படம்: இணையத்திலிருந்து...
இந்த வார செய்தி:
எனக்குத் தெரிந்த ஒருவருக்கு
நிகழ்ந்த இழப்பு பற்றிய விஷயமே இந்த வார செய்தியாக. இந்த நபர் ஒரு உணவகத்தில் காசு வாங்கி கூப்பன்
கொடுக்கும் உத்தியோகத்தில் இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் பணியில்
மும்மரமாக இருக்கும்போது அவருடைய அலைபேசிக்கு ஒரு அழைப்பு. அவர் எந்த வங்கியில்
சேமிப்புக் கணக்கு வைத்திருக்கிறாரோ அந்த வங்கியிலிருந்து பேசுவதாகச் சொல்லி
இருக்கிறார்.
வங்கி என்றவுடனே, இவரும்
என்ன விஷயம் என்று கேட்க, “உங்களது ATM
அட்டைக்கான கடவு எண்ணை மாற்ற வேண்டும். இப்போதைய எண் என்ன” என்று கேட்க, இவரும் எந்தவித சந்தேகமும் படாமல் தனது கடவு எண்ணை
தந்திருக்கிறார். பத்து பதினைந்து நிமிடங்களுக்குள் அவரது சேமிப்புக்
கணக்கிலிருந்து 25000 ரூபாய் அபேஸ் – ஏதோவொரு Online Purchase செய்து விட்டார் அந்த மர்ம நபர்.
இவருக்கு அலைபேசியில் தகவல்
வந்தவுடன், வங்கியை தொடர்பு கொண்டு உடனடியாக
முடக்கச் சொல்லி தகவல் தந்து பாராளுமன்ற சாலையில் இருக்கும் காவல் நிலையத்திலும்
தகவல் சொல்லி இவரது விண்ணப்பத்தின் ஒரு நகலில் முத்திரை பெற்று வந்திருக்கிறார்.
காவல் நிலையத்தில் எந்த உத்திரவாதமும் தரமுடியாது என்று சொல்லிவிட்டார்களாம்.
எந்த அலைபேசியிலிருந்து
இவருடைய அலைபேசிக்கு அழைப்பு வந்ததோ அந்த எண்ணில் உடனடியாக தொடர்பு கொள்ள, அவரும்
ரொம்பவே தைரியமாக, “ஆமாம் நான் உன்னோட பணத்தில 25000/- செலவு பண்ணிட்டேன். உன்னால
என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ!” என்று சொல்லி அழைப்பை முடித்திருக்கிறார்..... அதன் பிறகு அந்த எண்ணை தொடர்பு கொள்ள
முடியவில்லை.
வங்கிகளும், காவல்
நிலையங்களும் ”அலைபேசி மூலம் ATM அட்டைக்கான
கடவு எண்ணை யார் கேட்டாலும் கொடுக்காதீர்கள்” என எத்தனை எத்தனை விளம்பரங்கள் கொடுத்தாலும், இப்படி முகம் தெரியாத
நபரிடமிருந்து அழைப்பு வந்ததை நம்பி தனது ATM அட்டையின்
கடவு எண்ணைக் கொடுத்த அந்த நபர் ஏமாளியானது தான் மிச்சம். இரண்டு நாட்கள் ஆகியும்
எந்த வித முன்னேற்றமும் இல்லாது, அவருடைய 25000/- பணம் போனது போனதானது!
பணம் போனது மட்டுமல்லாது மன
உளைச்சலுக்கும் அவர் ஆளாகிவிட்டார் என்று நினைக்கும்போது பரிதாபமாகத் தான்
இருக்கிறது.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை
ஏமாற்றுபவர்களும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்....
இந்த வார முகப்புத்தக இற்றை:
இந்த வார குறுஞ்செய்தி:
THERE ARE ONLY TWO OPTIONS REGARDING COMMITMENT. YOU ARE EITHER IN OR OUT. THERE’S NO SUCH
THING AS A LIFE IN BETWEEN – PAT RILEY.
இந்த வார காணொளி:
குழந்தையை ஒழுங்கா தூங்க வைக்காம, வீடியோ எடுத்துட்டு இருக்கறது யாரு.... பக்கத்துல இருக்கற பையன் மும்மரமா டி.வி.
பார்க்கறார் போல!
இந்த வார உழைப்பாளி:
தில்லியில்
உள்ள இந்தியா கேட் பற்றி தெரியாதவர்கள் இல்லை. அங்கே கடைவிரிக்கும் ஒரு உழைப்பாளி
பற்றி இந்த வார ஃப்ரூட் சாலட்-ல் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்தப்
பெண்மணி ராஜஸ்தானில் உள்ள டோங்க் [Tonk] மாவட்டத்தினைச் சேர்ந்தவர்.
இந்தியா கேட் பகுதியில் இவர் அம்ர்ந்து
கொண்டு வரும் போகும் இளைஞர்களின் பெயர்களை ஆங்கில எழுத்துகள் உள்ள மணிகள் மற்றும்
அலங்கார மணிகள் கொண்டு ஒரு கயிற்றில் அழகாய் கோர்த்துத் தருகிறார். ஒரு எழுத்திற்கு இரண்டு ரூபாய். கயிறு மூன்று
ரூபாய். அலங்கார மணி எனில் மூன்று ரூபாய், ஐந்து ரூபாய் என அந்த மணியின்
வடிவத்தினைப் பொறுத்து அமையும். வரும் இளைஞர்/இளைஞிகளைக் கவர்ந்து விட்டால்
நாளொன்றுக்கு இரண்டு அல்லது முன்னூறு ரூபாய் வரை கிடைக்கும். செலவு போக 100-150
வரை கிடைக்கும் என்கிறார் இந்த உழைப்பாளி.
இந்த வார ஓவியங்கள்:
எனது மகள்
வரைந்த ஓவியங்களை அவளது வலைப்பூவில் அவ்வப்போது பகிர்ந்து கொள்வது வழக்கம். போலவே என்னுடைய முகப்பக்கத்திலும். இந்த இரண்டு
இடங்களிலும் பார்க்காதவர்களுக்காக என் மகள் வரைந்த இரண்டு ஓவியங்கள் இங்கே உங்கள்
பார்வைக்கு.....
படித்ததில் பிடித்தது:
அவர் ஒரு அரசியல்வாதி. ஊரில் பெரிய மனிதன். எப்பொழுதும் மன சஞ்சலத்திலேயே
இருந்ததால் தெளிவு வேண்டி ஒரு ஜென் குருவை அணுகினார். அவரும் சில
பிரார்த்தனைகளையும் பயிற்சிகளையும் தியானத்தையும் சொல்லிக் கொடுத்து அதை தினசரி
செய்து வரச் சொன்னார். சில நாட்களில் அவரிடம் மறுபடியும் வந்த அந்த பெரிய மனிதன், ''நீங்கள் சொன்னதெல்லாம்
செய்தேன். ஆனால் தெளிவு ஒன்றும் பிறக்கவில்லையே,'' என்றார். உடனே குரு, ''சரி, வெளியே சாலையில் ஒரு பத்து நிமிடங்கள் நில்லுங்கள்,' 'என்றார். அப்போது கடுமையாக
மழை பெய்து கொண்டிருந்தது. ''இந்த மழையிலா என்னை வெளியே நிற்கச் சொல்லுகிறீர்கள்?'' என்று கேட்க, குருவும், ''ஒரு பத்து நிமிடம் நின்றால்
உங்களுக்குத் தெளிவு பிறக்கும்,'' என்றார். ''சரி பத்து நிமிடம் தானே, தெளிவு பிறந்தால் சரி,'' என்று சொல்லிக்கொண்டே
மழையில் நனைந்தபடி நின்றார். அப்போது அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
பின் கண்களை மூடிக் கொண்டார். பத்து நிமிடம் ஆயிற்று. கண்ணைத் திறந்து பார்த்தால்
அவரை சுற்றி ஒரு பெரிய கூட்டம். அனைவரும் அவரை கேலியாகப் பார்த்து சிரித்துப்
பேசிக் கொண்டிருந்தனர். பெரிய மனிதருக்கு கோபம் வந்துவிட்டது. உள்ளே
விறுவிறுவென்று சென்று, ''தெளிவு ஒன்றும் பிறக்கவில்லையே?'' என்று கேட்டார். ”வெளியில் நின்றபோது எவ்வாறு உணர்ந்தீர்கள்?'' என்று குரு கேட்க அவர் சொன்னார், ''எல்லோரும் என்னைப் பார்த்து
சிரிக்குமாறு செய்து விட்டீர்கள். நான் ஒரு முட்டாள் போல உணர்ந்தேன்.'' உடனே குரு சிரித்துக்
கொண்டே சொன்னார், ''பத்து நிமிடத்தில் நீங்கள் ஒரு முட்டாள் என்பதை
உணர்ந்து கொண்டால் உங்களுக்கு பெரிய அளவில் தெளிவு பிறந்து விட்டது என்றுதானே
பொருள்?'' என்றார்.
என்ன
நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
பாவம்தான் அவர்!
பதிலளிநீக்குஇற்றை நான் ரசிக்கும் இதுபோன்ற பல இற்றைகளில் ஒன்று.
குறுஞ்செய்தி அருமை.
காணொளி .. ஹா ஹா ஹா.. இது போன்றதொரு காணொளி எ.பியிலும் வந்தது! அது வேறு.
ராஜஸ்தான் உழைப்பாளிக்கு சலாம்.
மகளின் ஓவியங்கள் அருமை.
படித்ததில் பிடித்தது... பிடித்தது.
இதே போன்ற காணொளிகள் youtube-லும் நிறைய இருக்கிறது.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
வாவ்... படித்தததில் பிடித்தது எனக்குரொம்பப் பிடித்தது. மணி கட்டித் தரும் பெண்மணி உழைப்பாளிகளுக்கு ஓர் நல்ல உதாரணம். அட.... ரோஷ்ணி வரைந்த பிள்ளையாரும் பாம்பும் கூட சிரித்த முகத்தோடயே இருக்காங்களே... சூப்பர் அவள் கைவண்ணம். ஏடிஎம் எண்ணைக் கொடுத்து ஏமாந்த அந்த நபரின் மேல எனக்குப் பரிதாபம் வரலை. ஸாரி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.
நீக்குகுழந்தை காணொளி அருமை
பதிலளிநீக்குஆனாலும் கீழே விழுந்துவிடுமோ எனப் பயமாக இருந்தது
அடுத்து நூறாவது சாலட்டை ருசிக்கத் தயாராகிவிட்டோம்
வாழ்த்துக்களுடன்....
முதல் முறை பார்க்கும் போது எனக்கும் குழந்தை விழுந்து விடுமோ என்ற பயம் எனக்கும் இருந்தது....
நீக்குஅடுத்த நூறாவது சாலட்.... இன்னும் என்ன பகிர்வது என்று யோசிக்கவில்லை....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.
tha.ma 3
பதிலளிநீக்குதமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குஅருமையான முகப்புத்தக இற்றையை இந்த வாரம் பகிர்ந்தமைக்கு நன்றி! அந்த காணொளியை எடுத்தது அந்த குழந்தையின் தந்தையாகத் தான் இருக்கவேண்டும். தாயாக இருந்தால் குழந்தை தூங்கி விழா இருப்பதை பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார். அழகான படங்கள் வரைந்துள்ள உங்கள் மகளுக்கு எனது வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குகாணொளி எடுத்தது தந்தையாகத் தான் இருக்க வேண்டும்.... :)))) ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு!
நீக்குமகளுக்கு உங்களது வாழ்த்துகளைச் சொல்லி விடுகிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
பிள்ளையார் சுழி போட்டு எழுதத் தொடங்குவார்கள் ,உங்க மகள் பிள்ளையாருக்கே abc எழுத கற்றுக் கொடுத்து விட்டாரே ,ரெண்டு படமும் அருமை !
பதிலளிநீக்குத ம 4
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்....//
பதிலளிநீக்குஉண்மை.
இற்றை, குறுஞ்செய்தி எல்லாம் அருமை.
குழந்தையின் தூக்கம் பார்க்க பார்க்க பரவசம்.
உழைப்பாளி, ரோஷ்ணியின் ஓவியம், படித்தபகிர்வு அனைத்தும் அருமை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
பதிலளிநீக்குகாணொளி - பாவம் குழந்தை...
பதிலளிநீக்குஉழைப்பாளி - சிறப்பு...
ஓவியங்கள் அருமை... அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஜென் குருவுக்கு ஆட்டோ அனுப்பலையா அவரு?? ஹஹஹா..
பதிலளிநீக்குஏ.டி.எம் பின் போன் போட்டு வாங்கற அளவுக்கு நாடு டெவலப் ஆகிடுச்சா? சூப்பரப்பு.
ஆஹா இந்த ஐடியா அரசியல்வாதிக்கு இன்னும் தோணலை போல! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
குழந்தை தூங்கும் காணொளியைபார்த்து பார்த்துசிரித்தேன் ஐயா. பலதடவை. தேடலுக்கு முதலில் பாராட்டுக்கள் தங்களின் மகள் வரைந்த ஓவியமும்அழகாக உள்ளது பகிர்வுக்கு நன்றிஐயா.
என்பக்கம் கவிதையாக
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை???:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குமகளின் கைவண்ணம் மனம் கவர்ந்தது..
பதிலளிநீக்குஏமாற்றம் சிறந்த பாடம் ..
அனைத்தும் அருமை..பாராட்டுக்கள்.!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!....
நீக்குஇன்னும் ஒன்று போட்டால் ஃப்ரூட் சாலட் செஞ்சுரி அடிக்குதா! வெரிகுட்! வெரிகுட்!
பதிலளிநீக்குஇந்தியா கேட் பெண் போன்றோர் உழைப்பாளிகள் மட்டுமல்ல. புதிய கண்டுபிடிப்பாளர்களும் கூட. அவர்கள் தொழிலுக்கு ஏற்றார்போல் ஒரு எலிப்பொறி போன்ற கருவியை கண்டுபிடித்து வைத்திருக்கிறார்களே!
(ரோஷ்ணியின் பிள்ளையாருக்கு மாடல் யார் என்று கண்டு பிடித்து விட்டேன்)
எலிப்பொறி மாதிரி கருவி - ஆமா அண்ணாச்சி.... பார்த்தபோது இது பற்றி சிலாகித்துப் பேசியது இப்போது நினைவுக்கு வருகிறது!
நீக்குபிள்ளையாருக்கு மாடல் - ஆஹா நம்மை இப்படி பப்ளிக்கா கவுத்துட்டீங்களே அண்ணாச்சி...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
வங்கிகள் தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக, கடவுட் சொல்லைப் பற்றிய விழிப்புணர்வை கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் இன்னமும் சில பேருக்கு அது மண்டையில் ஏறவே மாட்டேங்குது...
பதிலளிநீக்குஎத்தனை முறை சொன்னாலும் புரிவதில்லை இவர்களுக்கு.... :(
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
அழகான ஒவ்யியம். தங்களின் மகளுக்கு பாராட்டுக்கள.
பதிலளிநீக்குஅவரின் திறமையை கண்டுகொண்டு, ஊக்குவிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
உங்கள் பாராட்டுகளை மகளிடம் தெரிவித்து விடுகிறேன்......
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன.
இன்றைய ஃப்ரூட் சலாட் அருமை!...
பதிலளிநீக்குகாணொளிக் குழந்தை மனதை என்னமோ செய்தது.
பாவம் தூக்கிப் படுக்க வைக்கக் கூடாதா என்று தவிப்வே வந்துவிட்டது.
உங்கள் செல்லத்தின் கைவண்ணம் அசத்தல்! ஸ்பெஷல் பாராட்டுக்கள் அவளுக்கு!
மொத்தத்தில் அபார ருசியான சலாட்!
நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோதரரே!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.
நீக்குஇந்த உலகம் ஏமாற்று உலகம் தான்...நாம் தான் ஏமாறாமல் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்....எப்படி ஆராயாமல் பாஸ்வேர்டைக் கொடுத்தார்...ம்ம்ம் பாவம்தான்.....
பதிலளிநீக்குஇற்றை மிக அருமை!
நமது திறமைகளை கொஞ்சம் வித்தியாசமாக, கலைக் கண்ண்ணோடு சிந்தித்தால், வறுமை என்பதே இருக்காதோ. அதைத்தான் உணர்த்துகின்றார் இந்த உழைப்பாளிப் பெண்மணி!
தங்கள் மகள் ரோஷிணியின் படங்கள் அருமை....வாத்தியார் கணேஷ் (ஐயோ சார் வாத்தியார் பாலகணேஷ் சார சொல்லல...ஹாஹாஹஹ) படம் அருமை! குழந்தை சிவனும் கொள்ளை அழகு! நல்ல திறமை இருக்கின்றது சார்! ரோஷிணிக்கு எங்கள் வாழ்த்துக்கள்!
அந்தக் குழந்தை பாவம்! சார்! ஏன் இப்படி வீடியோ எடுக்கின்றார்கள் என்று தெரியவில்லை!
ஜென் கதைகள் பற்றிச் சொல்ல வேண்டுமா? இதுவும் அந்த முத்துக்களில் ஒன்று!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.....
நீக்குஇன்றைய வலைச்சரத்தில் உங்களின் வலைப்பதிவை அறிமுகப்படுத்தியிருக்கிறார் திரு கும்மாச்சி அவர்கள்.
பதிலளிநீக்குதகவலுக்கு மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. இரண்டு மூன்று நாட்களாக வலைப்பக்கம் வர முடியாத அளவிற்கு வேலைப் பளு அதிகம்.....
நீக்குஇன்று படிக்கலாம் என்று பார்த்தால் எந்த வலைப்பூவும் திறப்பதில்லை. மீண்டும் ஏதோ பிரச்சனை போல.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இந்தக் காலத்திலும் விழிப்புணர்வு அற்ற மனிதர்!.. வீட்டில் என்ன பாடுபட்டாரோ!..
பதிலளிநீக்குதவிர - மற்றவை அனைத்தும் அருமை!..
தங்கள் மகளின் கை வண்ணம் அழகு!.. நல்வாழ்த்துக்கள்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ..
நீக்குபத்து நிமிடத்தில் தெளிவு... ஆஹா!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குரோஷிணியின் படங்கள் மிக அருமையாருக்கு.
பதிலளிநீக்குகுழந்தை தூங்குற வீடியோ கடுப்பாருக்கு. இதுவாவது பரவாலை. இன்னொரு வீடியோவில் சிப்ஸ் சாப்பிடுக்கிட்டே தூங்கிற பிஞ்சுக் குழந்தையைப் படம் பிடிச்சிருப்பாங்க. கொடுமை! தூங்கும்போது சிப்ஸ் தொண்டையில் மாட்டிகிட்டா என்னாகும்னு நமக்குத்தான் பதறும்.
வீடியோ பார்க்கும்போதே சங்கடம் தான்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா...
ஏ.டி.எம் கடவு எண்ணை யோசனை செய்யாமல் கொடுத்த நண்பர் பரிதாபத்துக்குரியவர்! முகப்புத்தக இற்றை சிறப்பு! தங்கள் மகளின் ஓவியங்கள் அழகு! தள்ளாத வயதிலும் உழைக்கும் பெண்மணிக்கு பாராட்டுக்கள்! படித்ததில் பிடித்தது சூப்பர்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குரோஷ்ணிக்கு வாழ்த்துகளை சொல்லிடுங்க.
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துகளை ரோஷ்ணிகிட்ட சொல்லிட்டேன்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
ஓவியங்கள் நன்றாக இருக்கின்றன. உழைப்பாளி பற்றிய செய்திக்கு நன்றி
பதிலளிநீக்குஅடுத்து நூறாவது பதிவா அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரவணன்...
நீக்குATM அட்டையின் எந்த விவரங்களையும் வங்கிக்குத் தரத் தேவையில்லை என்று யாரும் புரிந்துகொள்வதில்லை.
பதிலளிநீக்குரோஷ்னிக்கு வாழ்த்துக்கள்....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.
நீக்குவலைச்சரத்தில் கும்மாச்சி மூலமாக உங்களது பதிவுகளைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குwww.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in
தங்களது முதல் வருகை மகிழ்ச்சி தந்தது டாக்டர் ஜம்புலிங்கம் அவர்களே....
நீக்குஉங்கள் வலைப்பக்கமும் விரைவில் வருகிறேன்.
தொடர்ந்து சந்திப்போம்....
அழகான ஓவியம்
பதிலளிநீக்குதங்கள் மகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ஐயா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா...
நீக்குதம 11
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குகாணொளி---- பாவம் அந்தக் குழந்தை. எங்கே விழுந்துவிடுமோ என்று
பதிலளிநீக்குபயந்துக் கொண்டே பார்த்தேன்.
உங்கள் மகள் வரைந்த ஓவியங்கள் சூப்பர்.
பிள்ளையாருக்கு நாமம்......)))
அனைத்தும் அருமை நாகராஜ் ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.
நீக்குஅழகான ஒவியம் வரைந்த தங்களின் மகளுக்கு பாராட்டுக்கள். பிள்ளையார் படம் உங்களின் சாயலாக இருக்கிறதே
பதிலளிநீக்குபிள்ளையார் என் சாயலில் இருப்பதை சரியா கண்டுபிடிச்சுட்டீங்களே! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
பாவம் இந்த மனிதர். இது மாதிரியான திருட்டு நிறைய நடக்கிறது. நாம்தான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது. இது மாதிரியான காணொளிகளை நிறைய பார்ப்பேன்.
பதிலளிநீக்குஉங்கள் மகள் வரைந்த ஓவியங்கள் அருமை. உழைப்பாளி, படித்தது, இற்றை என எல்லாமும் நன்றாக உள்ளன.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.
நீக்குஇரண்டு நாட்களாகப் பின்னூட்டப் பெட்டி எனக்குத் திறக்கவில்லை வெங்கட். நல்லவேளையாக இப்பொழுது எழுத முடிகிறது. முதலில் குழந்தை ரோஷ்ணிக்கு வாழ்த்துகள் குறும்பான படங்களைக் கச்சிதமாக வரைந்திருக்கிறார். இரண்டாவது அந்த ஏடிஎன் நண்பர். பாவம்.ஆனாலும் தப்பாக் காரியம் செய்ய சூழ்நிலை அமைந்துவிடுகிறது. மூன்றாவது ராஜஸ்தான் பெண்மணி. இங்கே நம் சென்னையிலும் தென்னிந்தியப் பாரம்பர்யக் கண்காட்சி ஒன்றில் இதைப் பார்த்தேன். ந்நுறாவது ஃப்ரூட் சாலட் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....
நீக்குரோஷணியின் ஓவியம் அழகு.குட்டிக் கதை அருமை. ATM நிகழ்ச்சி எச்சரிக்கை.. அனைத்தும் சுவை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குப்ரூட் சாலட் அருமை அண்ணா... ரோஷிணிக்குட்டிக்கு முதலில் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள் அண்ணா....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.
நீக்கு' padiththadhil pidiththadhu... ' yenakku pidiththadhu.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குமகளின் கைவண்ணம் அருமை! படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது! அருமையான சாலட்!நன்றி நண்பரே!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.
நீக்குநல்ல தொகுப்பு. உழைப்பாளியின் படமும், மகளின் ஓவியங்களும் மிக அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குநல்ல பகிர்வு
பதிலளிநீக்குகடைசி நல்ல சிரிப்பு...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.
நீக்குமைதிலி கஸ்தூரி ரெங்கன் வலைச்சரத்தில் இன்று தங்களைப் பற்றி விவாதிக்கிறார். தங்களின் பதிவுகளை அவ்வப்போது படித்துவருகிறேன். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குwww.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in
தங்களது வருகைக்கும் வலைச்சர அறிமுகத் தகவலுக்கும் மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குஇன்னக்கித்தான் உங்க பக்கம் முதல் முறையாக வந்தேன். எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தபதிவுக்கு நன்றி
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவத்சன்.
நீக்கு