எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, June 30, 2014

நைனிதால் – காட்டுக்குள் விஷஜந்துக்கள்ஏரிகள் நகரம் – பகுதி 18

ஏரிகள் நகரம் – பகுதி 01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16 17

ஏரிகள் நகரம் தொடரின் பதினேழாம் பகுதியினை முடிக்கும்போது கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.


வசதியாக ஒரு துப்பாக்கி கூட எடுத்துக் கொண்டு போய், பார்க்கும் மான்களைச் சுடலாம் போல இருக்கிறதே என நினைத்தேன். மான்களைச் சுடுவது இருக்கட்டும், உள்ளே இன்னும் நிறைய பார்க்கக் கிடைக்கும் என்று வீரப்பன் சொல்ல, காட்டை நோக்கி பயணத்தைத் தொடங்கினோம்.  எங்களை காடு வா வா என அழைத்தது!

சீதாவனி காட்டுக்குள் நாங்கள் கண்டது என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்!


எங்கள் ஓட்டுனர் வீரப்பன் கடவுச்சீட்டை வாங்கிக் கொண்டு ஜீப்பினை காட்டுக்குள் செலுத்தினார். காட்டுக்குள் செல்ல பாதி தூரம் வரை நல்ல பாதை உண்டு.  அதில் வேகமாகச் சென்றது ஜீப் – வேகம் என்றால் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் தான் – அதற்கே சரீரம் முழுவதும் குலுங்குவது போன்ற உணர்வு – சாலை அப்படி!பொதுவாகவே வனப்பகுதிகுள் செல்லும்போது மனிதர்கள் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும் – அப்போது தான் விலங்குகள் பயப்படாமல் வெளியே வரும். போலவே காற்றில் அசையும் இலைகளின் சலசலப்பு, எங்கேயோ ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரின் ஓசை, ஆங்காங்கே குரல் கொடுக்கும் பறவைகளின் இன்னிசை கீதங்கள், எங்கிருந்தோ வரும் விலங்குகளின் சம்பாஷணைகள் ஆகியன கேட்க முடியும். அதை ஊர்ந்து கவனித்து ரசிக்கவும் முடியும்.இந்த வனப்பகுதிக்குள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாது மனிதர்கள் நுழைந்து விடுவதால், காட்டுக்குள் வந்த உடன் மனிதர்களுக்கு ஏதோ ஆகிவிடுகிறது. ஏதோ ஒரு டிஸ்கோத்தே போய் இரவு முழுவதும் அதீத சத்தமாக வெளிவரும் குத்துப் பாடல்களுக்கு கையில் சாராய புட்டிகளோடு ஆட்டம் போடுவது போல இந்த வனப்பகுதிக்குள் ஆட்டம் போடுவதைக் காண முடிந்தது. காட்டின் நடுவே ஓடும ஒரு சிற்றோடையின் அருகே அப்படி ஒரு மனித கும்பலைக் காண முடிந்தது.வனத்தின் அமைதியைக் குலைத்தபடி ஓசை வர கவனித்தோம் – ஒரு கார் – நான்கு கதவுகளும் திறந்திருக்க, அந்த வாகனத்தில் பொருத்தியிருக்கும் சி.டி. ப்ளேயரில் இருந்து பஞ்சாபி/ஹிந்தி பட குத்துப் பாடல்கள் அதன் உச்ச வரம்பு சத்தத்தில் அலறிக் கொண்டிருந்தது. காரில் இருந்து இறங்கி நின்ற இளைஞர்கள் அனைவரது கையிலும் சோம பான வகைகள். போதையேறிய ஒரு இளைஞர் போதையில், தலையில் பாட்டிலை வைத்துப் பிடித்துக் கொண்டு நடனமாடிக் கொண்டிருந்தார். எங்கள் கையிலிருந்து கேமராக்களைப் பார்த்து இன்னும் கொஞ்சம் அதிகம் ஆடியதோடு விதம்விதமாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்கச் சொன்னார்.  அவர்களின் நிலை கண்டு சிரித்தபடியே நாங்கள் நகர ஆரம்பித்தோம். பாட்டில்களை ஆங்காங்கே விசிறி உடைத்துப் போட்டார்கள்! அதை உடைப்பதில் அப்படி ஒரு ஆனந்தம் அவர்களுக்கு.காட்டுப் பகுதிக்குள் வந்து இப்படி கண்ணாடிகளை உடைத்துப் போடுவது அந்த இடத்தில் உலா வரும் விலங்குகளுக்கு தொந்தரவு தரும் என்பதோ, வீசும் நெகிழி பைகளை உண்டு விலங்குகள் தங்களது முடிவினை கண்டுவிடக்கூடும் என்பதோ இந்த மனிதர்களுக்கு உறைக்கவே இல்லை. காட்டிலே இருக்கும் விஷம் கொண்ட பூச்சிகளை விட இந்த மனித ஜந்துக்கள் பரப்பும் விஷம் அதிகம் என்ற நினைவுடனே பயணித்தோம்.கொஞ்சம் அடர்ந்த வனப்பகுதிக்குள் வந்து விட்டோம். ஆங்காங்கே சில காலி இடங்கள். அவற்றின் அருகே வரும்போது வாகனம் ரொம்பவும் குறைவான வேகத்தில் சத்தமே வராத மாதிரி பயணிக்கிறது.  ஓட்டுனர் வீரப்பனின் பழக்கப்பட்ட கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்கிறது.  காட்டு வழியில் ஒரு நரியைப் பார்த்து விட எங்களிடம் அதைக் காண்பித்த்தோடு அங்கே வாகனத்தினை நிறுத்தினார். நரி எங்களை சில நொடிகள் பார்த்தபின் “சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்என்ற எண்ணத்தோடு காட்டுக்குள் ஓடி ஒளிந்தது.எத்தனை விதமான மரங்கள். அவற்றிலிருந்து தானாக ஒடிந்து விழும் கிளைகளைக் கூட ஒருவரும் எடுப்பதில்லை. அந்தக் கிளைகளை சுற்றி கரையான் போன்ற புழுக்கள் கட்டிய மண் வீடுகள், அவைக் கட்டி முடித்தபின் அதாவது உள்ளே இருக்கும் மரம் முழுவதும் அரித்துத் தின்று முடித்தபின் வீட்டைக் காலி செய்துவிட, அங்கே பாம்புகள் குடியேறிவிடுமாம்.  உள்ளே சென்று வெளியே வர ஏதுவாய் ஓரிரு வழிகளும் இருக்க, ஒரு துவாரம் வழியே பாம்பு தலையை வெளியே நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. நாக்கை நீட்டி நீட்டி உள்ளே இழுத்துக் கொள்ள, ஏதோ எங்களைப் பார்த்து சொல்வது போல தெரிந்தது – ஒருவேளை, எங்களைப் பார்க்க வந்ததில் மகிழ்ச்சி எனச் சொல்லி இருக்குமோ?மேலும் சில நிமிடங்கள் கழித்து வாகனத்தினை மீண்டும் நிறுத்தினார் வீரப்பன். எதற்கு என கண்களை நாலா பக்கமும் சுழற்ற சற்றே அருகில் ஒரு மான் கூட்டம். நாங்கள் சத்தம் எழுப்பாமல், நின்று வனாந்தரத்தில் சுதந்திரமாய்த் திரியும் மான் கூட்டத்தினைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம்.     நண்பர் தன்னுடைய NIKON CAMERA-வில் படங்கள் எடுக்க, நான் எனது CANON-ஐ பயன்படுத்திக் கொண்டிருந்தேன்.  சில நிமிடங்கள் அந்த மான்களுக்கு தாங்கள் படம்பிடிக்கப் படுகிறோம் எனத் தெரியவில்லை.தொடர்ந்த க்ளிக் சப்தங்கள் புற்களை மேய்ந்து கொண்டிருக்கும் அந்த மான்களின் கவனத்தினை ஈர்க்க, எங்களை கவனித்து விட்டன.  உடனே அடடே இந்த மனிதர்கள் நம்மைப் பார்த்து விட்டார்களே என்ற எண்ணத்துடன் காட்டுக்குள் இருந்த புதர்களுக்குள் ஓடி ஒளிந்தன. அங்கிருந்தபடியே எங்களை நிச்சயம் கவனித்துக் கொண்டிருக்கும் என்ற நினைவுடன் அங்கிருந்து நகர்ந்தோம்.காட்டுப்பாதையில் பயணித்துக் கொண்டே இருந்தோம் – அருகே தண்ணீர் ஓடிக்கொண்டிருகும் ஓசை கேட்க, ஆவலுடன் அந்த சப்தம் கேட்கும் இடம் வந்துவிடாதா என பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த இடமும் வந்தது - கோசி ஒரு சிற்றோடை போல ஓடிக்கொண்டிருந்தாள். ஒரு இடத்தில் குறுகிய நதியின் குறுக்கே கருங்கற்கள் கொண்டு பாதை அமைந்திருக்க, அந்த வழியின் மூலம் கோசியைக் கடக்கப் போகிறோம். அதற்கு முன்னர் அங்கே சற்றே இளைப்பாறுவோமா?

தொடர்ந்து பயணிப்போம்....                                            

நட்புடன்

வெங்கட்
புது தில்லி…..

36 comments:

 1. வனப் பகுதியில், காட்டின் அமைதியினை சீர்குலைக்கும் வகையில்,அதிக ஒலியுடன் பாடலை அலறவிட்டு, பாட்டில்களை போட்டு உடைக்கும் இம்மனிதர்கள், உண்மையிலேயே விலங்கினும் கீழானவர்கள்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. Replies
  1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. சுவாரஸ்யம். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. "அந்த" மனிதர்களுக்கு எதுவுமே உறைக்காது...

  படங்கள் அனைத்தும் அருமை... தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. படங்களும் வர்ணனைகளும் நேரில் சென்று பார்கின்ற உணர்வை தருகின்றன.. தொடருங்கள்..

  ReplyDelete
  Replies
  1. தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 6. ஆஹா..இப்படி ஒரு அருமையானத் தொடரை இத்தனை நாள் படிக்காமல் இருந்திருக்கிறேனே...
  உங்கள் எழுத்துநடை மிகவும் அருமை...புகைப்படங்களும் அழகு.
  காட்டில் வாழும் விஷ உயிர்களை விட நாட்டில் இருந்துசெல்லும் விஷ உயிர்களே மிகவும் ஆபத்தானவர்கள்...சிந்திக்க மறுக்கும் முட்டாள்கள்..
  தொடரை முதலில் இருந்து படிக்கப்போகிறேன்..நன்றி சகோதரரே

  த.ம.5

  ReplyDelete
  Replies
  1. நேரம் கிடைக்கும் போது மற்ற பகுதிகளையும் படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.....

   தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 7. #எங்களைப் பார்க்க வந்ததில் மகிழ்ச்சி எனச் சொல்லி இருக்குமோ?இப்படி நாகங்கள் நிச்சயம் சொல்லி இருக்கும் ,நீங்கள் தான் நாகராஜ் ஆச்சே !
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 8. சிலரது செயல்கள் கடுப்பாக இருந்தாலும் நாங்களும் காட்டுக்குள் ஜாலியாக பயணித்தது போன்ற ஓர் உணர்வு.

  ReplyDelete
  Replies
  1. தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 9. காட்டின் அமைதியை ரசிக்க தெரியாத மனிதர்களை என்ன சொல்வது?
  அருவியின் சலசலப்பும், ஆற்றின் சலசலப்பும் , மரங்கள் காற்றில் அசையும் ஒலியும் , அங்கு உள்ள உயிர் இனங்கள் கொடுக்கும் ஒலியை ரசித்து மகிழ்வதை விட வேறு இன்பங்களை தேடும் மனிதர்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது.
  காட்டு பாதை படமும் மற்ற படங்களும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 10. Replies
  1. தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 11. காட்டுக்குள் விஷ ஜந்துக்கள் என்றதும் - நியாயம் தானே என நினைத்தேன்..
  அப்புறம் தான் தெரிந்தது - வேறு மாதிரியான ஜந்துக்கள் என்று!..

  தங்களுடன் காட்டுக்குள் பயணிப்பது போலிருக்கின்றது. மகிழ்ச்சி..

  ReplyDelete
  Replies
  1. தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 12. //நரி எங்களை சில நொடிகள் பார்த்தபின் “சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்” என்ற எண்ணத்தோடு காட்டுக்குள் ஓடி ஒளிந்தது.//

  நரி காட்டுக்குள் ஓடியதை உங்கள் பாணியில் நகைச்சுவையோடு சொல்லியதை இரசித்தேன். உங்களோடு பயணிக்கிறேன் சற்று இளைப்பாறிவிட்டு!

  ReplyDelete
  Replies
  1. தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 13. சுவையாக செல்கிறது! தொடர்கிறேன்! படங்கள் அழகு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 14. இந்த மனித ஜந்துக்கள் பரப்பும் விஷம் அதிகம் :( இயற்கையையும் விலங்கினங்களையும் ரசிக்கத்தெரியாத மனிதர்கள்.

  படங்களைரசித்தேன். காட்டுப்பயணம் ரொம்பபிடித்தமானது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 15. அடாடா, புதிய நண்பர்களை (நடன நண்பர்களைத்தான் சொல்கிறேன்) பூகைப்படம் எடுக்க வில்லையா?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 16. உண்மைதான். மனிதனைவிட கொடிய ஜந்து உலகில் உண்டோ:(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 17. //வனத்தின் அமைதியைக் குலைத்தபடி ஓசை வர கவனித்தோம் – ஒரு கார் – நான்கு கதவுகளும் திறந்திருக்க, அந்த வாகனத்தில் பொருத்தியிருக்கும் சி.டி. ப்ளேயரில் இருந்து பஞ்சாபி/ஹிந்தி பட குத்துப் பாடல்கள் அதன் உச்ச வரம்பு சத்தத்தில் அலறிக் கொண்டிருந்தது. காரில் இருந்து இறங்கி நின்ற இளைஞர்கள் அனைவரது கையிலும் சோம பான வகைகள். //

  இவர்கள் மனித சாதி அல்ல ....அல்ல...அல்ல.......எதிரொலிக்கின்றதா?!!!!!! விலங்கு சாதி என்றும் சொல்லக் கூடாது....விலங்குகள் மேன்மையானவை! துளசி கோபால் அவர்கள் சொல்லியது போல மனிதனை விட கொடிய ஜந்து உலகில் வேறு எதுவும் இல்லை!

  அதனால்தான் நம்மைப் போன்ற மனிதர்களைக் கண்டதும்...."சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்" (தங்களது இந்தவரியை ரசித்தோம்) என்று நரி...மற்றவையும் ஓடுகின்றனவோ!!!?

  படங்கள் அருமை சார்....அதுவும் கோசி "சிற்றோடையா" சார்? !! நதி போன்றல்லாவா இருக்கின்றது! அழகு.... இயற்கை எழில் கொஞ்சிவிளையாடுகின்றது! என்ன ஒரு அழகு கோசி...மிக மிக ரசித்தோம்.......!!! நல்ல வர்ணனை!

  பகிர்வுக்கு மிக்க நன்றி!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 18. புத்தகமாக வெளியிட வேண்டும்.

  சூட் போட்டுகிட்டு இருக்காரே ஒருத்தர்?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.....

   புத்தகமாக வெளிய்ட வேண்டும்! - :)))))

   சூட் போட்டுக்கிட்டு இருக்காரே ஒருத்தர்! - இந்தப் பயணம் சென்றது ஜனவரி மாதத்தில் - அங்கே குளிர்காலம்!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....