வியாழன், 2 ஏப்ரல், 2015

சிந்த்பூர்ணியில் கவலைகளை மறப்போம்...தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 5

தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 1 2 3 4

 படம்: கூகிளாண்டவர் உபயம்....

இப்படியாக வழியெங்கும் உணவு வகைகளை ருசித்தபடியும், பயணத்தினை சுகமான முறையில் தொடர்ந்தும் நாங்கள் தில்லியிலிருந்து ஹிமாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் சிந்த்பூர்ணி எனும் இடத்திற்கு மாலையில் வந்து சேர்ந்தோம். எங்கள் அலுவலக நண்பரின் உறவினர் ஹிமாச்சலத்தில் இருப்பதால் அவர் மூலமாகத் தான் நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தோம். அன்று மதியத்திலிருந்தே அவர் அலைபேசியில் அழைத்து எப்போது வருவீர்கள் என விசாரிக்க ஆரம்பித்து விட்டார்.


 மாலை நேர நடை உடலுக்கு நல்லது என்று சொல்லாமல் சொல்கிறாரோ இவர்.... - நெடுஞ்சாலையில் நடை பழகும் பெரியவர்.


காய்ந்த சருகுகளுடன் தேக்கு மரங்கள் - நெடுஞ்சாலைக் காட்சி......


நெடுஞ்சாலையில் சிறிய லாரிக்குள் அடைக்கப்பட்டு பயணிக்கும் எருமைகள் - இப்படிச் செய்தவர்களுக்கும் இதே ஏற்பாடு செய்தால் நல்லது! - மற்றுமொரு நெடுஞ்சாலைக் காட்சி...
 
எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த தங்குமிடம் பற்றிய விவரங்களைத் தந்ததோடு சிந்த்பூர்ணியில் இருக்கும் ஒருவரிடம் எங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும்படியும் பணித்திருந்தார். நாங்கள் அனைவரும் சிந்த்பூர்ணி பேருந்து நிலையம் அருகிலேயே இருக்கும் தங்குமிடத்தில் உடைமைகளை வைத்துவிட்டு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கோவிலுக்கு எங்கள் வாகனத்திலேயே பயணித்தோம்.

 விறகு சுமக்கும் பெண்மணி - அவரின் உடையைப் பிடித்தபடி செல்லும் சிறுமி.... - நெடுஞ்சாலைக் காட்சி.

பொதுவாக பேருந்து நிலையத்திற்கு மேல் தனியார் வாகனங்களை அனுமதிப்பதில்லை. ஆனாலும் எங்களுக்கான உதவி செய்ய வந்திருந்த நபர் எங்கள் வாகனத்தினை கோவில் வரை கொண்டு செல்ல உதவினார். பாதை சற்றே குறுகலானது மட்டுமல்லாது இரண்டு புறமும் கடைகள் நிறைய இருப்பதால் மெதுவாகத்தான் செல்ல வேண்டும். சற்றே மேட்டுப்பாங்கான சாலையும் கூட.  கோவிலின் அருகே இறங்கிக் கொண்டோம்.

 பூஜைக்குத் தயாராகும் தங்குமிட உரிமையாளர்

இக்கோவில் இருக்கும் இடம் சற்றே வித்தியாசமானது.  கீழ்ப்புறம் இருக்கும் சாலையில் நிறைய கடைகள் பூஜைக்குத் தேவையான பொருட்களை விற்பனை செய்கிறார்கள். கோவிலுக்குச் செல்லும் பாதை மேலே உள்ள சாலையில் இருக்கிறது. என்றாலும் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு அக்கடையில் இருக்கும் படிக்கட்டுகள் வழியே மேலே சென்றால் நீங்கள் மேலுள்ள சாலைக்கும்/கோவில் பாதைக்கும் சென்று விடலாம்! இப்படிப்பட்ட வசதியை நான் எங்கும் பார்த்த நினைவில்லை.


 கோவிலுக்குச் செல்லும் பாதையில் பார்த்த சிறுமி - வருங்காலத்தில் நீதிபதியாக வருவாரோ?

அப்படி ஒரு கடைக்குச் சென்று அங்கே காலணிகளை கழற்றி வைத்து விட்டு, பூஜைப் பொருட்களை வாங்கிக் கொண்டோம் – 10 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் வரை வசதிக்குத் தகுந்தவாறு வாங்கிக் கொள்ளலாம் – விதம் விதமாய் தட்டுகளில் பூஜைப் பொருட்களை வைத்திருக்கிறார்கள்.  கட்டாயம் அதில் ஒரு இனிப்பு – ரவா ஹல்வா, பாயசம் [(kh)கீர்], லட்டு, பர்ஃபி என ஏதாவது ஒரு இனிப்பு உண்டு.  இப்படி வைத்துக் கொடுப்பதை எடுத்துக் கொண்டு படிகளின் வழியே மேலே சென்றோம்.

சின்னமஸ்திகா தேவி - படம் இணையத்திலிருந்து....

பாதுகாப்பு சோதனைகளை முடித்துக் கொண்டு கோவிலுக்கான பாதையில் முன்னேறினோம். சாதாரணமாக இக்கோவிலில் நவராத்திரி சமயங்களில் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். நாங்கள் சென்ற சமயத்தில் அப்படி திருவிழாக்கள் இல்லாத காரணத்தினால் அத்தனை கூட்டமில்லை. மிகச் சுலபமாக தேவியை தரிசிக்க முடிந்தது. நின்று நிதானித்து அன்னையின் சரண் பற்றினோம். இக்கோவிலில் இருக்கும் தேவியின் பெயர் சின்னமஸ்திகா தேவி.

சிந்த்பூர்ணி கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்று. சக்தி பீடங்கள் பற்றிய கதை உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். சதி தேவியின் உடல் 51 பகுதிகளாக பிரிந்து 51 இடங்களில் விழ, அவ்விடங்களில் சக்தி பீடங்களாக தேவிக்கு கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மா சிந்த்பூர்ணி அப்படி ஒரு சக்தி பீடம் – தேவியின் நெற்றி/தலைப் பகுதி விழுந்த இடம் என்று சொல்கிறார்கள். அதனால் இங்கே இருக்கும் தேவிக்கு தலை கிடையாது. அலங்காரம் தான்.

தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் சிந்தையில் இருக்கும் அனைத்து கவலைகளையும் போக்க வல்லவள் என்றும், அவளைச் சரணடைந்தால் போதும் என்றும் நம்புகிறார்கள்.  உலகியல் கவலைகளை மறந்து விட இத்தலம் சிறப்பானது என்றும், எல்லா கவலைகளையும் அன்னையிடம் விட்டு கவலையில்லாத மனிதனாக வாழ இதை விட வேறு வாய்ப்பில்லை என்றும் நம்புகிறார்கள்.  இக்கோவில் பற்றிய வேறு சில வரலாறும் உண்டு. அதைப் பற்றியும் வேறு சில அனுபவங்கள் பற்றியும் அடுத்த பகுதியில் பார்க்கலாமா?


குளிர் காலமாயிற்றே - கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த வண்ண வண்ண ரஜாய்கள்....


குரங்கு குல்லாய்கள்.....

 வீட்டிற்குள் அணிந்து கொள்ள செருப்புகள்....

இப்பகுதியினை முடிக்குமுன்னர், கோவில் இருக்கும் இடம் பற்றியும் சொல்லி விடுகிறேன்.  ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஊனா [UNA] மாவட்டத்தில் இருக்கிறது இந்த சிந்த்பூர்ணி. சோலா சிங்கி மலைத் தொகுப்பில் இருக்கிறது இவ்விடம். கோவில் காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். பொதுவாகவே இங்கே மிதமான வெட்பநிலை தான்.  வருடம் முழுவதுமே இங்கே சென்று தரிசனம் செய்ய முடியும் என்பதும் ஒரு வசதி.

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

40 கருத்துகள்:

 1. உங்கள் பயண அனுபவங்கள் எந்தவித frill உம் சேர்க்காமல் அனாயாசமாகச் சொல்லப் படுகிறது. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 2. வண்ணப்படங்களும் பகிர்வும் மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. வணக்கம்
  ஐயா.
  பயண அனுபவம் பற்றிய பதிவு நன்றாக உள்ளது நாங்களும் பயணித்த ஒரு உணர்வுதான்... பகிர்வுக்கு நன்றி த.ம3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 4. கோவில் பற்றிய தகவல்கள், படங்கள் அனைத்தும் மிக அருமை. கோவில் பற்றி மேலும் அறிய
  அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   நீக்கு
 5. சிறப்பான தகவல்களுடனும் படங்களுடனும் பயணப்பகிர்வு வழக்கம்போல சிறப்பு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 7. இந்தியாவில் பல இடங்களின் பெயர்கள் உங்களால்தான் அறிந்தேன், பயணக் கட்டுரைகளுக்கு தனி டேப் இணைத்து விடுங்கள்,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு சில பயணக் கட்டுரைகளுக்கு Drop Down Menu இருக்கிறது......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 8. நல்ல விளக்கவுரைகளோடு புகைப்படங்கள் அருமை தொடர்கிறேன்..
  தமிழ் மணம் 6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 9. மிகவும் இனிமையான விறுவிறுப்பான பயணக்கட்டுரை. இடைஇடையே எடுத்துள்ள படங்களும் அதற்கான விளக்கங்களும் மிக அருமை. தொடரட்டும்.......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 10. தங்குதடையற்ற வார்த்தைப் பயணம், தங்களின் பயணக் காட்சிகளுக்கு மெருகேற்றுகிறது ஐயா
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா....

   நீக்கு
 11. பதிவுலகில் நீங்கள் ஒரு மோடி வெங்க்ட்....அவரி போல அதிகப் பயணம் செய்தவர் நீங்கள்தான் ஹீஹீ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவுலக மோடி! :))))) என்னமா கலாய்க்கறீங்க!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 12. சிந்த்பூர்ணியில் கவலைகளை மறந்தோம். தொடர்ந்து அடுத்த பதிவில் வரலாற்றைக் கேட்க ஆவலாக இருக்கிறோம். வழக்கம்போல் பதிவுகளுக்கேற்ற புகைப்படங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா....

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 14. அருமையான அனுபவம் ! தங்கள் விவரணம் அதை விட! புகைப்படங்கள் அழகு! அதுவும் அந்தக் குழந்தை படம் மிக மிக அழகு! தொடர்கின்றோம்! அடுத்த பகுதிக்கு,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 15. நெடுஞ்சாலைக் காட்சிகள் கவர்கிறது. அதிலும் குழந்தை படம் பளிச் & அழகு !
  வரலாற்றுடன் வாங்க, காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   நீக்கு

 16. வழக்கம்போல் பயண அனுபவத்தை சுவைபட சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 17. காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிமாச்சலப் பிரதேச பயணம் பற்றிய அனைத்து பதிவுகளையும் படித்தமைக்கு வேதா. இலங்காதிலகம் ஜி!

   நீக்கு
 18. சின்னமஸ்தா தேவியா? இப்போத் தான் குபேரவனக்காவலில் சிதம்பரம் அருகிலிருக்கும் சின்னமஸ்தா கோயில் பத்திப் படிச்சேன். வடக்கே தான் சின்னமஸ்தா ரொம்பப்பிரபலம்னு நினைக்கிறேன். சின்னமஸ்தா பத்தி நான் எழுதி இருக்கேன். தலை இல்லாமல் இருக்கும் காரணம் பற்றி அதில் தெரிந்து கொள்ளலாம். சக்தி உபாசகர்கள் இன்னும் விரிவாக சின்னமஸ்தா பற்றி அறிந்திருப்பார்கள். சாதாரணமாக இவள் சக்தியைக் குறித்து விளக்கிச் சொல்ல மாட்டார்கள். யோகம், தாந்திரிகம் அறிந்தவருக்கே புரியும் என்பார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் மேலதிகத் தகவல்களுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 19. http://sivamgss.blogspot.in/2006/10/blog-post.html

  இங்கே பார்க்கலாம் சின்னமஸ்தா தேவியைப் பற்றி.

  பதிலளிநீக்கு
 20. எப்படி படிக்காமல் விட்டேன்னு தெரியலையே.... இத்தனைக்கும் 2015 ஏப்ரலில் இங்கேதானே இருந்தேன். பயணம் ஒன்னும் போகலையே....

  மூன்று சுட்டிகளுக்கும் நன்றி.

  தேவ் பூமி ஹிமாச்சல் இப்போ ஆரம்பிக்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... உங்க பக்கத்துல ஒரு விளம்பரம் போட்டதும் நல்லதாச்சு! :) தொடர்ந்து தொடரின் பகுதிகளைப் படிக்க வந்துட்டீங்களே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....