எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, June 20, 2014

ஃப்ரூட் சாலட் – 96 – மலைவழிப் பாதை – விமர்சனம் – உன் சமையலறையில்....
இந்த வார செய்தி:இயற்கையினை எதிர்த்து சாதனை புரியும் நோக்கத்திற்காகவே சிலர் இருக்கிறார்கள் – ஒரு சிலர் அந்த இயற்கை தரும் இடைஞ்சல்களை மீற அத்தியாவசியம் இருப்பதால் இயற்கையை எதிர்த்து போராடுகிறார்கள். அப்படி ஒரு அத்தியாவசியம் மத்தியப் பிரதேசத்தினைச் சேர்ந்த குமட்யாகுர்த் கிராமத்தினைச் சேர்ந்த [G]கியான் சந்த் என்பவருக்கு ஏற்பட்டது.மலைப்பாங்கான பிரதேசத்தில் இருக்கும் ஊர் தான் குமட்யாகுர்த்.  [B]பர்வானி மாவட்டத்தின் நிவாலி தாலுகாவினைச் சேர்ந்த இந்த கிராமத்தினர் எல்லா மருத்துவ தேவைகளுக்கும் சுமார் 65 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பர்வானிக்குத் தான் செல்ல வேண்டும். போதிய வாகன வசதிகளும் இல்லாத இவ்வூரில் நோயாளியை ஒரு கட்டிலில் கிடத்தி, கடைசி யாத்திரை போல நான்கு பேர் தூக்கிக் கொண்டு தான் போக வேண்டும்.ஒரு முறை மாடு கியான் சந்தை முட்டிவிட, பர்வானிக்கு தூக்கிச் சென்றுள்ளார்கள். அப்போது தன்னைச் சுமப்பவர்கள் பட்ட கஷ்டங்களை உணர்ந்த அவருக்கு, உடல் நிலை சரியாகி கிராமத்திற்கு வந்ததும் இதற்காக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. மலைக்கு அப்புறம் இருக்கும் ஊருக்கு மலையைச் சுற்றிப் போகாமல் மலையின் வழியாகவே ஒரு பாதை அமைத்தால் தங்களது ஊருக்கும், மாவட்டத் தலைநகரான பர்வானிக்கும் இருக்கும் தொலைவு கணிசமாகக் குறையும் என்பதை நினைத்துப் பார்த்தார்.


 படம்: இணையத்திலிருந்து...


உடல் நிலை சரியான பிறகு கிராமத்திற்கு வந்த கியான் சந்த் உடனடியாக இந்தப் பணியில் தானாகவே இறங்கி விட்டார். ஒரு மண் சாலையை அமைக்க கடப்பாறை, மண்வெட்டி சகிதம் களத்தில் குதித்தார்.  அவரது முயற்சியை கிராமத்தினரும் குடும்பத்தினர்களும் முதலில் பரிகாசம் செய்தாலும், அவர் எடுத்துக் கொண்ட பணியில் முன்னேற்றம் தெரிய, ஆரம்பித்ததும் அவருடன் சேர்ந்து கொண்டார்கள். அவரது மனைவிகளும்.....  இங்கே மனைவிகள் என்று குறிப்பிட்டது தவறாக இல்லை – அவருக்கு இரண்டு மனைவிகள் – மற்றும் கிராமத்தினர் சிலரும் உறுதுணையாக இருக்க, பாதை அமைக்கும் பணி தொடர்ந்தது.

 

சமீபத்தில் முழு பாதையும் அவர்கள் அமைத்து முடிக்க, இப்போது அவரது கிராமத்திற்கும் மாவட்டத் தலைநகர் பர்வானிக்கும் இடையே உள்ள தூரம் கணிசமாக குறைந்து இருக்கிறது. கிராமத்தினர் அனைவரும் இவரது உற்சாகத்தில் பங்கு கொள்ள, மாவட்ட நிர்வாகம், நேரடியாக பார்வையிட்ட பிறகு தான் எதுவும் சொல்ல முடியும் என்று சொல்கிறது. தனது கிராமத்திலுள்ள அனைவரின் நல்லதற்காகவும் இப்பணியினைத் தொடங்கி நடத்தி முடித்த கியான் சந்த் அவர்களை பாராட்டுவோம்......இந்த வார முகப்புத்தக இற்றை:கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும் தான் “அன்னையாக முடியும்.....  ஆனால் கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்குக் கூட “அன்னையாக முடியும்! – அன்னை தெரசா.இந்த வார குறுஞ்செய்தி:HAPPINESS IS JUST LIKE A RADIO STATION, BROADCASTING ALL THE TIME.  YOU JUST HAVE TO LEARN HOW TO TUNE IN AND RECEIVE IT PROPERLY. STAY TUNED AND BE HAPPY!சுஜாதாட்ஸ்:ஒரு எழுத்தாளன் தன்னால் எழுதப்படாத ஒரு கதையை விமர்சிக்கும் போது பல அம்சங்கள் விமர்சனத்தின் நேர்மையைக் கலைக்க முற்படுகின்றன. சிறுகதை படிக்கும்போது கதையின் ஆதாரமான செய்தியையும் அமைப்பையும், ஒரு வாசகனைப் போல கவனிக்காமல், ‘இந்த வாக்கியத்தை இப்படி எழுதி இருக்கலாமே, இந்தப் பாராவை அங்கு அமைத்திருக்கலாமே, கதையை இந்த இடத்தில் முடித்திருக்கலாமேஎன்று அடிக்கடி அவன் பாண்டித்யம் குறுக்கிடும். நான் சந்தித்த பல எழுத்தாளர்கள் மற்றவர்கள் கதையை யோக்கியமாகப் படிக்கிற ஜாதி இல்லை என்பதை அவர்களுடன் பேச்சில் தெரிந்து கொண்டிருக்கிறேன். அவர்கள் பொழுது போக்குக்கு தத்தம் சொந்தக் கதைகளையே படித்துக் கொண்டிருப்பார்கள் என்றும் தோன்றியது!ரசித்த பாடல்:சமீபத்தில் அதிகம் ரசித்த பாடல் என்று சொன்னால், “உன் சமையல் அறையில்படத்தில் வரும் “இந்த பொறப்புதான்எனும் பாடலைச் சொல்லலாம்.  அதில் அடுக்கிக் கொண்டு வரும் உணவு வகைகளையும், காட்சியில் காண்பிக்கும் பதார்த்தங்களையும் பார்க்கும் போது உடனே சாப்பிடத் தோன்றுவது உறுதி. சாப்பிட்டு, அதாங்க கேட்டுப் பாருங்களேன்!


இந்த வார புகைப்படம்:
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ..... படித்ததில் பிடித்தது:மைக், போஸ்டர், கூட்டம்

மந்திரியின் ஆரவாரப் பேச்சு

பத்திரிகையில் அமர்க்களமாய்ப் படம்

வாழ்த்துக் கவிகள் – ஒன்றுமே இல்லை

மாதத்தில் ஒரு நாள்

சலூன்காரன் எனக்குப்

பொன்னாடை

போர்த்துகிறான்.-   வேய்ங்குழல் வேந்தன்.என்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..நட்புடன்வெங்கட்.

புது தில்லி.48 comments:

 1. கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்குக் கூட “அன்னை”யாக முடியும்! – அன்னை தெரசா.///

  சந்தோஷத்தை ட்யூன் செய்துகொள்வது ,
  தனி ஒரு மனிதரின் தளராத உழைப்பு -
  என அனைத்தும் சுவை கூட்டின.. பாராட்டுக்கள்.!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 2. உங்களுக்கு பிடித்தது எனக்கும் பிடித்தது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 3. வழக்கம் போல அருமை வேய்ங்குழல் வேந்தன் கவிதை மிக அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ம்துரைத் தமிழன்.

   Delete
 4. கியான்சந்த் அவர்களுக்கு பாராட்டுக்கள்! நீங்கள் படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது! வழக்கம் போல் வெள்ளிக்கிழமை விருந்து ஜோர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 5. இந்த வார ஃப்ரூட் சாலட் மிக இனிமை... 96 ஆகிவிட்டதா? எக்ஸலெண்ட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.....

   நூறுக்கு இன்னும் நான்கு மட்டுமே பாக்கி!

   Delete
 6. இதே போல தனியாளாக ஊருக்கு சாலை போட்ட இன்னொரு கதை முன்னரே நடந்து படித்த நினைவு இருக்கிறது.

  குறுஞ்செய்தி சொல்லும் அறிவுரை டாப்.


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. படிச்சாச்சுங்க..... கவிதை சிரிப்புக் கவிதை....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 8. தனியொருவராய் கியான்சந்த் அவர்களின் பெருமுயற்சி பாராட்டப்படவேண்டியது. பகிர்ந்த அனைத்தும் பிரமாதம். கவிதை சூப்பர். பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி

   Delete
 9. Thanks for sharing about Gyan chand, really appreciate his work for his village. I loved the song which was shared. amazing blog.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ் குமார்.

   Delete
 10. திரு.கியான் சந், நாடு எனக்கு என்ன செய்தது என்று எண்ணாமல், நாட்டுக்கு நான் என்ன செய்தேன் எனும் மாமனிதரினம்- வாழ்க பல்லாண்டு.
  கருவுறுதல்- கருணையுறுதல்- அன்னை திரேசா -அருமை
  குறுஞ் செய்தி பிடித்தது ஆனால் இன்னும் வாழ்வில் சரியாக ருயூன் பண்ண முடியவில்லை.
  சுஜாதா- நம்ம சாருநிவேதிகாவை மனதில் வைத்து எழுதியிருப்பார் போல், அவர்தான் தான் எழுதியதையே திரும்பத் திரும்பப் படித்து, மீண்டும் எழுதி 1000 பக்கத்தை 1600 பக்கமாக்குபவர்.
  (இதெல்லாம் அவர் பதிவுகளில் கூறியவை).அடுத்து அடுத்தவர் புத்தகத்தை 2 பக்கத்துக்குமேம் படிக்கமுடியவில்லை, குப்பை தூர வீசிவிட்டேன் எனவும் எழுதுவார்.
  இனி இந்தச் சாப்பாடெல்லாம் சாப்பிட உடம்பு ஒத்துக் கொள்ளாது.
  ரோசாப்பூ பெரிய ரோசாப்பூ- அழகு.
  கவிதையில் "சலூன்காரர்- போர்த்துகிறார்" என சற்று மரியாதையையும் சேர்த்திருக்கலாம்.(இது என் கருத்து தவறிருப்பின் மன்னிக்கவும்)
  அமர்களமாக கலவை. நன்கு வரிக்கு வரி ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. கவிதை என்னுடையது அல்ல நண்பரே..... 1970-களில் எழுதப்பட்ட கவிதை இது......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யோகன் பாரிஸ்.

   Delete
 11. கியான் சந்த் அவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது! கவிதையை நானும் எங்கோ படித்ததாக ஞாபகம்! தெரசாவின் பொன்மொழி சிறப்பு! அருமையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 12. எல்லாப் பதிவுகளுமே ஃப்ரூட் சலாடுக்குச் சுவை சேர்க்கின்றன. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete

 13. கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும் தான் “அன்னை”யாக முடியும்..... ஆனால் கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்குக் கூட “அன்னை”யாக முடியும்! – அன்னை தெரசா.

  மனதிற்கு மகிழ்வு தரும் சிறப்பான பகிர்வு கண்டு உள்ளம் குளிர்ந்தது
  வாழ்த்துக்கள் அன்புச் சகோதரனே .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 14. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 15. அன்னை தெரசா,க்யான் சந்த்,சமையலறைப் பாட்டு,சுஜா தாட்ஸ்,பழைய கவிதை அனைத்தும் அருமை வெங்கட். இவ்வளவையும் சேர்த்துச் செய்த ஃப்ரூட் சாலட் சுவையும் ஆரோக்கியமும் கொடுக்கிறது. தங்கள் உழைப்பு மகத்தானது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா..

   Delete
 16. அன்னை தெரசாவின் அமுத மொழி, கவிதை, பாடல், படம் என அருமையான சாலட் அளித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி! கியான் சந்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 17. அந்தப் பாட்டை தமிழ்நாட்டுப் பாடகர்களைக் கொண்டே பாட வைத்திருக்கலாம். நல்ல பாட்டுதான், ஆனாலும் உச்சரிப்பினால் கொஞ்சம் இடறுவதைப் போல இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தஙக்ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா...

   Delete
 18. கியான் சந்த் செயல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. எல்லோருக்குமான அடிப்படை வசதிகள் என்றைக்குத்தான் வருமோ !

  அன்னையின் கூற்று, அழகான ரோஜா, கவிதை என எல்லாமும் ரசிக்கும்படியாக உள்ளன.

  ReplyDelete
  Replies
  1. தஙக்ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 19. கியான் சந்த பற்றிய பகிர்வு அருமை!
  இந்த பொறப்பு தான் பாடல் கண்ணுக்கு விருந்து!!

  ReplyDelete
  Replies
  1. தஙக்ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete
 20. ஒரே ப்பதிவில் இவ்வளவா?நன்றாக இருக்கிறது,வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தஙக்ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன்.....

   Delete
 21. இந்த வார ஃப்ரூட் சாலட் அருமை. அன்னை தெரசாவின் மொழி மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 22. #மாவட்ட நிர்வாகம், நேரடியாக பார்வையிட்ட பிறகு தான் எதுவும் சொல்ல முடியும் என்று சொல்கிறது. #
  இப்படித்தான் ஒருவர் தன் வீட்டிற்கு தேவையான மின்சாரத்தினை தயாரித்துக் கொண்டார் ,ஆனால் அரசு நிர்வாகம் அதை தடுத்தது ,அதைப் போலவே கிசான்சந்த் செயலுக்கும் கட்டைப் போடாமல் இருக்க வேண்டும் !
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 23. கியான் சந்தின் தனது கிராமத்து மக்களுக்காக எடுத்துக் கொண்ட தனி மனித முயற்சி மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று! மாவட்ட நிர்வாகம் முட்டுக்கட்டை போடாமல் இருந்தால் சரி!

  அன்னை தெரசாவின் மார்த்தைகளும், குறுஞ்செய்தியும் அருமை! அன்னையின் வார்த்தைகள் என்ன ஒரு பேரின்பம்! அதை எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று!

  வேய்குழல் வேந்தனின் கவிதை ஒரு சாதாரண மனிதனின் பார்வையில் எழுதப்பட்ட மிக அருமையான க்விதை மிகவும் ரசித்தோம்!

  உன் சமயலறையில் பாட்டு முதல் தடவையாகக் கேட்கின்றோம்....பகிர்ந்ததற்கு மிக்க நன்றி! பாதியில் நின்றுவிட்டது....நெட் பிரச்சினையாலும், கணினியின் மெமரி பிரச்சினையாலும்......முழுவதும் இனிதான் கேட்கவேண்டும்!

  சுஜாதாட்ஸ் எப்பவும் ரசிபதுதான்..மிகவும் பிடித்த எழுத்தாளர்!

  ஃப்ரூட் சாலட் வழக்கம் போல் இனிமை! இந்த சாலடிலும் அன்னை தெரசா செர்ரியாக இருக்கின்றார்!

  மிக்க நன்றி !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 24. படித்ததில் பிடித்தது..
  மனதில் நிற்கிறது !

  பாதையமைத்த சகோதர்ர் பணி சிலிர்க்க வைத்தது ..

  பகிர்வுக்கு நன்றி சகோ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....