எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, September 12, 2014

ஃப்ரூட் சாலட் – 105 – வாலாஜா ஏரி – அலங்காரம் - பதிவர் சந்திப்புஇந்த வார செய்தி:

வடலூருக்கும், சேத்தியாத்தோப்புக்கும் இடையில் கரைமேடு என்கிற கிராமத்தில் உள்ளது வாலாஜா ஏரி. 1664 ஏக்கர் பரப்பளவு கொண்ட பழமையான ஏரி. இந்த ஏரியை சுமார் 150 ஆண்டுகளுக்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், பராமரிக்கப்பட்ட பிறகு பல ஆண்டாக தூர் வாரப்படாமல், நீர்பிடிப்பு திறனின்றி இருந்தது.

இதனைத்தொடர்ந்து விவசாய சங்கங்களின் பல போராட்டங்களையொட்டி அப்போதைய மாவட்ட கலெக்டர் ககன்தீப்சிங்பேடி முயற்சியால் என்.எல்.சி. நிறுவனத்துடன் பேசி ரூ.14 கோடி செலவில், வாலாஜா ஏரி தூர்வாரி ஆழப்படுத்தியும், கரைகளை உயர்த்தும் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி 90 சதவீத வேலைகள் நிறைவு பெற்றன. இதனால் 4500 மீட்டர் நீளமும், 350 மீட்டர் அகலமும், 1½ மீட்டர் ஆழமும் கொண்ட வாலாஜா ஏரியில் 21 லட்சம் கனமீட்டர் தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.

இந்த ஏரியை சுற்றியுள்ள கரைமேடு மருவாய் மருதூர், அம்பாள்புரம், கல்குணம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விவசாய நிலம் பயன்பெறும். இந்த ஏரியில் இருந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

     நன்றி: மாலைமலர். 

NLC போன்ற எல்லா நிறுவனங்களும், இது போன்று ஏரிகளை தூர் வாரும் பணியிலும், கிராம மேம்பாட்டுத் திட்டங்களிலும் தங்களுடைய பங்களிப்பினைச் செய்தால் பொதுமக்கள் பலரும் பயனடைவார்கள்.  ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அவர்களது வரவு செலவு திட்டத்தில் “CSR” எனும் பெயரில் ஒதுக்கீடு செய்வார்கள். அதாவது “Corporate Social Responsibility” Component – இந்த ஒதுக்கீட்டினை நல்ல விதத்தில் பயன்படுத்தினால் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியும். 

சிறப்பான பணியைச் செய்திட்ட NLC நிறுவனத்திற்கு இந்த வாரப் பூங்கொத்து!

இந்த வார முகப்புத்தக இற்றை:


பிரச்சனைகளும் வாய்ப்புகளும்!


இந்த வார குறுஞ்செய்தி:

காலடித் தடங்கள்.....


இந்த வார காணொளி:

நான்கு கால்களால், சுதந்திரமாக நடக்க வேண்டிய இந்த உயிரினத்தினை எப்படி நடக்க வைத்திருக்கிறார்கள் பாருங்கள்!ரசித்த இசை:

இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்வது ஒரு இசை வெளியீடு – Malabar to Morocco எனும் Album சில நாட்கள் முன்னர் கேட்டேன்.  அதிலிருந்து ஒரு பகுதியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் – உங்கள் ரசனைக்காக!


இந்த வார புகைப்படம்:

பெண்கள் தங்களது தலைமுடியை அலங்காரம் செய்து கொள்வதற்காகவே நிறைய நேரம் எடுத்துக் கொள்வார்கள்என்ற கருத்து காலம் காலமாக இருக்கும் ஒரு பொய்! தில்லியில் சிகை அலங்கார நிலையங்களில் வந்து பாருங்கள் – ஒவ்வொரு ஆணும் செய்யும் சேட்டைகளை! ஒரு சில இளைஞர்கள் தலை முடியை அலங்காரம் செய்து கொள்வதற்காகவே வாரத்திற்கு ஒரு முறை விசிட் செய்கிறார்கள்! 

இந்த படத்தினைப் பாருங்கள்! இந்த அலங்காரம் செய்வதற்கு எத்தனை நேரம் ஆகியிருக்கும்?


படித்ததில் பிடித்தது:

ஒற்றை இறகு


தனித்துக் கிடக்கும்
ஒற்றை இறகு
ஓராயிரம் அதிர்வுகளைத்
துவக்கி விட்டிருக்கிறது மனதில்.

நாய்களுக்கோ பூனைகளுக்கோ
பசியாற்றிவிட்ட
பறவையின் மிச்சமோ?

மின் கம்பியில் மோதி
எரிந்துவிட்ட பேருடலின்
ஒரு துளியா?

ஞாயிற்றுக் கிழமைக்காக
துடிக்கத் துடிக்க
கழுத்தறுபடுகையில்
தெறித்து விழுந்த
ஒரு பகுதி பறவையோ?

வலிகளையும்
இழப்புகளையும்
பொருட்படுத்தாது

காற்று வீசும்
கணம் தோறும்
இன்னும்
பறக்க எத்தனித்தவாறே
இருக்கிறது அந்த
இறகு.

-   இரா. பூபாலன், கணையாழி, ஜனவரி 2014.

மூன்றாம் பதிவர் சந்திப்பு:

இரண்டு வருடங்களாக சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பு, இம்முறை மதுரையில் நடக்க இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இரண்டாவது சந்திப்பில் கலந்து கொண்டது இப்போதும் நினைவில் பசுமையாக உள்ளது. மூன்றாம் சந்திப்பிலும் கலந்து கொள்ளும் எண்ணம் இருக்கிறது. அதற்குள் ஆணி பிடுங்குவதில் சற்றேனும் ஓய்வு கிடைக்கிறதா எனப் பார்க்கலாம்! 


மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.டிஸ்கி: இந்த திங்கள் கிழமை அன்று வெளியிட்ட வைஷ்ணவ தேவிபயணத் தொடரின் முதல் பகுதி – அன்னையின் அழைப்பு - படிக்காதவர்கள் படிக்கலாமே! ஒவ்வொரு திங்கள் கிழமையும் இத்தொடரின் மற்ற பகுதிகள் வெளியிட எண்ணம்!

40 comments:

 1. இந்த வார ஃப்ரூட் சாலட் அருமை.
  இந்த வார புகைப்படம்: - உண்மையிலேயே மிரட்டுது. ஆமா, இப்படியெல்லாம் கூடவா சிகை அலங்காரம் செய்து கொள்வார்கள்?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 2. சிறப்பான பணியைச் செய்திட்ட NLC நிறுவனத்திற்கு இந்த வாரப் பூங்கொத்து..//
  பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..

  பதிவர் சந்திப்புக்கு நல்வாழ்த்துகள்.!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. முதல் தகவல் பாராட்டுக்குரியது. சிகை அலங்காரம் மிரட்டுகிறது. குறுஞ்செய்தியோடு படமும் அசத்தல். நல்ல தொகுப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 4. காலடி தடங்கள் படம் சூப்பர்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   Delete
 5. ஃப்ரூட் சாலட் சுவையாக இருந்தது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 6. கவிதை கனமாய் இருந்தது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 7. NLC நிறுவனத்திற்கு பாராட்டுக்கள்! இற்றையும், குறுஞ்ச்செய்தியும் அருமை என்றால் டாப் செர்ரி காணொளியும், ஆல்பம் இசையும்....காணொளி இப்படிக்கூட நடக்க வைக்க முடியுமா என்று ஆச்சரியம், அது நடந்த விதம் அழகு கொள்ளை அழகு என்றாலும் ஒருவேளை அதற்கு அது கடினமாக இருந்திருக்குமோ என்ற ஒரு எண்ணமும் வந்தது.....பாவமோ என்றும்...மனிதன் தனது விருப்பத்திற்காக என்னவெல்லாம் செய்கின்றான் என்று.....

  ஆல்பம்....என்ன ஒரு இனிமை...ஹம்சத்வனி இழைகிறது...வயலினில்.....மனதை நிறைத்தது......மிக்க நன்றி வெங்கட்ஜி.....எடுத்திருந்த விதமும் மனதைக் கொள்ளை கொண்டது.....

  கவித அருமை.....மின் கம்பியில் அடிபட்டு இறக்கும் காக்கைகள் நினைவுக்கு வருகின்றன....மட்டுமல்ல இங்கு ஒவ்வொரு மழையின் போதும் காற்றடித்து மின் கம்பிகள் அறுந்து தண்ணீரில் விழும் போது, நடுராத்திரி, தெருவில் சுற்றும் நாய் ஒன்று அதன் அருகில் செல்ல கரண்ட் அடித்து சாக அதனுடன் சென்ற அதன் குட்டிகளும் ஷாக் அடித்து நம் அடிவயிறு கலங்கும் அளவு ஓலக் குரல் எழுப்பி செத்து வீழ்ந்து மனதைக் கலங்கடித்த நினைவும் வருகின்றது...ஒவ்வொரு முறையும் ஏதேனும் இப்படி ஒருநிகழ்வு.....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   கவிதை முதல் முறை படித்தபோதே மனதைத் தொட்டது. சாதாரணமாக பறந்து வரும் ஒரு இறகு எவ்வித உணர்வுகளையும் தருவதில்லை. ஆனால் கவிஞருக்கு எவ்விதமான உணர்வுகளைத் தந்திருக்கிறது எனப் படித்தபோது அதை பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

   Delete
 8. சிகை அலங்காரம் கலக்கல் அண்ணா...
  கவிதை அருமை...
  பதிவர் விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

   Delete
 9. நம்ம நெய்வேலி எப்பவும் best .இதே போல நிறைய நல்ல காரியங்கள் NLC செய்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுபா.

   Delete
 10. இந்த ஃப்ர்ரு சலாட் பல சுவைகளைக் கொண்டிருந்தது. NLC பணி போற்றக் கூடியது. தலை அலங்காரமா தலை அலங்கோலமா கேள்வி எழுகிறது. நாலு கால் பிராணியை பயிற்றுவித்ததுசாதனை என்றாலும் எத்தனைவேதனைகள் அதற்கு. க்ருயெல்டி டு தெ அனிமல்ஸ் சர்க்கஸில் யானை மூன்று சக்கர சைக்கிள் ஓட்டியது நினைவுக்கு வந்தது. ஒற்றைச் சிறகு ஏற்படுத்திய கற்பனை ரசிக்க வைத்தது. only true friends leave their foot prints in your heart.மிதிக்காமல் இருந்தால் சரி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சர்ர்.

   Delete
 11. ஃபருட் சாலட் சுவையோ சுவை வெங்கட்ஜி.
  ஆமாம்.....பெண்கள் பலர் தலையை விரித்தல்லாவா போட்டுக் கொள்கிறார்கள். ஆனால் அதற்கும் பார்லர் போகிறார்கள் என்பதே உண்மை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 12. மக்கள் பணி செய்த NLC நிறுவனத்திற்கு பாராட்டுக்கள்!..
  இனிய பதிவு.. வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ,

   Delete
 13. முகப்புத்தக இற்றை _ அர்த்தமே இல்லாத இவற்றை யோசித்து எழுதுகிறவர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. problem எப்படி possibility ஆகவியலும்? what a waste of time and intellect!

  சிகையலங்காரம் எப்படி செய்தார்கள் என்பது தெரிந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே? very impressive. சே.. முடி இருந்தப்ப இந்த மாதிரி தெரியாமப் போச்சே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 14. கவிதை பிரமாதம். மின் கம்பியில் மோதி... அற்புதமான கற்பனை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 15. பதிவர் சந்திப்பிற்கு வாருங்கள் ஐயா
  தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. பதிவர் சந்திப்பிற்கு வர எண்ணம் உண்டு. வந்தால் நிச்சயம் சந்திப்போம் ஐயா.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெய்க்குமார் ஐயா.

   Delete
 16. Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 17. எதை சொல்ல எதை விட ? எல்லாமே சூப்பர் அண்ணா!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete
 18. அன்புடையீர்..
  விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
  இணைப்பு - http://thanjavur14.blogspot.com/2014/09/blog-post84-blog-award.html

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ....

   Delete
 19. இந்த வாரப் பழக்கலவை வழக்கம்போல் இனித்தது. வீழ்ந்தாலும் எழ முயற்சிக்கலாம் என்கிறது அந்த ‘ஒற்றை இறகு’ கவிதை. அதை படைத்த திரு பூபாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 20. இனிய பழக்கலவை நண்பரே...
  இந்த முறை பதிவர் சந்திப்பில் உங்களைக் காண
  ஆவலோடு இருக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   பதிவர் சந்திப்பிற்கு நானும் வர எண்ணி இருக்கிறேன் - அலுவலகத்திலிருந்து விடுப்பு கிடைத்தால்!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....