எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, June 27, 2014

ஃப்ரூட் சாலட் – 97 – பழங்காசு – மருமகள் – தேனிலவு தம்பதிகள்

இந்த வார செய்தி:

தஞ்சாவூர் மெலட்டூர் கிராமத்து விவாசாயிகள், குறுவை சாகுபடி முடிந்தபின் விவசாயம் பார்க்க முடியாத காரணத்தினால் வேறு வேலை செய்தாக வேண்டிய கட்டாயம். வேறு யாரிடமோ வேலை செய்யாது தாமே வேலை செய்தால் கொஞ்சம் காசு பார்க்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு. அதனால் அவர்கள் வந்து சேர்ந்த இடம் – திருச்சியின் திருவரங்கம்.

காவிரி ஆறும் கொள்ளிடமும் சூழ இருக்கும் திருவரங்கத்தில் இந்த ஆறுகளில் தண்ணீர் இருக்கிறதோ இல்லையோ நிறைய மணல் இருக்கிறது. அதையும் தேவையில்லாத கருவை சுரண்டி அழிப்பது போல காவிரித் தாயின் வயிற்றைச் சுரண்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.  ஆனால் இவர்களோ, அந்த காவிரி/கொள்ளிட மணலை தோண்டி, சலித்து அதில் புதைந்துள்ள பழைய நாணயங்களைத் தேடி எடுக்கிறார்கள்.

முன்பெல்லாம், அவர்களுக்குக் கிடைக்கும் செப்பு, தங்கக் காசுகளை பழைய கடைகளில் எடைக்குக் கொடுத்து விடுவார்களாம். இப்போதெல்லாம் சலித்து எடுக்கும் காசுகளை ஆராய்ச்சி மாணவர்களுக்கு விற்று விடுகிறார்கள்.  அதில் கிடைக்கும் பணம் அன்றைய வயிற்றுப் பாட்டிற்குப் போதுமானதாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

இங்கே கிடைக்கும் அரிய வகை, பழங்கால நாணயங்களின் உண்மையான மதிப்பு என்ன என்பது இவர்களுக்குத் தெரியவில்லை. பொக்கிஷங்களான அக்காசுகள் பல மடங்கு விலை உடையதாக இருந்தாலும் இவர்களுக்குக் கிடைக்கப்போவதென்னவோ நூறு ரூபாய்க்குள் தான். 

இத்தொழிலில் ஐந்து குடும்பத்தினைச் சேர்ந்த 15 பேர் ஈடுபட்டுள்ளார்கள். காலை முதல் மாலை வரை ஆற்று மணலைச் சலித்து சலித்து வாழ்வாதாரம் தேடும் இவர்கள் வாழ்க்கை சலித்துப் போகாமல் இருக்க நிறைய காசுகள் கிடைக்கட்டும்....

முழுகட்டுரை இங்கே.....

இந்த வார முகப்புத்தக இற்றை:

சமையல்காரம்மா: அம்மா, வீட்டுல விருந்தாளி வந்துருக்காங்க. எலுமிச்சை ஜூஸ் குடுக்கலாம்னு பார்த்தா எலுமிச்சம் பழம் இல்லையே. என்ன பண்ணலாம்.

எஜமானி: அதுனால என்ன, அதான் டி.வி.யில் சொல்லிட்டே இருக்காங்களே, புது VIM LIQUID-ல 100 எலுமிச்சை சக்தி இருக்குன்னு.  அதில் இரண்டு சொட்டு உட்டு கலந்து கொடுத்துடலாம்!

இந்த வார குறுஞ்செய்தி:

HE SAID THAT THERE ARE ONLY TWO DAYS IN A YEAR, THAT NOTHING CAN BE DONE, ONE IS CALLED YESTERDAY AND THE OTHER IS CALLED TOMORROW, SO TODAY IS THE DAY TO LOVE, BELIEVE, DO AND MOSTLY LIVE – DALAI LAMA.

ராஜா காது கழுதை காது:

ரொம்ப நாளாச்சு இந்த தலைப்பில் எழுதி! – கேட்காமல் இல்லை ஆனாலும் எழுதவில்லை!

நேற்று பேருந்து நிலையத்தில் ஒரு பணியிலிருந்து பெரியவர் அமர்ந்திருந்தார். அருகிலேயே ஒரு துப்புரவுத் தொழிலாளி. சாலையை சுத்தம் செய்த பின் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து கொண்டு நீண்ட நடைக்குப் பின் அமர்ந்து கொண்டிருந்த பெரியவரிடம் பேசிக் கொண்டு இருந்தார். வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் எவ்வளவு ஓய்வூதியத் தொகை கிடைக்கிறது, எத்தனை மகன், மகள் என அடுக்கடுக்காய் கேள்விகள்-இடைவிடாத பதில்கள். கடைசியில் கேட்ட கேள்வி – மருமகள் வந்தாச்சா? அவள் நல்லவளா? எனக்கு கிடைத்த மருமகள் நல்லவள் – தினமும் காலையில் எழுந்து நான் வேலைக்குப் புறப்படும் முன் எல்லா பணிவிடைகளும் செய்வாள். மாலையில் வீடு திரும்பியதும் எனக்கு கால் பிடித்து விடுவாள்.  அதற்கு அந்த பெரியவர், பரவாயில்லையே, இவ்வளவு நல்லவளா உன் மருமகள் – காலெல்லாம் பிடித்து விடுகிறாளே! எனக்கேட்க, அப்படி பிடிக்கலைன்னா என் மகன் அவள திட்டி, ஒரு வழி பண்ணிடுவான் என்றார்!

ரசித்த காணொளி:

மனதைத் தொட்ட காணொளி – நீங்களும் பாருங்களேன்.....இந்த வார புகைப்படம்:WHAT AN IDEA SIR JI!

படித்ததில் பிடித்தது:

ஊட்டி குளிரவில்லை. சீசன் ஆரம்பிக்காததால் ஓட்டல்கள் காலியாக இருந்தன. குதிரையோட்டத்திற்காக நகரமே தன்னைப் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தது. ஊட்டியில் கடுமையான குளிர்காலம் தவிர மற்ற நாட்களில் எப்போதும் தென்படுபவர்கள் தேனிலவு தம்பதிகள். ஒருவரோடு ஒருவர் பசை போட்டது போல ஒட்டிக்கொண்டு, பார்ட்னர் சொன்ன சின்ன ஜோக்குகளுக்கெல்லாம் சிரித்துக் கொண்டு நேற்றிரவு ஞாபகங்களை கன்னத்தில் வெட்கச் சிவப்பாகத் தீட்டிக்கொண்டு இன்னும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாத இளம் கணவன் மனைவிகள். இவர்களிடையே கூட அங்கங்கே சுருதி பேதங்களைக் கண்டேன்.

-          சுஜாதா எழுதிய தமிழ்நாடு 2000 மைல் எனும் பயணக் கட்டுரையிலிருந்து....

என்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

78 comments:

 1. இந்த வார பழக்கலவையும் அருமை. தலாய் லாமா அவர்களின் பொன்மொழியை குறுஞ்செய்தியாகத் தந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
  2. நண்பர் திரு பாலா கணேஷ் அவர்களின் பின்னூட்டம் மூலம் அறிந்தேன் இன்று தங்களின் பிறந்த நாள் என்று. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

   Delete
  3. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 2. இதயம் நிறைந்த இனிய பிறந்ததின நல்வாழ்த்துகள் வெங்கட். இற்றையும் புகைப்படமும் மற்றவற்றை விடவும் மிகமிக ரசிக்க வைத்தன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

   வாழ்த்தியமைக்கும் நன்றி.

   Delete
 3. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... வெங்கட்ஜி ;)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 4. முதல் செய்தி நானும் தினசரியில் படித்தேன். எல்லா செய்திகளுமே சுவாரஸ்யமாய் இருந்தன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. வணக்கம்
  ஐயா.
  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் படங்கள்குறுஞ்செய்தி எல்லாம் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி ஐயா
  த.ம 4வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   உங்கள் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

   Delete
 6. உங்களின் பிறந்த நாளுக்கு எங்களுக்கு நீங்கள் அளித்த பழக்கலவைக்கு பலபல நன்றி ,வாழ்த்துக்கள் !
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 7. மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 8. இந்த வாரம் அனைத்தும் அருமை, அதிலும் குறிப்பாக லெமன் ஜூஸ் அற்புதம்.......

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஷ் பிரபு.

   Delete
 9. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சார்........

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மகேஷ் பிரபு.

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 11. பழத்தினால் செய்யப்பட்ட வித்தையும் பகிர்வும் அழகு வாழ்த்துக்கள் சகோதரா .
  த .ம .7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 12. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரரே!

  வாழ்கவே வெங்கட்! வளம்பல தானோங்கி
  சூழ்க சுகமும் சுடர்ந்து!

  வழமைபோல இன்றைய ஃப்ரூட் சலாட் மிக அருமை!

  காணொளி மனதைக் கவர்ந்தது!

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 13. சுவையான ஃப்ரூட் சாலடுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 14. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அண்ணா!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 15. வாழ்த்த வரும் எங்களுக்கு எலுமிச்சை ஜூஸ் கொடுத்திடாதீங்கண்ணா!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்குதான் முதல் கிளாஸ்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 16. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.

   Delete
 17. உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.

   Delete
 18. புகைப்படம் ரசித்தேன்

  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரவணன்.

   வாழ்த்துகளுக்கும் தான்....

   Delete
 19. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெங்கட்.
  வாழ்க வளமுடன்.
  இன்றைய காணொளி அருமை.
  எல்லா செய்திகளும், படமும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   வாழ்த்துகளுக்கும் நன்றிம்மா.

   Delete
 20. Sudha DwarakanathanJune 27, 2014 at 5:15 PM

  All parts of Fruit salad are super!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா ஜி!

   Delete
 21. வழக்கம் போல இன்றைய ஃப்ரூட் சாலாட் அருமை!..
  அன்பின் இனிய நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 22. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!.வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 23. ரசித்த புகைப் படம் அழகு. ஃப்ரூட் சலாட் வழக்கம் போல் சுவை. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 24. சுவையான சாலட்டிற்கு நன்றி! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 25. Happy Birth Day to You Kittu. Vim bar joke arumai.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 26. பிறந்த நாள் வாழ்த்தும் சொல்லி இருந்தேன். கமென்ட் பொட்டியை நல்லாக் குலுக்கிப் பாருங்க! :) எனிவே, தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. கமெண்ட் பொட்டியை குலுக்கி மட்ட்டுமல்ல, தலைகீழா கவுத்தும் பார்த்தாச்சு... :))

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 27. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 28. Replies
  1. தமிழ் மணம் பதினொன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 29. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வெங்கட். இப்படியெல்லாம் மாமனார்,பிள்ளை மருமகள் இருக்கிறார்களா... ஃப்ரூட் சாலட் எப்போதும் போல இனிமை. சுஜாதா சாரின் எண்ணங்களும் எழுத்தும் சுவை. மிக நன்றி. மீண்டும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 30. தொய்வில்லாமல் தொடர்ந்து எழுதுவதற்கே "ஒ" போட்டு வாழ்த்து சொல்லணும் உங்களுக்கு.. உடன் தகவல்களும் சுவையாய் இருப்பதற்கு டபுள் "ஒ" சார்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 31. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  பழக்கலவை- தலய் லமாவின் குறுஞ்செய்தியால் மிகச் சுவையுற்றது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி யோகன் பாரிஸ்.

   Delete
 32. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  இந்த வார ஃப்ரூட் சாலட் அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 33. அப்படி பிடிக்கலைன்னா என் மகன் அவள திட்டி, ஒரு வழி பண்ணிடுவான் என்றார்!//

  அட இந்த காலத்துல இப்பிடி ஒரு மகனா அவ்வ்வ்வ்வ் !

  சாலட் சூப்பரு அண்ணே...!

  பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மனோ.

   Delete
 34. காணொளியும் புகைப்படமும் பழமொழியும்
  அற்புதம்
  மிகவும் பிடித்த சாலட்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 35. Replies
  1. தமிழ் மணம் பதிமூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 36. அந்தக் காசுகளின் மதிப்பு தெரிந்தால் வாழ்க்கை இன்னும் உயரலாம். எலுமிச்சை ஜூஸ் நல்ல காமெடி. லாமாவின் கருத்து உட்பட எல்லாமும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 37. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 38. மன்னிக்கவும்! தாமதமான பிறந்த தின வாழ்த்துக்கள் சொல்வதற்கு! தங்கள் இனிய நல்ல எழுத்துக்கள் பல ஆண்டுகாலம் மிளிர எங்கள் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்!! வெங்கட் சார்!

  அருமையான ஃப்ரூட் சாலட்...லேட்டாக வந்தாலும் புளிக்கவில்லை!!!!!!! இனிமை! இற்றை.....விம் பார் நகைச்சுவை பிரமாதம்! தலாய்லாமாவின் வார்த்தைகள் எல்லோருக்கும் எப்போதும் பொருந்தும் ஒன்று!

  காணொளி, புகைப்படmஐ!

  புகைப்படம், சுஜாதாவின் எழுத்து (கேட்கணுமா) மிக அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   வாழ்த்துகளுக்கும் நன்றி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....