எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, April 9, 2015

காலை உணவும் கோவில் அனுபவங்களும்தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 7

தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 1 2 3 4 5 6


 ஒருவருக்குப் பின்னால் இன்னொருவர் - வழியில் பார்த்த அனுமன் கோவில்!

கோவிலை நோக்கி நடக்கும் பாதையில் ஒரு கோவில். அங்கே சின்னத் திருவடியாம் அனுமனின் இரண்டு திருவுருவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நின்று கொண்டிருக்க, அவருக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு மேலே நகர்ந்தோம். இது போல ஒருவருக்குப் பின்னால் ஒருவராக அனுமனை வேறு எங்கும் பார்த்த நினைவில்லை. அதற்கான காரணம் என்ன என்பதும் விளங்கவில்லை.

 உணவகத்தில் வைத்திருந்த தேவியின் சிலை

காலை நேரத்திலேயே பிரசாதக் கடைகள் திறந்திருந்தார்கள். கூடவே பலவிதமான உடைகள், பொருட்கள் என கடைகளில் விற்பனைக் காத்திருந்தன. அவற்றையெல்லாம் நோட்டம் விட்டபடியே நடந்தோம். வழியில் Vishwamitra Hotel and Restaurant எனும் பதாகை பார்த்தவுடன் காலை உணவு சாப்பிடாத நினைவு வந்தது. கோவிலில் எத்தனை நேரமாகும் என்பது தெரியாததால் காலை உணவினை முடித்துவிடலாம் என உள்ளே நுழைந்தோம். அது ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. மதிய உணவு சாப்பிட ரொம்பவே நேரமானது.


பூரி - சன்னா மசாலா - கூடவே தயிரும் வெங்காயமும்!

பதினான்கு பேர் என்பதால் இரண்டு மூன்று டேபிள்களைச் சேர்த்து போட்ட பிறகும் சிலருக்கு இடம் போதவில்லை. நானும் இன்னும் சிலரும் தனியாக வேறு இடத்தில் அமர்ந்தோம். சிலர் பூரி மசாலா, சிலர் ஆலு பராட்டா, ஒரு சிலர் பனீர் பராட்டா, சோலே பட்டூரா என்று சொல்ல, அனைத்தையும் தயார் செய்ய சிறிது நேரம் பிடித்தது. அதுவரை அனைவரும் அரட்டை அடித்தபடி இருக்க, நான் கேமராவிற்குத் தீனி போட்டேன். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டே இருப்பது வழக்கமாகி விட்டது!


 பானி பூரி - கண்ணாடிக் கூண்டிற்குள்!

ஒருவழியாக கேட்டவை கிடைக்க, அனைவரும் களத்தில் இறங்கி ஒரு கை பார்த்தனர். சாப்பிட்டு முடித்து அதற்கான கட்டணத்தினைக் கொடுத்து அங்கிருந்து நகர்ந்தோம். செலவும் அப்படி ஒன்றும் அதிகமாக ஆகவில்லை. 14 பேருக்கு ஆயிரத்திற்கும் குறைவு தான். வெளியே வந்து கோவிலை நோக்கிய நடைப் பயணத்தினைத் தொடர்ந்தோம். உணவகத்தினை விட்டு வெளியே நடக்கும்போது பார்த்தால் காலையிலேயே பானி பூரி விற்பனை தொடங்கி இருந்தது. வட இந்தியர்களுக்கு இந்த பானி பூரி சாப்பிடாவிட்டால் ஜன்மம் சாபல்யம் அடையாதோ என்னமோ!

 இந்தப் பழம் ரஸ்பெரி என்று சொன்னார் - அது சிவப்பாகத் தானே இருக்கும்! - 
ஆனால் சாப்பிட விருப்பமில்லை!

விதம் விதமாய் மலைப் பிரதேசத்துப் பழங்கள், கடைகளில் இருந்த பொருட்கள் எனப் பார்த்துக் கொண்டே கோவிலை அடைந்தோம். முந்தைய பதிவில் சொன்ன மாதிரியே ஒரு கடையில் பிரசாதம் வாங்கிக் கொண்டு அக்கடையில் இருக்கும் படிகள் வழியே கோவில் பாதைக்குச் சென்றோம். சோதனைகளை முடித்துக் கொண்டு கோவிலை அடைந்தோம். நேற்றைய இரவினை விட இன்று மக்கள் கூட்டம் கொஞ்சம் அதிகமிருந்தது. ஆனாலும் தள்ளுமுள்ளு இல்லாமல், “ஜருகண்டி, ஜருகண்டிஎன்று தள்ளாததால் நிம்மதியாய் தேவியை தரிசித்தோம்.

 இலந்தப் பயம்.... இலந்தப் பயம்....
போடு செக்கச் சிவந்த பயம்......  அது தேனாட்டாம் இனிக்கும் பயம்! பாட்டு பின்னணியில் ஒலிக்கிறதோ?

நாங்கள் கோவிலுக்கு வந்துவிட்டாலும் நிகழ்ச்சி [லலிதா சஹஸ்ரநாம பாராயணம்] ஏற்பாடு செய்தவர்கள் இன்னமும் வந்து சேரவில்லை. Indian Punctuality! அதனால் கோவிலிலேயே காத்திருந்தோம்.  கேமராவிற்குத் தீனி போட நிறைய குழந்தைகள் அங்கே இருக்க, ஒவ்வொருவராய் படம் பிடித்துக் கொண்டிருந்தேன். தவிர வேறு சில காட்சிகளும் காணக் கிடைத்தன.

 கோவிலில் இருந்த சிறுவர்கள்.....

பெரிய குங்குமப் பொட்டுடன் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அங்கே இருக்கும் பல பெண்கள் அவரது காலடியில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். அவ்வப்போது குங்குமப் பொட்டு பெண்மணி அப்பெண்களின் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்து கொண்டிருந்தார். கீழே அமர்ந்து கொண்டிருந்த ஒரு பெண்மணி திடீரென தனது கைகளையும் பின்னால் கொண்டு சென்று முடித்திருந்த கூந்தலை அவிழ்த்து அன்னியன் போல ஆனார். தனது கைகள் இரண்டையும் தரையில் தட்டி ஒரு சாமியாட்டம். சில நொடிகளில் மீண்டும் கூந்தலை அள்ளி முடிந்து ஒரு மந்தகாசப் புன்னகை. இது அடிக்கடி நடந்தது. சாமியாடிகள் எல்லா இடங்களிலும் உண்டு போலும்!

 கண்கள் இரண்டும் சொல்லும் கதைகள் பல! அந்த திருஷ்டிப் பொட்டை கவனியுங்கள்!

அங்கே நடந்த வேறொரு திருவிளையாடலும் படக்காட்சிகளாக வைத்திருந்தார்கள். அப்பகுதியின் ராஜா-ராணி. அவர்களுக்கு ஒரே ஒரு புதல்வன்.  ஒரு நாள் மந்திரி சபைக்கு இரு சாதுக்கள் வருகிறார்கள். அவர்களுடன் ஒரு புலியும் வருகிறது. புலிக்கு பயங்கர பசி – நர மாமிசம் வேண்டும் என்று சாதுக்கள் சொல்ல, தன்னையே தர விழைகிறார் ராஜா.  இல்லை வேண்டாம் என சாதுக்கள் மறுக்க, ராணி தன்னைத் தர முன் வருகிறார்.

 தன் மகனின் தலையில் ரம்பம் வைத்து தயாராய் ராஜாவும் ராணியும்.....

இரண்டு பேரையும் மறுத்துவிட, தனது ஒரே ஒரு மகனை புலிக்கு இரையாகத் தர சம்மதிக்கிறார்கள் ராஜாவும் ராணியும். சாதுக்களும் இதற்கு சம்மதிக்க, ராஜாவும் ராணியும் தன் மகனின் தலை மீது ஒரு பெரிய ரம்பம் வைத்து மகனை புலிக்குத் தர ஆயத்தமாகிறார்கள்.  மாதா சிந்த்பூர்ணி அங்கே அவர்கள் மூவரின் மீதும் பூக்களைப் பொழிந்து உம் பக்தியோடு விளையாடவே யாம் வந்தோம்என்று திருவிளையாடல் சிவாஜி மாதிரி குரல் கொடுத்து அவர்களை ஆசிர்வதிக்கிறார்.

 இந்தப் புன்னகைக்கு என்ன விலை.....?

இப்படியாக கோவிலில் இருக்கும் பக்தர்களையும், நிகழ்வுகளையும் பார்த்துக் கொண்டிருக்க, நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களும் ஒரு வழியாக வந்து சேர்ந்தார்கள். அடுத்தது அவர்கள் பக்தியில் திளைத்திருக்க, நான் புகைப்படங்கள் எடுப்பதிலும், ஓய்வு எடுப்பதிலும் மும்மரமானேன்.  பிற்கு என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாமா!
    
தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

50 comments:

 1. நம்ம ஊர் ஐவிரலிப்பழத்தைத்தான் ராஸ்பெரி என்கிறார்கள். அண்டப்புளிப்பு புளிக்கும், நல்ல காலம் தப்பித்தீர்க்ள.

  ReplyDelete
  Replies
  1. ஐவிரலிப் பழம் - இந்த பெயரையும் முதல் முதலாக கேள்விப் படுகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 2. ஒருவருக்கு பின் ஒருவராக இரு அனுமன்கள்
  கண்டு களித்தேன் ஐயா
  படங்கள் ஒவ்வொன்றும்அருமை
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. குழந்தைகள் படம்... ரொம்பவே ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. படங்களைத் தாங்கள் அனைத்துள்ள விதம் தங்களின் ரசனையை வெளிப்படுத்துகிறது. புலிப்பசிக்கு நரபலி கதையைப் பார்த்தபோது நமது இலக்கியங்களில் வரும் இவ்வாறான பிள்ளைக்கறிக் கதை நினைவிற்கு வந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 5. ஒருத்தர் பின்னால் இன்னொருவர் என்று இரண்டு அனுமன்கள், வித்தியாசமான பெயர்களில் பழங்கள், கவிதை பல சொல்லும் அந்தக் குழந்தையின் புன்னகை, எல்லாமே மிகவும் அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 6. படங்களும் பகிர்வும் மிக அருமை. பாராட்டுகள் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 7. புகைப்படங்கள் அருமை.ஒருவர் பின் ஒருவர் அனுமன் அருமை. காரணம் சொன்னால் இன்னும் நல்லா இருந்து இருக்கும், அங்கு கேட்க வேண்டியது தானே, அடுத்த பதிவிற்கு வருகிறேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அங்கே கேட்க வேண்டும் எனத் தோன்றவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலசந்திரன் ஜி!

   Delete
 8. பயண அனுபவங்களின் பகிர்வு அருமை. குழந்தைகள் மனதைக் கொள்ளை கொள்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 9. நீங்கள் பார்த்த பழம் Raspberry (புற்றுப்பழம்) அல்ல. அது Carambola என அழைக்கப்படும் விளிம்பிப்பழம் (அ) தம்பரத்தம் பழம் ஆகும். இந்தியில் இதனுடைய பெயர் Kamrakh இதை Star Fruit என்றும் சொல்வார்கள். இதனுடைய தாவரப்பெயர் Averrhoa carambola ஆகும். சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது.

  நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ராஜா ராணி கதை நம்மூர் சிறுத்தொண்டர் புராணக் கதை போல் இருக்கிறதே. சம்பவங்கள் தான் வெவ்வேறு.

  பயணத்தில் தங்களோடு தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தில்லியிலும் இந்தப் பழம் விற்பனைக்கு - குறிப்பாக பள்ளிகளுக்கு அருகில் பார்த்திருக்கிறேன். உங்கள் மூலம் மேலதிகத் தகவல்கள் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 10. குழந்தைகள் படமும், தின்பண்டங்கள் விவரமும் அருமை! .தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 11. வணக்கம் சகோதரரே!

  இரண்டு அனுமான்கள் ஒருவருக்குப் பின் ஒருவராக கண்ணுக்கு விருந்தாக இருந்தது.. மனதாற நமஸ்கரித்தேன். அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரஸ்பெரி பழத்தை இப்போதுதான் பார்கிறேன். கண்களாலேயே, கட்டி இழுத்து கதை பேசும் குழந்தைகள் அழகோ அழகு. தேவியின் திருவிளையாடல் கதை நன்று. தங்கள் பயணத்தின் மூலம் நாங்களும் இதைப்பற்றியெல்லாம் தெரிந்து கொள்கிறோம். இனியும் நீங்கள் பயணத்தை தொடர நாங்களும் பயணிக்க காத்திருக்கிறோம். நன்றி

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 12. படங்கள் அனைத்தும் அருமை! தகவல்கள் உட்பட!

  வெங்கட்ஜி அந்தப் பழம் ஸ்டார் ஃப்ரூட் இல்லையோ. ராஸ்பெரி இல்லை நீங்கள் சொல்லுவது போல் அது சிவப்பாக ஷேப் இப்படி இருக்காது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 13. தொடர்ந்து பயணிப்போம்......
  7ம் வாசித்தேன்..
  மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

   Delete
 14. பழத்தின் பெயர் ஸ்டார் ஃப்ரூட். மேலை நாடுகளில் நல்ல பெரியதாக இருக்கும். வெறும் சாறாக இருக்கும். தென்-காசி குற்றாலத்தில் பார்த்தது சின்ன சைஸ் புளிப்பு. நான் 7 வது படிக்கும்போது, தாளவாடியில் புளிப்பில்லாத மீடியம் சைஸில் சாப்பிட்டிருக்கிறேன் (1977). ஒரு பழம் வெளினாட்டில் சுமார் 100 ரூபாய். 'நம்ம ஊருல 5 ரூபாய்னு நினைக்கிறேன். இலந்தைப் பழம் பார்க்க அழகாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஸ்டார் ஃப்ரூட் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 15. இரு அனுமன்கள் மிக அழகு... படங்கள் சிறப்பாக...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 16. கோயிலுக்கு போய் கோயிலை பற்றி மட்டும் எழுதாமல், அங்கு சாப்பிட்ட பூரி சென்னா மசாலா, சோலே பட்டூரா, ராஸ்பெரி புளிப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா இருக்குமாமே, இலந்தபையம் அதுவும் இவ்ளோ செக்கசெவேர்னு... புருவத்து மேலே திருஷ்டி பொட்டோட அழகு லட்டு குழந்தை இப்படி அந்த இடத்துக்கு ஃப்ரீயா கூட்டிண்டு போய் காட்டின வெங்கட்டுக்கு அன்பு நன்றிகள்பா... அழகான புகைப்படங்கள். ஒருவர் பின் ஒருவராக அனுமன் முதல் முறை பார்க்கிறேன் அழகுப்பா...

  ReplyDelete
  Replies
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது பதிவில் உங்கள் வருகையும் கருத்துரையும். மிக்க மகிழ்ச்சி மஞ்சுபாஷிணி ஜி......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 17. இரண்டு அனுமார்கள் முதல் முறையாக பார்க்கிறேன் புதுமை.
  நவரத்தினம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 18. பதிவில் எழுதி இருந்ததைவிட புகைப் படங்களை ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 19. #மாதா சிந்த்பூர்ணி அங்கே அவர்கள் மூவரின் மீதும் பூக்களைப் பொழிந்து ”உம் பக்தியோடு விளையாடவே யாம் வந்தோம்”#
  இந்த விளையாட்டை ராஜா காலத்தோடு ஏன் நிறுத்திக் கொண்டாரோ ,மாதா :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 20. வணக்கம்
  ஐயா

  தங்களின் பயண அனுபவத்தில் கண்டு இரசித்த விடயங்களை பதிவாக பதிவிட்டமைக்கு நன்றி ஐயா .த.ம11
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 21. ஜெய் ராம்!
  பதிவோ அழகு
  படங்களோ அழகோ அழகு!

  த ம + 1
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

   Delete
 22. ரா. ஈ. பத்மநாபன்April 10, 2015 at 9:59 AM

  ஒரு பழத்திற்கு எத்தனை பெயர்கள். ஒரே கடவுளை பல பெயர்களில் அழைப்பது போல், இந்தப் பழத்திற்கும் எத்தனை பெயர்கள்!! ஐவிரலிப்பழம், விளிம்பிப்பழம், தம்பரத்தம் பழம், நட்சத்திரப்பழம். இந்தப் பழத்தை நாம் சாப்பிடக்கூடாது. நமது பிரியமான நண்பருக்கு வாங்கிக் கொடுத்து அவர் முகம் போகும் போக்கை ரசிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 23. ராஸ்பெரி இப்படி இருக்காது. இது எல்லோரும் சொல்வது போல் நக்ஷத்திரப் பழமாகவே இருக்கணும். :) சிந்த் பூர்ணி பத்திப் படிச்சுட்டு வரேன். திடீர்னு படிச்சதிலே ஒண்ணுமே புரியலை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 24. குழந்தைகளின் படங்கள் செம அழகு! விரிவான தகவல்களுடன் பயணப் பகிர்வு சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 25. Replies
  1. ஸ்டார் ஃப்ரூட்! :) இப்படியும் ஒரு பெயரா?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....