ்ணிக்கும் அன்பு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நா. முத்துநிலவன் ஐயா.

   நீக்கு
 13. தங்களைப்போலவே பதிவுலகில் உயர ரோஷ்ணிக்குபிறந்த நாள் வாழ்த்துக்கள் !
  த ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 14. அந்த தமிழ் சிறுவனின் செயலை பாராட்டியே ஆக வேண்டும்.

  புகைப்படத்தில் தோன்றும் அந்த இரண்டு குழந்தைகளும் கொள்ளை அழகு.

  ரோஷினிக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 15. ரோஷ்ணிக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 16. தமிழ்ப்பிரியனுக்கு வாழ்த்துக்கள். அந்தக் கோலம் முக நூலில் பகிரப்பட்ட போது டவுன்லோட் செய்ய நினைத்தேன்...அப்புறம் யார் பகிர்ந்ததென்றே தெரியவில்லை...இங்கே கிடைத்து விட்டது நன்றி. வளமான எதிர்காலம் அமைய இந்த பிறந்த நாளில் ரோஷ்ணியை வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி எழில்.

   நீக்கு
 17. Indraya padhivil PirandhaNaal kondadum anaivarukku Pirandhanaal Nal Vazhththukkal. Especially Roshni Happy Birth Day to You.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 18. தமிழ்ப்ரியனுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ரோஷ்ணிக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள். அவங்க அம்மாவும் பதிவு போட்டிருக்காங்க போல! :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 19. ஃப்ரூட் சாலடில் திராக்ஷைப் பழம் கம்மியோ? :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 20. முதல் செய்தி உருக்கம்.

  இற்றை பிரமாதம்.

  மஞ்சுபாஷிணி கவிதை ஜோர். (முகநூலிலும் படித்து விட்டேன்)

  ரோஷ்ணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 21. //இன்று எங்கள் தேவதை - ரோஷ்ணியின் பிறந்த நாள்!//

  தங்களின் அன்பு மகள் செல்வி. ரோஷ்ணி அவர்களுக்கு எங்கள் நல்வாழ்த்துகள். மனம் நிறைந்த ஆசிகள். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  நீண்ட ஆயுளுடன் வளமோடு வாழ இறைவன் அருள் புரியட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 22. பாப்பாக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   நீக்கு
 23. தமிழ் சிறுவனின் ஈகை குணம் மெய்சிலிர்க்க வைத்தது! குழந்தை பற்றிய கவிதைகள் இரண்டும் சிறப்பு! தங்கள் செல்ல மகள் ரோஷ்ணிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 24. ரோஷ்ணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி குடந்தையூர் சரவணன்

   நீக்கு
 25. உங்கள் வீட்டுத் தேவதைக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்களும், ஆசிகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   நீக்கு
 26. அந்தச் சிறுவன் எங்கிருந்தாலும் பலாண்டு வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்
  நானும் .சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்....

   நீக்கு
 27. தமிழ்ச் பிரியனுக்கும் ரோஷணிக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு
  2. ரோஷ்ணிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..! வளமுடன்வாழ நல்லாசிகள்.

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 28. அழகான குட்டிப்பாப்பா கோலத்தை ரசிப்பதாக இருந்திருக்கக் கூடாதோ ! துறுதுறு குட்டிப் பாப்பாவும் அழகு. முதலில் அங்குபோய் இங்கு வந்ததால் பிறந்தநாள் பற்றிய காரணம் முதலிலேயே புரிந்துவிட்டது.

  உங்கள் செல்ல மகளுக்கும் எங்களின் இனிய, மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   நீக்கு

 29. இனிய வணக்கம் நண்பரே..
  சின்னஞ்சிறு உள்ளத்தில் தோன்றிய
  உதவும் மனப்பான்மை நெஞ்சிற்கு
  இனிமையாக இருந்தது...

  சகோதரி மஞ்சுபாஷிணியின் கவிதை அருமை...

  அன்பு மருமகளுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   நீக்கு
 30. ரோஷ்ணிக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   நீக்கு
 31. மஞ்சு அக்காவின் கவிதை அருமை... ரோஷிணிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்.பை. சரவணன்.

   நீக்கு
 32. தன் சேமிப்பை தமிழ்பிரியன் யுத்தத்தினால் நடமாட முடியாதிருக்கும் தாயக உறவுகள் இரண்டு பேருக்கு கொடுத்துள்ளது அருமையான செயல், பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும்.
  ரோஷ்ணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை நேற்று ஆதியின் பதிவில் சொல்லி விட்டேன்.
  இன்று இங்கு தாமதமாய் என் வாழ்த்துக்களை சொல்கிறேன் ரோஷ்ணிக்கு வாழ்க வளமுடன்.
  பாடல், படங்கள் , கவிதை எல்லாம் அருமை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 33. ஜெர்மனியைச் சேர்ந்த அந்த தமிழ்ச் சிறுவனைப் பாராட்டுவோம்.உங்கள் செல்ல மகளுக்கும் எங்களின் இனிய, மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நிலாமதி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....