திங்கள், 9 மார்ச், 2015

நெடுஞ்சாலை உணவகத்தில் ப்யாஜ் பராட்டாதேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 3

தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 1 2

 படம்: இணையத்திலிருந்து....

கர்னால் நகரின் பக்கத்தில் இருக்கும் ஒரு உணவகத்தில் ஓட்டுனர் ஜோதி வண்டியை நிறுத்திய பின் இயற்கை உபாதைகளை முடித்துக் கொண்டு உணவகத்திற்குள் சென்றோம். வண்டிக்குள் இருந்த வரை குளிர் அவ்வளவாகத் தெரியவில்லை.  நெடுஞ்சாலையில் வெட்ட வெளியில் இருந்த உணவகத்தின் அருகே அப்படி ஒரு குளிர்ந்த காற்று. பார்க்கும் மக்கள் அனைவருமே ஒரு பெரிய மூட்டைக்குள் இருப்பது போல இருக்கிறார்கள் – எங்களையும் சேர்த்து தான்.

 உணவகத்தின் நுழைவாயில்....

வெளியிலேயே நாற்காலிகளும் மேஜைகளும் போட்டு இருந்தாலும் கண்ணாடித் தடுப்புகள் அமைத்திருந்த உட்புறத்திற்குத் தான் அனைவரும் சென்று கொண்டிருந்தார்கள். வெளியில் அடிக்கும் குளிர்காற்றிலிருந்து தப்புவது தான் அனைவரின் குறிக்கோளாக இருந்தது.  நாங்கள் வந்திருந்த அதே சமயத்தில் பல வண்டிகள் வெளியே வந்திருந்தன. 

அங்கே பல உணவகங்கள் வரிசையாக இருக்கும். அதில் நாங்கள் தேர்ந்தெடுத்தது ZHILMIL DHABA எனும் உணவகம். சில வருடங்களுக்கு முன்னரே ஒரு பயணத்தில் அங்கே சாப்பிட்ட அனுபவம் உண்டு. கூடவே ஜோதியும் இங்கே சாப்பிடலாம் என்று பரிந்துரைக்க அந்த உணவகத்தினைத் தேர்ந்தெடுத்தோம். பெரும்பாலும் வட இந்தியாவில் காலை உணவாக பராட்டா தான் கிடைக்கும். இங்கேயும் அதே.

என்ன இருக்கு?என்ற கேள்வியே தேவையில்லை – இருந்தாலும் கடமைக்கு கேட்டு வைத்தோம். வரிசையாக “ஆலு பராட்டா, ப்யாஜ் பராட்டா, பனீர் பராட்டா, மூளி பராட்டா, கோபி பராட்டா, மேத்தி பராட்டாஎன்று அவர் அடுக்கிக்கொண்டே போக, சிலர் ஆலு பராட்டா, சிலருக்கு ப்யாஜ் பராட்டா, சிலர் பனீர் பராட்டா எனச் சொல்லி பணியாளியைக் குழப்பி விட்டோம்.  எல்லோரும் சொல்லச் சொல்ல அவர் தலை முடியைப் பிய்த்துக் கொள்ளாத குறை! 

 டம்ப்ளருக்குள் பச்சை மிளகாய்....  பராட்டா ஒரு வாய்... மிளகாய் ஒரு கடி! ஆஹா என்ன ருசி!

சரி எத்தனை எத்தனை பராட்டாக்கள், என்ன வகை என்று சொல்லிய பின்னும் அவர் கைவிரல்களால் எண்ணிய படியே சென்று கொண்டிருந்தார். அதற்குள் வேறொரு பணியாள் எங்கள் அனைவருக்கும் தட்டு, டம்ளர் போன்றவற்றையும் சிறிய கண்ணாடி டம்ளரில் போட்டு வைத்திருந்த பச்சை மிளகாய்களையும் கொண்டு வைத்தார்.  கூடவே ஒவ்வொரு தட்டிலும் ஒரு ஊறுகாய் Blister Pack, Butter Paper-ல் மடித்த வெண்ணை வைத்தார்.  கூடவே எலுமிச்சை பிழிந்த முள்ளங்கி, வெங்காயம், மேலே தூவிக்கொள்ள உப்பு, மிளகுத் தூள் என வைத்து விட்டுச் சென்றார்.

 நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது எடுத்த படம் - இவர் தௌ. தேவிலால்!

உள்ளே இருந்து பராட்டா வருவதற்குள் வெங்காயம், முள்ளங்கி எல்லாம் காலி ஆனது! சுடச் சுட பராட்டா வர வேண்டுமே! பிறகு பராட்டா வர, ஒவ்வொருவராய் அவரவர் கேட்ட பராட்டாவினை கொடுத்திருந்த வெண்ணையை அதன் மேல் தடவி, தயிர் மற்றும் ஊறுகாய் தொட்டுக்கொண்டு ஒரு கட்டு கட்டினோம்.  ஒரு சிலர் ஒரு பராட்டாவிலேயே வயிறு நிரம்பியதாய்ச் சொல்ல, என்னைப் போல சிலர் மட்டும் இன்னும் ஒரு பராட்டா சாப்பிட்டோம் – முதலில் சாப்பிட்டது ப்யாஜ் பராட்டா, இரண்டாவதாக பாதி ஆலு பராட்டா, பாதி பனீர் பராட்டா! இரவு வரை தாங்க வேண்டுமே! ஏனெனில் பராட்டா சாப்பிடும்போதே மணி 11.45!

 குளிர் தாங்கலை! Atleast ஒரு சாக்காவது குடுத்தாங்களே... என்று யோசிக்கும் பைரவர்..

இப்படியாக அவரவர்களுக்குத் தேவையானதை சாப்பிட்டு முடித்தபின் அனைவரின் ஏகோபித்த வாக்களிப்பில் அந்த உணவகத்திற்கு நல்ல பெயர். உணவும் பிடித்திருந்தது எனச் சொல்லி விட அடுத்தது என்ன என்று கேட்க, குளிருக்கு இதமாய் ஒரு தேநீர் என்பதே அனைவரின் குரலாகவும் இருந்தது! பொதுவாகவே ஹரியானாவில் பால் மிகவும் நன்றாக இருக்கும். நல்ல Thick-ஆன எருமைப் பால்! தண்ணீர் கலப்பது இல்லை. அதனால் தேநீரும் நன்றாக இருக்கும். அனைவரும் தேநீர் அருந்தி அங்கிருந்து புறப்பட்டோம்.

 தேக்கு மரங்கள்.....

இந்தப் பயணம் முழுவதும் என்னைக் கவர்ந்த விஷயம் பசுமையான வயல்வெளிகள் – பல இடங்களில் கடுகு, கரும்பு, கோதுமை எனப் பயிரிட்டு இருந்தார்கள். கூடவே பல வயல்களின் ஓரங்களில் தேக்கு மரங்கள். மரங்களை வைத்து விட்டு சில வருடங்கள் காத்திருந்தால் நல்ல சாகுபடி. பராமரிப்பு என பெரிதாய் ஒன்றுமில்லை.  சாலையில் பயணித்தபடியே பல இடங்களில் இப்படி தேக்கு மரங்களைப் பார்க்க முடிந்தது.

பொதுவாகவே ஹரியானா, பஞ்சாப் மாநிலத்தில் உள்ளவர்கள் நல்ல உழைப்பாளிகள். விவசாயம் தான் அவர்களுக்கு முக்கியத் தொழில். அந்த பச்சைப் பசேலெனெ இருக்கும் வயல்வெளிகளைப் பார்த்தபடியே எங்கள் பயணம் தொடர்ந்தது. அடுத்த பகுதியிலும் வழியில் சந்தித்த சில நிகழ்வுகளைப் பார்க்கலாம்! ஏனெனில் நாங்கள் ஹிமாச்சலப் பிரதேசம் போய்ச் சேர்ந்தது மாலை ஏழு மணி அளவில். கிட்டத்தட்ட 12 மணி நேரப் பயணத்தில் கிடைத்த அனுபவங்களை ஒரே பதிவாகச் சொல்லி விட்டால் என்னாவது! :)

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

52 கருத்துகள்:

 1. வெங்கட்நாகராஜ்! நீங்கள் ஒரு நவீன யுவான் சுவாங் . இந்தியாவில் எங்காவது பயணம் செய்யவேண்டுமென்றால் உங்கள் குறிப்புகளை படித்து விட்டு செல்லுதல் நலம்
  புகைப் படங்கள் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நவின யுவான் சுவான்... - ரொம்பப் புகழாதீங்க முரளிதரன். என்னை விட அதிகமாய் பயணம் செய்யும் இன்னும் பலர் உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 2. யாத்ரிகர்
  கேமரா கவிஞர் என்னும்
  பட்டங்கள் தங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும்
  என எண்ணுகின்றேன் ஐயா
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா இன்றைக்கு வரிசையா பட்டமளிப்பு விழா நடக்கிறதே..... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 3. பராட்டா எத்தனை வகைகள்...! பச்சை மிளகாய்... ஸ்... யம்மாடி...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பராட்டாவில் இன்னும் நிறைய வகைகள் உண்டு தனபாலன்......

   பச்சை மிளகாய் கடித்துக் கொண்டே ரொட்டி/பராட்டா சாப்பிடுவது இங்கே வழக்கம். எனக்கும் பழக்கமாகிவிட்டது!

   நீக்கு
 4. // சிறிய கண்ணாடி டம்ளரில் போட்டு வைத்திருந்த பச்சை மிளகாய்களையும் கொண்டு வைத்தார். கூடவே ஒவ்வொரு தட்டிலும் ஒரு ஊறுகாய் Blister Pack, Butter Paper-ல் மடித்த வெண்ணை வைத்தார். கூடவே எலுமிச்சை பிழிந்த முள்ளங்கி, வெங்காயம், மேலே தூவிக்கொள்ள உப்பு, மிளகுத் தூள் என வைத்து விட்டுச் சென்றார்.//

  படிக்கும்போதே சாப்பிடத்தூண்டுகிறது உங்கள் பதிவு. படித்து முடித்தவுடன், நானே சாப்பிட்டதுபோன்ற உணர்வு. பதிவை ருசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 5. குளிரில் பச்சைமிளகாய் சாப்பிடக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 6. வித்தியாசமான முறையில் சாப்பிடும் விதம் புதிதாக கேள்வி படுகிறேன். இப்டி ஒரு கலவையான உணவை சாப்பிட்டு பார்க்கணும் என தூண்டி விட்டது உங்களின் விவரிப்பு :-)

  பயணங்கள் தொடரட்டும் ... வாழ்த்துகள் வெங்கட் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கௌசல்யா ராஜ்.

   நீக்கு
 7. முள்ளங்கி பரோட்டாவும், தயிர்+ஊறுகாய் நல்ல காம்பினேஷன். இப்பவும் இங்கே அவ்வப்போது மனைவி தயாரித்துதர சாப்பிடுவது உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பொன்சந்தர்.

   நீக்கு
 8. கமென்டே போகலை போலிருக்கே! :))) அந்தப் பச்சை மிளகாயப் பல சமயங்களில் எலுமிச்சை, உப்புக் கலந்து ஊற வைத்து வதக்கியும் தருவாங்க. சில சமயங்களில் வெறும் பச்சை மிளகாயும் கிடைச்சுடும். :))) மஹாராஷ்டிராவில் பெரும்பாலும் எலுமிச்சையில் ஊற வைத்த பச்சை மிளகாயே வதக்கிக் கொடுப்பாங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்னாடி கமெண்ட் வரலையே....

   வதக்கி வச்ச பச்சை மிளகாயும் சில இடங்களில் கிடைக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 9. இன்னிக்குக் காலம்பர பராந்தா(பராட்டா) தான் பண்ணினேன். ஏற்கெனவே செய்முறையோடு படம் போட்டிருப்பதாலே படம் எடுக்கலை. இங்கேயும் பராட்டா பெயரைப் பார்த்துட்டு ஓடி வந்தால் ம்ஹூம் செய்முறை இல்லை! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்குத் தெரியாத செய்முறையா?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

   நீக்கு
 10. வடமாநிலங்களில் முதலில் வெங்காயம், காரட், முள்ளங்கி, பீட்ரூட் போன்றவற்றோடு உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைத் துண்டங்கள் வைச்சுடுவாங்க. நானெல்லாம் உப்பு, எலுமிச்சை சேர்க்காமலெயே அவற்றைப் பச்சையாகவே சாப்பிட்டுடுவேன். :)))) போன ஜன்மத்தில் ஆடாய் இருந்தேனோ என்னமோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போன ஜென்மத்தில் ஆடாய்.... :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 11. வணக்கம்
  ஐயா.
  முதலில் தங்களின் தேடலுக்கு பாராட்டுக்கள் ஒவ்வொன்றையும் நன்றாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 7
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 14. ஒரு முறை அம்ரித்சரில் ஒரு உணவகத்துக்கு என்னை என் பஞ்சாபி நண்பர் கூட்டிக்கொண்டு போனார். படாட்டாவுக்குப் பச்சை மிளகாய் கடிப்பதை அங்கு பார்த்திருக்கிறேன் நம் ஊரில் வயல் வெளிகளில் வேலை செய்பவர்கள் பழைய சோறும் பச்சை மிளகாயும் சாப்பிடக் கண்டிருக்கிறேன் பகிர்வுக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பராட்டாவுக்கு மட்டுமல்ல, சப்பாத்திக்கும் மிளகாய் கடிப்பதுண்டு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு
 15. வணக்கம் சகோதரரே.!

  பயணத்தில் தொடர்ந்தேன். பரோட்டாவுக்கு பச்சை மிளகாயா.? தென் தமிழகத்தில் பழைய சாதத்திற்கு பச்சை மிளகாய் என கேள்விபட்டிருக்கிறேன்.( சாப்பிட்டதில்லை).எப்படியோ !
  குளிருக்கு காரம் நன்றாக இருக்குமென நினைக்கிறேன்.

  பயணங்களில், கண்ணுக்கு குளுமையாக, பசுமையான வயல்வெளிகளை பார்த்துக் கொண்டே பயணிப்பது சுகமானது. படங்கள் அருமை..இனியும் பயணத்துடன் பயணிக்கிறோம்.. நன்றி..

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 16. நல்ல அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே,,,
  தமிழ் மணம் 10

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 17. ஏவ்வ்வ்வவ் ,எனக்கும் சாப்பிட்ட திருப்தி :)
  த ம 11

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு

 18. (நான் இன்று மதியம் அனுப்பிய இந்த கருத்துரை என்ன ஆனது என்று தெரியவில்லை)

  காரம் மணம் குணத்தோடு காலையிலேயே சுடச்சுட புரோட்டா (பராட்டா} சாப்பிட்டு ருசித்து இருக்கிறீர்கள். எனக்கு ஹிந்தி தெரியாது. ஹோட்டல்களில் அடிக்கடி சாப்பிடுவதால் ஆலு (உருளைக்கிழங்கு) புரோட்டா, பனீர் புரோட்டா, கோபி (காலி பிளவர்) புரோட்டா – ஆகிவை என்னவென்று புரிகிறது.

  கண்ணாடியில் உள்ள பச்சை மிளகாய்களைப் பார்த்தால் ப்யாஜ் புரோட்டா என்பது பச்சை மிளகாய் புரோட்டாவா? இன்னும் மூளி பராட்டா, மேத்தி பராட்டா என்றால் எதனைச் சேர்த்து தருகிறார்கள் என்று தெரியவில்லை. சொன்னால் பின்னாளில் எனக்கு உதவியாக இருக்கும்.
  த.ம.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதியம் அனுப்பிய கருத்து - வரவில்லையே....

   கோபி - பத்தா கோபி என்பது முட்டைக் கோஸ். ஃபூல் கோபி - காலி ஃப்ளவர். ப்யாஜ் - வெங்காயம். மூளி - முள்ளங்கி. மேத்தி - வெந்தயக்கீரை. இப்படி பல வகைகளில் பராட்டா/பராந்தா கிடைக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   நீக்கு
 19. பதில்கள்
  1. மூளி[லி - முள்ளங்கி.... முள்ளங்கி சேர்த்து செய்வது தான் மூளி பராட்டா. செய்முறை வேண்டுமெனில் இங்கே இருக்கிறது..... http://venkatnagaraj.blogspot.com/2009/11/blog-post_23.html

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   நீக்கு
 20. படங்கள் அருமை அண்ணா....
  தொடருங்கள்... தொடர்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 21. இனிய பயணங்கள்...இடையே பரோட்டாவகைகள்....பசுமையாய் வயல் வெளிகள்....தேக்கு மரங்கள்...பைரவர்க்கு சாக்கு போர்வை....நாங்களும் உடன் பயணிக்கிறோம்...சகோ...
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   நீக்கு
 22. பராட்டாக்களைப் பற்றி கூடவே வித விதமான பயண அனுபவங்களைப் பகிரும் உங்களை பாராட்டாமல் இருக்க முடியுமா என்ன!!! பயணம்/ பயணக் கட்டுரைகள் என்றாலே வெங்கட்ஜி தான் நினைவுக்கு வருகிறார்.... பயணங்கள் கற்றுத் தரும் அனுபவப் பாடங்கள்தான் எத்தனை எத்தனை....எங்களுக்கும் பயணங்கள் இருந்தாலும்...உங்களைப் போன்று சுவை பட எழுத வருமா என்று தெரியவில்லை....என்றாலும் பலருக்கும் உபயோகமாக இருக்குமே என்ற ரீதியில் எழுத நினைப்பதுண்டு....நினைவில் இருப்பதையாவது.....பார்ப்போம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களும் உங்களது பயண அனுபவங்களை எழுதுங்கள்.....

   என்னை விட சிறப்பாக நீங்கள் எழுதுவீர்கள் என எனக்கு நம்பிக்கை உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 23. சுவையாக செல்கிறது பயணத்தொடர்! எங்கு தொடரும் போட வேண்டும் என்று சரியாகவே முடிவெடுக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 24. ஒரே பதிவாகச் சொல்லி விட்டால் என்னாவது! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிமாச்சலப் பிரதேச பயணம் பற்றிய அனைத்து பதிவுகளையும் படித்தமைக்கு நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

   நீக்கு
 25. டம்ளர் பச்சை மிளகாய் அங்கேயே இருக்கட்டும். எனக்குக்காரம் ஆகாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... காரம் - இந்த மிளகாய்கள் அதிக காரம் இருப்பதில்லை. நிறைய விதைகளோடு, டைட்டாக இருக்கும் மிளகாய்கள் காரம் அதிகம் இருக்கும். பார்த்து தான் சாப்பிட வேண்டும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 26. பாவம் செல்லம். சாக்கு கிடைச்சதே..... அதிகம்தான். உள்ளே கொண்டுபோய் வச்சுருக்கலாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்க்கும்போதே பாவமா இருந்தது. இதுல கட்டி வேற போட்டுட்டாங்க....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....