எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, March 30, 2015

சுடச்சுட வெல்லமும் கின்னு ஜூஸும்தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 4

தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 1 2 3

இரண்டு வாரங்களுக்குப் பிறகு இத்தொடரினை பகிர்வதால், சென்ற பகுதியின் கடைசி வரிகள் இங்கே..


பொதுவாகவே ஹரியானா, பஞ்சாப் மாநிலத்தில் உள்ளவர்கள் நல்ல உழைப்பாளிகள். விவசாயம் தான் அவர்களுக்கு முக்கியத் தொழில். அந்த பச்சைப் பசேலெனெ இருக்கும் வயல்வெளிகளைப் பார்த்தபடியே எங்கள் பயணம் தொடர்ந்தது. அடுத்த பகுதியிலும் வழியில் சந்தித்த சில நிகழ்வுகளைப் பார்க்கலாம்! ஏனெனில் நாங்கள் ஹிமாச்சலப் பிரதேசம் போய்ச் சேர்ந்தது மாலை ஏழு மணி அளவில். கிட்டத்தட்ட 12 மணி நேரப் பயணத்தில் கிடைத்த அனுபவங்களை ஒரே பதிவாகச் சொல்லி விட்டால் என்னாவது! :)


 வெல்லம் காய்ச்சும் பணியில் ஒரு விவசாயி

எங்கள் பயணம் தொடர்ந்தது..... சென்ற பகுதியில் சொன்ன மாதிரி வயல்வெளி எங்கும் பச்சைப்பசேல்....  ஆங்காங்கே சில வயல்களில் கரும்பு சாகுபடி முடிந்து அவ்விடத்திலேயே வெல்லம் காய்ச்சி விற்றுக் கொண்டிருந்தார்கள். இரண்டு மூன்று இடங்களில் இப்படிச் சுடச்சுடக் காய்ச்சிய புதிய வெல்லம் பார்த்த பிறகு சாப்பிடாவிட்டால் என்னாவது!  ஓட்டுனர் ஜோதியிடம் வெல்லம் காய்ச்சும் அடுத்த இடம் கண்டவுடன் வண்டியை நிறுத்தச் சொன்னோம். அவருக்கும் வெல்லம் சாப்பிட ஆசை இருந்தது போலும் – நீங்கள் சொல்லத் தான் நானும் காத்திருந்தேன் என்று சொன்னபடி அடுத்த வெல்லம் காய்ச்சும் இடத்தில் வண்டியை நிறுத்தினார்.

 இப்படித்தான் வெல்லம் காய்ச்சணும்!

அப்போது தான் சுடச்சுட வெல்லம் காய்ச்சி ஒரு பெரிய மரத் தாம்பாளத்தில் கொட்டி துண்டு போட்டுக் கொண்டிருந்தார் ஒருவர். அதற்கு முன்னர் காய்ச்சிய வெல்லமும் – அங்கே கூடையில் இருந்தது. கொஞ்சம் எடுத்துச் சாப்பிட்டுப் பார்த்து அதற்குப் பின்னர் தேவையான அளவு வாங்கிக் கொள்ளலாம். நாங்களோ பதினைந்து [ஓட்டுனர் ஜோதியையும் சேர்த்து!] – அனைவரும் கொஞ்சம் கொஞ்சம் ருசித்தாலே ஒரு கிலோ அளவுக்கு வருமே!

 காய்ச்சிய வெல்லம் கொட்ட பயன்படும் பெரிய தாம்பாளம்


பேரம் பேசிய மூதாட்டி!
 

கொஞ்சமாக எடுத்து அனைவரும் பகிர்ந்து ருசித்தோம்.  இப்போது தான் பயணம் தொடங்கி இருப்பதால், அப்போதைக்கு சாப்பிட மட்டும் ஒரு கிலோ வெல்லம் வாங்கிக் கொண்டோம். தில்லி திரும்பும் போதும் இதே வழி தான் என்பதால் வரும்போது எல்லோருடைய வீட்டிற்கும் தேவையான வெல்லம் வாங்க முடிவு செய்தோம். கிலோ 60 ரூபாய் சொல்ல, அங்கே ஒரு மூதாட்டி பேரம் பேசிக் கொண்டிருந்தார் – எல்லாம் அம்பது ரூபாய்க்கு தரலாம்! எத்தனை வருஷமா வெல்லம் வாங்கறேன், எனக்குத் தெரியாதா?என்று கேள்வி :)

 கொட்டி வைத்திருக்கும் கின்னு!

இப்படித்தான் ஜூஸ் பிழியணும் தெரிஞ்சுக்கோங்க!


 ஜூஸ் எடு... கொண்டாடு.....

வெல்லம் வாங்கி ருசித்தபடியே அங்கிருந்து பயணித்தோம். சற்று தொலைவு சென்ற பிறகு பார்த்தால் நெடுஞ்சாலையின் ஓரத்தில் பல இடங்களில் கின்னு [ஆரஞ்சு போலவே இருக்கும்] பழங்களை கொட்டி வைத்து அங்கேயே அதன் சாறு பிழிந்து விற்றுக் கொண்டிருந்தார்கள்.  பதினோரு மணி அளவில் காலை உணவு சாப்பிட்டது – அதன் பிறகு வெல்லம் – இப்போது ஜூஸ். பார்த்தவுடன் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தினோம். பழங்களை எடுத்து தோல் உரித்து ஜூஸ் போட்டு காலா நமக் [கருப்பு உப்பு] போட்டு கலந்து கொடுத்தார் ஒரு இளைஞர். பெரிய டம்ளரில் ஜூஸ் விலை 20 மட்டும்! அதையும் குடித்து விட்டு எங்கள் பயணம் தொடர்ந்தது.

 குருத்வாராவிற்கு ட்ராக்டரில் பயணிக்கும் காட்சி!

இப்படியே சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் என்னாவது! ஆனாலும் உணவு எங்களை விடுவதாய் இல்லை! நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது வரும் ஒரு ஊர் ஆனந்த்பூர் சாஹேப் – அங்கே சின்னச் சின்னதாய் நிறைய குருத்வாராக்கள் உண்டு. முக்கியமான குருத்வாரா ஆனந்த்பூர் சாஹேப் எனும் பெயரிலேயே இருக்கிறது.  நாங்கள் சென்ற சமயத்தில் சீக்கிய குருக்களில் ஒருவரின் பிறந்த நாள் என்பதால் பஞ்சாபின் பல பகுதிகளிலிருந்தும் சீக்கியர்களும், மற்ற பஞ்சாபிகளும் ஆனந்த்பூர் சாஹேப் குருத்வாராவிற்கு தங்களது ட்ராக்டர்களில் செல்வது வழக்கம். 

 ஆனந்த்பூர் சாஹேப்-இல் உள்ள ஒரு குருத்வாரா - நெடுஞ்சாலையிலிருந்து எடுத்த படம்!

அப்படிச் செல்லும் அனைவருக்கும், மற்ற பயணிகளுக்கும் நெடுஞ்சாலை எங்கும் சீக்கியர்கள் சுத்தமான உணவு சமைத்து வருவோர் போவோர் எல்லோருக்கும் வழங்கிக் கொண்டிருந்தார்கள்.  சாலையில் வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி கொஞ்சமாவது சாப்பிட்டுச் செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார்கள்.


 மும்மரமாய் நடக்கும் உணவு விநியோகம்

அனைவரிடமும் பணிவாக மறுத்தாலும் சிலர் விடுவதில்லை – தேநீரும் பிரட் பக்கோடாவுமாவது எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் எனச் சொல்ல ஒரு இடத்தில் தேநீரும் பிரட் பக்கோடாவும் சாப்பிட்டோம். இப்படியாக பயணம் முழுவதிலும் விதம் விதமாய் சாப்பிட்டு, இனிமையான அனுபவங்கள் பலவற்றுடன் நாங்கள் செல்ல வேண்டிய இடத்தினைச் சென்றடைந்தோம்.

அங்கே கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாமா?

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

46 comments:

 1. விடயங்கள் அனைத்தும் அருமை அடுத்த பதிவினை காண ஆவலுடன் இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 2. சீக்கியர்கள் உணவை இலவசமாகவா வழங்குகிறார்கள்?

  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு குருவின் பிறந்த நாள் விழா சமயத்திலும், குருத்வாராக்களில் தினம் தினமும் லங்கர் என்ற பெயரில் இலவசமாக உணவு வழங்குவது சீக்கியர்களின் வழக்கம் தான் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 3. நானும் தங்கக் கோவிலில் லங்கர் சாப்பிட்டதை நினைவு படுத்தியது உங்கள் பதிவு :)

  ReplyDelete
  Replies
  1. இப்பகிர்வு உங்கள் நினைவுகளை மீட்டெடுத்ததில் மகிழ்ச்சி பகவான் ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 4. வெல்லமாக இனிக்கும் இந்தப் பதிவுக்குப் பாராட்டுக்கள், ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 5. இனிய பயணம் தொடர்கிறேன் சகோ...தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   Delete
 6. காய்ச்சிய வெல்லத்தைக் காட்டுவீங்கன்னு பாத்தா காலி மரத்தட்டைக் காட்டிட்டீங்களே? :) சீக்கிரம் தொடருங்க வெங்கட் ஜி...நாங்களும் தொடர்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. காய்ச்சிய வெல்லம் தானே.... உங்களுக்கு இல்லாததா? திரும்பி வரும்போது வாங்கிய வெல்லம், அப்போது எடுத்த படங்களை அது பற்றி எழுதும்போது வெளியிட்டு விடுகிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி.

   Delete
 7. பயணம் நல்லபடியாக நடந்துருக்கு என்பதில் மகிழ்ச்சி.

  நம்ம வத்தலகுண்டு வாழ்க்கையில் ஒரு வருசம்(மட்டும்) கரும்புத்தோட்டம் ஒன்னு குத்தகைக்கு எடுத்து வெல்லம் காய்ச்சும் சமயம் அங்கே போய் வெளுத்துக் கட்டுனது நினைவுக்கு வந்துருச்சு:-)

  குருத்வாராக்களில் இளைஞர்களின் பணி அபாரம்!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.... உங்கள் நினைவுகளை மீட்டெடுத்ததில் மகிழ்ச்சி டீச்சர்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 8. மறக்க முடியாத இனிய(இனிப்பான) பயணம்தான் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 10. அடுத்தமுறை இமயமலைச் செல்லும்போது தங்களைப் பார்த்துவிட்டுச் செல்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.... வரும்போது சொல்லுங்கள்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 11. தங்களது படிக்கும்போது 1967 ஆம் ஆண்டு ஆனந்த்பூர் சாகேப் குருத்வாராவிற்கு சென்றது நினைவுக்கு வருகிறாக்டு. சீக்கியர்கள் கடும் உழைப்பாளிகள், பக்திமான்கள் என்பது நேரில் பார்த்தால் தான் தெரியும். தங்களோடு பயணிக்கிறேன்! தொடர்க.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். அவர்கள் மிகச் சிறந்த உழைப்பாளிகள்...... உங்களுடைய 1967-ஆம் ஆண்டு பயணத்தினை எனது பகிர்வு நினைவூட்டியதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 12. வணக்கம்
  ஐயா
  பயணஅனுபவம் பற்றி சொல்லிய விதம் நன்றாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள் த.ம7
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 13. இனிப்பான அதே சமயம் திகட்டாத பயணம். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 14. கரும்பு வெல்லம் தொடங்கி - ஆரஞ்சு பழச்சாறு - குருத்வாராவில் சீக்கிய அன்பர்களின் கனிவான உபசாரம் - அனைத்தும் சுவையோ சுவை!.. வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.....

   Delete
 15. ரா. ஈ. பத்மநாபன்March 31, 2015 at 5:36 PM

  அருமை! அருமை! ஆனாலும் காலி வெல்லத் தட்டைக் காட்டி ஏமாத்திப்புட்டீங்களே !

  //இப்படியாக பயணம் முழுவதிலும் விதம் விதமாய் சாப்பிட்டு, இனிமையான அனுபவங்கள் பலவற்றுடன் நாங்கள் செல்ல வேண்டிய இடத்தினைச் சென்றடைந்தோம்.//

  முதலில் எந்த இடத்திற்கு சென்றீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆங்! அங்கதானே!

  ReplyDelete
  Replies
  1. வெல்லம் கொட்டி வைத்திருந்த தட்டும் பிறகு வெளியிடுகிறேன் அண்ணாச்சி.

   நேராக சிந்த்பூர்ணி தான் - வேறெங்கும் செல்ல வில்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 16. படங்களும் பதிவும் மிக அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 17. வெங்கட் நாகராஜ்! என்னையும் கூப்பிட்டிருக்கக் கூடாதோ? அழகான படங்கள்... சுவையான விவரணை!

  ReplyDelete
  Replies
  1. உங்களையும் அழைத்துக் கொண்டு சென்றால் போயிற்று..... எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி!

   Delete
 18. நல்ல பயணம். வயிற்றுக்கு இப்படி ஓய்வில்லாமல் வேலை கொடுத்தால் அது மக்கர் பண்ணுமே?

  ReplyDelete
  Replies
  1. அளவாக சாப்பிட்டால் ஒன்றும் பிரச்சனை இல்லை ஐயா.!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 19. சுவையான, இனிப்பான, அனுபவிக்க வேண்டிய பயணம் வெங்கட் ஜி! ரயில் பயணங்கள் ஒரு வகையான சுகம் என்றால் சாலைப் பயணங்கள் தரும் அனுபவம் மிகவும் வித்தியாசமானது நீங்கள் சொல்லி இருப்பது போல் அந்தந்த ஊர்களின், அந்தந்த சீசனுக்கு ஏற்றபடி உணவும், அங்கு விளையும் பயிர்களையும் சாப்பிட்டும், வாங்கியும் (சற்றுக் குறைவான விலையில்) அனுபவிக்கலாம் தான். நீங்கள் விவரித்திருப்பது அருமை....செல்லத் தூண்டும் அளவிற்கு....மிகவும் ரசித்தோம் சுடச் சுட வெல்லத்தையும்....கின்னையும்....(வடக்கில் ஜூஸில் காலா நமக் போட்டுத் தருவது வழக்கமாகத்தான் இருக்கின்றது பெரும்பாலான ஜீஸ்களில்....)

  படங்களும் அழகு!

  ReplyDelete
  Replies
  1. ஜூஸ் மட்டுமல்ல, அனைத்திலும் காலா நமக்! - வாழைப்பழத்தினை நீளவாக்கில் நான்கு துண்டாக்கி நடுவில் காலா நமக் வைத்து தருவது இங்கே வழக்கம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 20. இனிய பயணம்இனிப்பான பயண்ம்
  நன்றி ஐயா
  தம 10

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 21. வெல்லமுமும் பழச்சாறும் பார்க்கும் போதே சாப்பிடத் தூண்டுகிறது! அருமையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 22. வெல்லமும் , பழச்சாறும் சேர்த்து இனிமையான பயணக்கட்டுரையை வழங்கியமைக்கு நன்றி! தொடருங்கள் நண்பரே! சில மாதங்களாக வலைப்பக்கம் வர இயலவில்லை. இன்றுதான் வருகிறேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. முடிந்தபோது வலைப்பக்கம் வாருங்கள். வலைப்பூ ஒரு பொழுது போக்கு தானே தவிர அது முதன்மையானதோ, முக்கியமானதோ அல்ல....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 23. அங்கே கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை அடுத்த பகுதியில்

  ReplyDelete
  Replies
  1. ஹிமாச்சலப் பிரதேச பயணம் பற்றிய அனைத்து பதிவுகளையும் படித்தமைக்கு வேதா. இலங்காதிலகம் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....