எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, March 1, 2015

சூரஜ்குண்ட் மேளாவில் பாலகணேஷ்!பாலகணேஷ் 
படம்: இணையத்திலிருந்து....

நேற்று ஒரு படம் கண்டேன். விநாயகப் பெருமானின் 32 திருமேனிகளையும் ஒருங்கே அப்படத்தில் தந்திருந்தார்கள். அதில் நட்டநடுநாயகமாக சங்கடஹர கண்பதி நின்று கொண்டிருக்க, அவரைச் சுற்றிலும் மற்ற திருமேனிகள். அதில் முதல் திருமேனி என்னை மிகவும் கவர்ந்தவர்.  அவர் பெயர் தெரியுமோ? அவர் பாலகணேஷ்! பாலகணேஷ் மட்டுமல்லாது மற்ற பிள்ளையார் பொம்மைகளையும் பிறிதொரு பதிவில் புகைப்படம் எடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். போன வாரத்தில் சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே!!

சென்ற ஞாயிறன்று பகிர்ந்து கொண்ட ‘ஆம் ஆத்மி கட்சியின் சின்னமும் மேளாவும்பதிவில் சொன்னது போல, சூரஜ்குண்ட் மேளாவில் பலவிதமான பிள்ளையார் பொம்மைகளை/சிலைகளைப் பார்க்க முடிந்தது. அவற்றின் படங்களை உங்களுடன் இந்த ஞாயிறில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.  சில சிலைகள், கற்களாலும், சில பேப்பர் கூழினாலும், சில மரத்திலும் செய்து விற்பனைக்கும்/ பார்வைக்கும் வைத்திருந்தார்கள். 

கல்லில் செதுக்கி வைத்திருந்த ஒரு பிள்ளையார் கவனத்தினை மிகவும் ஈர்த்தவர் – வெறும் கல்லாக சாதாரண மனிதரின் கண்களுக்குத் தெரிவது சிற்பி/கலைஞனின் கண்களுக்கு மட்டும் இப்படி அற்புதமான சிலையாகத் தெரிகிறது! ஒவ்வொரு பிள்ளையாரும் ஒவ்வொரு அழகு. திருவிளையாடல் படத்தில் சிவபெருமான் பல இசைக் கருவிகளை இசைப்பதாக “பாட்டும் நானே பாடலில் காட்டியிருப்பார்கள்!  தந்தைக்குத் தானும் சளைத்தவனில்லை என்று பிள்ளையாரும் செய்திருக்கிறார் – நாதஸ்வரம், தபலா, வீணை என அனைத்தும் வாசிக்கிறார்!

நான் ரசித்த, படம் பிடித்த அனைத்து பிள்ளையார் சிலைகளையும் நீங்களும் பார்த்து ரசிக்கலாமே!


நண்பர் பத்மநாபன் வீட்டினை அலங்கரிக்கும் பிள்ளையார்


 ஹலோ.... வயிறு கொஞ்சம் பசிக்கிற மாதிரி இருக்கு...  கொழுக்கட்டை தரியா என வயிற்றைத் தடவிக்கொண்டே கேட்கிறாரோ இவர்!


கல்லாகத் தெரியும் சாதாரணர்களுக்கு! அதில் அழகிய பிள்ளையாரின் உருவம் தெரியும் சிற்பிகளுக்கு! 
 


 ஓங்கார வடிவினனோ?


கலசமே பிள்ளையாராக! நல்ல கற்பனை அல்லவா!


தந்தையைப் பூஜிக்கும் தனயர்கள்!


இளையோன் வேலவனோடு!


காமதேனுவின் மேல் அமர்ந்தபடி அருள்பாலிக்கும் பிள்ளையார்!


நான் ஒரு இசைக்கலைஞன்!


நான் நல்ல தபலா வாசிப்பேன்!


நாதஸ்வரத்திலும் கானம் இசைப்பேன்....


மிருதங்கம் வாசிப்பதிலும் நான் கில்லாடி!


எனக்கு வீணை வாசிக்கவும் தெரியும்!மரப்பலகையில் எத்தனை பிள்ளையார்! அதிலும் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிள்ளையார் என்ன அழகு!

என்ன நண்பர்களே, பிள்ளையார் படங்களை ரசித்தீர்களா....  பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

36 comments:

 1. பிள்ளையார்.. பிள்ளையார்..
  பெருமை வாய்ந்த பிள்ளையார்!..

  பிள்ளையாரின் எல்லா வடிவங்களும் அருமை.. அழகு!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 2. அனைத்து ஆனை உம்மாச்சியும் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. அழகிய பிள்ளையார் உருவங்கள்.
  மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 4. அனைத்து பிள்ளையார் படங்களையும் இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 5. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 6. விநாயகரின் அழகிய சிலைகளை அற்புதமாகப் படமாக்கிப் பகிர்ந்துள்ளீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 7. பிள்ளையார் ஒருவர்தான் நாம் இழுத்த இழுப்புக்கு உடன் படுவார். மஹாபலி புரத்தில் இம்மாதிரி பல வகைகளில் பிள்ளையார் பார்த்திருக்கிறேன் பத்து பிள்ளையார்களை நானும் வாங்கி இருக்கிறேன். ஒருபிள்ளையார் ஓவியத்தில் நவகிரகங்களும் இருப்பதாகத் தீட்டபட்ட ஓவியம் கும்பகோணத்தில் வாங்கி இருக்கிறேன். அது இல்லாமல் ஷோடச கணபதி என்றும் ஓவியம் பார்த்து வாகி இருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 8. ஆஹா, அருமையான பிள்ளையார் படங்கள்... அழகோ அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 9. படங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 10. அனைத்தும் அருமை நண்பரே வாழ்த்துகள்
  தமிழ் மணம் 5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 11. அதுதானே பார்த்தேன் ,நம்ம தல பாலகணேஷ் ஜி எப்போ சூரஜ் குண்டுக்கு பயணம் செய்தார் என்று :)
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 12. தலைப்பப் பாத்ததும் சூரஜ்குண்ட் மேளாவில் நான் எப்ப போனேன்...? என்று ஒரு நிமிஷம் குழம்பித்தான் போய்ட்டேன் ஓய்... வந்து பாத்தால்ல விஷயம் தெரியுது. நல்லவேளை... முதல் படமா என் படத்தப் போடாம வுட்டீரே... ஜனங்களுக்கு புள்ளையாருக்கும் நமக்கும் வித்யாசம் கண்டுபுடிக்க கஷ்டமாகியிருக்கும். ஹி... ஹி.... ஹி...

  ReplyDelete
  Replies
  1. வித்தியாசம் கடு பிடிப்பது கஷ்டம்!.... ஹாஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

   Delete
 13. ஓம்கார வடிவினரான கணபதியும், வாத்தியக் கருவிகளைக் கையாளும் கஜானனர்களும் மனசைப் பறிச்சுட்டாங்க. சூப்பரோ சூப்பரு.

  ReplyDelete
  Replies
  1. வாத்தியக் கருவிகள் வாசிக்கும் பிள்ளையார் பொம்மைகள் எனக்கும் பிடித்தன......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாலகணேஷ்.

   Delete
 14. அருமையான படங்கள் இதுவரை பார்த்திராத பிள்ளையார் சிலைகள் பகிர்வுக்கு நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   Delete
 15. அனைத்தும் அழகு... அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 16. ரா. ஈ. பத்மநாபன்March 2, 2015 at 9:57 AM

  அருமை! அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 17. பால கணேஷ் அட்டகாசம். மெய்யாலுமே அடுத்த சூரஜ் குண்ட் மேளா பார்க்க நீங்க அங்கே போகத்தான் போறீங்க வெங்கட் வாக்கு பலிக்கும். :)

  சிற்பி செதுக்கிய விநாயகரை கண் இமைக்காமல் பார்த்தேன். ஆமாம் அந்தக் கல்லில் இருந்து எப்படி இப்படி வழு வழுவென்று ப்ரவுன் கலரில் செதுக்க முடியுது. மிக அற்புதம்

  ஓங்கார கணபதியும் தந்தைக்கு பூஜை செய்பவர்களும் தனயனும் தம்பியும் வாத்தியக்காரர்களும் அழகு. கொள்ளை கொண்ட பிள்ளைகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி வெங்கட் சகோ :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

   Delete
 18. விதவிதமான விநாயகர்களை ரசித்து மகிழ்ந்தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....