வெள்ளி, 13 மார்ச், 2015

ஃப்ரூட் சாலட் – 129 – மரம் வளர்ப்போம் – தீக்குச்சி! – பதட்டம் தவிர்ப்போம்இந்த வார செய்தி:


ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்சமுந்த் மாவட்டம்.  அதில் ஒரு கிராமம் தான் பிப்ளாந்த்ரி.  இப்படி ஒரு பேரைக் கூட நாம் கேள்விப்பட்டிருப்பது சந்தேகம் தான்.  ஆனாலும் சத்தமில்லாமல் ஒரு புரட்சியினைச் செய்து வருகிறார்கள் அக்கிராமத்து மக்கள். பொதுவாகவே ராஜஸ்தான் மாநிலத்தில் ஆண்-பெண் விகிதாசாரம் மிகவும் குறைவு. பெண் சிசுக்கொலை மிகவும் அதிகம்.

சமீபத்தில் கொண்டாடிய மகளிர் தினம் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. ஆனாலும் கடந்த எட்டு வருடங்களாக சிசுக்கொலை தடுப்பிற்கும், பெண்களின் வளர்ச்சிக்கும், கூடவே இயற்கையைக் காப்பதற்கும் சத்தமில்லாது ஒரு சாதனை செய்து வருகிறார்கள்.  கிராமத்தில் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும் போதும் 111 மரக்கன்றுகளை நட்டு அதை வளர்க்கிறார்கள்.  குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு மரங்களையும் சேர்த்து வளர்க்கிறார்கள்.

அது மட்டுமல்லாது கிராமப் பஞ்சாயத்து பத்தாயிரம் ரூபாயும், ஊர் மக்கள் அனைவருமாகச் சேர்ந்து 21000/- ரூபாயும் போட்டு ஒவ்வொரு பெண் குழந்தை பிறந்த உடன் அக்குழந்தையின் பெயரில் வைப்பு நிதியாக வங்கியில் சேமிக்கிறார்கள். இதனைப் பெற பெண் குழந்தைகள் செய்ய வேண்டியது இது தான் – குழந்தையை வளர்ப்பது போலவே மரங்களையும் வளர்க்க வேண்டும், பெண் சிசுவினை வதம் செய்யக் கூடாது மற்றும் தனது பெண்ணிற்கு 18 வயது ஆகும் வரை அப்பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்ககூடாது. 

பஞ்சாயத்து தலைவர் மாறினாலும், இந்தத் திட்டத்தினை  தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்தவுடன், மற்ற கட்சி ஆட்சியில் கொண்டு வந்த பல திட்டங்களை முடக்கி விடும் அரசுகள் மத்தியில் இக்கிராமத்து பஞ்சாயத்து இப்படி நல்ல திட்டத்தினை முடக்காமல் இருப்பதற்காகவே இவர்களை பாராட்டலாம்.

கடந்த எட்டு வருடங்களில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரித்து வருகிறார்களாம்.

பெண் சிசு வதை குறைந்த பிறகு இக்கிராமத்தில் ஆண்-பெண் விகிதாசாரத்திலும் நல்ல முன்னேற்றம். 18 வயதிற்குள் பெண்களை திருமணம் செய்து கொடுப்பதும் குறைந்திருக்கிறது.
 
சத்தமில்லாமல் சாதித்து வரும் இக்கிராம மக்கள் அனைவருக்கும் இந்த வார பூங்கொத்து.

இந்த வார முகப்புத்தக இற்றை:

HURTING SOMEONE CAN BE AS EASY AS THROWING A STONE IN THE SEA. BUT DO YOU HAVE ANY IDEA HOW DEEP THE STONE CAN GO?

இந்த வார குறுஞ்செய்தி:

தோல்வி எனும் தீக்குச்சியை உரசிப்பார்.....  வெற்றி எனும் வெளிச்சத் தீ உனைத் தேடி வரும்.

இந்த வார காணொளி:

இப்படியும் போக்குவரத்தை ஒழுங்கு செய்யலாம் என்று சொல்கிறார்.  எப்படி?  பாருங்களேன்! :)

Post by Gadoo.
படித்ததில் பிடித்தது:

ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவற விட்டுவிட்டதை உணர்ந்தது. அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது.

தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய். புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது. புலி அருகில் வந்தவுடன், "ஆஹா...புலியின் மாமிசம் என்ன, என்ன சுவை..! இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே" என்றது நாக்கைச் சுழற்றியபடியே தனக்குத்தானே பேசியது.

அதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்து, 'நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம்' என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது. இந்த சம்பவத்தை மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று, நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது.

அதனைப் பார்த்த நாய் ஏதோ விவகாரம் எனப் புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது. குரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும் கோபம் கொண்ட புலி, "என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடுபடுகிறது என்பதைப் பார்" என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது.

குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து கொண்டு, "இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே!" என்றது சத்தமாக...

பின் என்ன நடந்திருக்கும் சொல்ல வேண்டியதில்லை, நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்..

இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்வது, எந்த சூழ்நிலையிலும் தன்நம்பிக்கையும் முயற்சியையும் விட்டுவிட கூடாது. ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால் அதை நினைத்து கவலைப் படுவதாலோ வருத்தப்படுவதாலோ எந்த மாறுதலும் நிகழப் போவதில்லை. அதை நினைத்து கவலைப் படுவதற்கு பதிலாக அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்தால் நடப்பவையாவது நல்லவையாக நடக்கும்.

ஆம்,நண்பர்களே., எந்த சூழ்நிலையிலும் அதிலிருந்து தப்ப தன்னம்பிக்கையும், பதட்டப்படாமல் இருந்தாலே பாதி வெற்றி, நாம் பயப்படாமல் எதிரில் உள்ளவர்களை சமாளித்தால் மீதி வெற்றி...

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

48 கருத்துகள்:

 1. மரம் வளர்ப்போம் மனிதனாய் இருப்போம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   நீக்கு
 2. பஞ்சாயத்து வாழ்க... கிராம மக்கள் தெய்வங்கள்...

  அதிக எதிர்ப்பார்ப்பு ---> அவரசம் + பதட்டம் ---> தவறு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி My Mobile Studios.

   நீக்கு
 5. அனைத்துமே அருமை.
  அருமையாக புரட்சி செய்துவரும் பிப்ளாந்த்ரி கிராம மக்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   நீக்கு
 6. 3லட்சம் மரக்கன்றுகள்.... நல்ல தகவல்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   நீக்கு
 7. போக்கு வரத்து போலீஸின் செயல் பிரமாதம்
  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 8. இந்த வாரப் பூங்கொத்தினைப் பெற்றுக் கொண்ட கிராமத்து மக்களுக்கு
  என் சார்பிலும் ஒரு பூங்கொத்துக் கிட்டட்டும் ! அருமையான திட்டத்தினை
  முன் வைத்துப் பெண் பிள்ளைகளின் எதிர்கால வாழ்விற்கு வெளிச்சம் காட்டி
  வைத்த பஞ்சாயத்துத் தீர்ப்பு மனத்தை மிகவும் மகிழ்வுக்குள்ளாக்கி உள்ளது .
  சிறந்த பகிர்வு ஒன்றினை வழங்கிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும்
  பாராட்டுக்களும் சகோ .வாழ்த்துக்கள் மேலும் தொடர .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 10. வணக்கம்
  ஐயா
  அருமையான தகவல் தேடலுக்கு எனது வாழ்த்துக்கள் த.ம 7
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 11. ராஜ் சமுந்த் கிராம மக்களின் முன்யோசனை வியக்க வைக்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 12. அந்த கிராம மக்கள் பாராட்டுக்குரியவர்கள். காணொளி படுத்துகிறது! பி எஸ் என் எல்! தேதி பதினைந்தை நெருங்குகிறதே! ம்ம்ம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 13. காணொளி ரசித்தேன். எந்த ஊர்? தஞ்சாவூரில் இதே போன்ற ஒரு போக்குவரத்துப் போலீஸ்காரரை என் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். நடனமாடுவார்! அவர் நினைவுக்கு வந்து விட்டார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்த ஊர் என்று தெரியவில்லை ஸ்ரீராம். உங்கள் நினைவுகளை இக்காணொளி மீட்டு விட்டது! மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. பிப்ளாந்த்ரி கிராம மக்கள் பாராட்டிற்கு உரியவர்கள்
  இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரி கிராமமாக விளங்குவது மகிழ்வளிக்கின்றது ஐயா
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 15. பிப்ளாந்த்ரி கிராமத்து மக்கள் வாழ்க!
  முக நூல் இற்றை, குறுஞ்செய்தி அருமை.

  காணொளி டாப் மிகவும் ரசித்தோம்.....எந்த ஊர்??!!

  படித்ததில் பிடித்தது எங்களுக்கும் பிடித்தது அருமையான கதை சமயோசிதத்தின் வலிமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி எடுத்தது எந்த ஊர் என்று தெரியவில்லை. பார்த்ததில் பிடித்தது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 16. அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் எனக்கு ஒரு பூங்கொத்து தரப்பட்டது.. மிக அழகாக சில காய்கறிகளையும், பழங்களையும் கொண்டு கலை நேர்த்தியுடன் தயாரிக்கப் பட்டது. உங்கள் இந்தப் பதிவும் அது போன்ற வித்தியாசமான அழகு வெங்கட்! சுகந்தானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி!

   பயணத்தில் இருந்ததால் தாமதமாக பதில் தருகிறேன். நலம். நீங்களும் நலமாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

   நீக்கு
 17. இந்த வார ப்ரூட் சாலட் நல்ல சுவை. போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் அந்த போலீஸ்காரரைப் பற்றி வீடியோ பகிர்வுக்கு நன்றி.
  த.ம.10

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   நீக்கு
 18. உங்களுக்கு ஒரு பூங்கொத்து....பிடித்துக் கொள்ளுங்கள் சகோ
  மரக்கன்று - கிராமம்
  சாலை - போலீஸ்
  தன்னம்பிக்கை - கதை

  அனைத்திற்குமாக உங்களுக்கு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   நீக்கு
 19. அனைத்தும் சிறப்பாக இருந்தது. ராஜஸ்தான் பதிவு பிற மாநிலங்களிலும் அறிமுகப்படத்தப்படவேண்டியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 20. வணக்கம் சகோதரரே.!

  நல்ல செய்திகளுடன் ௬டிய தொகுப்பு...பெண்ணைப் போற்றும் விதமாய் நடந்து கொள்ளும் அந்த கிராமத்து மனிதர்களை,௬டவே இயற்கையை வளப்படுத்தும் அவர்களின் நல்ல மனதையும் வாழ்த்தி நாமும் போற்றுவோம்...

  முகப்புத்தக இற்றை, குறுஞ் செய்தி, காணொளி .அனைத்தும் அருமை...
  படித்ததில் பிடித்த தன்னம்பிக்கை கதையும் அருமை...

  மொத்தத்தில் பழக்கலவை மிகவும் இனிதாக இருந்தது.. வாழ்த்துக்கள்..

  தங்கள் மனைவிக்கு கையில் சுட்டு கொண்ட காயங்கள் தற்சமயம் நன்கு குணமாகி விட்டதா? சகோதரரே... சகோதரி பூரணமாக நலமடைய பிராத்திக்கிறேன்...(அன்று படித்ததும் கஸ்டமாக இருந்தது..கேட்க வேண்டுமென தோன்றியது...கேட்டு விட்டேன், தவறெனின் வருந்துகிறேன்..)

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனைவி நல்ம்....நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி....

   நீக்கு

 21. அன்பின் அருந்தகையீர்!
  வணக்கம்!

  இன்றைய...
  வலைச் சரத்திற்கு,

  தங்களது
  தகுதி வாய்ந்த பதிவு
  சிறப்பு செய்துள்ளது!

  வருக!
  வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
  கருத்தினை தருக!

  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ப்யணத்தில் இருந்த்ததால் நீங்கள் அறிமுகம் செய்ததை பார்க்க வில்லை நண்பரே. இன்றே பார்க்கிறேன்.

   தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு ஜி!

   நீக்கு
 22. அந்த கிராமத்தின் விழிப்புணர்வு மற்ற கிராமங்களுக்கும்பரவட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 23. Even in Himachal there is a village like this. They used to plant a tree at the time of birth of a girl baby. Your style of writing is really good. We are planning to go to Kumbakonam from Trichy. Will it be convenient if we get down in Trichy town station and take a bus from there?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருச்சி ஜங்ஷனில் இறங்கி, அங்கிருந்து வெரு அருகில் இருக்கும் மத்திய பேருந்து நிலையத்திற்குச் சென்றால் தஞ்சாவூர் வழியாக கும்பகோணம் செல்லும் நிறைய பேருந்துகள் கிடைக்கும். திருச்சி டவுன் ஸ்டேஷனில் இறங்குவது சரியல்ல...... மேலும் தகவல்கள் தேவையெனில் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் - venkatnagaraj@gmail.com

   தங்களது வருகைக்கும் மேலதிகத் தகவலுக்கும் மிக்க நன்றி சரஸ்வதி ரங்கநாதன் ஜி!.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....