ஏரிகள்
நகரம் – பகுதி 17
ஏரிகள் நகரம் தொடரின் பதினாறாம் பகுதியினை முடிக்கும்போது
கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.
நீங்கள் எப்போது ஜிம் கார்பெட் செல்ல முடிவு செய்தாலும் ஒரு மாதம் முன்னரே முன் பதிவு செய்து விடுவது நல்லது. இல்லையெனில் அங்கே சென்ற பிறகு ஏமாற்றமே மிஞ்சும்.
உணவு இடைவேளையில் நீங்கள் அனைவரும் சாப்பிட்டு
வந்திருப்பீர்கள் தானே? அடடே இல்லையா? சரி
தலைவாழை இலை போட்டு சாப்பாடு போட்டால் போச்சு!
யாரங்கே? உடனே அனைவருக்கும் சுவையான விருந்து
தயாராகட்டும்....
படம்: இணையத்திலிருந்து.....
விருந்து தயார் ஆவதற்குள் நாம் காட்டுக்குள் சென்று கொஞ்சம்
புலி வேட்டையாடி வந்து விடுவோம். சரியா!
சென்ற பதிவில் சொன்னது போல நாங்கள் உணவு எடுத்துக்
கொள்ளச் சென்றோம். உங்களுக்கு ராம் நகரைப் பற்றி முந்தைய பதிவில் சொன்னதை நினைவுபடுத்த
வேண்டியிருக்கிறது. கிராமமும் இல்லாது நகரமும் இல்லாத ஒரு ஊர் தான் அது. அங்கே நல்ல உணவகங்கள் இருக்குமென நினைத்தால்
அது உங்கள் தவறு தான். டெல்லி தர்பார் என்று ஒரு ஹோட்டலும் வேறொரு ஹோட்டலும்
மட்டும் தான் சிறிது சுமாராக இருக்கும் என்று நாங்கள் அமர்த்திய ஜீப் உரிமையாளர்
சொல்ல தில்லி தர்பாரைச் சென்றடைந்தோம்.
நமது ஊரில் ஒரு சொலவடை உண்டு. விருந்தினர்கள் வருகிறேன்
என்று சொன்னால், “ஓ தாராளமாக வாங்க, உங்க தலையைப் பார்த்ததும் கல்லைப் போடறேன்” என்று சொல்வார்கள் – அதற்காக பயந்து விடக்கூடாது. நாம் வந்து சேர்ந்ததும் தோசைக்கல்லை அடுப்பில்
ஏற்றி சுடச்சுட தோசை செய்துதருவதைத் தான் அப்படிச் சொல்வார்கள். அதே போலத் தான்
அந்த ஹோட்டலில் எங்கள் தலையைக் கண்டதும் கோதுமை மாவு பிசைந்து வெங்காயம் நறுக்கி
என சமையலைத் தொடங்கினார்கள். சரி
சூடாகவும், புதியதாகவும் கிடைக்கிறதே என்ற நினைப்புடன் காத்திருந்தோம் – நாங்கள்
கேட்டதும் சப்பாத்தி மற்றும் சிம்பிள் தால் மட்டுமே.
படம்: இணையத்திலிருந்து.....
சிறிது நேரத்தில் சுடச்சுட சப்பாத்தியும் தொட்டுக்கொள்ள
தாலும், ஊறுகாயும் வர, மதிய உணவினை
முடித்தோம். அடித்த குளிரில் உதடுகளில் தோல்கள் உரியத் தொடங்க, LIP GUARD வாங்க ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினேன். மருந்து
கடைகளிலும் கிடைக்கவில்லை, மற்ற கடைகளிலும் கிடைக்கவில்லை. அப்படியே நடந்து நடந்து
ஒரு கிலோமீட்டர் நடந்த பிறகு ஒரு கடையில் கிடைத்தது. இந்த குளிரில் இது ஒரு தொல்லை
– ஆண்களும் வாய் மை போட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது!
அங்கிருந்து கிளம்பி கோசி நதியின் குறுக்கே கட்டப்பட்ட
அணையினையும், அங்கே இருந்த பறவைகளையும் பார்த்து விட்டு வன இலாகா அலுவலகத்திற்கு
வந்து சேர்ந்தோம். இதற்குள் எங்களை வனத்திற்குள் அழைத்துச் செல்லப்போகும் ஓட்டுனர்
வந்து சேர்ந்தார். நீங்கள் தான் எங்களை காட்டுக்குள் அழைத்துச் செல்லப்போகும்
வீரப்பனோ என்று கேட்க நினைத்தேன் – ஏனெனில் அவரும் பெரிய வீரப்பன் மீசை
வைத்திருந்தார். காட்டுக்குள் போகும் போது எதுக்கு இந்த வம்பு என நாவை அடக்கினேன்.
ஜிம் கார்பெட் உள்ளே செல்ல மற்ற வழிகளைப் போல சீதாவனி
பகுதிக்கு வன இலாகா அலுவலகத்தில் எந்த வித முன் அனுமதியும் வாங்கத்
தேவையில்லை. சீதாவனி பகுதிக்குச்
செல்லுமுன் இருக்கும் நுழைவாயிலில் வாகனத்திற்கான கடவுச் சீட்டு மட்டும் வாங்கிக்
கொண்டால் போதுமானது. எங்கள் ஓட்டுனர்
வீரப்பன் அதை வாங்கி வர வண்டியை நிறுத்த நாங்கள் ஜீப்பில் நின்றபடி சில பல படங்களை
எடுத்துக் கொண்டோம்.
பொதுவாக நான் இதுவரை சென்ற வனப் பகுதிகளில் யார் உள்ளே
சென்றாலும் அவர்களது வாகனத்திலேயே ஒரு வன இலாகா வழிகாட்டியும் வருவார். இந்த
சீதாவனி பகுதிக்குள் செல்ல ஒருவரும் கூட வரவில்லை. போலவே எந்தவிதமான சோதனைகளும் கிடையாது –
பொதுவாக வனப் பகுதிக்குள் செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கிறதா, பீடி,
சிகரெட், புகையிலை லாகிரி வஸ்துகள் இருக்கிறதா, உள்ளே போதை ஏற்ற சரக்கு எடுத்துப்
போகிறார்களா – போன்ற சோதனைகள் இருக்கும். இங்கே ஒரு சோதனையும் இல்லை!
வசதியாக ஒரு துப்பாக்கி கூட எடுத்துக் கொண்டு போய்,
பார்க்கும் மான்களைச் சுடலாம் போல இருக்கிறதே என நினைத்தேன். மான்களைச் சுடுவது இருக்கட்டும்,
உள்ளே இன்னும் நிறைய பார்க்கக் கிடைக்கும் என்று வீரப்பன் சொல்ல, காட்டை நோக்கி
பயணத்தைத் தொடங்கினோம். எங்களை ”காடு வா வா என அழைத்தது!
சீதாவனி காட்டுக்குள் நாங்கள் கண்டது என்ன என்பதை
அடுத்த பகுதியில் பார்க்கலாம்!
தொடர்ந்து பயணிப்போம்......
நட்புடன்
வெங்கட்
புது தில்லி…..
காட்டிற்குள் செல்லங்கள், கூடவே நாங்களும் தங்களுடன் பயணிக்கிறோம்
பதிலளிநீக்குநன்றி ஐயா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதம 1
பதிலளிநீக்குதமிழ் மண முதலாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குமான்களைச் சுடுகிறீர்களோ இல்லையோ... ஏகப்பட்ட புகைப்படங்களைச் சுட்டிருப்பீர்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
காட்டிற்கு செல்வது என்றால் ஒரு இனிமையான பயணந்தான் என்ன கொஞ்சம் பயம்.. இருக்கத்தான் செய்யும். அடுத்த பகுதியை ஆவலுடன் எதீர்பார்க்கிறேன் ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குத.ம 4வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு நன்றி ரூபன்.
நீக்குகாடு என்பதெ சுவாரஸ்யம்தான்! அதையும் தாங்கள் மிகவும் ரசனையுடன், சுவாரஸ்யமாக, அழகான வர்ணனையுடன் தரும் போது நாங்களும் தங்களுடன் பயணித்தது போன்ற அனுபவம் பெறுவது மட்டுமல்ல செல்லவும் தூண்டும் தொடராக இருக்கின்றது! நாங்கள் எல்லா குறிப்புகளையும் குறித்து வைத்துக் கொள்கின்றோம், தங்கள் ப்யணக் கட்டுரைகளில் இருந்து! எங்கள் பயணங்களையும் கூட எழுதத் தூண்டுகின்றது! மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்குமே!
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.
நீக்குநீங்களும் உங்களுடைய பயணம் குறித்து நிச்சயம் எழுதுங்கள்.
கானகக் குளிர்ச்சி
பதிலளிநீக்குபுகைப்படங்கள் மூலம் இப்போது எங்களுக்குள்ளும்..
தொடர்கிறோம்
தொடர வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.
நீக்குபுகைப்படத்தில் என்ன ஒரு கம்பீரம்!..
பதிலளிநீக்குஅருமையான புகைப்படங்கள்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
நீக்குஇந்த வலைப்பூக்களில், சாப்பாட்டு படத்தை போடுறதுக்கு யாராவது தடை செய்ய மாட்டார்களா?
பதிலளிநீக்குஏங்க இப்படி வகை வகையான சாப்பாட்டு படங்களைப் போட்டு எங்க நாக்குல எச்சி ஊற வைக்கிறீங்க?
ஒரு நாள் வாய் மை போட்டுக்கிறதுக்கே இப்படி அலுத்துக்கிறீங்க, நாங்க வருஷத்துல பாதி நாட்கள் போட்டுக்கிறோம்.
ஆமா, அது யாருங்க ஒருத்தர் பொண்ணு பார்க்க போகிற மாதிரி டிப் டாப்பா போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறது(அரைக்கை ஸ்வெட்டர் போட்டுக்கிட்டு இருக்கிறவர் தான்!!!)
அடடா... சாப்பாட்டு படம் பார்க்க உங்களுக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு போல! :)))) இன்னும் நிறைய போடறேன்!
நீக்குவாய்மை தில்லியிலும் நான்கு மாதங்களுக்கு தேவையாகத் தான் இருக்கிறது. ஆனாலும் ஏனோ அது எனக்கு பிடிப்பதில்லை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
அருமையான படங்கள், அழகான காட்டுபகுதியைப்பார்க்க தொடர்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குதனி மனிதனாக அன்று ஒரு வயதானவர் மலையை வெட்டி பாதை அமைத்தார், அது போல் இன்று தன் கிராம மக்களுக்காக குடும்பத்துடன் மற்றும் தன் கிராம மக்கள் இத்துழைப்புடன் பாதை அமைப்பது மகிழ்ச்சி, அரசாங்கமும் இணைந்தால் எல்லோருக்கும் நலம்.
பதிலளிநீக்குபாடல், மற்றும் அனைத்து செய்திகளும் அருமை.
வாழ்த்துக்கள்.
ஃப்ரூட் சாலட் பதிவுக்கான கருத்துரை இங்கே வந்துவிட்டது! :))))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..
சீதாவனி காட்டுப்பாதையில் அணிவகுத்து நிற்கும் மரங்களின் அணிவகுப்பின் அழகே அழகு. நீங்கள் காட்டில் கண்டதை கேட்க காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குவாய் மை உங்களுக்கு நல்லாத்தானே இருக்கு ,இதை ஏன் எப்பவும் நீங்க போட்டுக்கக்கூடாது ?
பதிலளிநீக்குத ம 8
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குவிறுவிறுப்பாக செல்லுகிறது தொடர்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குசீதாவனி காட்டுக்குள் பயணிக்கிறோம்....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குஉங்களுடன் சேர்ந்து எங்களையும் பயணிக்க வைத்து விட்டீர்கள்...
பதிலளிநீக்குஅருமை... இன்னும் செல்லுங்கள் நாங்களும் வருகிறோம் அண்ணா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.
நீக்குபடங்கள் விபரங்களும் அருமை!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குSappidara items yellam pramadham. Photovai paarththadhum sappidaththondrugiradhu.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குசுவாரஸ்யமான பயணம்....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!.
நீக்கு