எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, April 18, 2014

ஃப்ரூட் சாலட் – 89 – மின்சாரம் - அன்பினால் வெல்வோம் – துள்ளி எழுந்தது பாட்டு!இந்த வார செய்தி:

வீட்டில் இண்டர்நெட் இணைப்பு இருக்கிறது. கம்ப்யூட்டர் இருக்கிறது. ஆனால் பல சமயங்களில் மின்சாரம்தான் இல்லை. அதனால் இண்டர்நெட் இருந்தும் சரியாக அதைப் பயன்படுத்த முடியவில்லை என்பது நம்மில் பலரது கவலை. ஒருசிலரது வீடுகளில் இன்வெர்ட்டெர் பொறுத்தி மின்சாரப் பிரச்சினையைச் சமாளித்துக்கொள்கிறார்கள். ஆனால் வீட்டிற்குள் இருக்கும்போது அப்படிச் சமாளிக்கலாம். எங்கேயோ வெளியில் செல்லும்போது இணையத்திற்கான மின்சாரம் எப்படிக் கிடைக்கும்?

இந்த கவலையைப் போக்க மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் கணினி நிபுணர்கள். லண்டனில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் அவர்கள் இண்டர்நெட் இயங்கவும் தகவல்களைப் பரிமாறவும் இனி சூரிய சக்தியே போதும் என்கிறார்கள்.

அதற்கான ஆராய்ச்சிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளார்களாம். பகலில் கிடைக்கும் வெளிச்சத்தைப் பயன்படுத்தி சூரிய சக்தித் தகடுகள் மூலம் உலகளாவிய வலையின் சமிக்ஞைகளைக் கண்டறியவும் தகவல்களைப் பரிமாறவும் அவசியமான தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுத் துறை.

கேபிள்கள் மூலம் இணைக்கப்படாத ஒதுக்குப்புறமான பகுதிகளிலும் இணி இணையத்தை இயக்கலாம். இணையம் வேலை செய்யத் தேவையான ஆற்றலையும் சூரிய சக்தித் தகடுகள் வழங்கும். அதைப் போலவே இணைய தகவல்களைப் பரிமாறவும் அதே தகடுகள் உதவும். இந்த இரண்டு வேலைகளையும் சூரிய சக்தி தகடுகளைக் கொண்டே முடித்துவிட முடியும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

இந்தத் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்துவிட்டால் நெருக்கடி நேர நிலைமைகளை எளிதில் சமாளிக்கலாம். கரண்ட் போய்விட்டால் கம்யூட்டரை இயக்க முடியாது என்னும் நிலைமை போயே போய்விடும்.

இந்தத் தொழில்நுட்பத்தை லைஃபை (Li-Fi) என அழைக்கின்றனர். சூரிய சக்தி மூலம் எல்.இ.டி. பல்புகளை எரியவைத்து அதன் வழியே தகவல்களைப் பரிமாறத் திட்டமிட்டுள்ளார்கள். எடின்பர்க்கில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் திருவிழாவில் தகவல்தொடர்புத் துறையின் பயோனியரான பேராசிரியர் ஹரால்ட் ஹாஸ் இந்த்த் தொழில்நுட்பம் குறித்து விரிவுரை வழங்கியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு இதைப் போன்ற கண்டு பிடிப்புகள் மிகவும் உதவியாக இருக்கும் அல்லவா?


இந்த வார முகப்புத்தக இற்றை:இந்த வார குறுஞ்செய்தி:

LIVING IN THE FAVOURABLE AND UNFAVOURABLE SITUATION IS CALLED PART OF LIVING. BUT SMILING IN ALL THOSE SITUATIONS IS CALLED ART OF LIVING!


இந்த வார ரசித்த காணொளி

தாய்லாந்து விளம்பரம் ஒன்று இந்த வார ரசித்த காணொளியாக. பார்த்து முடிக்கும் போது நிச்சயம் உங்கள் மனதைத் தொட்டிருக்கும் இந்த காணொளி!


   


ரசித்த பாடல்:

இளையராஜா பாடல்கள் என்றாலே ஒரு இனிமை தான். அவர் இசையமைத்த பல பாடல்களை ரசித்த பாடலாகச் சொல்லலாம்! அப்படி ரசித்த பாடலாக இன்றைய ஃப்ரூட் சாலட்-ல் கீதாஞ்சலி படத்திலிருந்து துள்ளி எழுந்தது பாட்டுபாடல் இதோ!


ரசித்த புகைப்படம்:

ஹலோ எச்சூஸ்மி! என்னை உங்களுக்கு பிடிச்சுருக்கா?

படம்: இணையத்திலிருந்து....

படித்ததில் பிடித்தது:

 படம்: இணையத்திலிருந்து....
புத்தர் பொதுவாகத் தன் கருத்துகளைக் கதைகள் மூலம் விளக்குவது வழக்கம். அப்படிப்பட்ட ஒரு கதை காசியின் அரசனைப் பற்றியது.

அந்த அரசன் நல்ல பலசாலி. ஒரு முறை கோசலை நாட்டின் மீது அவர் படையெடுத்தார். கோசலை நாட்டின் அரசனும் அரசியும் ஓடிப் போய் ஒரு குயவர் வீட்டில் ஒளிந்துகொண்டார்கள். அங்கே அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுடைய பெயர் திகவு.

ஆனால், சில ஆண்டுகளிலேயே கோசலை அரசன் ஒளிந்திருக்கும் ரகசியம் வெளியே தெரிந்துவிட்டது. கோசலை நாட்டு அரசனையும் அரசியையும் காசி அரசன் கைது செய்தார். இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை நிறைவேற்றப்பட்டபோது கோசலை அரசன், தனக்கு எதிரே இருந்த கூட்டத்தில் தன் மகனும் நிற்பதைக் கண்டார். தூக்கு மரத்தில் ஏறுவதற்கு முன் அவர் தன் மகனிடம், "வெறுப்பை அன்பினால் வெல்லலாம்" என்றார்.

திகவு வளர்ந்து நல்ல பாடகனாக மாறினான். அவனுடைய புகழ் எட்டுத் திசையும் பரவியது. காசி மன்னர் அவனைத் தன்னுடைய அரசவையில் சேர்த்துக்கொண்டார். மெல்ல மெல்ல திகவு அரசனின் நன்மதிப்பைப் பெற்றான். உயர்ந்த பதவியும் கிடைத்தது. ஒரு நாள் திகவு அரசனுடன் வேட்டைக்குச் சென்றான். காட்டில் யாருமே இல்லாத ஓர் இடத்தில் அரசன் களைத்துப் போய் உறங்கிவிட்டார். திகவு தன் வாளை உருவினான். "நீ என்னுடைய தாய்-தந்தையைக் காரணமில்லாமல் கொலை செய்தாய். இதோ உன்னையும் எமனிடம் அனுப்பிவிட முடியும்" என்று உரத்த குரலில் சொன்னான்.

அப்போது திகவுக்குத் தன்னுடைய தந்தை கடைசியாகக் கூறிய வார்த்தை, திடீரென்று ஞாபகத்துக்கு வந்தது. அவன் அரசனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.

அவனுடைய இந்தச் செய்கை அரசரின் மனதை மாற்றியது. அவருக்கு உண்மை புரிந்தது. திகவுக்கு தன் அரச பதவியைக் கொடுத்துவிட்டுப் பதவியைத் துறந்தார். தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்துவைத்தார்.

புத்தர் இந்தக் கதையைக் கூறி, எப்போதும் திகவு போல கருணை உள்ளத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று போதிப்பார்.

என்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

62 comments:

 1. முதல் செய்தி நானும் படித்தேன்!

  இற்றை பிரமாதம்.

  குறுஞ்செய்தி ஓல்ட்... பட் கோல்ட்!

  இந்த இளையராஜா பாடல் என் அலைபேசியில் இன்றும்!

  ர.பு.ப - ரொம்ப்......பப்....பிடிச்சிருக்கு!

  ரசித்த கதை நன்று. ஆனால் கதைகளில் மட்டுமே சாத்தியம்!


  ReplyDelete
  Replies
  1. கதைகளில் மட்டுமே சாத்தியம்! - உண்மை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. இந்த வார பழக் கலவையில் அந்த முகப்புத்தக இற்றையும் காணொளியும் அருமை. காணொளியில் உள்ளதை கதையாக படித்திருக்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 3. இற்றை அட்டகாசம் !
  இந்த முறை மற்ற எல்லாவற்றும் அது தூக்கி சாப்டுடுச்சு !!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete
 4. இந்தத் தொழில்நுட்பம் தமிழ்நாட்டிற்கு உடனே தேவை தான்... குழந்தை அழகோ அழகு... பிடித்தது மிகவும் பிடித்தது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. li-fi வந்தா ஒரு பெரிய புரட்சியே ஏற்படும்..... அனைத்து தகவல்களும் சுவாரசியமாக இருந்தன. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்.

   Delete
 6. லைஃமை தொழில் நுட்பத்தை வாழ்த்தி வரவேற்போம் ஐயா.
  முகப்புத்தக வார்த்தைகள் எவ்வளவு எளியதோ, அவ்வளவு வலியதாய் இருக்கிறதே.
  காணொளி அருமை ஐயா. கலங்க வைத்து விட்டது
  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 7. Replies
  1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 8. காணொளியும் பழமொழியும்
  கதையும் மிக மிக அருமை
  சத்தான சுவையான ஃபுரூட் சாலட்டிற்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 9. Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 10. இப்போ தான் குறும்படம் லோட் ஆச்சு ! செம டச்சிங்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete
 11. லைஃபை (Li-Fi) தொழில்நுட்பத்தை வரவேற்போம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 12. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   தகவலுக்கு நன்றி நிகண்டு....

   Delete
 13. சாலட் நல்லா இருந்தது சார் liffi குறித்து ஹாரிபாட்டர் பகிர்ந்திருந்த நியாபகம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 14. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 15. எதைக் கூற , எதை விட ,எல்லாமே நன்றாக இருந்தது பிடித்தது.

  ReplyDelete
  Replies
  1. ஜி எம் பி சார் சொல்வது போலத்தான். மணிமணியான செய்திகள். கேட்கவும் பார்க்கவும் இனிமை. யான கருத்துகள். பகிர்வுக்கு மிக நன்றி வெங்கட்.

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 16. படங்களையும் பாட்டினையும் பார்த்தும் கேட்டும் ரசித்தேன் வெகு சிறப்பு .வாழ்த்துக்கள்
  சகோதரா .த.ம .5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 17. காணொளி கண்டு கலங்கின கண்கள்.. மேல் எதுவும் - எழுதும் நிலையில் இல்லை மனம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 18. அருமையான பதிவு. LI-FI தகவல் பயனுள்ளது. புத்தரின் கதை அருமை. உங்கள் பதிவுகளில் எழுத்துக்களை Bold செய்துள்ளீர்கள் போலும். அது தேவையில்லை என்று எண்ணுகிறேன். மேலும் எழுத்துக்களின் அளவும் பெரிதாக உள்ளது. இரண்டும் பதிவின் நீளத்தை அதிகப் படுத்தி காண்பிக்கிறது. என் பதிவில்: http://newsigaram.blogspot.com/2014/04/kandasaamiyum-sundaramum-02.html கந்தசாமியும் சுந்தரமும் - 02

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.

   போல்ட் செய்யவில்லை. பெரிதாக மட்டும். சிலருக்கு சிறிய எழுத்துகள் படிப்பதில் சிரமம் இருக்கிறது நண்பரே....

   Delete
 19. சூரிய சக்தி எல்லா விதத்திலும் உள்நுழைந்தால் மிகச் சிறந்த வல்லரசாகும் வாய்ப்பு கிடைக்கும்.. அந்த விளம்பரப்படம் அருமை. என் பக்கத்தில் பகிர்ந்துள்ளேன். வார வாரம் ஏதோஒரு நாள் பாடல்கள் கேட்டுப் பகிர்வேன்.. இந்த வாரம் துள்ளி எழுந்தது பாட்டு என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது கேட்க வேண்டும் போல்.. இதோ கேட்டு விட்டேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 20. //தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு இதைப் போன்ற கண்டு பிடிப்புகள் மிகவும் உதவியாக இருக்கும் அல்லவா? //
  ஆகா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 21. Replies
  1. தமிழ் மணம் ஏழாம் வாக்கிற்கு மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 22. அனைத்தும் சிறப்பு. முகநூல் இற்றை,குழந்தையின் புகைப்படம். புத்தர் சொன்ன கதை இவற்றை மிகவும் ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 23. லை பய் தமிழ் நாட்டு பதிவர்களுக்கு அவசியம் தேவையான ஒன்று !
  பாப்பா படம் கொள்ளை அழகு !
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 24. அந்த குழந்தை அழகோ அழகோ. உங்கள் கண்ணுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் மாட்டுகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 25. ப்ரூட் சாலட் மிகவும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

   Delete
 26. நல்லா இருந்தது அண்ணே...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 27. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 28. அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 29. விளம்பரக் காணொளி அருமை. அதன் செய்தியும் நன்றாக இருக்கிறது. குழந்தை என்ன அழகு! கண்பட்டுவிடும் போல இருக்கிறது.
  புத்தர் சொன்ன கதை நிஜத்தில் நிகழுமா, சந்தேகம் தான்.
  நல்ல ப்ரூட் சாலட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   புத்தர் சொன்ன கதை நிஜத்தில் சாத்தியம் என்று தோன்றவில்லை.....

   Delete
 30. நானும் உங்களுக்கு வோட்டு போட்டுவிட்டேன். (ஒருவழியாக வோட்டுப் போடக் கற்றுக்கொண்டுவிட்டேன்!)

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... ஓட்டுப் போடக் கற்றுக் கொண்டு விட்டீர்களா.... மகிழ்ச்ச் ரஞ்சனிம்மா...

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....