செவ்வாய், 28 ஏப்ரல், 2015

சாப்பிட வாங்க: குரங்கு அரிசியும் யோங்க்சா சட்னியும்!யோங்க்சா இரோம்பா
படம்: இணையத்திலிருந்து....

தலைப்பைப் பார்த்தே ஓட்டமா ஓட நினைக்கும் நண்பர்களுக்கு..... 

பயப்படாதீங்க! அது என்ன குரங்கு அரிசி! என நீங்கள் தெரிந்து கொள்வது எப்போது? தைரியமா உள்ளே வாங்க! பதிவினைப் படித்து புதுசா ஒரு விஷயத்தைத் தெரிஞ்சுக்கோங்க! சரியா!

சமீபத்திய வட கிழக்கு மாநிலப் பயணத்தின் போது நாங்கள் முதன் முதலில் சென்ற இடமான மணிப்பூர் தலைநகரான இம்ஃபால் நகரத்தில் எங்கு பார்த்தாலும் ஒரு காய்கறி குமித்து வைத்திருந்தார்கள். அதை வைத்து என்ன செய்வார்கள் என எங்கள் ஓட்டுனரிடம் கேட்க அவர் சொன்னது தான் இந்த குரங்கு அரிசியும் யோங்க்சா சட்னியும்!யோங்க்சா ஷிங்க்ஜூ
படம்: இணையத்திலிருந்து....


இந்த யோங்க்சாக் என்பது பீன்ஸ் வகைகளில் ஒன்று.  இது பெரிய மரத்தில் பட்டை பட்டையாகக் காய்த்துத் தொங்குகிறது. ஒவ்வொன்றும் முழ நீளம் இருக்கிறது! இந்த யோங்க்சாக்-கை அனைத்து மணிப்பூர் வாசிகளும் தினம் தினம் சாப்பிடுவார்கள் போலும் – எங்கே பார்த்தாலும் இந்தக் காய்களை கொத்துக் கொத்தாக வைத்து விற்பனை செய்கிறார்கள். அதை இப்பகுதிப் பெண்கள் ரொம்பவும் கவனித்து வாங்குகிறார்கள் – காரணம் அதில் புழுக்கள் இருக்கலாம்! புழுக்கள் இல்லாது வாங்குவதில் தான் உங்கள் சாமர்த்தியம் இருக்கிறது!

இந்த யோங்க்சா கொண்டு இரண்டு விதமாய் Side dish தயாரிப்பார்களாம். ஒன்று யோங்க்சா இரோம்பா, மற்றொன்று யோங்க்சா ஷிங்க்ஜூ!  என்னடா இது வாயில நுழையாத பெயரா இருக்கேன்னு யோசிக்காதீங்க! கவலையும் படாதீங்க – சாப்பிடும் போது வாயில் நிச்சயமா நுழைஞ்சுடும்! இந்த Side dish வெறும சாப்பிட முடியுமா? கூட Main dish வேணும்ல! அதுதான் குரங்கு அரிசி! குரங்கு அரிசியா?  குரங்கு Mark இல்ல குரங்கு Brand அப்படி எதாவது இருக்குமோன்னு யோசிக்கக் கூடாது!

 குரங்கு அரிசி!
படம்: இணையத்திலிருந்து.....

மணிப்பூரில் கருப்பு வண்ணத்தில் அரிசி கிடைக்கிறது. அதைத் தான் இவர்கள் Monki rice-ன்னு சொல்றாங்க! Monki[ey]-ன்னா குரங்குன்னு உங்களுக்கு நிச்சயம் தெரிஞ்சுருக்குமே! இந்த மோங்கி ரைசும் யோங்க்சா சட்னியும் இருந்தா போதும் – எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடுவேன் என எங்கள் வாகன ஓட்டுனர் சொன்னார். அது எப்படி தயாரிக்கணும்னு கேட்டேன் – வாங்களேன் உங்களை வீட்டுக்கு அழைச்சுட்டுப் போய் சாப்பிடவே தரேனேஎன்று சொல்ல கொஞ்சம் ஜெர்க் அடித்தேன்! – “இல்லைப் பரவாயில்ல! செய்முறை மட்டும் சொல்லுங்க!”. 

அவர் பாவம் – சமையல் கலைல கொஞ்சம் Weak போல! இல்லை எனக்குத் தெரியாதுன்னு சொல்லிட்டாரு!

மணிப்பூர் வாசிகள் கோடைக் காலம் முழுவதுமே இதை விரும்பிச் சாப்பிடுவார்களாம். குளிர் காலத்தில் கிடைப்பதில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்! சைவம், அசைவம் என இரண்டுமே தயாரிப்பது உண்டு.

 இது தான் யோங்க்சா.....
இந்தப் படம் நான் எடுத்தது தான்!

இந்த யோங்க்சாவை ஆங்கிலத்தில் Tree Beans என்றும், stinky beans, Smelly beans என்றும் அழைப்பதுண்டு. அதற்கும் காரணம் இருக்கிறது. யோங்க்சா சாப்பிட்டால் நமது சுவாசத்திலும், கழிக்கும் சிறுநீரிலும் ஒரு வித நாற்றம் இருக்குமாம்!  போலவே இரண்டு நாட்கள் வரை பக்கத்தில் ஒரு பய வரமாட்டான்! – ஏன் எனில் அபான வாயு வெளி வந்து கொண்டே இருக்குமாம்!

நல்ல வேளை இந்த குரங்கு அரிசியும் யோங்க்சா சட்னியும் நான் சாப்பிடல! பதினைஞ்சு நாள் பயணத்தில் முதல் நாள் தான் மணிப்பூரில்! அப்போதே இப்படி தொடங்கி இருந்தால் என்னாவது!

நம்ம ஊர்ல இந்த யோங்க்சா கிடைக்குமான்னு தெரியல! அதனால உங்களுக்காகவே இந்த யோங்க்சாக் படம் எடுக்கணும்னு வண்டியை ஒரு கடைத் தெருவில் நிறுத்தி படம் எடுத்துக் கொண்டேன்.  குரங்கு அரிசி நீங்க பார்த்திருப்பீங்க! இருந்தாலும் இணையத்திலிருந்து எடுத்த படம் ஒண்ணும் கொடுத்திருக்கேனே – பார்த்துக்கோங்க!

அடுத்த வாரம் சாப்பிட வாங்க பகுதியில் வேறு ஒரு அனுபவம் பற்றிப் பார்க்கலாம்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

48 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. ஐயோன்னு பயப்படற அளவுக்கு ஒண்ணும் இல்லை டீச்சர்! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 4. உங்கள் படத்தில் இருக்கும் யோங்ச்சா பீன்ஸ், FIRE TREE விதைகளைப் போல கொத்து கொத்தாக உள்ளன. எதுவாக இருந்தாலும் உப்பு, உறைப்பு, புளிப்பை சரியாக சேர்த்து கொடுத்தால் எல்லாவற்றையும் நாக்கு உள்ளே தள்ளி விடும். புது மாதிரியான உணவு, புதுமையான பெயர் – எல்லாவற்றையும் பகிர்ந்தமைக்கு நன்றி.
  த.ம.2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   நீக்கு
 5. நல்லவேளை, நான் பிழைத்துக் கொண்டேன். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 6. //அதை இப்பகுதிப் பெண்கள் ரொம்பவும் கவனித்து வாங்குகிறார்கள் – காரணம் அதில் புழுக்கள் இருக்கலாம்! புழுக்கள் இல்லாது வாங்குவதில் தான் உங்கள் சாமர்த்தியம் இருக்கிறது!//

  அப்படியா! நான் நினைத்தேன் அதிக புழுக்கள் உள்ளதை தேடி எடுப்பார்கள் என்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தவளை, பன்றி இப்படியெல்லாம் சாப்பிடுவார்கள் என்று சொன்னதிலிருந்து, நானும் அதைத் தான் நினைத்தேன் சார்....:)))

   நீக்கு
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 7. குரங்கு அரிசி கேரளா சிகப்பு அரிசி மாதிரி இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 8. வித்யாசமான பெயர்கள்! :) கருப்பு அரிசி கேள்விப்பட்டிருக்கேன், வாங்கி பாயசமும் செய்திருக்கேன், ஆனா வெறும் சாதமா சாப்பிட்டதில்லை..! இந்தக்காயை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்குங்க..கோவைல மரம் இருக்கோ?!

  நம்ம சாப்பிடற மாதிரி ஏதாவது கிடைச்சுதா உங்களுக்கு? எப்படி 2 வாரம் சமாளிச்சீங்க?!?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகி - நானும் கோவைல பார்த்த மாதிரி இருக்கேன்னு தான் நினைச்சேன்....:)))

   தண்ணி காய்னு சொல்வாங்களே அதுவா???

   நீக்கு
  2. சைவம் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு கொஞ்சம் கடினமான பயணம் தான். ஆனாலும் சமாளிக்க முடிந்தது. Dhaal-Chaaval :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி.

   நீக்கு
 9. இந்த யோங்க்சா நம்மூர் கொத்தவரை மாதிரி இருக்கோ.சைஸ் பெரிதோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுதி இருந்தேனே - ஒவ்வொன்றும் ஒரு முழம் அளவிற்கு நீளம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 10. யோங்சாவைப் பார்த்தால் நம்ம ஊரு வாதாங்காய் மாதிரி இருக்கு. இது சாப்பிட வாங்க பதிவில்லை! சாப்பிட்டுடாதீங்க பதிவு!

  :))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாப்பிட்டுடாதீங்க பதிவு! :)))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்...

   நீக்கு
 11. நல்லாயிருக்கும் போல இருக்கே ஆரோக்கியத்துக்கும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 12. ஏதோ புது சமையல் குறிப்பு என்று பார்த்தால்.... ஆமா இந்த அரிசி, மூங்கில் அரிசியா அல்லது எதுல இருந்து கிடைக்கிறது? அதைச் சொல்லலியே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மூங்கில் அரிசி அல்ல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 13. அவசியம் விருந்துல சேர்த்துட வேண்டியது தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை.

   நீக்கு
 14. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன் ஐயா.

   நீக்கு
 15. Naanga ellam korange saappiduvom..... ithu jujubi. Aanalum kurithukkonden... next time will try

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ் குமார்.

   நீக்கு
 16. அழகா படமும் போட்டு, வித்தியாசமா பெயரும் போட்டு பொருத்தமா அதற்கு விளக்கமும் கொடுத்து சரி விடுங்க ரெசிப்பி கொடுக்கல (நல்லவேளை) இதை சாப்பிட்டு அக்கம் பக்கம் மனிதர்கள் வேற அவஸ்தை படவேண்டுமா என்ன.... எல்லாம் போட்டுட்டு இதை சாப்பிட்டால் இப்படி எல்லாம் ஆகும்னு போட்டீங்க பாருங்க வெங்கட்.. அங்க நிக்கறீங்க :) இதைப்பார்த்தால் நாம ஊருக்கு பஸ்ல போகும்போது லாங் டிஸ்டன்ஸ் அப்ப ரோட்டோர மரத்தில் இப்படி நிறைய காய்கள் இருக்கும் தானே? அது போலவே இல்ல பார்க்க?? நல்லவேளை நம்மூர்ல கிடைக்கல... அருமையான அசத்தலா ரசிக்க வைக்கும்படியான பகிர்வு வெங்கட்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் வருகை. நலம் தானே.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி.

   நீக்கு
 17. புது தகவல், குதிரைவாலி அரிசி போலவா?, அந்த காய் நம்முரில் நல்லவேளை இல்லை. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   நீக்கு
 18. கொத்தவரங்கா போல இருக்கு! குரங்கு அரிசி கேள்விப்பட்டதில்லை! புதிய தகவலுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 19. திடீர்னு 'சாப்பிட வாங்க'ன்னு சொல்லும்போதே ஜெர்க் ஆனேன், சரிதான்.

  எங்க ஊர் பக்கம் ஆடுகளுக்குக் கொடுக்கும் காய்போல் இருக்கிறது. இந்த அரிசி(wild rice) இங்கும் கிடைக்கிறது. விலை அதிகம், சாப்பிடத்தான் ஆட்களைத் தேடவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   நீக்கு
 20. ஹி ஹி, 'சாப்பிட வாங்க'ன்னு ஒரு பகுதி இருப்பதையே மறந்தாச்சு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட.... சாப்பிட மறக்கலையே! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   நீக்கு
 21. வணக்கம்
  ஐயா
  குரங்கு அரசி.. புதிய தகவல் கேள்விப்பட்டதில்லை... தகவலுக்கு நன்றி
  எனது பக்கம் கவிதையாக வாருங்கள்.
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஈழம்...: ...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 22. கறுப்பு அரிசி முங்கில் அரிசி போல இருக்கு.....அந்தக் காயும் பார்த்தது போலத்தான் இருக்கு...ஆனால் சாப்பிட்டது இல்லை. பெயர் வித்தியாசமாக இருக்குமோ.....

  என்றாலும் சமையல் பற்றியது புதியதகவல்தான்.....

  நல்ல காலம் நீங்கள் சாப்பிடவில்லை....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தக் காயின் பெயரும் யோங்க்சா தான்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 23. இதுவரை காணாத கேள்விப்படாத புதிய புதிய செய்திகள், படங்கள், விளக்கங்கள் ....... அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....