இந்த வார செய்தி:
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அல்வர் மாவட்டம். அம்மாவட்டத்திலுள்ள
கோஹ்ரி எனும் கிராமத்தில் வசிக்கும் 80 வயது ”இளைஞர்” ஷிவ்சரண் எனும் ஷ்யோராம்.
எப்படியும் பத்தாவது வகுப்பில் தேர்ச்சி பெற்றே தீருவேன் எனும் குறிக்கோளுடன்
இருக்கிறார்.
பத்தாவது தேர்ச்சி பெற்றால் தான் திருமணம் புரிந்து
கொள்வது என்ற இலக்குடன் இருந்தவர் இவர். அதற்குக் காரணமாக அவர் சொல்லும் விஷயம் “திருமணத்திற்கு
முன் படித்து தேர்வில் வெற்றி பெற்றால் தான் ஒரு நல்ல கணவனாக இருக்க முடியும்!”
இவர் இந்த வருடம் நாற்பத்தி ஐந்தாம் முறையாக ராஜஸ்தான்
மாநில கல்வி கழகம் நடத்தும் பத்தாம் வகுப்பிற்கான தேர்வு எழுதினார். கடந்த
நாற்பத்தி நான்கு முறை போலவே இம்முறையும் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை என்பது
வருத்தமான விஷயம்!
எப்படியும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நினைவுடன்
அடுத்த வருடமும் தேர்வு எழுதப் போவதாகச் சொல்லும் இவர் “இனிமேல் திருமணம் செய்து
கொண்டு ஒன்றும் ஆகப்போவதில்லை” என்றாலும், ஒரு சாதனைக்காகவது நான் தேர்வில் பங்குகொண்டு
வெற்றி பெற வேண்டும் என்று சொல்கிறார்.
நன்கு படித்து எல்லா கேள்விகளுக்குப் பதில்
தெரிந்தாலும் முதுமை காரணமாக, கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் என்னால் எல்லா
கேள்விகளுக்கும் பதில் எழுத முடியவில்லை என்ற ஆதங்கம் இவருக்கு!
விடாது முயற்சி செய்யும் இந்த “விடாது கருப்பு” இளைஞர்
அடுத்த வருடத்திலாவது பத்தாவது தேர்வில் வெற்றி பெற வாழ்த்துவோம்! அப்படி தேர்வில்
தேறிவிட்டால், இவர் இப்படி பாட்டு பாடுவாரோ?
“நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்..... நான்...”
இந்த வார முகப்புத்தக இற்றை:
வெறுப்பது யாராக இருந்தாலும்
நேசிப்பது நீங்களாக இருங்கள் – அன்னை தெரசா.
இந்த வார குறுஞ்செய்தி:
வாழ்க்கை
பலவித வாய்ப்புகளை தன்னுள் சுமந்து வரும் ஏரி போன்றது. நீங்கள் அங்கே பெரிய
பாத்திரத்துடன் நிற்பதும் இல்லை எனில் கையில் சிறிய தேநீர் கரண்டியுடன் நிற்பதும்
உங்கள் கையில்.......
ரசித்த காணொளி:
உங்களுடைய ஆசிரியரை உங்களால் மறக்க முடியுமா? பலரது வாழ்வில் மாற்றங்களை
உருவாக்குவது தானே ஆசிரியரின் பணி. இந்த காணொளியில் இருக்கும் ஆசிரியர் என்ன
செய்கிறார் என்று பாருங்கள்.
ரசித்த பாடல்:
இந்த வார ரசித்த பாடலாக
“பெரிய வீட்டு பண்ணக்காரன்” படத்திலிருந்து
கே.ஜே. யேசுதாஸ் மற்றும் சித்ரா அவர்களின் குரலில் “மல்லிகையே மல்லிகையே தூதாக போ” பாடல் இதோ உங்களுக்காக!
இந்த வார புகைப்படம்:
இந்த வார புகைப்படம்:
இப்படம்
தமிழகத்தின் ஒரு பிரபல உணவகத்தினை நினைவு படுத்தினால் நான் பொறுப்பல்ல!
விருந்தாவனத்தில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு ஜீவன்!
படித்ததில் பிடித்தது:
”பேசும் கேள் என் கிளி” யென்றான்
கூண்டைக் காட்டி!
வால் இல்லை,
விசிறிப் பறக்க சிறகில்லை
வானம் கைப்பட வழியில்லை
“பார் பார் இப்போது பேசும்” என
மீண்டும் மீண்டும் அவன் சொல்ல
“பறவை என்றால் பறப்பது” எனும்
“பாடம் முதலில் படி” என்றேன்.
-
கல்யாண்ஜி!
என்ன
நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
முதல் விஷயம் : வருத்தத்துடன் வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குஇற்றை அருமை.
குறுஞ்செய்தி டாப்.
காணொளி : ஆஹா.... நெகிழ்ச்சி.
பாடல் : பிடிக்கும்.
இ.வா.பு.ப. : ஹா...ஹா..ஹா... முன்னரே பார்த்தேன்!
ப.பி : சூப்பரோ சூப்பர்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குVidadhu karupp .... nagaichchuvai kalandha vida muyarchi.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குஎல்லாமே நல்லா இருக்கு!. விடாது கருப்பு என்ற பெயரில் முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னால் ஒருத்தர் வலைப்பதிவு எழுதிட்டு இருந்தார். சரி அவரைப் பத்தித் தான் ஏதோ சொல்றீங்கனு நினைச்சேன். :) விட்டது கருப்பு! :)))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
முதலில் சொல்லிய கருத்து மனதில் வேதனையாக இருந்தாலும் கல்வி கற்க வயது தடையல்ல என்பதை சொல்லியுள்ளீர்கள்.
மற்றும் காணொளி குறுந் தகவல் ஏனைய விடயங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குத.ம 3வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரூபன்.
நீக்குபறக்க சுதந்திரமில்லாத கிளிக்கு பேச்சு என்ன வேண்டிக்கிடக்கிறது..!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்கு46வது முறை பரிட்சை எழுதப் போகும் அந்த இளைஞர்ருக்கு வாழ்த்துகள்,
பதிலளிநீக்குவிருந்தாவனத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் ஜீவன் என்ன சொல்ல வருதுன்னு என் சிற்றறிவுக்கு எட்டலை சகோ!
கல்யாண்ஜீயின் கவிதை யோசிக்கவும், ரசிக்கவும் வைத்தது.
உங்கள் கேள்விக்கு ரமணிஜி பதில் சொல்லி இருக்கார்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
மிகவும் ரசித்தோம்
பதிலளிநீக்குகாணொளியும் பழமொழியும் பாடலும்
வெகு சிறப்பு
புதிர்தான் புரியவில்லை
பின்னர் வந்து தெரிந்து கொள்கிறேன்
வாழ்த்துக்களுடன்....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குtha.ma 5
பதிலளிநீக்குதமிழ் மணம் ஐந்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குநினைத்ததை நடத்தியே முடித்திட வாழ்த்துவோம்! முயற்சி திருவினையாக்கும்.
பதிலளிநீக்குகூண்டுக்கிளி வளர்க்கும் சோம்பேறி மனிதர்களை வீழ்த்துவோம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்குஅவரை தமிழ் நாட்டுக்கு வந்து தேர்வு எழுதச் சொல்லுங்க.... அள்ளிப் போட்டு பாஸ் பண்ண வைத்துவிடுவார்கள். காணொளி அருமை..முகப்புத்தக இற்றையும் அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.
நீக்குசுவற்றுக்கு பூசும் வண்ணங்களை தயாரித்து விற்பனை செய்த நிறுவனம் ஒன்று தனது விளம்பரத்தில் ‘வண்ணங்களை நினைக்கும்போது எங்களை நினையுங்கள்.’ என விளம்பரம் செய்யும் அதுபோல் இனி வெள்ளிக்கிழமையை நினைக்கும்போது தங்களின் பழக்கலவையை நினைக்கலாம் போல!
பதிலளிநீக்குவழக்கம்போல் அனைத்து தகவல்களும் அருமை. கல்யாண்ஜி அவர்களின் கவிதை, கிளி வளர்ப்போருக்கு ஒரு சவுக்கடி!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குபுதிருக்கான விடை புரிந்துவிட்டது
பதிலளிநீக்குதலப்பாக்கட்டு பிரியாணிக் கடைதானே அது
அதே அதே....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
சிறப்பான இப் பகிர்வுக்குப் பாராட்டுக்களும் என் வாழ்த்துக்களும் அன்புச் சகோதரரே !
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.
நீக்குவெகு நாட்களாகப் ஆர்க்கவில்லை வெங்கட். மனைவிக்கு வாழ்த்துகள் சொல்லி கடிதம்போட்டிருந்தேன்.சேர்ப்துச்சோ சேரலையோ தெரியவில்லை.இங்கயும் சொல்லிக்கிறேன். மணநாள் வாழ்த்துகளை. இணைப்பு,எண்பது வயது இளைஞரின் முயற்சி, கிளிக்கவிதை, அம்மாப் பசு,ஆசிரியர் வீடியோ அத்தனையும் அருமை. நன்றி வெங்கட்.
பதிலளிநீக்குமண நாள் வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிம்மா.... சில வேலைகளின் காரணமாக ஆதி இணையம் பக்கம் வர முடியவில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா..
இந்தவாரச் செய்தியில் வருபவர் சரியானஎட்டுக்கால் பூச்சியாய் இருப்பார் போலிருக்கிறது. இந்த ஃப்ரூட்சலாடிலில் எல்லாசெய்திகளுமே ரசிக்க வைத்தது புகைப் படம் நினைவு படுத்துவது தலப்பாக்கட்டா.?
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.
நீக்குபுகைப்படம் - அதே அதே.
///வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள் – அன்னை தெரசா.//
பதிலளிநீக்குஅருமையான கருத்து பகிர்வுக்கு பாராட்டு... சாலட் வழக்கம் போல அருமை... நானும் உங்களை போல சாலட் எழுதனும் என்று நினைப்பேன் ஆனால் இது வரை என்னால் முடியவில்லை..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
நீக்கு//நானும் உங்களை போல சாலட் எழுதனும் என்று நினைப்பேன் ஆனால் இது வரை என்னால் முடியவில்லை..//
கிண்டல் பண்ணாதீங்க! :)
பெரும்பாலான நேரங்களில் நாமும் இப்படித்தானே.. ஒரு இலக்குக்காக எதையோ செய்யப் போய் அதில் மாட்டிக் கொண்டு சுழன்று பின் குறிக்கோளையும் மறந்து சுற்ற ஆரம்பித்துவிடுகிறோம்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.
நீக்குகல்யாண்ஜியின் கவிதை ... ஆஹா! அற்புதம்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குஇது போன்ற குறும்படங்கள் எங்களை கூர்மை படுத்திக்கொள்ள உதவுகின்றன அண்ணா! touching!
பதிலளிநீக்குகல்யாணி கவிதை அருமை!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.
நீக்குஷிவ்சரண் தாத்தாவுக்கு கல்யாணம் கட்டிக்க
பதிலளிநீக்குஆசையில்லை போலும். இப்படியே நாளைக் கடத்திவிட்டார்....
அனைத்தும் அருமை நாகராஜ் ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.
நீக்குஷ்யோராம் அவர்களின் சாதனை நிறைவேறட்டும்...
பதிலளிநீக்குகுறுஞ்செய்தி சூப்பர்...
அன்னை தெரசா சிறப்பு...
மற்ற ஃப்ரூட்சாலட்களும் அருமை...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்....
நீக்குஅந்த இளைஞருக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநாற்பது தடவைக்கும் மேல், அதுவும் தள்ளாத வயதில் இன்னும் முயற்சி செய்து கொண்டிருக்கும் அவருடைய அந்த தன்னம்பிக்கையைத்தான் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
நீக்கு