எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, May 19, 2014

நைனிதால் – விட்ட குறை தொட்ட குறை

ஏரிகள் நகரம் – பகுதி 13

ஏரிகள் நகரம் – பகுதி 01 02 03 04 05 06 07 08 09 10 11 12

ஏரிகள் நகரம் தொடரின் பன்னிரெண்டாம் பகுதியினை முடிக்கும்போது கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.

வெளியே வந்து அங்கிருந்து மீண்டும் மால் ரோடில் இருப்பவர்களை பார்த்தபடியே மெதுவாய் நடந்து எங்களது தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். இனி இரவு முழுவதும் ஓய்வு. நாளை எங்கே செல்ல வேண்டும் இன்னும் நைனிதாலில் பார்ப்பதற்கு என்ன இடங்கள் இருக்கின்றன நாங்கள் நைனிதாலில் இருந்தோமா இல்லை வேறெங்கும் சென்றோமா என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

முதல் நாள் இரவு போலவே இந்த இரவிலும் குளிர் அதிகம் தான்இரண்டு டிகிரி செல்ஷியஸ்ஆனால் பனிப்பொழிவு இல்லை. அதனால் ரஜாயினுள் [Woolen Quilt] புகுந்ததுமே உறக்கம் கண்களை அழுத்த அனைவரும் உறங்கினோம். அடுத்த நாள் காலை எழுந்ததும் முதல் நாள் பார்த்த இடங்களையும், இன்றைக்கு எந்த இடங்களைப் பார்க்கலாம் என்பதையும் பற்றி பேசினோம்இங்கேயும் இதுவரை என்னென்ன இடங்களைப் பார்த்தோம் என்பதை ஒரு முறை பார்க்கலாமா?

[GH]கோரா கால் மந்திர்
நைனிதால் ஏரி
நைனா தேவி கோவில்.
சைனா/நைனா பீக்
நோகுச்சியா தால்
பீம்தால்
தேநீர் தோட்டம்
[KH]குர்பா தால்
தற்கொலை முனை

இதைத் தவிர நாங்கள் பார்க்காது விட்ட இடங்கள் பற்றிய சிறிய குறிப்பு இங்கே.பண்டிட் ஜி.பி. பந்த் மிருகக்காட்சி சாலை:  நைனிதால் நகரின் மால் ரோடு பகுதியிலேயே இருக்கும் மிருகக்காட்சி சாலைவெள்ளை மயில், சிறுத்தை, கரடி, குரைக்கும் மான், சாம்பார் வகை மான்கள், சைபீரியன் புலி, பல விதமான பறவைகள் போன்றவை இந்த மிருகக்காட்சி சாலையில் சிறைபடுத்தப் பட்டுள்ளனகுழந்தைகளுடன் சென்றால் தவற விடக்கூடாத இடம் இந்த மிருகக்காட்சி சாலைநாங்கள் எல்லோருமே கொஞ்சம் வளர்ந்த சிறுவர்கள்[!] என்பதால் இங்கே செல்லவில்லைஇதற்கு நுழைவுக்கட்டணம் பத்து ரூபாய்இந்தியாவில் மிக உயரமான இடத்தில் இருக்கும் மிருகக்காட்சிசாலையாக இதைச் சொல்கிறார்கள்.


குகைப் பூங்காஇந்த இடம் சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பூங்காசிறு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இடமாக இது இருக்கும் எனச் சொல்கிறார்கள். பல்வேறு விதமான மிருகங்களின் வசிப்பிடங்கள் [குகைகள்] எப்படி இருக்கும் என்பதை செயற்கையாக செய்து வைத்திருக்கிறார்கள். இந்த குகைகளுக்குள் செல்ல நுழைவுக் கட்டணம் வெறும் பத்து ரூபாய் மட்டுமே. நாங்கள் சென்ற போது மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக குகைகளுக்குள் தண்ணீர் இருந்தமையால் எங்களைச் செல்ல அனுமதிக்கவில்லை.


Aerial Ropeway: நைனிதால் நகரில் இருக்கும் மற்றொரு இடம் Aerial Ropeway. இந்த இடமும் குழந்தைகளுக்குப் பிடிக்கும். கூடவே பெரியவர்களுக்கும் Aerial Ropeway-ல் பயணிக்கும்போது கிடைக்கும் அருமையான காட்சிகளுக்காக இதில் பயணிப்பது நல்லதுநாங்கள் ஏன் பயணிக்கவில்லை என்பதை இத்தொடரின் ஏழாம் பகுதியான நைனிதால்கேள்விக்கென்ன பதில் பகுதியில் பார்த்தோம்.


ஆளுனர் மாளிகை: இங்கிலாந்தில் உள்ள Buckingham Palace போலவே அமைக்கப்பட்டிருக்கும் இந்த மாளிகை ஆளுனர் மாளிகையாக தற்போது பயன்படுத்தப்படுகின்றது. ஆங்கிலேயர்கள் நமது நாட்டினை ஆண்டபோது இதை தங்களது ஓய்விடமாக அமைத்தார்கள். இதற்குள்ளே ஒரு நீச்சல் குளம், கோல்ஃப் மைதானம் என மிகச் சிறப்பாக இருக்கும். இந்த இடத்திற்கும் உள்ளே சென்று பார்க்க நுழைவுக்கட்டணம் உண்டுமிக அதிகமில்லை 20 ரூபாய் தான்!

இந்த நான்கு இடங்களையும் பார்க்க இரண்டரை மணி நேரம் மட்டுமே ஆகும். அதற்கு பின்னர் பெரியதாக ஒன்றும் வேலை இருக்காது என்பதால், அருகில் உள்ள ஏதாவது இடத்திற்குச் செல்லலாம் என யோசித்து, அங்கே பக்கத்தில் இருக்கும் மற்ற இடங்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள நினைத்தோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் குர்தீப்-ல் Checkout time காலை பத்து மணி என்பதால் முதலில் அறையை காலி செய்வோம் என கீழே அலுவலகத்திற்குச் சென்று அங்கே பணம் கொடுத்துவிட்டு, பார்ப்பதற்கு பக்கத்தில் வேறு என்ன இடம் இருக்கிறது என விசாரித்தோம்.

அவர்கள் இரண்டு இடங்களைச் சொன்னார்கள்ஒன்று ராணிகேத் எனப்படும் ஒரு மலைவாசஸ்தலம் - நைனிதால் நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடம். இரண்டாவது ஜிம் கார்பெட் நைனிதால் நகரிலிருந்து இரண்டரை மணி நேரப் பயணம் – 145 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இடம். இந்த இரண்டையும் கேட்டுக்கொண்டு, மால் ரோடில் இருக்கும் ஒரு உணவகத்தில் காலை உணவினை முடித்துக் கொண்டோம். பிறகு எங்கள் ஓட்டுனர் பப்புவும் வந்து சேர எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம்.

நாங்கள் இரண்டில் தேர்ந்தெடுத்ததுராணிகேத் [] ஜிம் கார்பெட் - இரண்டில் எது என்று ஊகம் செய்ய முடிந்தால், பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து…..46 comments:

 1. நைனிடால் போக விரும்புகிறவர்களுக்கு தங்களது பதிவு ஒரு கையேடு போல என சொல்லலாம். அத்தனை தகவல்களைத் தொக்த்து அழகாகக் தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!.
  நானும் ராணிகேத் மற்றும் ஜிம் கார்பெட் தேசிய பூங்கா இரண்டிற்கும் சென்றிருக்கிறேன். நீங்கள் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவிற்குத்தான் சென்றிருப்பீர்கள் என எண்ணுகிறேன். காத்திருக்கிறேன் எனது யூகம் சரிதானா என அறிய.

  ReplyDelete
  Replies
  1. அடுத்த பதிவில் சொல்லி விடுகிறேன் - எங்கே சென்றது என்பதை......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 2. ஏரியல் ரோப்வே காரைப் பார்க்க திகிலாக இருக்கிறது. சுவாரஸ்யமான பயணத்தின் பார்வையாளனாய் தொடர்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. திகில் படத் தேவையில்லை. இது போன்ற ஏரியல் ரோப்வேயில் ஹிமாசல் பிரதேசத்தில் பயணித்திருக்கிறேன். மிகவும் ஸ்வாரசியமான பயணம் அது.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. ஏரியல் ரோப்வேயில் பயணிப்பது மிகவும் சுவாரஸ்யம்.......

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. நாங்கள் போனால் பார்க்க வேண்டுமென்று ,நீங்கள் போகாத இடங்களைப் பற்றியும் சொல்லியுள்ள உங்களுக்குத்தான் எவ்வளவு நல்ல மனசு ?
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 5. ஸ்ரீராம் ஸ்விஸ் வாருங்கள் அருமையான கேபீல் கார் பயணம் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
  2. வல்லிம்மா... வந்தால் போச்சு! :))))))))

   Delete
  3. இரண்டு பேருமா போய்ட்டு வருவோமா ஸ்ரீராம்? :))))

   Delete
 6. வெங்கட் நீங்கள் ராணிகேத் போயிருப்பீர்கள் என்று யூகிக்கிறேன். ஜிம் கார்பெட் பார்க் போக வர 280 கிலோமீட்டர். அதைச் சுற்றிப் பார்க்க இரண்டு மணிநேரமாவது வேணும். ஆக5 மணி நேரம் செலவிடணும்.சரியா என்ரூ PஈராKஊ ஸோள்ளூண்GGஆல்.>}}

  ReplyDelete
  Replies
  1. உங்கள் யூகம் சரியா என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 7. அண்ணே!
  பார்க்க முடியாத இடங்கள்.
  உங்கள் மூலம் அறிந்து கொள்கிறேன்.
  மிக்க நன்றி..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 8. வணக்கம்
  ஐயா
  தங்களின் பயண அனுபவம் பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்....வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 9. அநேகமா புலி பார்க்கப் போயிருப்பீங்க:-)

  ReplyDelete
  Replies
  1. புலி பார்க்க :)))

   அடுத்த பதிவில் சொல்கிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 10. கொஞ்சம் வளர்ந்த சிறுவர்கள் !?.. ஆகா!...

  அழகிய படங்களுடன் - இனிய பதிவு.. வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு...

   Delete
 11. அடடே உங்கள் பயணம் சீக்கிரம் முடியப்போகுதா!!!!!
  உங்கள் ஓட்டுனர் பப்பு ரொம்பவும் சோர்ந்திருந்தால், நீங்கள் ராணிகேத் போக முடிவு செய்திருப்பீர்கள்.....

  ReplyDelete
  Replies
  1. இல்லை நண்பரே. இன்னும் மூன்று நான்கு பதிவுகள் வரலாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 12. நாங்களும் காத்திருக்கின்றோம் சகோதரா :)))அப்படியே ஓர் எட்டு எட்டி
  சுவிஸ் நாட்டையும் கண்டு ரசியுங்கள் :)) உங்களுக்கு என் மனமார்ந்த
  வாழ்த்துக்கள் சகோதரா .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   ஸ்விஸ் நாட்டிற்குத்தானே.... வந்து விடுவோம்....

   Delete
 13. அருமையாகச் செல்கின்றது உங்கள் பயணத் தொடர்... உங்களுடன் பயணிக்கும் எங்களுக்குசுவையாக...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 14. சுவாரஸ்யமான தகவல்கள்! ராணி கேத் போயிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்! படங்கள் அழகு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அடுத்த பதிவில் சொல்லி விடுகிறேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 15. அருகில் இருந்த ராணி கேத் தான் போயிருப்பீர்கள். ஹர்த்வாரில் கேபி;ள் கார் பயண அனுபவம் உண்டு. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   எங்கே சென்றோம் என்பதை அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன். ஹரித்வாரில் பல முறை சென்றதுண்டு.

   Delete
 16. அனேகமாக இரண்டு இடங்களையும் பார்த்திருப்பீர்கள்.
  பதிவக்குத் தேவையில்லையா....?
  என்ன நாகராஜ் ஜி... நான் சொல்வது சரிதானே....?

  ReplyDelete
  Replies
  1. பதிவு எழுத மட்டுமே பயணம் செய்வதில்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 17. Aerial Rope way romba thrillingaga irukkumo ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நல்ல அனுபவம் தான் அது.

   Delete
 18. பயனுள்ள பயணக்கட்டுரை! பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   உங்கள் மின்னஞ்சல் கிடைத்தது. Point noted. :)

   Delete
 19. ராணிகேத் இல்லாட்ட நிச்சயமாக ஜிம் கார்பெட்தான். (ரெண்டுக்கும் போகமுடியவில்லை என்று எழுதாதீர்கள்)

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.... ரெண்டுமே போகவில்லை என எழுதிவிடாதீர்கள் - நல்ல வேண்டுகோள்....

   தங்களது முதல் வருகையோ?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 20. அருமையாகப் போகின்றது உங்கள் தொடர்! ஜிம்-கார்பெட்??!!

  ஆவலுடன் காத்திருக்கின்றோம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 21. 'ரஜாய்' என்பதை சிலருடைய பதிவுகளில் படித்திருக்கிறேன். அது இன்னதென்பது இன்றுதான் தெரிந்தது. (பார்க்க வேண்டிய)பார்க்காத இடங்களைப் பற்றியும் பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 22. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....