எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, June 11, 2014

திருவெள்ளறை பெருமாள்


செவ்வாய்க் கிழமை – 6 May 2014 காலை எட்டு மணிக்கு திருவரங்கத்திலிருந்து திருச்சி துறையூர் சாலையில் இருக்கும் திருவெள்ளறை எனும் ஊருக்கு ஒரு பயணம்திருவெள்ளறையில் அப்படி என்ன விசேஷம்? வாருங்கள் பார்க்கலாம்

 இரண்டாம் கோபுரம் - ஒரு கிட்டப்பார்வை....

திருச்சியிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி - துறையூர் சாலையில் இருக்கிறது இந்த திருவெள்ளறை எனும் சிற்றூர் அங்கே வெண் பாறைகளால் ஆன குன்றின் மேல் ஒரு கோட்டை போலவே அமைக்கப்பட்டுள்ளது இக்கோவில். திருவரங்கம் கோவில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையாகச் சொல்லப் பட்டாலும், இந்த திருவெள்ளறை திருவரங்கத்தினை விட பழமையான கோவில் என கருதப்படுகிறது. [திவ்ய தேசங்களில் திருவெள்ளறை ஆறாவது இடத்தில்…]

 இரண்டாம் கோபுரம் - நான்கு படிகளுடன்...

திருவரங்கத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து திருவெள்ளறை செல்லும் பேருந்தில் ஏறி முன் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். நீங்களும் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டீர்களா? வாருங்கள் பயணிப்போம்….

 கட்டி முடிக்கப்படாத இராஜ கோபுரம்....

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவெள்ளரை கோவில் வாசல் வரை பேருந்து செல்கிறது. இதோ 45 நிமிட பயணத்தில் நாம் திருவெள்ளறையை அடைந்து விட்டோமேவாசலில் இறங்கினால் ஒரு பெரிய மொட்டை கோபுரம் நம்மை வரவேற்கிறது. அந்தக் கால செங்கல்களால் அமைக்கப்பட்ட இந்த கோபுரம் முழுமை அடைந்திருந்தால் திருவரங்கத்தின் ராஜ கோபுரத்தினைவிட பெரியதாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். அத்தனை அகலமான ஒரு மொட்டை கோபுரம்.

 இராஜ கோபுரம் - பதினெட்டு படிகளுடன்....

அந்த மொட்டை கோபுரத்தின் முன்னே பதினெட்டு படிகள் பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களை இவை குறிப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்தக் கோபுரத்தினைத் தாண்டினால் மற்றொரு சிறிய கோபுரம்ஆனால் முழுமையான கோபுரம். இந்தக் கோபுரத்தின் கீழே நான்கு படிகள்இவை நான்கு வேதங்களைக் குறிப்பதாகச் சொல்வார்கள்அதன் பிறகு உள்ளே சென்றால் பலிபீடம்அதை வலம் வந்து முன்னே சென்றால்ஐந்து படிகள்அவை பஞ்ச இந்த்ரியங்களைக் குறிப்பதாகச் சொல்வார்கள்.

இக்கோவிலில் வீற்றிருக்கும் இறைவனைக் காண இரண்டு வாயில்கள் உண்டுஉத்தராயண வாயில் மற்றும் தக்ஷிணாயன வாயில். தை முதல் ஆணி வரை உத்தராயண வாயில் வழியாகவும் ஆடி முதல் மார்கழி வரையிலான மாதங்களில் தக்ஷிணாயன வாயில் வழியாகவும், பெருமாளை தரிசிக்கச் செல்லவேண்டும். இந்த வழிகளிலும் 21 படிகள் உண்டு. படிகளில் முன்னேறினால் இதோ கோவில் வந்துவிட்டது.


இறைவன் இறைவி பெயர் சொல்லும் தகவல் பலகை

இங்கே தான் செந்தாமரைக் கண்ணனான புண்டரீகாக்ஷன் கோவில் கொண்டிருக்கிறார். தனிச் சன்னதியில் குடி கொண்டிருக்கிறார் செண்பகவல்லி எனும் செங்கமலவல்லிஇவரை பங்கயச் செல்வி என்றும் அழைப்பதுண்டு. இவர்களைத் தவிர சக்கரத்தாழ்வார், ஹனுமான், உடையவர் ஆகியோருக்கும் தனிச் சன்னதி உண்டு.

 இப்படித்தான் வழிபட வேண்டுமாம்.....

திருவரங்கம் கோவிலை விட பழமை வாய்ந்த கோவில் இது என்பதால் ஆதி வெள்ளரை என்றும், இவ்வூரில் குடியிருந்த புண்டரீகன் எனும் யோகி ஒரு நந்தவனம் அமைத்து அதில் துளசிச் செடிகளை வளர்த்து, அவற்றால் இறைவனைப் பூஜிக்க, அதில் மகிழ்ந்த விஷ்ணு அவருக்கு காட்சி தந்ததாகவும் கதைபுண்டரீகன் எனும் யோகிக்கு காட்சி தந்ததால் இத்திருத்தலத்தில் இருக்கும் பெருமாளுக்கு புண்டரீகாக்ஷப் பெருமாள் எனும் பெயர் வந்ததாகவும் சொல்வதுண்டு.

 திருச்சி - துறையூர் சாலையில் இருக்கும் நுழைவு வாயில்....

இதோ இறைவனின் திருவடி அருகில் வந்துவிட்டோம்கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் செந்தாமரைக் கண்ணன். பின்னாலே சூரியனும் சந்திரனும் பக்கத்திற்கு ஒன்றாக நின்று கொண்டிருக்கிறார்கள். அருகில் ஒரு புறத்தில் ஆதிசேஷன் மனித ரூபத்தில் நின்று கொண்டிருக்கிறார் [ பொதுவாய பெருமாள் சயனக் கோலத்தில் இருக்கும் திருக்கோவில்களில் ஆதிசேஷன் மீது தான் சயனித்திருப்பார். இங்கே நின்ற திருக்கோலம் என்பதால், ஆதிசேஷனும் நின்ற கோலத்தில்!]

மற்றொரு பக்கத்தில் மார்க்கண்டேய மகரிஷியும் பங்கஜ வல்லித் தாயாரின் உற்சவ மூர்த்தியும் உண்டுபெருமாளுடைய உற்சவ மூர்த்தி முன் பக்கத்தில் வைத்திருப்பதால், இங்கே செந்தாமரைக் கண்ணனின் திருவடி தரிசனம் கிடைப்பதில்லை. பெருமானின் தரிசனம் கிடைத்த பிறகு பங்கயச் செல்வியின் தரிசனமும் கிடைத்தது

இக்கோவிலில் நாழி கேட்டான் வாயில் எனும் இன்னொரு வாயிலும் உண்டுஒரு முறை பெருமாள் வெளியே எங்கோ சென்று தாமதமாக வர, இந்த வாயிலில் தாயார் நின்று கொண்டு, உள்ளே வந்த பெருமாளை, “ஏன் இத்தனை தாமதம், எங்கே சென்று வந்தீர்கள்?” எனக் கேள்வி கேட்டதாக நம்பிக்கை. தாமதமாக வரும் கணவனைக் கேள்வி கேட்கும் வழக்கம் இறைவிக்கும் உண்டு போல

சக்கரத்தாழ்வார், சின்னத் திருவடி [ஹனுமான்] ஆகியோரின் தரிசனமும் திவ்யமாகக் கிடைத்தது. கோவிலில் அமைதியாக இறைவனோடு மனம் ஒன்றி இருக்க முடிந்தது. பிரபலமான கோவில்கள் போல நம்மை தள்ளி விடாது நீண்ட நேரம் ஆனந்தமாக தரிசிக்க முடிவது நல்ல விஷயம்ஆனால் சாமி வரம் கொடுத்தாலும் ஆசாமி வரம் கொடுப்பதில்லை என்பது போல இங்கே இருப்பவர்கள் ரொம்பவே படுத்துகிறார்கள்வளைத்து வளைத்து காசு கேட்கிறார்கள்.

பெருமாளை சேவித்து வெளியேறுகையில், எனக்கு ஒருவர் மாலை அணிவித்தார். பின்னர் என் மகளுக்கும் ஒரு மாலை. என் கையில் ஒரு மாலை கொடுத்து என் மனைவிக்கு அணிவிக்கச் சொன்னார். “பெருமாளுக்குச் சாற்றிய மாலை” – கண்களில் ஒற்றிக் கொண்டு திருப்பித் தாருங்கள் என்றார்கூடவே திருவரங்கம் போல இங்கே கூட்டம் வருவதில்லை. உங்களைப் போன்ற பக்தர்கள் காசு கொடுத்தால் தான் உண்டு ஒரு அம்பதோ, நூறோ கொடுங்கள் என்று கேட்டார்.

அடுத்து இதே மாலை மரியாதை தாயார் சன்னதியிலும். எனக்கு ஏனோ, வெட்டப்படும் முன் பலி ஆட்டிற்குக் கிடைக்கும் மரியாதை கண்முன்னே காட்சியாக வந்து போனது. அவர்களைக் குற்றம் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு இதைச் சொல்லவில்லைஇருந்தும் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.

 கோட்டை போன்ற சுற்றுச் சுவர்....

இக்கோவிலுக்கு மேலும் பல சிறப்புகள் இருக்கலாம்இங்கே ஒரு ஸ்வஸ்திக் வடிவ கிணறும் உண்டு. ஆனாலும் அனைத்தையும் ரசித்துப் பார்க்க முடியாத அளவுக்கு தொல்லைகள். அதனால் இறைவனை மட்டும் தரிசித்துஆண்டவா எல்லோருக்கும் நல்ல சிந்தனைகளைக் கொடு, அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகளைக் கொடுஎன வேண்டியபடி வெளியே வந்தேன். கோவில் வாசல் வரும் பேருந்து வர முக்கால் மணி நேரம் ஆகும் எனச் சொன்னதால், வெளியே முக்கியச் சாலைக்கு வந்து அங்கிருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் பேருந்தில், ஒரு பழம்பெரும் கோவிலைப் பார்த்த திருப்தியுடன் வீடு திரும்பினோம்.

இந்த முறை பார்த்த கோவில்களில் இது முதலாம் கோவில்திருச்சி நகரின் அருகில் இருந்த மற்ற சில கோவில்களுக்கும் சென்று வந்தேன். அது பற்றி பதிவுகள் பிறிதொரு சமயத்தில்….

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து….


42 comments:

 1. திருவெள்ளறைப் பெருமாள் கோயில் கோபுர தரிசனம் கண்டேன். அடுத்தமுறை செல்லும்போது கோயிலின் பின்புறத்தில் உள்ள பிரமாண்டமான மதில்சுவரை ஒட்டி உள்ள நந்தவனம் பாருங்கள்.

  முதல் பத்தியில் ஒரு திருத்தம்:
  திருவரங்கத்திலிருந்து திருச்சி உறையூர் சாலையில் > துறையூர் சாலையில் என்று திருத்தவும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா. .

   தவறினைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. மாற்றி விட்டேன்.

   Delete
 2. தமிழ்நாட்டிலுள்ள எனக்கு மிகவும் பிடித்த கோயில்களில் இதுவுமொன்று. தமிழ்நாட்டுக்குப் போகும் போதெல்லாம் தவறாமல் இங்கு போவது என்னுடைய வழக்கம். எப்பொழுதுமே அமைதியான கோயில். அந்த மொட்டைக் கோபுரத்தைப் பார்க்கும் போது தான் கவலையாக இருக்கும். அதில் ஏற்கனவே பல செடிகள் வேரூன்றி வளரத் தொடங்கி விட்டன. அங்குள்ள அர்ச்சகர்களும் பயபக்தியுடன் பூசை செய்கின்றனர். தமிழ்நாட்டில் திருப்தியாக பெருமாளைத் தரிசனம் செய்த கோயில்களில் இதுவுமொன்று. அதனால் திருவெள்ளறை கோயில் பதிவைப் பார்த்தவுடன் பதிலெழுத தூண்டியது. நல்ல படங்கள், நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகை..... மிக்க மகிழ்ச்சி வியாசன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி. கோபுரம் மட்டுமல்ல, சுற்றுச் சுவர்களில் கூட செடிகள் முளைத்து விட்டன. பராமரிப்பு என்பதே இல்லை......

   Delete
 3. திருவெள்ளறை பெருமாள் கோவில் திவ்ய தரிசனம் பெற்றோம்... கோபுரங்கள் அழகு... நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete

 4. திருவெள்ளறை பெருமாள் கோவில் பற்றிய தகவல்களும் படங்களும் அருமை. தங்களோடு பயணித்தது போன்ற உணர்வு. நன்றி.

  // எனக்கு ஏனோ, வெட்டப்படும் முன் பலி ஆட்டிற்குக் கிடைக்கும் மரியாதை கண்முன்னே காட்சியாக வந்து போனது. அவர்களைக் குற்றம் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு இதைச் சொல்லவில்லை – இருந்தும் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.//

  கோவிலில் சேவகம் செய்வோருக்கு சரியான ஊதியம் கிடைக்க அரசு வழி செய்தால் இது போன்ற நிலை ஏற்படாது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 5. திருவெள்ளறை தலத்திற்கு இதுவரை சென்றதில்லை.
  எனினும், தங்களால் - திவ்ய தரிசனம் கண்டேன். மகிழ்ச்சி..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 6. தாமதமாக வரும்கணவனைக் கேள்விகேட்கும் வழக்கம்இறைவிக்கும் உண்டுபோல! /

  அருமையான திவ்ய தரிசனம் ,,நன்றிகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 7. புதியதொரு கோவிலுக்கு உங்களுடன் பயணித்தது மன நிறைவை அளித்தது,
  மிக்க நன்றி வெங்கட் சார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 8. திருவெள்ளறைக் கோவில் பற்றி இப்போதுதான் அறிகிறேன். படங்களுடன் பல தகவல்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி வெங்கட்.
  \\தாமதமாக வரும் கணவனைக் கேள்வி கேட்கும் வழக்கம் இறைவிக்கும் உண்டு போல!\\ அதானே...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 9. ஆமா திருவெள்ளரைக்கு கூட்டிட்டுப் போனீங்களே வரும் போது என்னைய விட்டு வண்டீங்க.. நான் இன்னும் அங்கயே நின்னுட்டு இருக்கேன்

  ReplyDelete
  Replies
  1. இன்னமும் அங்கேயேவா நிக்கறீங்க.... சட்டுபுட்டுனு கிளம்பி சென்னைக்கு போங்க! கொடைக்கானல் தொடர் வேற பாதில நிக்குது!:)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 10. முடிந்தால் சென்று பார்க்கவேண்டும் அருமையான படங்களுடன் மனம் கவர்ந்த பதிவு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 11. திருவரங்கத்தை விடவும் பழைய கோவில் என்பது சுவாரஸ்யம் கூட்டுகிறது. படங்கள் கவர்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 12. அறியதொரு விசயம் அறியவைத்த சகோதரருக்கு நன்றி.
  Killergee
  www.killergee.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகை மகிழ்ச்சி அளித்தது Killergee.....

   தொடர்ந்து சந்திப்போம்.

   Delete
 13. பழமையானக் கொவிலைக் கண்டு களித்த சந்தோஷத்தை
  உங்களின் பதிவு கொடுக்கிறது நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 14. திருவெள்ளறைப் பெருமாள் கோயில் பற்றிய சிறப்புகளுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 15. திருவெள்ளறைப் பெருமாய் அறிந்தேன் நன்றி ஐயா
  படங்கள் அருமை
  தம 7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 16. திரு நடனசபாபதி அவர்களின் கருத்தை முற்றிலும் ஆதரிக்கிறேன். மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயிலில் போய் பட்டாசாரியார்களுடன் பேசினால் அழுதுடுவாங்க. அவ்வளவு கஷ்டம். பெருமாள் கைங்கரியத்துக்காக உயிரை வைச்சுட்டிருக்கோம்னு சொல்லிட்டுப் பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். :(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 17. //தாமதமாக வரும் கணவனைக் கேள்வி கேட்கும் வழக்கம் இறைவிக்கும் உண்டு போல! //

  பொதுவாக எல்லாக் கோயில்களிலும் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததாகச் சொல்வதுண்டு. அதன் காரணம் நாம் நம்மைச் செம்மைப்படுத்திக் கொண்டு மனைவிக்கும் முக்கியத்துவம் கொடுத்து சமமாகப் பாவிக்க வேண்டும் என்பதே ஆகும். அதை இம்மாதிரி நிகழ்வுகளைக் கதையாகச் சொல்வதன் மூலம் பாமர எளிய ஜனங்களுக்கும் புரிய வைக்கும் உத்திகளில் ஒன்றே. :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 18. இந்தக் கோயிலுக்குப் போயிட்டு வந்து நானும் பதிவு போட்டேன். :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

   Delete
 19. Yella seidhiyum mananiraivu thandhadhu. Malai potta seidhi manavaruththathai thandhadhu.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 20. //கோவிலில்அமைதியாக இறைவனோடு மனம் ஒன்றி இருக்க முடிந்தது.பிரபலமான கோவில்கள் போலநம்மை தள்ளி விடாது நீண்ட நேரம்ஆனந்தமாக தரிசிக்க முடிவதுநல்ல விஷயம்.  ஆனால் சாமிவரம் கொடுத்தாலும் ஆசாமி வரம்கொடுப்பதில்லை என்பது போலஇங்கே இருப்பவர்கள் ரொம்பவேபடுத்துகிறார்கள்.  
  திருவரங்கம் போலஇங்கே கூட்டம் வருவதில்லை.உங்களைப் போன்ற பக்தர்கள்காசு கொடுத்தால் தான் உண்டு அம்பதோ, நூறோகொடுங்கள் என்று வளைத்துவளைத்து காசு கேட்கிறார்கள்.\\
  இப்பதிவுக்கு இரண்டு ஆண்டுகள் கடந்தும் இதே நிலை நீடிக்கின்றது
  வேண்டிய அளவு சில்லறை மாற்றி இருந்தால் யாசிப்பவருக்கு தானம் செய்த புண்ணியம் கிட்டும்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பின்னூட்டம் என்னுடைய இப்பதிவினை மீண்டும் வாசிக்க வைத்தது!

   உங்களுடைய முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பதிவுகள் மூலம் சந்திப்போம்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீதர் ஜி!

   Delete
 21. நன்றி மாலை விசயத்தில் உசார் ஆக இருப்போம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி AKA

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....