புதன், 23 ஏப்ரல், 2014

[G]காஜர் பராட்டா....
பதிவர் ஆசியா உமர் அவர்கள் தனது சமைத்து அசத்தலாம்பக்கத்தில் ஒரு முறை விருந்தினர் சமையலுக்கு சமையல் குறிப்பு அனுப்புங்களேன் என்று கேட்டிருந்தார். அப்போது எழுதி வைத்த பதிவு இது – ஆனா அவங்களுக்கு அனுப்பல! அது இன்றைய பதிவாக.....

ஹிந்தியில் [G]காஜர் என்றால் கேரட். நம் ஊரில் கிடைக்கும் காரட் போல ச்சப்புன்னு இல்லாம இங்கே வடக்கில் கிடைக்கும் கேரட் மிகவும் சுவையாக இருக்கும். குளிர் காலங்களில் நிறையவே கிடைக்கும். அந்த சமயத்தில் ஒரு கிலோ கேரட் பத்து ரூபாய்க்கும் குறைவாகவே விற்கும். இரண்டு மூன்று கிலோ வாங்கி வந்து பச்சையாகவோ, கேரட் ஹல்வா, பராட்டா எனவோ செய்து சாப்பிடுவது வழக்கம். இன்றைக்கு [G]காஜர் பராட்டா செய்வது எப்படி எனப் பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்:

துருவிய கேரட் – மூன்று கப்.
பொடிப்பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – அரை கப்
பச்சை மிளகாய் – மூன்று [காம்பினை அகற்றி பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்]
துருவிய இஞ்சி – அரை ஸ்பூன்.
மல்லி மற்றும் ஜீரகம் பொடி செய்தது – இரண்டு ஸ்பூன்
மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன். 
ஓமம் - அரை ஸ்பூன்
உப்பு – உங்களுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு!
கோதுமை மாவு – ஆறு கப்.
எண்ணை தேவையான அளவு.
இதையெல்லாம் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து என்ன என்று பார்க்கலாம்!

ஒரு கண்ணாடி கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் – கண்ணாடி கிண்ணம் எல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது – கீழே போட்டு விடுவேன் என நினைத்தால் – வாய் அகன்ற வாணலியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மேற்கண்ட அனைத்தையும் [எண்ணை தவிர] போட்டு நல்லா ஒரு கலக்கு கலக்குங்க! கொஞ்சமா தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல பிசைந்து கொள்ளுங்கள்.  சாதாரணமாக தேவைப்படும் தண்ணீரை விட குறைவாக இருப்பது நல்லது. நன்கு சேர்ந்து வந்ததும் கொஞ்ச நேரம் அங்கிருந்து நகர்ந்து வந்து பதிவுலகம் எப்படி இருக்குன்னு எட்டிப் பார்த்துடுங்க! எதாவது பதிவு போட்டிருந்தால், அதற்கு கருத்து ஏதும் வந்திருக்கிறதா எனப் பார்த்து அதை பப்ளிஷ் பண்ணுங்க! ஒண்ணுமே comment வரலையே, என்ன பண்றது?என்று கேட்காமல் மத்தவங்களோட ஒரு பதிவு பார்த்து கமெண்ட், ஓட்டு எல்லாம் போட்டுட்டு திரும்பவும் கிச்சனுக்கு வாங்க!
பிசைந்து வைத்த மாவினை ஒரு சப்பாத்திக்கு எடுத்துக் கொள்ளும் மாவினை விட கொஞ்சம் அதிகம் எடுத்து உருண்டைகளாக உருட்டி வைச்சுக்கோங்க! அப்புறம் பூரிக்கட்டை, சப்பாத்திக்கல் இரண்டையும் எடுங்க! சப்பாத்தி மாதிரியே இடுங்க! கொஞ்சம் தடிமனா இருக்கட்டும்.  அதை தவாவில் போட்டு எண்ணையோ அல்லது நெய்யோ விட்டு நல்லா சுட்டு எடுங்க! கொழுப்பு அதிகம்னு நினைச்சா நெய் வேண்டாம்.  கொழுப்பில்லா எண்ணை பயன்படுத்தலாம்! இரண்டு பக்கமும் நல்லா பொன்னிறமா வெந்த பிறகு ஒரு ப்ளேட்ல எடுத்து போட்டுடுங்க! இப்படியே இருக்கிற எல்லா உருண்டைகளையும் பராட்டாவா போட்டு எடுத்துடுங்க!சுடச்சுட தட்டுல போட்டு வீட்டுல இருக்கிற எல்லாருக்கும் கொடுங்க! என்னது சைட் டிஷ் என்னவா? இதுக்கு சைட் டிஷ் ஒண்ணுமே வேண்டாம் – கொஞ்சம் ஊறுகாய், ஒரு கப் தயிர்! இது போதும். சுவையான டேஸ்டியான [G]காஜர் பராட்டா ரெடி. 

உஷார் குறிப்பு:  சின்னச் சின்னதாய் பச்சை மிளகாய் வெட்டி போட்டு இருக்குங்கறத நினைவுல வைச்சுக்கோங்க! குழந்தைகளுக்கு கொடுக்கும்போது முடிஞ்சா அந்த மிளகாய்களை பராட்டாவிலிருந்து எடுத்துடுங்க!

இன்னிக்கு உங்க வீட்டுல [G]காஜர் பராட்டா தானே....  தோ வந்துட்டே இருக்கேன். நான் சொன்னமாதிரி சரியா செஞ்சு இருக்கீங்களான்னு பார்க்க வேண்டாமா?

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

78 கருத்துகள்:

 1. படம் பார்த்ததுமே நாவில் நீர் ஊற வைக்குது. அடுத்தமுறை டில்லியிலருந்து கிளம்பறப்ப காஜர் பரோட்டாவோட கிளம்புங்க. மீ இங்க வெயிட்டிங் ஃபார் ஈட்டிங். ஹி... ஹி... ஹி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க வீட்டில் வந்து செய்து தந்துவிடலாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   நீக்கு
 2. சமையல் ஏரியாவிலும் அசத்துறீங்களே.. ஹஹஹா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா.... தில்லி வந்த புதிதில் Bachelor Days’ல நளபாகம் தான் ஆவி! அதான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   நீக்கு
 3. நான் முதலில் "காஜல்" பரோட்டா ன்னு படிச்சுட்டன்.. அப்புறம் தான் தெரிஞ்சுது.. ஹிஹிஹி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஜல் பராட்டா செய்தா சாப்பிட போட்டி அதிகமாயிடும் ஆவி! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   நீக்கு
 4. வீட்டம்மாவிடம் இன்றே காரட் பராட்டா செய்ய சொல்லவேண்டியதுதான். தகவலுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செய்து தரச் சொல்லி சாப்பிட்டு பாருங்க.... நல்லா இருக்கும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
  2. நீங்கள் தந்த குறிப்புப்படி என் மனைவி தயாரித்த காரட் பராட்டா தான் இன்றிரவு உணவு எங்களுக்கு. சுவையான பராட்டாவை அறிமுகப்படுத்திய உங்களுக்கு என் பாராட்டுக்கள்!

   நீக்கு
  3. ஓ... இன்றைக்கே செய்து பார்த்தாச்சா.... உங்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 5. அடுத்ததா சென்னை வரும்போது எல்லாப் பதிவர்களுக்கும் இதை நீங்களே சொந்த செலவில் செய்து இலவசமாய் தர வேண்டுகோள் விடுக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொந்த செலவில்.... செய்துட்டா போச்சு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்

   நீக்கு
 6. சுவையான சமையல் குறிப்பிற்குப் பாராட்டுக்கள்..1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 7. புது வித சப்பாத்தியா!? சாதாரண சப்பாத்தி சாப்பிட்டு சலிச்சுப் போய் வந்திருக்கும் தூயாக்கு செஞ்சு கொடுத்து நல்லப் பேரை வாங்கிட வேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செய்து கொடுங்க ராஜி.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  பதிலளிநீக்கு
 9. நாங்களும் செய்து பார்க்கிறோம்...

  பதிவுலக டிப்ஸ் + முக படம் சூப்பர்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 10. இங்கே - குவைத்தில் - சொந்த சமையல் தான்!..
  ஆகவே, இதோ கிளம்பி விட்டேன்.. காரட் வாங்குவதற்கு!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   நீக்கு
 11. புது விதமான சப்பாத்தியாக இருக்கிறது. மனைவியை செய்யச் சொல்லி சாப்பிட வேண்டும்.

  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 14. இதையே ஸ்டஃப் பண்ணியும் செய்யலாம். என்ன இருந்தாலும் அங்கே கிடைக்கும் காரட்டின் நிறம், மணம், குணம் இங்கே இல்லைதான். அல்வான்னா அங்கே தான்! :( சாப்பிட்டு எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன! :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

   நீக்கு
 15. வெரிகுட்! வெரிகுட்! ரொம்ப நாளைக்கு அப்புறம் சமையல் குறிப்பு.

  (கண்ணில் மிளகாய் வைப்பது எப்படி என்ற புகைப்பட விளக்கமும் அருமை.)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 16. உண்மையா சொல்லுங்க. இது நீங்களே சுட்டதா? இல்ல ஆதி அண்ணிகிட்டேருந்து சுட்டதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வட இந்திய உணவுகள் பலவற்றை ஆதிக்கு சொல்லிக் கொடுத்ததே நான் தான்! :)

   இங்கே போட்டிருக்கும் படங்களும், பராட்டா செய்ததும் நான் தான்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   நீக்கு
 17. முள்ளங்கி பரோட்டா மாதிரி இனி காரட் பரோட்டாவும் செய்திட வேண்டியதுதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செய்து பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   நீக்கு
 18. வாவ்.. இன்னைக்கு காஜர் பரோட்டா செய்திட வேண்டியது தான்.. நன்றி சார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செய்து பாருங்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சமீரா.

   நீக்கு
 19. ஓமம் போடுவதில்லை. மற்றபடி வெவ்வேறு காம்பினேஷன்களில் காய் கலந்து இப்படி சப்பாத்தி செய்வதுண்டு! என்னைப் பொருத்தவரை மைதா மாவில் அடித்து, வளைத்து உருட்டி, மடித்து திரும்பத் திரும்ப இட்டு போட்டு எடுத்தால்தான் அது பரோட்டா! ஹிஹிஹி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 20. இதோ இப்பவே போகிறேன் அருமையான இந்தத் தகவலை வைத்துக்கொண்டே
  சமையல் கில்லாடி பட்டம் வாங்கிப் பறக்க விட வேண்டும் :)))) மிக்க நன்றி
  சகோதரா உங்கள் வீட்டில் சமையல் முடிந்து விட்டதா?..அப்போ அம்பாளடியாளின்
  ஆக்கங்களை வாசித்து லைக்கு மழையை ,கருத்து மழையைப் பொழியுங்கள் :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   நீக்கு
 21. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மல்லி....

   நீக்கு
 22. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஷ் பிரபு.

   நீக்கு
 23. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 24. படங்களை பார்த்ததுமே நாக்குல நீர் சொட்டுது! செஞ்சு பார்த்திட வேண்டியதுதான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செய்து பாருங்க சுரேஷ்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 25. காரட் அல்வா சாப்பிட முடியாது. காரட் பராத்தா செய்யலாமெ. தயிரும் சின்னவெங்காயமும் சேர்த்துப் பச்சடியாத் தொட்டுக்கலாம். ம்ம்ம் சூப்பர் வெங்கட் .நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தயிரும் சின்ன வெங்காயமும் சேர்த்து பச்சடி... நல்லாத்தான் இருக்கும்மா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா..

   நீக்கு
 26. கொழுப்பு இல்லாத எண்ணை எங்கே கிடைக்குதுனு சொன்னா குறைஞ்சா போயிடுவீங்க?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா.... நல்ல கேள்வி! :) நெய் கொழுப்புன்னு சொல்லி சொல்லி எங்க எண்ணையில் கொழுப்பு இல்லை எனச் சொல்வதை நம்பி வாங்கும் பலர் உண்டு. அவர்களுக்காக எழுதியது அது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   நீக்கு
 27. நாளை இரவு இது தான் நம்ம வீட்டுல டிபன்.... (இன்னைக்கி நேரமாயிடுச்சி...)
  செய்து அசத்திட மாட்டேன்....
  நன்றி நாகராஜ் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   செய்து பாருங்க!

   நீக்கு
 28. 'டீச்சர் போஸ்ட்'டுக்கு நேர்முகத் தேர்வெல்லாம் தேவையில்லை போலிருக்கே !

  சப்பாத்தியை தயிர் & ஊறுகாயுடன் ? சிலர் சொல்லும்போது நம்பமாட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   நீக்கு
 29. பேரன்களுக்கு என்ன டிபன் செய்து தருவது என்ற கவலை இந்த gகாஜர் பராட்டா பார்த்ததும் தீர்ந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   நீக்கு
 30. Naan Indru (24.04.14) indha Gajar parotta seidhen. Romba nandraga irundhadhu. Padangalai Message il share seidhullen.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி. படங்களைப் பார்த்தேன். நன்றாக வந்திருக்கிறது பராட்டா! :)

   நீக்கு
 31. Dear Kittu,

  Gajarparota nee sonadhu pol try panni parthen. Facebook message il unaku photo anupiyullen. Parkavum

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 32. படங்களே சாப்பிடத் தூண்டுகின்றன ஐயா நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 33. நல்ல ஆரோக்கியமான உணவு. படங்களுடனான செய்முறைப் பகிர்விற்கு நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   நீக்கு
 34. சமையல் கலையிலும் அசத்துகிறீர்கள்
  காஜர் பராட்டா.. ஒரு கிலோ பார்சல்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 35. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 36. காசர் பரோட்டா சாப்பிட்டு நாலு நாளாச்சு .சீக்கிரம் அடுத்த டிபனை ,,சாரி...பதிவைப் போடுங்க !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்று காலை அடுத்த பதிவு வெளியிட்டு விட்டேன்..... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 37. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்

  வலைச்சர தள இணைப்பு : சமையலில் நளபாகம் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வலைச்சர அறிமுகம் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....