எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, June 9, 2014

நைனிதால் – புலி வருது புலி வருது....ஏரிகள் நகரம் – பகுதி 15

ஏரிகள் நகரம் – பகுதி 01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14

ஏரிகள் நகரம் தொடரின் பதினான்காம் பகுதியினை முடிக்கும்போது கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.


மலைப்பாதையில் பார்த்த விளம்பரம், தொங்கிக் கொண்டிருக்கும் பேருந்து ஆகிய இரண்டுமே முழுப் பயணத்திலும் எங்கள் நினைவில் மீண்டும் மீண்டும் வந்து சென்றது என்பது உண்மை. காரணம் எங்கள் ஓட்டுனர் பப்பு வேகத்தினை திருமணம் புரிந்து கொண்டிருந்தார் அதுவும் காதல் கொண்டு மணம் புரிந்தவர் போல நடந்து கொண்டிருந்தார்!


சென்ற பகுதியில் சொன்னது போல, ஓட்டுனர் பப்பு சென்ற வேகத்தில் வழியில் இருக்கும் ஒரு முக்கியமான சுற்றுலா தலத்தினை நாங்கள் பார்க்க முடியாது போனது. வழியில் இருக்கும் அறிவிப்பு பலகை “ஜிம் கார்பெட் நீர்வீழ்ச்சிசெல்லும் வழி என்று போட்டிருக்க, அதை தவற விட்டோம். சில கிலோ மீட்டர்கள் பயணித்த பிறகு மீண்டும் திரும்பிச் செல்ல எங்களுக்கும் மனதில்லை. அதனால் ஜிம் கார்பெட் நீர்வீழ்ச்சி பார்க்க முடியாமல் போனதில் எங்களுக்கு மன வருத்தம் தான். மௌனமாக அனைவரும் அமர்ந்திருக்க, ஓட்டுனர் அதீதமான வேகத்தில் எங்களை ராம் நகர் கொண்டு சேர்த்தார்.


ராம் நகர், உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கும் ஓர் சிறு நகரம். நைனிதால் மாவட்டத்தில் இருந்தாலும் அத்தனை முன்னேற்றம் இல்லை. இன்னமும் பள்ளமும் மேடும் நிறைந்த சாலைகள், சின்னஞ்சிறு கடைகள், ஜுகாட் என்று சொல்லக்கூடிய வண்டிகள், தள்ளு வண்டிக் கடைகள் என ஒரு மாதிரியான சோம்பலுடன் இருந்தது. மக்கள் பகட்டான நகர வாழ்க்கைக்கு பழகவில்லை. கிராமத்து மனிதர்களுக்கே உரிய எளிமை இன்னமும் அவர்களிடத்தில் தங்கியிருப்பதை உணர முடிந்தது.


நகரினுள் நுழையுமுன் கோசி நதி எங்களை வரவேற்றது. அதன் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் ஒரு அணையின் வழியே நாங்கள் வரும்போது பலவிதமான பறவைகள் நீர் நிலையின் ஓர் ஓரத்தில் அமர்ந்து நதியில் வரும் மீன்களை தங்களது உணவாக மாற்றிக் கொண்டிருந்தது. உடனேயே நதி ஓரத்தில் நின்று பறவைகளை புகைப்படம் பிடிக்க நினைத்தாலும் முதலில் ராம் நகரில் இருக்கும் வன இலாகா அலுவலகத்திற்குச் சென்று காட்டுக்குள் செல்ல மதிய நேரத்திற்கான அனுமதியைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தினால் நேராக அந்த அலுவலகத்திற்கே வண்டியை விட்டோம்.

அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன் சில தகவல்களை இங்கே பார்த்து விடுவோம். ஜிம் கார்பெட் என்பது மிகப் பெரியதோர் வனப்பகுதி. கிட்டத்தட்ட 521 KM2 பரப்பளவு கொண்ட இந்த பூங்காவினை 1936 ஆம் ஆண்டு அமைத்தார்கள் – அப்போது இந்த வனப்பூங்காவிற்கு கொடுக்கப்பட்ட பெயர் ஹெய்லி தேசியப் பூங்கா. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்தப் பூங்காவின் பெயர் ராம்நகர் தேசியப் பூங்கா என மாற்றம் செய்யப்பட்டது.

1956-ஆம் ஆண்டு இந்த பூங்காவினை உருவாக்க முக்கிய காரணமாக இருந்த ஜிம் கார்பெட் பெயர் சூட்டப்பட்டது. ஜிம் கார்பெட் எழுதிய Man Eaters of Kumaon” எனும் புத்தகம் இதுவரை படிக்கவில்லையெனில் படித்துப் பாருங்கள். தமிழிலும் இந்தப் புத்தகம் தி.ஜே. ரங்கநாதன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது – கலைமகள் வெளியீடு – 1958. இந்த்த் தமிழ்ப் புத்தகம் இப்போது கிடைக்கிறதா என்பது தெரியவில்லை. ஆங்கிலத்தில் AMAZON.IN இல் கிடைக்கிறது.இந்தப் பூங்காவினுள் செல்ல மொத்தம் ஐந்து வாயில்கள் உண்டு – அவற்றில் நான்கு மிக முக்கியமானவை – ஜீர்னா, துர்காதேவி, பிஜ்ராணி மற்றும் டாங்க்ரி என்பவை. ஐந்தாவது நுழைவு வாயில் சீதாப[வ]னி.

ஜீர்னா நுழைவாயில் ராம்நகரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஜிம் கார்பெட் பூங்காவின் இப்பகுதியில் அருமையான இயற்கை சூழலும் அடர்த்தியான காடும் கொண்டது. இங்கே கரடிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்குள் செல்ல முடியும்.

துர்காதேவி நுழைவாயில்  பகுதி ராம்நகரிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மலைப்பாங்கான இப்பிரதேசத்தில் ராம்கங்கா நதி ஓடுகிறது. நடுவில் நதி ஓட அதன் ஓரங்களில் பயணம் செய்து வனவிலங்குகளைப் பார்க்க முடியும். இந்தப் பூங்காவினுள் செல்லும் வழியில் ஒரு அருங்காட்சியகமும் உண்டு. இந்த நுழைவாயில் வருடத்தில் 15 அக்டோபர் முதல் 30 ஜூன் வரை மட்டுமே திறந்திருக்கும். மழை காரணமாக மற்ற நாட்களில் இந்த நுழைவு வாயில் வழியே காட்டுக்குள் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை.

பிஜ்ராணி நுழைவுவாயில் தான் அதிகமான சுற்றுலாப் பயணிகள் தேர்ந்தெடுக்கும் பகுதி – இந்தப் பகுதியினுள் தான் புலி போன்ற விலங்குகள் அதிகம் நடமாடும் என்று சொல்லப்படுகின்றது. நாள் ஒன்றுக்கு காலை வேளையில் 30 வாகனங்களும் [வனத்துறையின் அனுமதி பெற்ற ஜீப்] அதே அளவு மாலையிலும் இந்த வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி தருகிறார்கள். இந்த பகுதியும் வருடம் முழுவதும் திறக்க மாட்டார்கள் – 15 அக்டோபர் முதல் 30 ஜூன் வரை மட்டுமே இந்த வாயில் வழியே செல்ல அனுமதி கிடைக்கும்.  

டாங்க்ரி நுழைவுவாயில் நான்காவது முக்கியமான நுழைவுவாயில். இந்த நுழைவு வாயிலும் வருடத்தில் 15 நவம்பரிலிருந்து 15 ஜூன் வரைதான் திறந்திருக்கும். இரவு நேரத்தில் தங்கும் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே இந்த நுழைவு வாயில் வழியே அனுமதிக்கப்படுவார்கள்.

இப்படி நான்கு முக்கிய நுழைவு வாயில்களும் வருடம் முழுவதும் திறந்திருக்கும் சீதாப[வ]னி நுழைவு வாயிலும் இருக்க, பிஜ்ராணி நுழைவுவாயில் வழியே செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு வன இலாகாவின் அலுவலகத்தினை சென்ற்டைந்தோம்.

அங்கே எங்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

என்ன அதிர்ச்சி? அடுத்த பதிவில் பார்க்கலாம்.

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


50 comments:

 1. அதிர்ச்சி ....?? நடந்தது என்ன?/

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 2. வழக்கம் போல இனிய நடை.. அழகிய படங்கள்..
  அடுத்த பதிவு வரை ஆவலுடன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. படங்களும் பதிவும் மனதில் பதிந்தன!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 5. படங்களும் பகிர்வும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 6. அலுவலகம் செல்லும் வழியில் அதிர்ச்சி என்றால் புலியாக இருந்திருக்கலாம். ஆனால் அலுவலகம் சென்ற பிறகு என்றால் ..... ?

  தொடர்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 7. எனக்கும் அதிர்ச்சி. காத்துக்கொண்டு இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 8. ரொம்பநாளா நான் போகணும் என்றிருந்த இடம். இப்போ உங்கள் எழுத்து மூலம் பார்த்துக் கொள்கின்றேன். இனி அந்தப்பக்கம் பயணம் அநேகமா இருக்காது எனக்கு:(

  நார்த் இண்டியான்னாலே கோபால் அலறுகிறார்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்....

   வடக்கு என்றாலே பலருக்கு அலர்ஜி தான்!

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 10. Replies
  1. தமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 11. தி.ஜ. ரங்கநாதன் - மஞ்சரி ஆசிரியர். பெரிய எழுத்தாளர். அந்தப் புத்தகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.

  தொடர்கிறேன்.


  ReplyDelete
  Replies
  1. மஞ்சரி ஆசிரியர் தான் இந்த புத்தகத்தை மொழிபெயர்த்து எழுதினார் என்பது எனக்கு தெரியாது. தகவலுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம். மஞ்சரி பல நினைவுகளை தந்தது..... பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 12. //நைனிதால் மாவட்டத்தில் இருந்தாலும்//
  உத்தரகாண்ட் மாவட்டம் என்பது தவறி நைனிதால் என வந்துவிட்டதோ?

  தங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி என்ன என்று அறிய காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. உத்திராகண்ட் மாநிலம் - நைனிதால் மாவட்டம்.....

   சரியாகத்தானே இருக்கிறது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
  2. தகவலுக்கு நன்றி. நான் தான் தவறாக புரிந்துகொண்டேன்.

   Delete
  3. மாநிலம் - மாவட்டம் குழப்பம் எனக்கும் வருவதுண்டு..... :)))) ஆங்கிலத்தில் சொல்லியே பழக்கப்பட்டு விட்டோம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 13. வணக்கம்
  ஐயா
  தங்களின் பயணத்தின் அனுபவம் பற்றி எழுதிய பதிவின் வழி நானும் அந்த இடங்களை அறியமுந்தது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 14. வணக்கம்
  த.ம 8வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணம் எட்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரூபன்.

   Delete
 15. வெங்கட் சார், சஸ்பன்ஸ் எல்லாம் டூ மச்...
  அது சரி, கூடிய சீக்கிரம் நீங்க ஒரு சஸ்பன்ஸ் தொடர் கதை எழுதப்போறீங்க போல, அதுக்கு முன்னோடியாத்தான் இந்த பயணத் தொடர்ல எல்லாம் சஸ்பன்ஸ் வைக்கிறீங்க சரியா???

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 16. சிறப்பான பகிர்வு இறுதியில் என்ன ஆச்சு புலி வந்திச்சா ?!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்..

   Delete
 17. //சின்னஞ்சிறு கடைகள், ஜுகாட் என்று சொல்லக்கூடிய வண்டிகள், தள்ளு வண்டிக் கடைகள் என ஒரு மாதிரியான சோம்பலுடன் இருந்தது. // வர்ணனை ஆஹா!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 18. ரா.ஈ. பத்மநாபன்June 10, 2014 at 2:59 PM

  ஆ!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 19. புலி பாத்தீர்களா. ? ஏதாவது காரணம் சொல்லி மூடி இருந்தார்களா.?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 20. இனி டூர் போறவங்க ரூட் மேப் பா இந்த தொடரை பயன் படுத்தலாம்.
  அதிர்ச்சிக்காக வெய்டிங் !!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete
 21. ஆவலுடன் வெயிட்டிங்.. இடையில் சில பகுதிகள் படிக்கவில்லை.. அதையும் படித்து விடுகிறேன்.. :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 22. தொடர்ல சஸ்பென்சா, பலே பலே அருமை சார்.....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ் பிரபு.

   Delete
 23. வட இந்தியப் பயணங்கள் சுகமானவையே! அப்படி ஒண்ணும் பயப்படக் கூடிய அளவில் இருக்காது. நாம் தேர்ந்தெடுக்கும் பருவமும் ஒத்துழைக்கணும். ஆகஸ்ட்/செப்டெம்பர்/அக்டோபர் மாதங்கள் பயணம் செய்தால் சௌகரியமாக இருக்கும். :)))) ஆனால் தென் மாநிலங்கள் போல முன்னேறிய மாவட்டங்களையோ, நாகரிகம் நிறைந்த கிராமங்களையோ பார்க்க இயலாது. இன்னமும் பழைமையின் வாசம் போகாத கிராமங்கள், நகரங்கள், கலாசார மாற்றம் அதிகம் பார்க்க முடியாது. :))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 24. படங்களும் பகிர்வும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....