எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, June 16, 2014

நைனிதால் – அதிர்ச்சி தந்த முன்பதிவுஏரிகள் நகரம் – பகுதி 16

ஏரிகள் நகரம் – பகுதி 01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15

ஏரிகள் நகரம் தொடரின் பதினைந்தாம் பகுதியினை முடிக்கும்போது கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.


இப்படி நான்கு முக்கிய நுழைவு வாயில்களும் வருடம் முழுவதும் திறந்திருக்கும் சீதாப[வ]னி நுழைவு வாயிலும் இருக்க, பிஜ்ராணி நுழைவுவாயில் வழியே செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு வன இலாகாவின் அலுவலகத்தினை சென்ற்டைந்தோம்.


அங்கே எங்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

என்ன அதிர்ச்சி? அடுத்த பதிவில் பார்க்கலாம்.
 படம்: இணையத்திலிருந்து....

எங்கள் வாகனத்தினை வன இலாகா அலுவலகத்தின் முன்னே நிறுத்தி நாங்கள் நால்வரும் அலுவலகத்திற்குள் சென்றோம். அங்கே இருந்த வரவேற்பறையில் இருந்த பெண்மணியிடம் வனத்தினுள் செல்ல அனுமதி வேண்டும், எவ்வளவு பணம் கட்ட வேண்டும் எனக் கேட்க, எங்களை மேலும் கீழும் பார்த்து விட்டு, முன்பதிவு செய்த எண் எங்கே என்று கேட்க, நாங்கள் திருதிருவென முழித்தோம்.

தொடர்ந்து அவர், ஜிம் கார்பெட் வனத்தினுள் செல்ல முக்கியமான நான்கு நுழைவு வாயில்களுக்கும் கணினி மூலம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்பதை எங்களுக்குத் தெரிவித்தார். எங்களுக்குத் தெரிந்த வன இலாகா அதிகாரிகளில் ஒருவருக்கு தொலைபேசியில் அழைத்து ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்க, அவரோ, “எப்ப போகணும்? என்று கேட்டார்! நாங்கள் அங்கே இருக்கும் விவரத்தினைச் சொல்ல, இப்போது இருக்கும் நிலையில் ஒன்றும் செய்ய முடியாது ஒரு நாள் அவகாசம் கொடுத்தால் அடுத்த நாள் பயணத்திற்கான ஏற்பாடு செய்ய முடியும் என்று சொல்லிவிட்டார். 

எங்களுக்கு அன்று இரவு புறப்பட்டு தில்லி வந்து சேர வேண்டிய கட்டாயம் – திங்களன்று அலுவலகம் சென்றாக வேண்டும். கேரளத்திலிருந்து வந்த நண்பருக்கும் திங்களன்று விமானத்தில் முன்பதிவு செய்யப்பட்டிருக்க கொஞ்சம் யோசித்தோம்.  ஞாயிறு இரவு அங்கே தங்கி, திங்கள் மதியம் வனத்திற்குள் சென்று செவ்வாய்க் கிழமை காலை தான் தில்லி வந்து சேர முடியும் என்பதால் வேறு என்ன செய்ய முடியும், என்று கேட்க, கடைசி நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாது, வேண்டுமானால் சீதாவனி பகுதிக்குச் சென்று வாருங்கள் என்று சொல்லி விட்டார். 

 படம்: இணையத்திலிருந்து.....

சீதாவனி என்பதும் ஜிம் கார்பெட் வனத்தில் ஒரு பகுதி தான். ஆனால் அந்தப் பகுதி வனத்தினுள் புலிகளைக் காண்பது மிகவும் அரிதான விஷயம் என்றும், மான்கள், நரி போன்ற சில விலங்குகள் மட்டுமே  அங்கே உங்களுக்குக் காணக் கிடைக்கும் என்றும் சொன்னார்கள். மதியம் ஒரு மணியே ஆன நிலையில் என்ன செய்வது என்ற குழப்பத்துடன் வெளியே வந்தோம். வெளியே வந்த எங்களை வனத்திற்குள் அழைத்துச் செல்லும் பல ஜீப் ஓட்டுனர்கள் முற்றுகையிட்டார்கள். அவர்களுக்கு நாங்கள் முன்பதிவு செய்யாதவர்கள் என்று தெரிந்ததும் விலகிவிட்டார்கள்.

ஆனாலும் ஒரு சிலர், நீங்கள் சீதாவனி பகுதிக்குச் செல்லலாம் என்று அழைக்க, ஒரு சிலர் அங்கே ஒன்றும் இல்லை நீங்கள் போக வேண்டாம் என்று சொல்ல குழப்பம் மட்டுமே மிஞ்சியது. இந்தப் பயணத்தில் சென்ற நான்கு பேரில் எனக்கும் கேரள நண்பருக்கும் முன்னரே வனப் பகுதிகளில் சென்ற அனுபவம் உண்டு. மற்ற இருவருக்கும் வனப்பகுதிக்குள் சென்ற அனுபவம் இல்லாததால் சீதாவனி பகுதிக்குள் செல்லலாம் என முடிவு செய்தோம்.   

அதனால் ஜீப் உரிமையாளர் ஒருவரிடம் பேசினோம். அவர் சீதாவனி பகுதிக்குள் சென்று திரும்பி வர 2000 ரூபாய் ஆகும் என்று சொன்னார். கொஞ்சம் அவரிடம் பேசி 1500 ரூபாய் மட்டுமே தருவோம் என்று சொல்ல, அவரும் ஒத்துக் கொண்டார்.  இதில் வன இலாகவிற்குக் கட்ட வேண்டிய 400 ரூபாயும் அடக்கம்.  முதலில் மதிய உணவை முடித்துக் கொண்டு வந்து விடுங்கள், அதற்குள் ஓட்டுனரை அழைத்துவிடுகிறேன் என்று அவர் சொல்ல, நாங்கள் மதிய உணவினை எடுத்துக் கொள்ள நகரினுள் சென்றோம்.

மதிய உணவினை நாங்கள் சாப்பிடும் நேரத்திற்குள் இந்த ஜிம் கார்பெட் செல்ல முன்பதிவு செய்ய வேண்டிய தளம் எது என்ற விவரங்களை உங்களுக்குச் சொல்லி விடுகிறேன்.
வனத்தினுள் இருக்கும் வன இலாகா பங்களாவிற்கும், ஜீப் [அல்லது ] Canter வாகனம் மூலம் வன உலா வருவதற்கும், யானை மேல் அமர்ந்து வனத்திற்குள் செல்ல வேண்டும் என்றாலும் அனைத்துமே கீழ்க்கண்ட தளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.  


வன இலாகாவினரே ஜிம் கார்பெட்டினுள் செல்ல Tour Packages ஏற்பாடு செய்கிறார்கள் – அந்த விவரங்கள் இந்தச் சுட்டியில் இருக்கின்றன.

நீங்கள் எப்போது ஜிம் கார்பெட் செல்ல முடிவு செய்தாலும் ஒரு மாதம் முன்னரே முன் பதிவு செய்து விடுவது நல்லது. இல்லையெனில் அங்கே சென்ற பிறகு ஏமாற்றமே மிஞ்சும்.

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்
புது தில்லி…..


30 comments:

 1. உங்கள் ஏமாற்றம் எங்கள் ஏமாற்றம்! ம்ம்ம்... சாப்பிட்டு விட்டு வாருங்கள். நான் இங்கேயே காத்திருக்கிறேன். அப்புறம் இதுவும் மிஸ் ஆகிவிடப் போகிறது. முன்பதிவு செய்யும் சுட்டிகளை 'நீங்களாவது முன்யோசனையோட போங்க' என்று வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. தங்களால் பார்க்க இயலாவிட்டாலும் அந்த ஏமாற்றம் மற்றவர்களுக்கு ஏற்படக் கூடாது என்று விரும்பும் தாங்கள் பாராட்டுக்கு உரியவர்
  வாழ்த்துக்கள் ஐயா
  தம 3

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்....

   Delete
 4. நான் 1976 ஆம் ஆண்டு ஜிம் கார்பெட் பார்க் சென்றபோது இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லை. இருப்பினும் நாங்கள் அதிக நேரம் செலவிடாததால் எதையும் பார்க்க இயலவில்லை. நீங்கள் நிச்சயம் ஏதேனும் மிருகங்களை பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதை அறிய ஆவல். முடிந்தால் வயநாட்டில்(கேரளா) உள்ள தோல்பெட்டியில்(Tholpetty) இருக்கும் Waynad National Park’ சென்று வாருங்கள். உங்கள் கண்ணுக்கும் விருந்து கிடைக்கும். எங்களுக்கும் அழகிய படங்களோடு கூடிய பதிவுகள் கிடைக்கும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா....

   Delete
 5. வணக்கம்
  ஐயா
  தங்களின் நிலை மற்றவர்களுக்கும் வரக்கூடாது என்பதற்கு முன்பே பதிவாக எடுத்துக் கூறியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்...

   Delete
 6. வணக்கம்
  த.ம 4வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி ரூபன்.

   Delete
 7. முன்னறிப்பு தகவல் பலருக்கும் உதவும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.....

   Delete
 8. தகவல் குறிப்புகள் பயனுள்ளவை..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 9. இந்த முன்பதிவு பத்தி எல்லாம் இப்போத் தான் அறிந்தேன். இந்த ஜிம் கார்ப்பெட் நேஷனல் பார்க்குக்குப்போய்விட்டு உடல்நலக்குறைவோடு திரும்பிய பெண்மணி ஒருவர் மங்கையர் மலரின் தன் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். :))) அவர் சொன்னதைப் பார்த்தால் பயம்மாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 10. நானும் சாப்பிடப் போயிடுவேன். சாப்பிட்டுட்டு அப்புறமாவே வரேன். :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 11. ஒரு பயணம் என்றால் அதற்கான ஏற்பாடுகளை எவ்விதம் செய்ய வேண்டும் என்பதை அருமையாக விளக்கியுள்ளீர்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.....

   Delete
 12. Pinnal varubavargalukku payanulla yosanai.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி....

   Delete
 13. முன் பதிவு பற்றிய விபரங்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 14. பயனுள்ளத் தகவல் அடங்கிய பதிவுக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....